Tuesday, February 18, 2014

கணவர் நான் <<<<<<<>>>>>>>> ஒரு குட்டிக்குரங்கு.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
வீட்டுக்கு வெளியே   தென்னைக் கிளைகள்                                                                                                  புதுக்கோட்டையில் ஒரு மாடிவீட்டில் 25 ரூபாய் வாடகையில் குடும்பம் ஆரம்பித்தது.
  அப்பா அனுப்பிய பெட்டிவந்தது. பெட்டியில் பூட்டு இருக்கு சாவி இல்லை.

   உன்னிட்ட இல்ல என்று இவர் கேட்க, உங்ககிட்டத்தானே  அப்பா  கொடுத்தாரில்ல  என்று நான் சொல்ல  விழித்தோம் இருவரும். இதென்னம்மா பெட்டிதானே  என்றவர்   தன்    டூல்ஸ் பெட்டியிலிருந்து    ஒரு உளியும் சுத்தியும் கொண்டு வந்தார்.    
      எனக்கோ  பயமாக இருந்தாது. }  என்ன  சிம்  செய்யப் போகிறீர்கள்///
 உளியும் சுத்தியும் எதுக்குன்னு நீ நினைக்கிறே என்ற வண்ணம் போட்டார் ஒரு போடு பூட்டு இரண்டாய் உடைந்தது.      
   பூட்டைப் பார்த்துப் பாவம் சொன்னவளைக்     கண்டு சிரிக்கிறார். உனக்குப் பாத்திரங்கள் வேணுமா  வேண்டாமா.     வேணும். அப்போ எடுத்துவைக்கலாம் வா  என்ற படி  சமையலறைக்குள் புகுந்தார். அதுவும் ஓடு வேய்ந்தது  தான்.  

        இரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள். ஒரு குட்டி மேடை. அதன் மேல் ஒரு ஹாட் ப்ளேட்.  வாங்கி வந்த பால்  எல்லாம் இருந்தன.    என்னை ஈர்த்தது தென்னை மரமும்     அதில் விளையாடும் அணில்களும்.       வாம்மா.  ஹேவந்ட்  காட் த ஹோல் டே. என்ற வண்ணம் அழகாக ப்  பாத்திரங்களை   அங்கே      இருந்த  பெரிய அலமாரியில்       அடுக்கிக் கொடுத்தார். ஓகே  பால் காய்ச்சு,. ஆஜி சொன்ன மாதிரி செய்யலாம் என்றபடி ஹீட்டரை   ஆன் செய்தார்.இது சுடும்.   பார்த்து  ஹாண்டில் பண்ணனும் என்றவரிடம்  
   எல்லாம் எனக்கும் தெரியும் எங்க சித்தப்பா கிட்ட இருக்கு.  என்றவளைப் பார்த்துச் சரி நான் போய் குளித்துவிட்டு வருகிறேன்  என்று வெளீயெ போனார்.  ...


...,  சின்னப் பொண்ணு...... என்றபடி  ஒரு வயதான  பாட்டியின்  வருகை ஜன்னல் வழியே தெரிந்தது. பாலை மறந்தேன்.   வெளீயே  வந்து  நீங்க  யாரு   என்று   கேட்க,    கேட்டதற்கு அந்த அம்மா   என்னை  ஏற இறங்க  பார்த்தார்.  நான்  பூவனம்  கீழ் வீட்டுத் தம்பியைப் பார்த்துக் கொள்கிறேன், அப்படியே குடித்தனம் இருக்கிற லச்சுமி அம்மாவுக்கும் பாத்திரம்    தேச்சுக் கொடுத்துத் துணியும் துவைப்பேன் என்றார்.                பாலு பொங்குது போல....பாப்பா  அடுப்பைப் பாரு என்றார்.   அட ஆமாம்  பால் பொங்கித்தான் விட்டது.  அவசரமாக அடுப்பை    அணைத்தேன்.      இருவருக்கும் வாங்கிய பால்      அரைப்படி. அதில் கால் தான் பாக்கி.

அடுப்பில் விழுந்து   பாலின் ஒருவித வாசனை வந்தது. ரொம்ப நாளைக்கு  மறக்கவில்லை. இவர் வந்ததும், கிழவி நீ வந்திட்டியா. இந்தப் பொண்ணுக்கு அவ்வளவா ஒண்ணும் தெரியாது. இந்தா கொஞ்சம் பால் சாப்பிடு என்று தம்ப்ளரில் அவளுக்குப் பால் கொடுத்தார். தம்பி  பொண்ணுக்குக் கொடுங்க. அம்மா ஐய்யாவுக்குக் கொடு என்றதும்   இருவரும் குடித்துவிட்டு அவர் கிளம்பினார்.   சாயந்திரம்தான் வருவேன் என்றதும் கிழவி குறுக்கிட்டாள்.

