ரைன் நதி
கங்கை உற்பத்தியாகும்,தோன்றும் இடம்
கங்கையில் ஒரு பாலம்
சமீபத்தில் வந்த திரைப்படம் ஒன்றில் காசி என்னும் வாராணசியின் உண்மை நிலைகள் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டு இருந்தன.
இன்னும் பல ஆவணப்படங்கள் டிஸ்கவரி தொலைக்காட்சி சானலில் பார்த்தும் கேட்டும் தான் வருகிறோம்.
கங்கை நதியின் அவலங்களை விளக்கும் பழைய செய்தி ஒன்றையும் அதைத் தொடர்ந்து கங்கை நீரைக் காப்பாற்றும், சுத்திகரிக்கும் குழுக்கள்
அறிமுகப் படுத்தப்பட்டு
அவர்களின் செயல்பாடுகளும் விளக்கப்பட்டன.
நம்ம வீட்டு எஜமானர் 16 வயதிலியே தான் புதுடில்லி சுற்றுலாவின்போது,
கங்கையில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டதாகவும் , அப்போது பல சடலங்களைச் சந்திக்க வேண்டிய பரிதாப நிலை இருந்ததாகவும் சொன்னார்.
உலகம் பூராவும் தண்ணீருக்கு வேண்டிய ஏற்பாடுகள் குடிக்கவும், மற்ற பயன்களுக்கும் நன்றாகக் கவனித்துச் செழுமையாகத் திட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.
பாதுகாக்கப்பட்ட தண்ணீர் எல்லோருக்கும் கிடைக்கிறது.
மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும், ஆசியா,ஆப்பிரிக்காவின் சில நாடுகளில்
இன்னும் குடிதண்ணீருக்கு அவதிப்படும் மக்கள் இருக்கிறார்கள்.
ஐரோப்பாவின் சில நாடுகளில் தண்ணீர் கரைபுரண்டோடும் அழகையும்,
பசுமையையும் பார்த்து என்னால் ரசிக்க முடிந்த அளவு மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இந்தத் தண்ணீர் நம் ஊரில் இல்லையே என்ற வருத்தமே மேலிடும்.
இந்தச் சமுதாயச் சீரழிவு,குடிதண்ணீரில் ஆரம்பிக்கிறதா.
நீர் இருக்கும் இடத்தில் தான் நாகரீகங்கள்
நிலை பெற்று உயர்வடைய ஆரம்பித்தன.
அந்த நதிகளுக்கெல்லாம் ஏற்பாடாத வீழ்ச்சி கங்கைக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது... புரியவில்லை. யாரையும் குறை சொல்லிப் பயனும் இல்லை. இது உணர்ச்சிகள் ,நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட விஷயமாகி விட்டது.
இந்த நிலையில் தான் நேற்று ஃபாக்ஸ் ஹிஸ்டரி சானலில்
புகழ்பெற்ற எழுத்தாளர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் வில்லியம் டார்லிம்பிள் என்பவரின்
தொலைக்கட்சிக் குறும்படத்தைப் பார்க்க நேர்ந்தது.
நான் பார்த்த படத்திற்கு லார்ட் சிவா'ஸ் மாட்டட் லாக்ஸ்
(SIVA'S MATTED LOCKS) என்று பெயர் கொடுக்கப் பட்டு இருந்தது.
தொடரும்.
சமீபத்தில் வந்த திரைப்படம் ஒன்றில் காசி என்னும் வாராணசியின் உண்மை நிலைகள் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டு இருந்தன.
இன்னும் பல ஆவணப்படங்கள் டிஸ்கவரி தொலைக்காட்சி சானலில் பார்த்தும் கேட்டும் தான் வருகிறோம்.
கங்கை நதியின் அவலங்களை விளக்கும் பழைய செய்தி ஒன்றையும் அதைத் தொடர்ந்து கங்கை நீரைக் காப்பாற்றும், சுத்திகரிக்கும் குழுக்கள்
அறிமுகப் படுத்தப்பட்டு
அவர்களின் செயல்பாடுகளும் விளக்கப்பட்டன.
