எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
நீண்ட பதிவு.
தீக்குறளை சென்றோதோம்.
இந்த வார்த்தை கேசவனுக்குத் தான் பொருத்தம்.
அவனுக்குத் தான் பெற்ற குழந்தைகளை ஒழுங்காகக் கரை சேர்க்கணும். கடமை தவற கூடாது.
ராதையின் வீட்டில் இன்னொரு பூகம்பமே ஆயிற்று.
வெகு நாட்கள் கழித்து
சுய நினைவுக்கு வந்தனர். அடுத்தடுத்து வீட்டில் நடந்த
சம்பவங்கள் அவர்களை இப்பொழுதுதான் விழிப்பு நிலைக்குத் தள்ளின.
இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்த தங்கள் மக்களிடம் வெறுப்பு தோன்ற ராதை
மகளிர் விடுதியில் தோழியுடன் போய் இருந்து
கொண்டால். முக்கிய காரணம் நவீன் சென்னையை விட்டுக் கிளம்பியதுதான் .
ராதைக்கு அது பெரிய நஷ்டம். அவள் எதிர்பார்க்கவில்லை.
தன்னை விட்டு அவன் பிரிவான என்று அவளுக்குத் தோன்றியதே இல்லை.
ராதையின் பெற்றோர்கள் சொன்ன இழி வார்த்தைகள் அவனைத் துரத்திவிட்டன .
இந்த நிலையில் கேசவன் அவளை சந்தித்தான்.
இருவர் மனமும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்பதை இருவரும் உணர்ந்தனர்.
ராதையின் மனதில் வேறு யாருக்கும் இடம் இல்லை.
ஆன்மிகத்தில் பற்று வைத்த கேசவனுக்கு
ராதையிடம் நாட்டம் இல்லை.
தன் அம்மா தன்னோடு தான் இருப்பாள் என்று சொன்ன அவனுடைய உறுதி வேறு அவளை மனம் சுளிக்க வைத்தது.
ஒரு வார யோசனைக்குப் பிறகு
அவனுடன் குடும்பம் நடத்த ஒத்துக்க கொண்டாள்
தாம்பத்தியம் என்ற வார்த்தைக்கு
அங்கே இடமில்லை. அவளிடம் பணம் இல்லை. இருக்க ஒரு இடம் தேவை. அது எங்கிருந்தாலும் பரவாயில்லை.
சுதந்திரம் கொடுத்தால் போதும்.
இதைக் கேட்ட கோதை ,என் இந்தத் தலைவலியை இழுத்து வீட்டுக் கொள்கிறாய். அவள் மீண்டும் அதே வழிக்குப்
போகமாட்டாள் என்று என்ன நிச்சயம் . வக்கீலிடம் சென்று பிரிவு வாங்கிக்கொள். குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள் என்று சொல்லிப் பார்த்தாள் .
எதற்கும் கேசவன் சம்மதிக்கவில்லை.
குழந்தைகள் இன்னும் அவளை வெறுக்கவில்லை.
அம்மா என்று பிம்பமாக அவள் இருந்தால் போதும்.
எனக்கு தில்லிக்கு மாற்றல் கேட்டிருக்கிறேன்.
நீயும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று
வேண்டிக்கொண்டான்.
நீ அவளை மன்னித்து ஏற்றுக் கொள்கிறாயா என்று தாய் கேட்டதற்கு, நான் அவ்வளவு பெரிய மகான் இல்லைம்மா.
எனக்குத் தீராத வருத்தம் தான்.
ஆனால் அது என்னைப் பாதிக்க நான் விடப் போவதில்லை. தில்லி பல்கலைக் கழகத்தில் பிலாசபி மேஜர் செய்யப் போகிறேன்.
அடுத்தாற்போல் என்னை குடுமி சகிதம் உபன்யாசம் செய்யும் பௌராணிகராக நீ பார்க்கலாம் என்று லேசாகச் சிரித்தான்.
கோதைக்குச் சிரிப்பு வரவில்லை.
இவனுக்கே இவ்வளவு பக்குவம் என்றால் எனக்கு இதற்கு மேலும் வைராக்கியம் வேண்டும்.
அப்படியே ஆகட்டும் என்ற படி 57 வயதில் மற்றோரு புது குடித்தனம் செய்ய மகன்,மருமகள்,பேரன் பேத்திகளோடு கிளம்பினாள்.
