Blog Archive

Friday, February 21, 2014

குரங்குகுட்டி வந்த கதை

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

  • வீடு தழைக்க வேண்டும்                             வளமான வாழ்க்கை வேண்டும்.                                                                                                                                      இப்படியாகத் தானே  இரு வாரங்கள்   சாப்பாட்டுக்குக் கவலையில்லாமல் நண்பர்கள் ஆபீஸ் மேனேஜர்கள் வீடுகள் என்று   நாட்கள் கடந்தன.  புதுக்கோட்டை  கிளை பெரிய மானேஜர்   திரு சடகோபன்  அனைவரையும் எங்கள் வீட்டிற்கு வரச் சொல்லி    மாலைகள் வரவழைத்து ரிசப்ஷன் கொடுத்தார்.                                  அவர் மனைவி எப்போதும் இனிய முகத்தோடு  என்னை அவர் வீட்டில் வந்து இருக்கச் சொல்வார். எனக்குத்தான் பரிய பொக்கிஷமாகப் புத்தகங்கள் கிடைத்தனவே.       ஃபுல்ல் அண்ட் ஃபுல்   க்ரைம் நாவல்கள்,எல்லாம் அமெரிக்க எடிஷன்.  இர்விங் வாலஸ்,     லியான் யூரிஸ்,,,ஆல்டுவஸ்  ஹக்ஸ்லி,சாமர்செட் மாம்  எல்லாம்  நான்கு மாதங்கள் விடாமல் படித்தேன்..                            அப்போதுதான் ஒருநாள் மாலை  சத்தம் போடாமல்  இவர் மேலே ஏறிவரும்     லேசாக விழுந்தது.  என்ன  விஷயம். புதிதாக ஏதாவது    இருக்கணும் என்று மட்டும் தோன்றியது..ஆஹ்ஹ்ன்}}}  அங்கயெ  நில்லு. இதோ பார்   என்று தன் கையில் இருக்கும் ஒரு  கம்பிக் கூண்டைக் காண்பித்தார். இது என்ன புதுவிதமான     ஜந்து. கண்கள் மட்டும் பெரிதாக    இருந்தன.  ரொம்பச் சின்ன......குரங்கு. ஹேய் என்ன இது குரங்கா.       அமாம் ரேவ்.  பாவம் இதோட அம்மா எலெட்ரி ஷாக்ல் அ  போயிடுத்து.   இதுக்கு ஒண்ணும் ஆகலை. அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்ததால் அதிர்ச்சி. சரி நாம் வளர்க்கலாம்னு கொண்டு வந்தேன்       என்றார். கிட்ட வந்து பாரேன் என்றார்.    அதுவோ என்னைப் பார்த்தாலே பல்லைக் காண்பிக்கிறது.               இவர்தான் அம்மா என்று நினைத்துக் கொண்டுவிட்டதோ என்னவோ{(*::::::}    இதுக்குச் சாப்பாடு_  நான். பால் கொடுக்கலாமே.  நான் அது பக்கத்தில போக மாட்டேன்.அதுக்கு என்னைப் பிடிக்கலை.       சரி திருமேனியைப் பால் கொடுக்கச் சொல்கிறேன். இப்போதைக்கு நம் ஹாலில் இருக்கட்டும்.. சரியா ரீடா   என்று அதன் முகத்தைப் பார்த்தார். எனக்கோ அடக்க முடியாமல் கோபம்.   ஹாலில் இது இருந்தால் நான் எங்க உட்காருகிறது.   ஏம்மா  இரக்கத்தோட அது பார்த்துண்டால் நல்ல  செல்லமாக இருக்கும்.     இப்படிப் பயப் படறியே.     இதைத்தேடி   இதோட சித்தப்ப அப்பா எல்லாம் இங்க வந்துவிட மட்டார்களா.            இதோ பாரு இதுக்கு நல்ல ரெட் ரிப்பன் வாங்கி வந்திருக்கிறேன்.அதனால்   இதை  மாடி பால்கனியில்  விளையாட விடுகிறேன். டாக்டர் அதற்கு  ஊசியெல்லாம் போட்டு இருக்கிறார் . அது தூங்கிவிடும். அப்புறம் நாளைக் காலையில் பால் கொடுத்தால் போதும்.  கம் ரீட்டா லெட்ஸ் கோ ஃபார் ஃஅ   வாக் என்று மொட்டை மாடியில் அழைத்துச் சென்றார். அதற்குள் என் சமையல் வேலைகளை             முடித்துக் கொண்டு        கையில்     தயிர்சாதம் பிசைந்துகொண்டு  படுக்கு அறைக்கு வந்துவிட்டேன்.            இவர் வந்தௌ அழகா அதற்குஉ ஒரு சாக்குப் பையை விரித்து  அதைப் படுக்கவைத்துக் கூண்டில் வைத்தார்.           அவர் வருவதற்குள் நான் தூங்கியாச்சு.       இரவில் தீனமாகக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது. இவர் உடல் உழைப்பில் வந்தத் தூக்கத்தில் ஒன்றையும் கேட்கவில்லை.    