நம்ம வீட்டு எஜமானர் 16 வயதிலியே தான் புதுடில்லி சுற்றுலாவின்போது,
கங்கையில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டதாகவும் , அப்போது பல சடலங்களைச் சந்திக்க வேண்டிய பரிதாப நிலை இருந்ததாகவும் சொன்னார்.
உலகம் பூராவும் தண்ணீருக்கு வேண்டிய ஏற்பாடுகள் குடிக்கவும், மற்ற பயன்களுக்கும் நன்றாகக் கவனித்துச் செழுமையாகத் திட்டங்களை நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.
பாதுகாக்கப்பட்ட தண்ணீர் எல்லோருக்கும் கிடைக்கிறது.
மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும், ஆசியா,ஆப்பிரிக்காவின் சில நாடுகளில்
இன்னும் குடிதண்ணீருக்கு அவதிப்படும் மக்கள் இருக்கிறார்கள்.
ஐரோப்பாவின் சில நாடுகளில் தண்ணீர் கரைபுரண்டோடும் அழகையும்,
பசுமையையும் பார்த்து என்னால் ரசிக்க முடிந்த அளவு மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இந்தத் தண்ணீர் நம் ஊரில் இல்லையே என்ற வருத்தமே மேலிடும்.
இந்தச் சமுதாயச் சீரழிவு,குடிதண்ணீரில் ஆரம்பிக்கிறதா.
நீர் இருக்கும் இடத்தில் தான் நாகரீகங்கள்
நிலை பெற்று உயர்வடைய ஆரம்பித்தன.
அந்த நதிகளுக்கெல்லாம் ஏற்பாடாத வீழ்ச்சி கங்கைக்கு மட்டும் ஏன் ஏற்பட்டது... புரியவில்லை. யாரையும் குறை சொல்லிப் பயனும் இல்லை. இது உணர்ச்சிகள் ,நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட விஷயமாகி விட்டது.
இந்த நிலையில் தான் நேற்று ஃபாக்ஸ் ஹிஸ்டரி சானலில்
புகழ்பெற்ற எழுத்தாளர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் வில்லியம் டார்லிம்பிள் என்பவரின்
தொலைக்கட்சிக் குறும்படத்தைப் பார்க்க நேர்ந்தது.
நான் பார்த்த படத்திற்கு லார்ட் சிவா'ஸ் மாட்டட் லாக்ஸ்
(SIVA'S MATTED LOCKS) என்று பெயர் கொடுக்கப் பட்டு இருந்தது.
தொடரும்.
45 comments:
இதுவே சோதனையாப் போகிறதே. டெஸ்ட்.
சீக்கிரம் எழுதுங்க ...தண்ணீர் தான் இங்க தணலாட்டம் பிரச்சினையா இருக்கே பக்கத்துக்கு ஸ்டேட்களோட.
மத நம்பிக்கைகள் மீது அதீத பற்று வச்சு, அதனால் நடக்கும் சீரழிவுதான் 'புனித கங்கை' அருவருப்பான நிலையை அடைஞ்சதின் காரணம்.
சுத்தம் இருக்கும் இடத்தில்தான் கடவுள் இருப்பார்ன்னு எதாவது சாமியார் சொன்னாலாவது கேப்பாங்களா இவுங்க.
நெஞ்சு பொறுக்குதில்லையே.....
தண்ணீர், தணலாச்சு.
கேக்க நல்லாத்தான் இருக்கு. மிஸஸ்.தேவ்.
அங்கேருந்து அத்தனை உத்சாகமாக் குதிச்சு வருகிற கங்கையைப் பார்க்கும்போது,
அந்த கங்கை இங்கே வராட்டாலும் போறது. நம்ம பெண்ணாறு,பாலாறு இவைகளைக் காப்பாற்றி இருக்கலாமே என்று தான் தோன்றியது.
நன்றிமா.