தம்பி ஜீப்பில தான போற. மதியம் சங்கு,,,அதாவது வொர்க்ஷாப் சைரன் அடிச்சதும் வந்துடு. அது தனியா என்ன பண்ணும்   என்றாள்.  ஓ அதுவும் சரிதான் .            நீ   துணிமணியெல்லாம்  பீரோவில் அடுக்கு.  நான் சாப்பாடு வாங்கிக் கொண்டு வருகிறேன்.   ஆபீஸ்   பையன்   அம்பி வருவான் அவனிடம்    டிஃபன் கேரியரைக் கொடுத்து அனுப்பு. என்ற    வண்ணம் கிளம்பி விட்டார்.                                  கிழவி  அவர் போனபிறகு என்னைப் பற்றிய   விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டாள்....  ஒண்ணுமே    தெரியாமல் இருக்கக் கூடாது  பாப்பா. எப்பவும் புருஷனிடம் கறாரா இருக்கணும் என்றாள்.                        எனக்குச் சிரிப்பு வந்தது. இதென்ன நாடார் கடையா  கறாரா    இருப்பதற்கு  என்றேன். ஹ்ம்ம்   இளங்கன்னு          பயமறியாது. அவரும் வெகுளி. நீயும் அப்படித்தான்போல  என்றபடி,   கீழ வந்து  லச்சுமியைப் பாரு அது முழுவாமல் இருக்கு  அதுகிட்ட  இருந்த சமைக்கக் கத்துக்கோ      என்றபடி    போய்விட்டாள்.      

26 comments:

ராமலக்ஷ்மி said...

சஸ்பென்ஸோடு நிறுத்தியிருக்கிறீர்கள். தொடரக் காத்திருக்கிறோம்.

ராமலக்ஷ்மி said...

சஸ்பென்ஸோடு நிறுத்தியிருக்கிறீர்கள். தொடரக் காத்திருக்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்து என்ன நடந்தது....?

ஆவலுடன்.........

Geetha Sambasivam said...

அருமையான நினைவுகள். கொஞ்சம் த்ரில்லிங்கா முடிச்சிருக்கீங்க. :)))

என் கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைச்சதும் நினைவில் வருது. ஆனால் எனக்கு அப்போவே நல்லாவே சமைக்க வரும்.

இப்போத் தான் சில நாட்கள் முன்னர் ரங்க்ஸிடம் இந்த 2014 ஆம் வருஷம் நான் சமைக்க ஆரம்பிச்ச ஐம்பதாவது வருஷம்னு சொன்னேன். கொண்டாடலாமானு கிண்டல் பண்ணினார். என் அம்மா சித்தியின் பிரசவத்துக்கு உதவிக்குச் செல்லப் பத்தாம் வகுப்புப் படிச்சுட்டு இருந்த நான் சமைச்சு வைச்சுட்டு ஸ்கூலுக்குப் போகணும். அப்பா கறாரா ஆர்டர், இல்லைனா ஸ்கூலே வேண்டாம் நிறுத்தும்பார். அதுக்கு பயந்தே காலை சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும் முடிச்சுட்டுக் கிளம்புவேன் ஏழரைக்குள்ளாக. :)))))

இப்போ நினைச்சால் கனவாகத் தோன்றுகிறது.

Geetha Sambasivam said...

பின்னூட்டம் போச்சானு தெரியலையே???
:))) என்னமோ மக்கர் பண்ணுது!

Geetha Sambasivam said...

அருமையான நினைவுகள். கொஞ்சம் த்ரில்லிங்கா முடிச்சிருக்கீங்க. :)))

என் கல்யாணம் ஆகிக் குடித்தனம் வைச்சதும் நினைவில் வருது. ஆனால் எனக்கு அப்போவே நல்லாவே சமைக்க வரும்.

இப்போத் தான் சில நாட்கள் முன்னர் ரங்க்ஸிடம் இந்த 2014 ஆம் வருஷம் நான் சமைக்க ஆரம்பிச்ச ஐம்பதாவது வருஷம்னு சொன்னேன். கொண்டாடலாமானு கிண்டல் பண்ணினார். என் அம்மா சித்தியின் பிரசவத்துக்கு உதவிக்குச் செல்லப் பத்தாம் வகுப்புப் படிச்சுட்டு இருந்த நான் சமைச்சு வைச்சுட்டு ஸ்கூலுக்குப் போகணும். அப்பா கறாரா ஆர்டர், இல்லைனா ஸ்கூலே வேண்டாம் நிறுத்தும்பார். அதுக்கு பயந்தே காலை சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும் முடிச்சுட்டுக் கிளம்புவேன் ஏழரைக்குள்ளாக. :)))))

இப்போ நினைச்சால் கனவாகத் தோன்றுகிறது.

