எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
அந்த வாரம் குழந்தைகள் ராதையைப் பார்க்க வரவில்லை.
கேசவன் தன் அப்பாவின் பெரிய தமையனாரைப் போய்ப் பார்த்து
தன் கவலைகளையும், அதற்கான தீர்வுகளையும்
விவாதித்தான்.
அவர் பலவித நிகழ்வுகளையும் பார்த்தவர். குடும்பம்
என்னும் கூடு இனியாவது சேரட்டும் என்று,
பலவித கோணங்களில்
ஆராய்ந்து அவனைப் பதம் செய்யப் பார்த்தார்.
அவனுக்கு உடலே கசந்தது. இந்தக் கொடுமைக்கு
தான் எப்படி ஆளானோம். எந்தக் கர்மாவுக்கு இது பலனாகக்
கிடைத்திருக்கிறது என்று யோசித்தான்.
பெரியப்பா வைத்த தீர்வுகள் 1, ராதையைச் சந்தித்து
குடும்பத்தோடு சேர்ந்து இருக்கக் கேட்பது.
2, இருக்கும் இடத்தை மாற்றி வேறு இடம் போவது,
3,மனம் தெளிவாக பரிஹாரமாகப் பல
கோவில்கள் தரிசனம்.
4,கேசவனே தன் மனதைப் பண்படுத்திக் கொள்ள
வேண்டியது மிக அவசியம்.
இதெல்லாம் கேட்கவே கேசவனுக்குப்
பாகல்காயாகக் கசந்தது.
அவன் மனம் இறைவன் வசம் திரும்பி
வருடங்கள் ஆகிவிட்டன.
பெரியப்பா மீண்டும் கேசவனைக் கேட்டார்.
நீ மறுமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்வாயா.
அதுவும் ஒரு வழி என்றதும் கேசவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.
என்ன பெரியப்பா எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லை.
குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். அது ஒன்றே என் தீர்வு. நீங்கள் சொல்படி செய்கிறேன்
என்று வீட்டுக்கு வந்து கோதையிடமும், ,கோவிந்தனிடமும்
குனிந்த தலை நிமிராமல் பெரியப்பாவின்
அறிவுரைகளைக் கொண்டு சேர்த்தான்.
கோதைக்கு இனி கண்ணீர் வடிக்க தெம்பில்லை.
எப்படி எப்படியோ கோடித்து வளர்த்த குழந்தையின்
எதிர்காலம் இப்படி ஆனது வெகுவாக நோக வைத்தது.
இனி வெகு காலம் தான் இருக்க மாட்டோம் என்று தோன்றிக்
கொண்டே இருந்தது.
தங்கள் குல ஆச்சார்யரிடம் சரண் அடைந்து குல வழக்கப்படி
பரண்யாசம் எல்லாம் செய்து கொண்டார்.
கோவிந்தனின் குழந்தைகளை
வளர்ப்பதிலும் இறைவனிடம் பக்தி செய்வதிலும்
காலம் கழிக்க ஆரம்பித்தார்.
மாலாவிடம் கேட்டு அவளது ஆசையான பாட்டுத் துறையில்
சேர்த்துவிட்டார்.
கேசவனும் ராதையும் பேச்சுகள் நடத்துவதே கடினமாக
இருந்தது. முடிவை நோக்கி தொடரும்
7 comments:
//எந்தக் கர்மாவுக்கு இது பலனாகக் கிடைத்திருக்கிறது என்று யோசித்தான்.//
கசந்த மனதின் எண்ணங்கள்.
/கோதைக்கு இனி கண்ணீர் வடிக்க தெம்பில்லை.//
பாவம். குழந்தைகளும் பாவம்.
//கோவிந்தனின் குழந்தைகளை வளர்ப்பதிலும் இறைவனிடம் பக்தி செய்வதிலும்//
கேசவனின் குழந்தைகள்?
பரண்யாசம் செய்துகொள்ள வயது உண்டா?
அன்பு ஸ்ரீராம்.
இனிய காலை வணக்கம்.
எல்லாக் குழந்தைகளையும் தான் வளர்த்தார் கோதை.
பிரித்துச் சொன்னது தப்பு.
அனுபவிப்பது எல்லாமே கர்ம பலன் தானே மா.
பரண்யாசம் வயசு கிடையாது.
சில பேர் இந்தக் கட்டுப்பாடுகளை மீற
முடியாமல் சீக்கிரம் செய்து கொள்வதில்லை
உடைந்த கண்ணாடி, அதுவும் சுக்கு நூறாக உடைந்தபின் ஒட்ட வாய்ப்பேது? ஆனால் வாழ்க்கை என்பது 20 வயதில் முடிவதில்லையே. தவறுகளை உணர்ந்து வருந்த ஆனால் திருந்தமுடியாத சந்தர்ப்பங்களை வாழ்க்கை கொடுக்காமலா போய்விடும்?
நான் கேள்விப்பட்ட கதை. ஒரு வக்கீலுக்கு தேவதை போன்றவளைத் திருமணம் செய்துவைக்கிறார்கள். வக்கீல் மிக சுமார் வெளி அழகில். அந்தப் பெண் குடும்ப வாழ்க்கைக்கு உடன்பட வில்லை. வெளியே செல்லும்போதும் 10 அடி தள்ளியே நடப்பாள். ஒருகட்டத்தில் தன் பெற்றோர் வீட்டுக்கே போய்விட்டாள். வக்கீல் மிகப் பொறுமையாக இருந்தார். காலங்கள் சென்று அவள் திருந்தி கணவரிடம் வந்தாள். பிறகு அவர்களுக்குக் குழந்தையே பிறக்காமல்போய்விட்டது. அழகினால் அவள் வாழ்க்கையில் பயன் எதுவும் விளையவில்லை.
இப்போது தான் விடுபட்ட பகுதிகளை படிக்க முடிந்தது. குடும்பங்களில் எத்தனை குழப்பம்.
முடிவு தெரிந்து கொள்ள தொடர்கிறேன் மா.
அன்பு நெல்லைத்தமிழன்.
அதென்ன அழகோ,என்ன பொருத்தமோ. மனம் தெரியாமல்
திருமணம் செய்து கொள்வானேன்.
கண்ணாடி ஒட்ட சந்தர்ப்பம் இல்லை.
மேல் பூச்சு பூசி பத்திரமாக ஒரு இடத்தில் வைக்கவேண்டியதுதான்.
ஒரு உடல்,மனம் இத்தனை பாடுபடுத்துமானால்
அதை எவ்வளவு கட்டுப்பாட்டில் வைக்கணும்.
சில வாழ்க்கைகள் இப்படித்தான் முடிகின்றன.
மிக அழகாக வந்து படித்து கருத்து சொல்கிறீர்கள்.
மிக மிக நன்றி.
அன்பு வெங்கட் ,இந்தப் பதிவு எழுதுவதற்கோ
படிப்பதற்கோ அவ்வளவு சுலபமாக இல்லை.
விதி,கட்டுப்பாடில்லாத மனம்
எல்லாம் செய்யும் விபரீதம்.நன்றி ராஜா.
ஆ!! வல்லிம்மா நான் எதிர்பார்த்த முடிவில்லை போல இருக்கே....வேறு மாதிரி போகிறதே...குழந்தைகள் பாவம்......ராதை மனம் மாறி வந்தால் நலல்துதானே...இல்லையோ..கேசவன் கிட்டத்தட்ட ஸன்யாஸ நிலைக்குப் போய்விட்டதால் சரி எப்படி முடியப் போகிறது என்று தெரிந்துகொள்ள ஆவல்...
கீதா
Post a Comment