நாந்தான்   கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.                                                             பாவம்தான். ஆனால் பயமாக இருக்கே. எப்படியோ பகலும் வந்தது. ஆபீஸ் போகும் அவசரம். அவரைப் பார்த்தது அதற்குத் தனி உற்சாகம். எனக்குப் பொறாமை.{}                                                                   அம்மா இதைச் சமையலறை ஜன்னலில் கட்டி வைக்கிறேன்.     திருமேனி வந்து பொறை,பொரி கொடுப்பான். அது ஒண்ணும் செய்யாது என்று விரைந்துவிட்டார். நாம் சமையலறையில் நுழைந்ததுதான் தாமதம் , அதுவரை  கயிற்றில் ஆடிக்கொண்டிருந்த ரீட்டா  ஒரே ஜம்ப் ஸ்டவ்வில்  சாதம் வைக்க வந்தவள் பதறி வெளியே   வந்துவிட்டேன்.               அது என்னைவிடவில்லை. நல்ல நீளமான கயிறு  சமையலறை வாசலில் அநுமார் மாதிரி உட்கார்ந்து கொண்டது. சிரிபு வந்தாலும் அடுத்து என்ன செய்யும் தெரியாது.  காலைசிக்னஸ் வேற.                       கிழவி வருவதற்காகக் காத்திருந்தேன்    ஒரு பாடு அழணுமே.    அவளும் வந்தாள் அவளைப் பார்த்தும்  ரீட்டா சீறியது. என்ன பாப்பா குரங்குக்குட்டியெல்லாம் வீட்டுக் கொண்டுவரக்கூடாதுமா. நீ இந்த நேரத்தில் பயப்படாதே.         உனக்கு என்ன வேணும்        என்றள். உன் பேரன் திருமேனியைக் கொஞ்சம் இதோட இருக்கச் சொல்லு. நான் என் சமையலை முடிக்கிறேன் என்றேன்.        என்ன  ஐய்யா இப்படி எல்லாம் செய்யறாரு என்று முணுமுணுத்தபடி  பேரனை விளித்தாள்.    அவன்  ரீட்டாவைப் பார்த்ததும்  ஹை  குட்டி,. எங்க கிடச்சுதும்மா. என்ன சாப்பிடும்   ஐய்யா பொறைபிஸ்கட்டு,பாலு,பந்து எல்லாம் வாங்கித் தரச் சொன்னாருன்னு   பத்து ரூப்பாயைக் காண்பித்தான்.        இந்த ரீட்டா ஒரு தாவலில் அவன் தோள்  மேல்   ஏறிக்கொண்டது. ஆம்பளைகளைத்தான்        அது லட்சியம் பண்ணும் போலிருக்கு. நீ போ தாயி  என்றபடி  அவள் தன் வேலைகளைக் கவனித்தாள்.     எனக்கு மட்டும் திருமேனி வேலைக்குப் போகணுமே. மறுபடி ஆட்டம் போட்டல் என்ன செய்ய என்று  யோசனை.  அடுத்தப்பில பருப்பு சாதம் போடுன்னு கூடச் சொல்வார்."      அதேஎ போலத்தான் ஆச்சு. திருமேனி போனதும்   சாப்பிட்டதெம்பில் இன்னும் ஊஞலாட ஆரம்பித்தது. நான் சமையலறைக்கு வந்தால் முகத்துக்கு நேர வந்து ஜன்னலில் உட்காரும். இரண்டு நாட்கள் கழித்து  எனக்கு    தாங்க முடியாமல். \\  ஒண்ணு ரீட்டா  .இல்லாட்ட நான் மதுரைக்குப் போறேன்னதும்][         இவருக்கு மஹா வருத்தம்.  எங்க அப்பா  அஸ்ஸாம்லேருந்து  சிறுத்தைக் குட்டியே கொஙடு வந்தார். பான்பேயில் எங்க பங்களாவில் அதுக்குத் தனி ரூம் தெரியுமா . எங்க அம்மா பயப்படவே இல்லை.     ம்ம்ம் எனக்கும் தெரியும். உங்க சமையல்காரனை அது பிராண்டினதும் தெரியும்.அப்புறம் மாமா அதை   ஸூவில் கொண்டு விட்டதும் தெரியும் என்றேன்.               அதெப்படி எங்க அம்மாகிட்ட ஒரு ஐந்து நாளில் இவ்வளவு விவரனம் வாங்கிக் கொண்டே. சே தீஸ் விமென்  என்று சலித்தபடி  ரீட்டாவின் வெளியுலக அறிமுகத்துக்கு    ஏற்பாடு செய்தார்...   வொர்க்ஷாப் பக்கத்தில் இருக்கிற குரங்குகள் கூட்டதில் அதை விட்டதும்  அது பாய்ந்தோடி அவர்களுடன் சேர்ந்து கொண்டதாம். என்னைத்திரும்பிக் கூடப் பார்க்கலைம்மா.  என்றார்.  நாம் என்ன ஸ்ரீராம் சீதாவா. நம்மோடு அது ஐக்கியம் ஆகிறதுக்கு என்று சிரித்தேன்.      சோகம் மாறுவதற்காக  அப்போது வெளியாகி இருந்த அன்பே வா  படத்தை  ஜெகதா என்ற தியேட்டரில் பார்த்துவிட்டு வந்தோம்.