கதம்ப உணர்வுகள் said...

புதுக்கல்யாணப்பொண்ணு வெள்ளந்தியா பாலை பொங்கவிட்டு பூட்டை உடைச்சா பயந்து பார்த்துக்கிட்டு.. ச்ச்சோ ச்சுவீத்தும்மா நீங்க...

அப்புறம் என்னாச்சு??

சஸ்பென்ஸ்ல விடறதே வேலையாப்போச்சு :)

த.ம.1

கதம்ப உணர்வுகள் said...

//இப்போத் தான் சில நாட்கள் முன்னர் ரங்க்ஸிடம் இந்த 2014 ஆம் வருஷம் நான் சமைக்க ஆரம்பிச்ச ஐம்பதாவது வருஷம்னு சொன்னேன். கொண்டாடலாமானு கிண்டல் பண்ணினார். // சேம் பிஞ்ச் கீதா..

//Blogger Geetha Sambasivam said...
பின்னூட்டம் போச்சானு தெரியலையே???
:))) என்னமோ மக்கர் பண்ணுது!//

காக்கா தூக்கிட்டு போன பின்னூட்டம் கொண்டு வந்து சமர்த்தா வெச்சிருச்சு.. அதானே ஆருக்கிட்ட :)

திவாண்ணா said...

ம், அப்புறம்?

ஸ்ரீராம். said...

இனிக்கும் நினைவுகள். அந்த மாதிரி அக்கறையாகப் பேசும் பக்கத்து வீட்டுக்காரர்களை எல்லாம் இந்தக் காலத்தில் பார்ப்பது அரிது. எங்கள் ஆரம்ப நாட்களும் எனக்கு நினைவுக்கு வருகின்றன!

அப்பாதுரை said...

ஒரு வேளை பக்கத்து வீட்டுக் கதவை உடைச்சிட்டு முழிக்கப் போறீங்கனு நினைச்சேன் :)

25ரூ வாடகை.. இப்ப எவ்வளவு இருக்கும்னு நினைக்காம இருக்க முடியலே!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, சஸ்பென்ஸ்ணூ சொல்ல முடியாதுப்பா. அதற்கு மேல எழுத முடியவில்லை.எத்தனையோ இனிய நினைவுகளில் இவைகளும் ஒன்று. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நடந்தது என்ன. நாளை தெரியும் தனபாலன் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

எனக்கு சமைக்கத் தெரியும் பா கீதா. அம்மா வீட்டுக்கு வரக்கூடாது என்றால் முணுமுணுப்போடு அப்பா துணை இருக்க விறகடுப்பிலிருந்து ஸ்டவ் வரைக்கும் வந்த பிறகுதான் திருமணம். அன்று மளிகை சாமான்கள் வந்து சேரவில்லை. அதான் கதை. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு தோழர்கள் வீட்டில் விருந்துக்குக் கூப்பிட்டதால் ஒரு வேளை சமையல். அதுவும் ஆழ்வார் பாடினது போல உ.கிழங்கு,தக்காளிப் பச்சடி,வெங்காயம் போட்ட வத்தக் குழம்பு. ஸ்மைலி போட முடியவில்லையே என்று தோன்றுகிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மஞ்சு. வலச்சரம் பின்னிய களைப்பு தீர்ந்ததா. அருமையாக இருந்தது. அச்சு பிச்சு என்று என்னைச் சொல்லலாம்.இரண்டு வருடங்களுக்கு எங்க அம்மா கொடுத்த லிஸ்ட் வச்சே மளிகை பொருட்கள் வாங்கி இருக்கிறேன்.ஒரு குழந்தை பிறகும் அதே பால். நல்லவேளை அமுல்ஸ்ப்ரேயும், க்ளாக்சோவும் எங்க பெரியவனை வளர்த்தது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அப்புறம் தயிர் சாதம் பிசைந்து தம்பி தங்கை எல்லோருக்கும் நார்த்தங்காயோடு அக்கா கையில் கொடுத்தாளாம் தம்பி வாசுதேவன்.:*(}

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம், எனக்கு வாய்த்த உதவிப் பெண்களும் அக்கம்பக்கத்து வீட்டார்களும் அருமையானவர்கள். கீழ் வீட்டு லக்ஷ்மியை .ஓ லக்ஷ்மி ஓ கீதா .. பாட்டுப்பாடித்தான் கூப்பிடுவேன். அவர்கள் வீட்டு சிம்னி எங்கள் முற்றத்தில் இருக்கும்.}}

வல்லிசிம்ஹன் said...