வாசிப்பவர்கள், இந்த சம்பவங்களில் என் எழுத்தில் ஏதாவது
அசம்பாவிதமாகத் தோன்றினால் மன்னிக்கணும்.
நடந்ததை ஒப்பிக்கும் மாணவியாகத்தான்
இருந்திருக்கிறேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
22 comments:
57 வயது என்றால் பிள்ளைகளும் வளர்ந்திருந்திருப்பார்கள். அவர்களுக்கு நிலைமை புரிபட்டிருக்கலாம். கேசவன் வேறு முடிவு எடுத்திருக்கலாமோ என்னவோ? ஒட்டாத உறவுகளால் என்ன லாபம், மனவேதனை தவிர? எனினும் அவர்கள் முடிவு வித்தியாசமானதுதான்.
பாடலை வேண்டுமானால் யூ டியூபில் பார்த்துக்கொள்ளுங்கள் வேறு இடங்களில் பார்க்க முடியாது என்கிற தகவல் வருகிறது, வீடியோவை ஓட விட்டால்!
அன்பு ஸ்ரீராம் 57 வயது கோதை அம்மாவுக்கு. கேசவனுக்கு 41.
பெண்குழந்தைக்கு 12 வயது, பையனுக்கு 9.
மனம் கசந்த பிறகு இல்லற வாழ்வில் மனம் லயிக்கவில்லை.
ஆகக் கூடி மன்னித்தல் மனதளவில் தான். அதுவும் குழந்தைகள் திருமணம்.
அவரின் 62 வயதில்
நோய் வாய்ப்பட்டவர் 63 வயதில் மறைந்தார்.
நல்ல வேளையாக அதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே
கோதை அம்மா காலமானார். இத்தனை நாட்களும் கூட வந்ததற்கு மிக நன்றி மா.
பாரேன் இந்த யூ டியுபை. பாட்டை
பாடவிடாமல் செய்கிறதே.
என்ன இருந்தாலும் கேசவனுக்குப் பெரிய மனது தான். ராதைக்கு சுயநலம். ஆனால் பின்னால் அவள் வாழ்க்கையில் அவள் கேட்ட சுதந்திரத்தை அனுபவித்தாளா? அல்லது குழந்தைகளுக்கு மட்டுமாவது நல்ல தாயாக இருந்தாளா? கோதை அம்மாவும் பெரிய மனது உள்ளவர் தான். இப்படியான சில பெண்களைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கேன். :( எதைத் தேடிச் செல்கிறார்கள் என்பதே புரிவதில்லை.
ஆமாம் கீதா.
ராதைக்கு எந்த விதத்தில் சந்தோஷம், சுய வெற்றி கிடைத்தது என்று தெரியவில்லை.
அக்னிசாட்சியாகக் கைப்பிடித்தவளைக் கை விடக்கூடாது என்று தீர்மானம் செய்ததாக
அவர் சகோதரன் கோவிந்தன் பிறகு சொன்னார்.
கேசவன் மறைந்த பிறகு ,குழந்தைகள் வெளியூருக்குக் கிளம்பி விட்டார்கள்.
அவளும் முதியோர் இல்லம் சென்றதாகச் செய்தி.
மிக மிக வினோதமான படைப்பு இந்த ராதை.
இது நாள் வரை என்னுடன் பயணித்ததற்கு மிக நன்றி மா.
ரொம்ப விநோதமாகத்தான் இருக்கு ராதையின் வாழ்க்கை. நிச்சயம் அந்தப்பெண் தன் குழந்தைகளிடம் மரியாதையை இழந்திருப்பாள். செய்த தவறை எண்ணி வருந்தும் நெடிய காலத்தை இயற்கை அவளுக்குக் கொடுத்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
"எவன் எதைச் செய்தாலும் அவன் அதை அறிவான்
அந்த எண்ணத்தின் தரம் கண்டு பலன் பெறுவான்
கண்ணன் சொன்னதென்ன கீதையிலே அதை
கருத்தில் கொள்வாய் உந்தன் வாழ்க்கையிலே"
என்பதுதான் நினைவுக்கு வருகிறது. பொருளாதாரத்தில் வலிமையாக இருந்தால் இந்தக் கூத்துகளின் விளைவைக் குறைக்கலாம்.
கேசவன் நல்ல முடிவினை எடுத்தார் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. தனக்குப் பிறந்த குழந்தைகளுக்கு நல்ல தகப்பனுக்குரிய கடமைகளைச் செய்துவிட்டார்.
