வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
லலிதாவுக்கு அந்தப் பள்ளியின் சூழ்நிலையும்
தலைமைப் பொறுப்பில் அப்போது இருந்த சகோதரியையும் மிகவும் பிடித்து விட்டது.
எல்லோருக்கும் அன்னையாக இருந்த மதர் சுப்பிரியர் அவளை அன்புடன் ஆசீர்வதித்தார்.
மகளே , உன் வாழ்வு சீரடையும். கடவுளிடம் ஈடுபாடும் கற்கும் கல்வியில் முயற்சியும் இருந்து வெற்றி பெறுவாய். உலகத்தின் உன்னதத் தொழில் கல்வி கொடுப்பது.
மென்மேலும் அபிவிருத்தி கிடைக்கும் .வாழ்வு உயர்ச்சி அடையும். வெகு நாட்களுக்குப் பிறகு மனம் லேசாவதை உணர்ந்தாள் லலிதா.
வீட்டுக்குத் திரும்பும்போது சாந்தாவின் அலட்சியம் மனதை உறுத்தினாலும் மாமா,மாமியின் அன்பும் அண்ணாவின் ஆதரவும் எப்பொழுதும் உண்டு என்பது சிறிது ஆறுதல் அளித்தது.
அங்கே சாந்தா அன்னையைச் சொல்லால் பொரிந்து கொண்டிருந்தாள்.
கணவனை இழந்த ஒரு மாதத்தில் கருத்தரித்திருக்கும் என்னைப் பார்க்க எப்படி இங்கு வருவாள்.
சென்னையில் இல்லாத கல்லூரியா.
அவள் முன் நானும் என் கணவரும் எப்படி முன் போல்
சகஜமாக இருப்பது.
அவருக்கும் தங்கையைப் பார்த்து வருத்தம் வருமே. என் குழந்தை நன்றாக வளர வேண்டாமா.
இன்னும் என்னென்னவோ சொல்லி அன்னையைத் திகைக்க வைத்தாள் .
அழகம்மா இத்தனை வேதனைப் படாதே. உன் உடல் நிலைக்குச் சரி வராது. பெண்ணுக்குப் பெண்ணே இவ்வளவு பேதம் பார்க்கலாமா. அவளுக்கும் இப்போதுதான் 32 வயதாகிறது. நீயும் அவளுடன் வளர்ந்தவள் தானே.
சென்னையில் இருக்க முடியாமல் இங்கே வந்திருக்கிறாள் .
விடுதியில் தங்கப் போகிறாள்
உன் நிம்மதிக்கு ஒரு கெடுதியும் வராது
சரவணன் நிலையை நினைத்துப் பார். தங்கைக்காக எவ்வளவு வருந்தினான்.
நல்ல பெண்டாட்டியாக இருக்க முயற்சி செய் குடும்பம் தழைக்கும்.
லலிதா மேன்மையான பெண்.
யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டாள். என்று சொல்லி முடித்தாள்.
உபதேசம் செய்யாதேமா. திருமணம் ஆனதும் தனியாகச் சென்றிருக்கணும்.
அப்பா சொல் பேச்சு கேட்டு இங்கே தங்கினேன்.
எனக்குப் பிடிக்கவில்லை என்று தன் அறைக்குள்
போய்விட்டாள் .
நல்லதையே நினைக்கும் அழகம்மையின் மனம் வருந்தியது.
வாயிலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டு
சரவணன். என்ன அத்தை, லல்லி வந்து விட்டாளா. எப்படி இருக்கிறாள்.
என்று ஆவலோடு கேட்டவனை
உள்ள வாப்பா. லல்லி சுகமாக வந்தாள் . ஹோலிகிராஸுக்கு மாமாவும் அவளும் போயிருக்கிறார்கள். இதோ வந்து விடுவார்கள் என்று அவனுக்கு காபி பலகாரம் எடுத்துவைக்க உள்ளே விரைந்தாள்.
அவள் வெளியே வந்த பொது சிந்தனை தோய்ந்த முகத்துடன் சரவணன் அறையிலிருந்து வெளிப்பட்டான்.
கேள்விக்குறியோடு அத்தையை நோக்கினவனுக்குக் குழப்பம் தான் அதிகரித்தது.
சைகையால் அவனை அமைதி படுத்திய அழகம்மை,
கணவரையும் ,லல்லியையும் உள்ளே வரவேற்றாள்.
அண்ணா எப்ப வந்த என்று அழைத்தபடி உள்ளே வந்தவள், அமைதியாக அருகில் சென்று அணைத்துக் கொண்டாள்.
சரவணனின் கண்கள் நிரம்பியது.
சமாளித்துக் கொண்டு போன காரியம் வெற்றி போல, என்ன டீச்சரம்மா என்று சிரித்தான். ஒரே மாதத்தில் இளைத்த உருவமும்,இறுகிய முகமும் வேறு ஒரு பெண்ணைப் பார்ப்பது போல் இருந்தது.
மாமாவை நோக்கி அவர்கள் லல்லிக்கு அட்மிஷன் கொடுத்துவிட்டார்களா என்றான்.
பின்ன என்னன்னு நினைச்ச என் மருமகளை.
திங்களன்று பள்ளியில் சேரனும். ஞாயிறன்று விடுதியில் சேரனும்.
பணம் எல்லாம் ரெடியாகக் கொண்டு வந்திருக்கிறாள் உன் தங்கை.
எனக்கு ஒரு பைசா செலவில்லை என்று சிரித்தார் சோமு மாமா.
நீங்கள் இருப்பதால் தான் மாமா வந்தேன்.
உங்கள் உதவி இல்லாமல் என் வாழ்வு எப்படி இந்தப் பாக்கியத்தைப் பெறு ம் என்று மாமியையும் மாமாவையும் நிற்க வைத்து வணங்கினாள் .
அதற்குள் அறையிலிருந்து சாந்தாவின் குரல் கேட்டது. சரூ ..... எனக்கு மீண்டும் தலை சுற்றுகிறது.
இன்று டாக்டரை ச் சந்திக்கலாமா என்று கேட்டது.
ஓ போகலாம் மா. இங்கே வாயேன். எல்லோரும் வராந்தாவில் உட்கார்ந்து பேசலாம்
என்று அழைத்தான்.
பதிலில்லை.
லல்லி,,,,, மாமா என்னுடைகளைச் சீர் செய்து கொள்கிறேன். இன்னும் சில தேவையான பொருள்களையும் வாங்கி கொள்கிறேன்.
முக்கியமாக திருவானைக் காவல் போய் வர வேண்டும்.
அவள் அனுமதியோடு என் பயிற்சி ஆரம்பிக்கட்டும் என்றாள் .
நான் உன்னை அழைத்துச் செல்கிறேன் லல்லி.இப்பொழுது ஒய்வு எடுத்துக் கொள் லிஸ்ட் தயார் செய். மதியத்துக்கு மேல் போகலாம் என்றான்.
சரியண்ணா என்ற படி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் லல்லி.
அவள் எதிர்பார்த்தபடி சரவணனால் வரமுடியவில்லை.
தானே ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொண்டு, கையில் தயாராய் இருந்த, பயிற்சிக்கான உபகரணங்கள் கொண்ட லிஸ்டும், இரு சேலைகள், தன் குளியல் சாதனங்கள் என்று வாங்கி கொண்டு
திருவானைக் காவலும் போய்விட்டு வீடு நோக்கி வந்த பொது மணி இரவு ஏழாகி இருந்தது.
எதிர் நோக்கி ,முகத்தில் கவலையோடு அமர்ந்திருந்தனர் மாமாவும் மாமியும்.
.