ஓ எங்க வீட்டுக் கதவையே உடைத்திருக்கோம் துரை. கோயம்பத்தூரில் ஒரு பொருட்காட்சிக்குப் போனபோது இவர் பர்ஸ் வீட்டுச் சாவியோடு திருடு போய் விட்டது. வாயில் க்ரில்லை தாண்டினால் நல்ல சாலிட் கதவு. இவர் மேல் நிலையை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு ஒரு உதைவிட்டார். பறந்தது ஆட்டோமாட்டிக் லாக். அன்று இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. இவர் நடிக்க போயிருந்தால் ஸ்டண்ட் செய்தே சம்பாதித்திருப்பார். மாடர்ன் தியேட்டர்சில் கூட அழைத்தார்கள். நல்ல ஃப்ரண்டா இருக்கேன்பா. நடிக்கவில்லை. என்று சொல்லிவிட்டார் அப்போது இருந்த ராமசுந்தரத்திடம்.

அப்பாதுரை said...

பூட்டுங்கள் உடைக்கப்படும் கேஸா நீங்க.. நல்ல தமாஷ்.
மாடர்ன் தியேடர்சுக்கு நஷ்டம்.. சிங்கத்தை ஸ்டண்ட் காட்சியில் கற்பனை பண்ணிப்பார்க்கிறேன்.. அட்டகாசமாக இருந்திருக்கும்.

அப்பாதுரை said...

எதுக்கு உங்களை நீங்களே குட்டிக்குரங்குனு சொல்லிக்கிறீங்கனு நினச்சேன் முதல்ல..:)

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா ஹா. அப்போ நான் செய்த சில வேலைகளைப் பார்த்தால் இவருக்கு அப்படிக்கூடத் தோன்றி இருக்கலாம். எல்லாவற்றிலும் நறுவிசு பார்ப்பவர். நானோ சைனா செட்டை உடைத்து, கையில்லாத வீனஸ் பொம்மையைத் தானம் பண்ணி எல்லாம் செய்திருக்கிறேன். இரண்டு நாட்கள் வீட்டில் பேச்சு வார்த்தை இருக்காது}}}}

வல்லிசிம்ஹன் said...

நாங்கள் கடைசியாத் திருச்சியில் கொடுத்த வாடகை நூத்தம்பது 76 இல் துரை. மாடர்ன் தியேட்டர்ஸ் வண்டிகள் வொர்க்ஷாப்பிற்கு வரும். அவரும் வருவார். இவர் வண்டிகளை ரிவர்ஸ் எடுத்துவிடுவதைப் பார்த்து ஆச்சரியப் படுவார்.இன்னும் இரண்டு மூன்று யேற்காடு எஸ்டேட் முதலாளிகள் எல்லாம் சேர்ந்து டூர் எல்லாம் போய் வருவோம்.சேலத்தில் இருக்கும் போது. சிங்கம் ஒரு நாளும் வரம்பு மீறிப் போய்விடமாட்டார்.என்னதான் செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளையாக இருந்தாலும் கௌரவம் ரொம்பப் பார்ப்பார். நன்றி துரை.

கதம்ப உணர்வுகள் said...

@// வல்லிசிம்ஹன் said...
வரணும் மஞ்சு. வலச்சரம் பின்னிய களைப்பு தீர்ந்ததா. அருமையாக இருந்தது. அச்சு பிச்சு என்று என்னைச் சொல்லலாம்.இரண்டு வருடங்களுக்கு எங்க அம்மா கொடுத்த லிஸ்ட் வச்சே மளிகை பொருட்கள் வாங்கி இருக்கிறேன்.ஒரு குழந்தை பிறகும் அதே பால். நல்லவேளை அமுல்ஸ்ப்ரேயும், க்ளாக்சோவும் எங்க பெரியவனை வளர்த்தது. நன்றி மா.

10:13 PM// ரொம்ப ஸ்வீட் மா நீங்க. என் மெயில் ஐடி manjusamdheeraj@gmail.com ரொம்ப நாளா உங்கக்கிட்ட பேசணும்னு ஆசை. பதிவர் மாநாட்டில் உங்களை பார்த்ததுல இருந்து.... இப்ப தான் தைரியமா தொலைப்பேசி எண் கேட்கிறேன். என் மெயில் ஐடிக்கு உங்க தொலைப்பேசி எண் அனுப்புங்கோ அப்பத்தானே நான் உங்களை தொல்லை பண்ண முடியும்.. :)

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!

கு குரங்குக்குக் காத்திருக்கேன்:-))))

வல்லிசிம்ஹன் said...

வருது வருது குட்டிக் குரங்கு துளசி}}}}}}

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள் தாம்மா....

கு.கு. கதைக்குக் காத்திருக்கிறேன்.