Blog Archive

Tuesday, December 19, 2017

மார்கழிப் பாசுரம் 4

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


மார்கழிப் பாசுரம் 4
+++++++++++++++++++++++++
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியன் தோளுடைய பத்மனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே  சரணம்.
Add caption

6 comments:

ஸ்ரீராம். said...

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Anuprem said...

ஆண்டாள் திருவடிகளே சரணம்....

நெல்லைத் தமிழன் said...

அர்த்தம்:
மேகத்திற்கு அதிபதியான கண்ணா! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

ஆழி - மேகம், கடல்
தாழாதே சார்ங்கம் - தோல்வி அடையாத சார்ங்கம் என்னும் வில்

ராஜி said...

பகிர்வுக்கு நன்றிம்மா

Thulasidharan V Thillaiakathu said...

ஆழிமழைக் கண்ணன் சென்னைக்குத் தண்ணீர்ப்பிரச்சனை இல்லாமல் செய்யனும் ..ஓங்கி உலகளந்தவன் மாதம் மும்மாரி பெய்ய வைக்காவிட்டாலும்...அட்லீஸ்ட் தண்ணீர்ப்பஞ்சம் இல்லாமலேனும் செய்யணும்...

கீதா

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன் மா...