இன்னுமே விளக்கமாக கதையைக் கொண்டுபோயிருக்கலாம். நிகழ்வுக்கு பொயடிக் ஜஸ்டிஸ் கிடைத்திருக்கும்.
யார் யாரை எப்படி ஹேண்டில் பண்ண வேண்டும் என்று இந்தப் பெண்களுக்குத் தெரிந்திருக்கு. எப்படியென்றாலும் அவர்களுக்குத் தான் அது வெற்றியாக அமைந்தும் போய்விடுகிறது.
வல்லிம்மா இது வித்தியாசமாகத் தோன்றினாலும் இப்படியும் வாழும் குடும்பங்கள் இருக்கின்றன வல்லிம்மா. ஆனால் கணவனும் மனைவியும் மட்டும்தான் மற்றபடி குடும்பத்துடன் உறவினர்களுடன் எல்லாம் .நன்றாக உறவாடிக் கொண்டு.ஒத்து வராத மன நிலைகள் ஆனால் பிரியவும் முடியாமல் வேறு வழியின்றி தண்டவாளங்கள் போல குழந்தைகளுக்காக வாழும் குடும்பங்களும் இருக்கின்றனதான் வல்லிம்மா....ஆனால் ராதைக்குக் கேசவனின் அம்மா கூட இருப்பார் என்று சொன்னதும் அவள் முகம் சுளிப்பதுதான் மனதிற்கு வருத்தமாக இருந்தது. அவள் குழந்தைகளிடமேனும் தாய்மையுடன் இருந்தால் நல்லதாக இருக்கும். கணவனுடன் மனக் கசப்பு ஓகே ஆனால் தாய்மையை நாம் எவ்வள்வு உயர்வாகச் சொல்லுகிறோம் அந்தத் தாய்மை கூட இல்லாது போனால் ரொம்பக் கஷ்டம்...அதுவேனும் இருந்ததோ? ராதை தனது கலைகளையேனும் வளர்த்துக் கொண்டாளா அதற்குத்தானே ஆசைப்பட்டாள்...
கீதா
வல்லிம்மா அவர்களுக்கு இன்றுதான் விட்ட பாகங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து வாசித்தேன். பள்ளியில் அரையாண்டு பரீட்சை நடப்பதால் வலைப்பக்கம் வர கொஞ்சம் சிரமமாகவும், தாமதமும் ஆகிறது.
உண்மைக் கதை என்பதால் இதில் சொல்லுவதற்கு ஒன்று மில்லை இல்லையா? வித்தியாசமான ஒரு குடும்பம் தான். முதலிலேயே இருவருமே பேசி தங்கள் மன ஆற்றாமைகளைப் பகிர்ந்திருக்கலாம். என்றாலும் இப்படியும் மனித உள்ளங்கள் இருக்கின்றன என்பதும் புலப்படுகிறது. அப் பெண் குழந்தைகளிடமேனும் அன்புடன் இருந்தாரா? இப்படியான பெண்கள் திருமணம் எனும் பந்தத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது அல்லது முன்னரே பையனுடன் பேசி முடிவு செய்திருக்கலாம் ஆனால் அந்தக் காலத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை. இந்தக் காலம் என்றால் ஒரு சில மாதங்கள் கூடப் பழகி பின்னர் கூட வேண்டாம் என்கிறார்கள். அது கூடப் பரவாயில்லையோ என்றே தோன்றுகிறது இந்த உண்மைக் கதையை வாசித்த போது.
வருத்தமாகத்தான் இருக்கிறது...
