Blog Archive

Saturday, December 16, 2017

மனம் இனிக்கும் மார்கழி.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

மார்கழியை நினைக்கையில் மனம் முழுவதும்
உருகும். நாங்கள் இருந்த இடங்களில் எல்லாம் திருப்பாவை பாட்டே துயில் எழுப்பும்.
எங்கும் கோவில்கள் இருக்கும்.
எம் எல் வி அம்மாவின் மார்கழித்திங்கள் 
குரல் அனைவரையும் 4 மணிக்கே எழுப்பும்.
பாட்டை கேட்டபடி  பரீட்சைக்குப் படிப்பதோ, வாசல் தெளித்துக் கோலம் 
போடுவதோ நிகழும்.
பிறகு கோவிலும் சுடச்சுட பொங்கலும்.
சிறிய வயதில் திருப்பாவை பக்திக் குழுவுடன் 
அதிகாலைக் குளிரில் பாடல்களும்  உண்டு. அவர்களுடன் பாடல்கள் 
பாடியபடிக் கோவிலை அடைந்த நேரங்கள் இனிமையானவை.
எல்லாம் அந்தக் கோதை நாச்சியாரின் மகிமை,கருணை.
அரங்கனும் ஆண்டாளும் என்றும் நம்மைப் பாதுகாக்கட்டும்.

6 comments:

ஸ்ரீராம். said...

​வாழ்த்துகள் அம்மா.​

நெல்லைத் தமிழன் said...

மார்கழியை வரவேற்கிறோம். சிறுவயது ஞாபகங்களும் கிளர்கின்றன்

வெங்கட் நாகராஜ் said...

மார்கழி நினைவுகள்.... அதிகாலையில் எழுந்து வீட்டின் அருகே இருந்த பிள்ளையார் கோவில் சென்ற நினைவுகள் எனக்குள்....

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், அன்பு வெங்கட், அன்பு நெல்லைத்தமிழன்
என் குழந்தைகளல் படிக்க முடியாத தமிழை நீங்கள் எல்லோரும் படித்து என்னுடன் இருக்கிறீர்கள்.
இந்த அன்புக்கு என்றும் கடமைப் பட்டவளாக உங்களை வாழ்த்துகிறேன்.ஆசிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா சிறு வயதில் மார்கழி ஒவ்வொரு நாளும் பெரிய கோலமாகப் போட்டு என்று பல நினைவுகள். திருமணம் ஆகும் வரை தினமும் பாட்டி யுடன் காலை நான்கு மணிக்கு எழுந்து 4.30க்குக் கோயிலுக்குச் சென்று வெளி வாசல் மண் தரை என்பதால் தண்ணீர் தெளித்துப் பெருக்கிக் கோலம் போட்டுவிட்டு அப்புறம்ம கொடிமரத்தின் கீழ் எல்லாம் பெருக்கி அலம்பித் துடைத்து கோலம் போடுவது எல்லாம் நினைவுக்கு வருது. பாட்டி சில சமயம் கொடி மரம் கீழ் போடுவார். பெரும்பாலும் நான் தான் இரு இடங்களிலும். புரட்டாசி மாதம்பிறந்ததும், நானும் பாட்டியும் ஊர் மக்களின் உதவியுடன் கோயில் முழுவதும் மாக்கோலம் போடுவோம். இப்படி நிறைய...பஜனை செய்து கொண்டு ஊர் தெரு முழுக்கச் செல்வர். அப்புரம் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு தினம் பிரசாத விநியோகம் ஏற்கனும். பஜனை முடிந்ததும் பொங்கள் தருவார்கள்...இனிமையான நினைவுகல் வல்லிம்மா...

மிக்க நன்றி வல்லிம்மா

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாரங்கன் எத்தனை நினைவுகள் அம்மா.
இவ்வளவு தொண்டு செய்திருக்கிறீர்களா.

பெரிய கோவில் ஆக இருந்திருக்குமே.
பாட்டிக்கு என் நமஸ்காரங்கள்.
எனக்கும் கோவில்களின் அறிமுகம் அம்மா
வழிப்பாட்டி வழியாகத்தான். மார்கழி மாதக் குளிரில்
மஃப்ளர் கட்டிக் கொண்டு ஓடிய நாட்கள்.
வாயில் புண் வரும் குளிரினால்.
அற்புதமான நினைவலைகள்.