Saturday, November 07, 2026

இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வாழ்க வளமுடன்.


 என் வாழ்வின் முக்கிய அம்சமான என் கணவருடன் எல்லோரையும் வாழ்த்துவதில்  அளவில்லாத மகிழ்ச்சி.
இதைச்  செயல் படுத்திய ஏஐக்கு என் நன்றி.

இந்த தீப ஒளித் திரு நாள், எல்லா வளங்களையும் 
அழைத்து வரட்டும்.

அமைதி, அன்பு,விட்டுக்கொடுத்தல், தயாள குணம், ஆரோக்கியம் எல்லாம் நம் வாழ்வை நிறைக்கட்டும். 

எல்லாம் வாரி வழங்கும் இறைவனுக்கு மனமார்ந்த நன்றி.

8 comments:

ஸ்ரீராம். said...

வாழ்த்து அட்டையில் ரேவதி என்று மட்டும் கையெழுத்திட்டிருப்பதை அன்புடன் ஆட்சேபிக்கிறேன்.  சிங்கம் பெயர் விடுபட்டிருக்கிறது.

ஸ்ரீராம். said...

வாழ்த்துகளுக்கு நன்றி.  நமஸ்காரம்.  உங்களுக்கும் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம், மிக மிக நன்றி மா. ஏஐ ரொம்ப உரிமை எடுத்துண்டு ரேவதின்னு மட்டும் போட்டிருக்கிறது. இப்போ மாற்றி விட்டேன் மா. உங்கள் ஆதர்சமான அன்புக்கு நாங்கள் இருவரும் கட்டுப்படுகிறோம். நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறை ஆசிகள் மா.சுஜா, உங்கள் மாமியார், புதுப் பேத்தி, மகன்கள், மருமகள்கள் எல்லோருக்கும் என் அன்பு.

ஸ்ரீராம். said...

ஆனாலும் முதல் படத்தில் அப்படியேதான் இருக்கிறது அம்மா.  ஆனால் அதை மாற்றுவது கடினம்தான்.  

வல்லிசிம்ஹன் said...

சரியாகச் சொன்னீர்கள் மா. ஶ்ரீராம். மாற்றுவது சிரமம் தான். அதான் நமக்குத் தெரியுமே.:)அழிப்பது காலம். நம்மால் நினைக்கத் தான் முடியும்

கோமதி அரசு said...

வாழ்த்து அட்டை அருமை. வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு தங்கச்சி கோமதி. எல்லாம் சர்வ வல்லமை கூடிய செயற்கை நுண்ணறிவுத் திறன்.:)

அன்றைய தீபாவளி. புதுப்பதிவு அறுபதுகள்.1961

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வாழ வேண்டும். 1961 ஒரு தீபாவளி நாள்.  இடம் திண்டுக்கல். அஜீரணம், அதீதம் இவை இரண்டுமே வாழ்வில் இல்லாத நாட்கள்.  ...