துளசிதரன்
வல்லிம்மா எங்கள் உறவினர் ஒருவர் வீட்டில் பிள்ளை அமெரிக்காவில். அவனுக்குப் பார்த்த பெண்ணும் அமெரிக்காதான். நிச்சயம் பெரிய அளவில் நடந்தது. பெண்ணும் சென்னையில் மிகப் பெரிய பாப்புலர் நிறுவனத்தின் அதிபரின் மகள். பத்துவருடத்து முன்பானது இச்சம்பவம். இருவரும் மெயில் மூலம் தொடர்பில் எல்லாம் இருந்தார்கள். ஆனால் திடீரென்று பெண் பையனை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். தனக்கு விருப்பம் இல்லை என்று. காரணம் சரியாகத் தெரியவில்லை...ஆனால் எனக்கு அது பரவாயில்லை என்றே தோன்றியது. கல்யாணம் நடந்து கோர்ட் கேஸ், அதுவும் குழந்தை என்று வந்துவிட்டால் இன்னும் கஷ்டம்...அப்படிப் பிரிவதை விட இது பரவாயில்லை....அப்படித்தான் எண்ணத் தோன்றியது....வல்லிம்மா. இப்போ இன்னும் அடுத்த லெவல் போயாச்சு...லிவிங்க் டு கெதர்...அதில் ஒத்துவரலைனா பிரிதல்...என்று.....அப்படி ஒரு பையன் இருந்தான் அவனும் மிகப் பகழ்வாய்ந்த தினசரியில் பெரிய வேலையில் இருந்தவர். இதுவும் 12 வருடத்துக்கு முன் கதை அந்தப் பையன் வீட்டிற்கு வந்த போது திருமணம் பற்றி விசாரித்த போது...தான் ஒரு பெண்ணுடன் வசிப்பதாகவும், ஒத்துவரவில்லை என்றால் பிரியலாம் என்றும் இருப்பதாகவும் சொன்னான். இத்தனைக்கும் ரொம்ப ரொமப் கெட்டிக்காரன். சொந்தமாகத் தான் படித்த படிப்பில் பிஸினசும் செய்தான்.... அப்புறம் என்னாச்சு என்று தெரியவில்லை...
கீதா
என்னுடைய அனுமானத்தின்படி அனைத்து குற்றங்களுக்கும் அடிப்படை ராதையின் பெற்றோர்களே. ராதையை குழந்தையாகவே வளர்த்துவிட்டிருக்கிறார்கள். திருமணத்த்துக்குப்பின்னும் அப்படியே பார்த்திருக்கிறார்கள். திரும்ப வீட்டிற்குள் நிரந்தரமாக அனுமதித்துதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. ஊழ். ராதையும் பாவம்தான். கேசவனின் தந்தை நல்லவேளையாக இதைக்காணாமல் சென்றுவிட்டார்.
கீதா ரங்கன் - இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் ஒரே மகனுக்கும் டிவிஎஸ் குடும்பத்துப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து பிறகு பிரிவு ஏற்பட்டது ஞாபகத்துக்கு வருகிறதா? இப்போது அதற்கு உரிய சுதந்திரம் இருக்கிறது.
'லிவிங் டுகேதர்' - இந்த கான்செப்ட் எப்படி ஒத்துக்கொள்ளமுடியும்? இதைப் பற்றி இதற்குமேல் எழுதமுடியாது.
அதைத் தனியாக எழுத நினைத்தேன். அன்பு நெல்லைத்தமிழன்.
கேசவன் ,கோதை அம்மா இருவருக்கும் லகு மரணம் சம்பவித்தது.
ராதை அங்கேயும் நடனம் ,சபா என்று தான் இருந்தாள்.
எங்கள் உறவினர்கள் சொன்ன படி
அவள் மாற வழியில்லை.
60வயதில் புற்று நோய். தனியாகவே கஷ்டப்பட்டிருக்கிறார்.
பையனும் பெண்ணும் வந்து பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
கடமைக்காக.
பையனுக்குத்தான் அவள் மேல் தீராக் கோபம்.
அப்பா அனுபவித்த கஷ்டங்களையெல்லாம் சொல்லி
அவளை அழ வைத்திருக்கிறான்.
அவன் அவளை மன்னிக்கவே இல்லை. இறப்புக்கும் வரவில்லை.
எங்களுக்கு ஒரே ஒரு சந்தோஷம்
அந்தக் குழந்தைகள் நலமாக இருப்பதுதான்.
மன வருத்தத்தை மீறி குடும்ப வாழ்க்கை
நடத்த அவர்களுக்கு இறைவன் அருளும் தந்தையின்
அன்பு வழிகாட்டுதலும் நல்வழி காட்டியது.
இந்த வேண்டாத சம்பவங்கள் நடந்தே 40 வருடங்கள்
ஆகிவிட்டன.கேசவன்,கோவிந்தனின் பேரன் பேத்திகளுக்கே கல்யாண வயது.
இறைவன் அவர்களை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கேசவனின் மகன் வருடாந்திர திதிகளை விடாமல் செய்வதாகவும்
கேள்விப்பட்டேன்.அவனுக்கே இப்போது 55 வயதிருக்கும்.
உங்கள் எல்லோருக்கும் இறைவன் நல் வாழ்வும் நீண்ட ஆயுளும் கொடுக்க வேண்டும்.