17 comments:

ஸ்ரீராம். said...

நல்ல அனுபவம்தான். என்னதான் அன்பாகப் பார்த்துக் கொண்டாலும் அதன் இனத்தோடு அது இருந்தால்தானே அதற்கும் சந்தோஷம்? சோகம் மறைய அன்பே வா - நல்ல படம்.அதுகூட ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல் படம்தானே, இல்லை? கம் செப்டம்பர்?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் . ராக் ஹட்சன் ஜினா லோலா ப்ரிகெடா நடிச்ச பட. ரொம்ப நன்றாக இருக்கும். இதுவும் அதுபோலத்தான். கொஞ்சம் தமிழ்ப்படுத்தப் பட்டது. ஏன்பா பாட்டுப் பாடிக் கெடுக்கிறார்கள்....இது இவரோட கம்ப்ளைண்ட்}}}}}

திண்டுக்கல் தனபாலன் said...

மன மாறுதலுக்கு "அன்பே வா" நல்ல படம்... (அவருக்கு பாடல்கள் பிடிக்காதோ...?)

வல்லிசிம்ஹன் said...

அவருக்குப் பாடல்கள் பிடிக்கும் தனபாலன்.என்னளவு தமிழ் கூட அவர் படித்ததில்லை. மும்பைகர். அதனால் நான் மாற்றிக்கொண்டேன் என் ரசிப்புகளை.}}}}

துளசி கோபால் said...

அடடா........ நல்ல சான்ஸ் போச்சே!

எனக்கு ஒரு குரங்குக்குட்டி வளர்க்கணுமுன்னு ரொம்பநாளா ஆசை.

கூடவே இருந்து சின்னசின்ன வேளையெல்லாம் செய்யுமே என்ற ஆசைதான்:-)

”தளிர் சுரேஷ்” said...

வித்தியாசமான அனுபவம்தான்! பதிவில் எழுத்துருக்களை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்! நன்றி!

ADHI VENKAT said...

திகில் அனுபவம் தான்...:)) சோகம் மறைய அன்பே வா! சூப்பர்...

சாந்தி மாரியப்பன் said...

நல்ல அனுபவம்தான்.. பிறாண்டாமல் விட்டது வரை சந்தோஷமே :-))

ராமலக்ஷ்மி said...

என் தோழி வீட்டில் பல காலமாக வளர்த்த கருங்குரங்கு நினைவுக்கு வருகிறது. துளசி மேடம் சொல்வது போல நானும் சொல்வதுண்டு, சின்னச் சின்ன வேலை செய்யுமென்று:).

Geetha Sambasivam said...

இகி இகி, எனக்கு ஆனைக் குட்டினா ஆட்சேபணை இல்லை. :)))) யாரானும் பணம்போட்டு வாங்கிக் கொடுத்துப் பழக்கட்டும். வளர்க்கட்டும். நான் தள்ளி இருந்தே ரசிச்சுக்கறேன். :))))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் செய்யும் செய்யும் ....துளசி} பாத்திரத்தையும் போட்டு உடைக்கும். எனக்குக் குரங்குகளிடம் மெத்த மரியாதை .உண்டு. சோளிங்கர் மலையில் என் கண்ணாடியைப் பிடுங்கிக் கொண்டு ப்போகும் வரை:*(( அப்புறம் விட்டெறிந்து விட்டது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுரேஷ். இந்தப் புதுக் கணினியில் ஒன்றுமே பிடிபட மாட்டேன் என்கிறது. இரண்டு மாதங்களாக என் பொறுமையைச் சோதிக்கிறது. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி மா. நலமா. திகிலுக்கும் எங்கள் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சாந்தி. அதென்ன அவரைப் பார்த்தால் சிநேகம். என்னைப் பார்த்தால் கோபம். நான் அதற்கு சூர்ப்பனகை என்று பேர் வைத்தேன்.:}}}

வல்லிசிம்ஹன் said...

கருங்குரங்கா. ஆமாம் வளர்க்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாமே சுலபம் தான். ராமலக்ஷ்மி. குரங்குக்குத் தெரியும் யார் பயப்படுகிறார்கள். யார் தோழமையோடு அணுகுகிறார்கள் என்று. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா கீதா.யானையா.நல்லவேளை.அவருக்குத் தோன்றியிருந்தால் அதையும் செய்திருப்பார்>}}}}

வெங்கட் நாகராஜ் said...

அட குரங்கு வளர்த்தீர்களா?.....

பல சமயங்களில் அழகாய் இருந்தாலும் கொஞ்சம் பிராண்டி விடுமோ என பயம் இருக்கத்தான் செய்யும்! :)