Blog Archive

Saturday, February 22, 2014

கன்றுக்குட்டியை மீட்ட சிங்கம் பார்ட் 3

தோட்டக் கிணறு
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12   க்ரவுண்டில்    பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள்  என்று  இருந்தது.       மாமனார் பண்ணை நடத்திவந்தார்.   தீவன வியாபாரமும் செய்து வந்தார்.  
  சிங்கம் சாருக்குப் படிப்பு முடிந்து விடுமுறை.
 மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது.                                    புதிதாகச் சேர்ந்த நண்பர்களுடன் சென்னையை  வலம் வந்து  அவ்வப்போது அப்பாவின் செவர்லே காரையும் ஓட்டப் பழகி ,

அதை இடித்துத் திட்டு வாங்கி  எல்லாக் கலகங்களும் நடந்த நேரம்.                        தாத்தா   கண்டிப்புக்குப் பயந்து   தினமும் வீட்டுக்கு வரும் நேரம்   மழைநீர்க் குழாயைப் பிடித்து ஏறித் தன் படுக்கை அறைக்குப் போய்விடுவாரம். இந்த   விஷமங்களுக்கெல்லாம் துணை அவரின் அன்பு சித்தி.     மறுநாள் தாத்தா கேட்டால் நான் எட்டு மணிக்கே வந்துட்டேன் . சித்திதான் கதவைத் திறந்தார் என்பாராம்.                                                                                    
 இப்படி ஒரு காலை   கன்றுக்குட்டி ஒன்று  அம்மாவைப் பிரிந்து வீட்டுக்குள் ஓடிவந்து விட்டது. அது வழி தெரியாமல் அங்குமிங்கும்     துள்ளிக்குதித்து எல்லோரையும் மிரளவைத்து தானு மிரண்டு புழக்கடையை நோக்கிப் பாய்ந்தது. அதன் அம்மா   லக்ஷ்மி ஒரு பக்கம் கதற ,கன்னுக்குட்டி பாய நடுவி   தோட்டத்துக்கான  10 அடி       விட்டக் கிணறு குறுக்கிட்டது.  இளங்கன்று.....கிணற்றைத்தாண்டப்   பார்த்துக்    கிணற்றுக்குள் விழுந்துவிட்டது.  
           உடனே வீட்டில்  உள்ள அனைவரும்  அலற ஆரம்பித்துவிட்டனர். மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் அய்யனார்  தன்னால் முடியாது என்று கைவிரிக்க  கன்றுக்குட்டி  தத்தளிக்க ஆரம்பித்தது. நல்ல ஆழக் கிணறு.
எதேச்சையாக வீட்டில் இருந்த மாடியில் இருந்து இந்த அமர்க்களத்தைக் கேட்டிருக்கிறார்.                                    மிச்சதெல்லாம் நான் சொல்ல வேண்டுமா. ராட்டினக் கயிற்றைத் தன் இடுப்பில் கட்டிகொண்டு சரசர்வென கிணற்றில்  இறங்கிவிட்டார்.    கன்றுக்குட்டி இன்னும் மிரள. கண்ணனின் தாய் யசோதையாக எங்க மாமியார் கைகளைப் பிசைய  கன்றுக்குட்டியைப் பிடித்துவிட்டார். நல்ல கொழு கொழு  கன்று நல்ல ஊட்டமிக்கது. எடையும்   நிறைய.   நீ மேல வாடான்னு அலறல் மாமியாரிடமிருந்து.  இதோம்மா என்று தன் கயிற்றைக் கன்றுக்குட்டியின் மேல் கட்டி மேலே இழுக்கச் சொல்லி விட்டு                                கிணற்றின்    சுவற்றில்  இருக்கும் பள்ளங்களைப் பிடித்துக் கொண்டு மேலே வந்தாராம்.  பாவம் எங்க மாமியார்.. அதிலிருந்து அந்தக் கிணற்றுக்கு வலை எல்லாம் போட்டு மூடினார்களாம்.

17 comments:

அப்பாதுரை said...

அசாத்தியமான துணிச்சல். அதைவிட அசாதாரண காருண்யம்.

படம் ரொம்ப அழகு.

வல்லிசிம்ஹன் said...

அதைத்தான் சொல்ல வந்தேன் துரை. வெளியில் முரட்டுத்தனமும் ,அதிகச் சத்தமாகப் பேசும் குரலும் தான் தெரியும். அவர் கிளம்பின அன்று வந்தவர்களில் முக்கால்வாசிப்பேர் சாலைத் துப்புரவு செய்பவர்கள்,கூர்க்கா,பார்க்கில் வேலைசெய்யும் தோட்டக்காரர் இவர்கள் நிறைய.ஏதாவது விதத்தில் உதவி இருப்பார். .மிக நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

அப்பாதுரை அவர்கள் சொன்னதே. மனதில் சுரந்த கருணை யோசிக்காமல் உடனடியாக செயலில் இறங்க வைத்திருக்கிறது.

அவரால் உதவி பெற்றவர்களின் அன்பும் வாழ்த்தும் என்றும் உங்கள் குடும்பத்தினருக்கு இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

தைரியம் தான் அம்மா...

ஸ்ரீராம். said...

கருணையும் தீரமும் கலந்த மனிதராக இருந்திருக்கிறார். 'சட்'டெனச் செயல்படத் தோன்றியதே...

துளசி கோபால் said...

சிங்கம் த க்ரேட்!!!! அவரை எங்களாலும் மறக்க வுடியாது!

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். சோர்வுறும் வேளை நல்லதையே நினைக்கப் பழகிக் கொண்டு வருகிறேன். மிக மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். அவர் தைரியத்தில்தான் நான் வாழ்ந்திருக்கிறேன் என்பது கூட எனக்கு இப்போதுதான் புரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

எப்பவுமே அப்படித்தான் ஸ்ரீ ராம். இன்ஸ்டண்டாகச் செயல் படுவார். வேடிக்கையாக அவர் தலையை நான் கலத்தால் கூடக் கை பறக்கும் தட்டிவிட. பிறகு நான் தான் என்று தெரிந்ததும் அட ஏதோ பட்டர்ஃப்ளை ன்னு நினைத்தேன் என்று சமாளிப்பார்."

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். மறக்கக் கூடாதுன்னுதான் எல்லாம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். துளசி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்., உங்களுக்கு என்ன பட்டம் கொடுத்துச் சிறப்புச் செய்வது என்று புரிபடவில்லை.

சாந்தி மாரியப்பன் said...

கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டிக்கு மட்டுமல்ல சிங்கத்துக்கும் பயம் என்றால் என்னவென்று தெரியாது போலிருக்கிறது :-))))

Geetha Sambasivam said...

அருமையான சம்பவம். ரொம்பவே கருணை நிறைந்த மனிதர். உண்மையிலேயே பாராட்ட வார்த்தைகள் இல்லை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சாந்திமா. பயமறியாத மனிதர். சுள்ளென்ற வார்த்தையே கிடையாது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. யாரும் கஷ்டப்பட்டால் சகிக்காது. வீணாகப் புலம்புபவர்களையும் பார்த்துச் சங்கடப் படுவார்.

வெங்கட் நாகராஜ் said...

அவரின் காருண்யம் பிரமிக்க வைக்கிறது.....

ஒவ்வொரு நிக்ழவினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.....