வணக்கம் ஜீவி சார்.
அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கு என்று தான் சொல்வேன்.
ஏதோ திருமணத்தில் பார்த்த போது , மிக ஆனந்தமாக
ஆண்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அவர் வார்ப்பு அப்படி.
என் அம்மாவாலோ என்னாலோ ,இப்போது என் மகளாலோ
இன்னொருவருடைய சுதந்திரத்தில் தலையிடுவது
மிகப் பிடிக்காத விஷயம்.அதே போல கணவர்களும்
அமைப்பாக இருந்தார்கள்.
அன்யோன்யம் இந்த சுதந்திரத்தினால் அதிகரித்தது.
எங்கள் எல்லையை மீற எப்போதும் நினைத்ததில்லை.
அவர்களும் அப்படியே.
இந்தப் பெண் ஒரு அதிசயம் எங்கள் வாழ்வில். இதுவரை
பார்த்திராத அதிசயம்.
அன்பு கீதா, எங்கள் வாழ்க்கையிலும் இது போல பெண்மறுத்துக் கூறுவது நடந்திருக்கிறது. இப்போதும் அந்தப் பெண்ணின் அம்மாவும் நானும் நல்ல சினேகிதிகள். அவள் மனம் அப்போதே புரிந்தது நல்லது. இல்லாவிட்டால் விபரீதமாகை இருக்கும்.
இந்த ஊரில் கல்லூரியில் அடி எடுத்தவுடனே
இந்தக் கலப்புகள், லிவிங்க் டுகெதர் நிகழ்வதாகக் கேள்விப்பட்டேன்.
நம் பிள்ளைகள் தோழர்களுடன் ஹாங்க் அவுட் அவ்வளவுதான்.
படித்து முன்னேறணும் என்கிற துடிப்பு இந்தியர்களிடம் அதிகம்.
பெற்றோரை வருத்தப் பட வைக்காமல் பிள்ளைகள் நடந்து கொண்டால் சுகம் தான்.tHANK YOU SO MUCH FOR TAKING TIME TO READ AND COMMENT DEAR Geetha.
இரயில் தண்டவாளம் போல வாழ்க்கை - இதிலேயே எல்லாம் வந்து விட்டது.
வாழ்வில் எத்தனை பிரச்சனை கேசவனுக்கு. அவர் எடுத்த முடிவு நல்லதாகவே இருந்தது - அதுவும் குழந்தைகளில் நல்லதற்காக எடுத்த முடிவு.
அன்பு துளசிதரன், அலுவலக வேலைகளுக்கு
நடுவில் இங்கு வந்து படித்தது மிக மகிழ்ச்சி.
அப்போது லேட் 50களில், கோதைப்பாட்டி, இந்த
ராதையின் அழகைத்தான் பார்த்தார்.
குடும்பத்தை ஆராயும் வழக்கம் அப்போது அதிகமாகத்தான் இருந்தது.
மகனின் மேல் அதீத வாஞ்சை.
அவனுக்கு வரும் ஜோடி அழகா இருக்கணும்கற நினைப்பு.
ஊன்றி ஆராயவில்லை. நல்ல வைணவக் குடும்பம்
கொஞ்சம் ஆடம்பரமாயிருந்தாலும் நம் வீட்டுக்கு வந்தால் சரியாகிவிடும்
என்று நினைத்தார்.
அங்கு தான் தவறு நிகழ்ந்துவிட்டது. அவளுக்கு கலகலப்பாக
இருந்து வழக்கம். இங்கு பூஜை,புனஸ்காரம், சாயந்திரமானால்
கதை,கோவில்,கச்சேரி.
மும்பையில் அவள் இஷ்டப்படி இருக்க முடிந்தது. சென்னை வந்ததும் நவீன் சினேகம்.
கூடா நட்பு. கேடாக முடிந்தது.
நாகரீகம் முற்றிய நாட்களிலும் ,
என் மக்கள் தலைமுறை நன்றாகவே இருக்கிறது.
மூன்று குழந்தைகளுக்கும் எத்தனையோ நட்புகள்.
மனைவியுடன் வருவார்கள்.
சிரித்து மகிழ்ந்து செல்வார்கள். மாமியாருடனாவது
மாறுதல் கருத்து இருக்கும். கணவரிடம் பற்று அதிகம்.
பார்க்கலாம். நல்ல காலம் வரும் .மிக நன்றி மா. வாழ்க வளமுடன்.
மனம் கனத்தது வல்லிம்மா .. ஒருவரின் பிடிவாதம் எத்தனை பேரை அலைக்கழித்திருக்கு .எல்லா பேரண்ட்சும் நல்லா இருப்பாங்கன்னு நினைச்சிதானே பிள்ளைகளுக்கு மணமுடிக்கிறாங்க ..இதில் கேசவன் பாவம் ..ராதையின் பெற்றோர் தான் கண்டனத்துக்குரியவர்கள் ..மகள் தவறு செய்ய துணை இருந்தவர்கள் அவளை தனியே தள்ளி வைத்ததும் காலத்தின் கோலம் :(
ஆனால் இவ்வளவுக்கும் பிறகும் அந்த பிள்ளைகள் நல்ல நிலையில் இருப்பது இறையருள் .
அன்பு கீதா, விவாகரத்துகள் 90 களிலேயே
ஆரம்பித்துவிட்டது.
மனம் ஒன்றவில்லையானால் வாழ்ந்தென்ன லாபம்.
நீங்கள் குறிப்பிடும் குடும்பம் போல பல நிகழ்வுகள்.
எங்கள் திருமணத்துக்கு முன்பே இந்தப் பிரிவைப் பார்த்திருக்கிறேன்.
அதிகமாகப் படித்த பெண், வெகு அன்பான கணவன்
அவனுடைய பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் பிரிந்தார்கள். நல்ல தோழர்களாக இருந்து அவர் மறைந்தார்.
எனக்கு அவரைப் பார்த்தாலே வருத்தமாக இருக்கும்.
இறைவன் போட்ட முடிச்சில் எங்கோ தவறாகிறது.
வாழ்க வளமுடன்.
மிக மிக உண்மை திரு .பக்கிரிசாமி.
வளர்ப்பு நேராக இருந்தால் பயிர்கள்
வீணாவதில்லை.
அவர்களுக்கு அவள் ஒரே மகள்.
தங்களுடைய எதிர்காலத்து ஆதாரம்.
எல்லோரும் ஏமாந்ததுதான் விளைவு,.
அவள் அவர்களது பாசத்தைக் கண்மூடித்தனமாகப்
பயன் படுத்திக் கொண்டாள்.
நல்லதொரு இல்வாழ்வு வீணாகியது.
அன்பு வெங்கட்.
இப்போதிருக்கும் தலை முறை
நம் பார்க்கும் தம்பதிகள் அருமையாகவே இருக்கிறார்கள்.
எங்கோ நடந்த தவறுக்கு கோதைப்பட்டியின் குடும்பம் பலியானது.
சந்தோஷப்பட வேண்டிய சமாசாரம்,
அந்த நாட்களிலேயே
கேசவனின் குழந்தைகளுக்கு கவுன்சிலிங்க் கொடுத்தது தான்.
மிக நன்றி மா. வாழ்க வளமுடன்.
வல்லிம்மா இப்படி ஒரே மகளை அடங்காமல் வளர்த்த நண்பர் குடும்பம் பற்றி தெரியும் பின்னாளில் அவளே தனது பெற்றோருக்கு எமன் ஆனாள் ..பேரன்ட்ஸ் சொல்லி தருவாங்க அவளுக்கு யாரையும் மதிக்க வேணாம்னு அப்படிப்பட்ட பிள்ளை போற இடத்தில எப்படி வாழ்ந்திருக்கும் ..:( சமீபத்தில் கேள்விப்பட்டது அவளை போன்றே அவளது மகளும் தவறான பழக்கத்தில் என்னென்னமோ கேள்விப்பட்டேன் ..இதெல்லாம் பெற்றோருக்கும் ஒரு பாடம்
அன்பு ஏஞ்சல் ,
இது போலப் பெண்ணுக்குத் தவறாகச் சொல்லிக் கொடுக்கிறவர்களைப்
பார்த்திருக்கிறேன்.
பெண் தங்களுக்கு மட்டும் என்று நினைப்பவர்கள்
திருமணமே செய்து கொடுக்கக் கூடாது.
இரு நல்ல உயிர்கள் பலியாகின.
குழந்தைகளாவது தப்பித்தார்களே.
கூடப் பயணித்ததற்கு மிக நன்றி மா.
இது போல நடக்காமல் இருக்க நாம் பிரார்த்திப்போம்.
Post a Comment