துளசி, இங்க டிவியில் பாரதப் புழாவைக் காண்பித்தார்கள். பித்ரு கார்யமெல்லாம் முடித்துவிட்டு அப்படியே இலைகளை விட்டு விட்டுப் போகிறார்கள்.
நூற்றுக்கணக்கில்!!!!
ஆனால் அதுகூடப் பரவாயில்லை, கங்கையைப் பார்க்கும்போது.
சாத்திரங்களை மீறுவதும் ஒரு முக்கிய காரணம். நீர் நிலைகளை அசுத்தப்படுத்தக்கூடாது என்று அவ்வளோ விஷயங்கள் சொல்லி இருக்கு. கங்கை கரை முதலைகள் ஒழிச்சதும் ஒரு காரணம். இந்த சடலங்களை அவை தின்று வந்தன.
கங்கை வரும் வழி ந்கரங்கள் எல்லாமே சேர்க்கிற கழிவுகள் ஏராளம். ஏன் வாரணாசி சாக்கடை எல்லாமே கங்கையிலேதான் சேருது. :-(
எங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுக்க பெரியவர்கள் இரூந்தார்கள். செய்யக் கூடாத விஷயங்களில் , நதிகளில் எச்சில் துப்புவது போன்ற செய்யத் தகாத காரியங்களையும் உள்ளத்தில் எழுதாத குறையாகப் பதிய வைத்தார்கள்.
இப்போழுது நம் குழந்தைகளும் விழிப்புடன்தான் செயல் படுகிறார்கள். உலகமே விழித்துக் கொள்ளவேண்டும். நன்றி வாசுதேவன்.
//நீர் இருக்கும் இடத்தில் தான் நாகரீகங்கள்
நிலை பெற்று உயர்வடைய ஆரம்பித்தன.//
இது மிகச் சரியான பாயிண்ட் வல்லிம்மா.
அப்படியிருந்தும்...இன்று....
நீங்கள் திவாவுக்கான பதிலில் சொன்னா மாதிரி உலகம் விழித்துக் கொள்ள் வேண்டும்.
திவா சொல்வதும் சரிதான், கங்கையில் பிணங்களை விடுவதைப் பார்க்கலை என்றாலும் மூழ்கி இறப்பவர்களும் நிறைய இருக்கின்றனர். ஆடு, மாடுகள் அடித்தும் செல்லப் படுகின்றன. அவற்றை முதலைகள் தின்று வந்தன. இப்போ முதலைகளை எல்லாம் அழிச்சாச்சு. முதலையின் உணவைப் பின்னே என்ன செய்வது? மீண்டும் முதலைகளை விடச் செய்யலாம்.
ரொம்ப வருத்தமான விஷயம் வல்லிம்மா :(
மக்களுக்கு விழிப்புணர்ச்சி கட்டாயம் தேவை. உங்களின் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.
வாங்கப்பா ராமலக்ஷ்மி.
முன்னாட்களில் காசி யாத்திரை பிரமாதமாகக் கொண்டாடப்பட்டது.
முறைப்படி காசிக்குச் சென்று அங்கிருந்து மண்ணெடுத்து ராமேஸ்வரத்தில் கரைப்பதும். ராமேஸ்வரத்தில் எடுத்த கடல் மண்ணைக் கங்கையில் கரைப்பதும் வழக்கமாகச் செய்தார்கள்.
பழங்கதையாகப் போய்விட்டது.
வரணும் கீதா.எனக்கு முதலைகளை அழித்தது புது செய்தி.
சுற்றுப்புறச் சூழல் பற்றிய உணர்வே இல்லாமல் இப்படிச் செய்து விட்டார்களே.நீங்கள் சொல்வது போல் முதலைகள் நடமாட்டம் அதிகரிக்கச் செய்து
பாதுகாப்பு ஏற்பாடும் செய்யலாம். கங்கா மாதாவுக்கே முதலை தானே வாகனம்? சரியான்னு தெரியலை.
வாங்கப்பா தென்றல். ராமநவமி உற்சாகத்தில் இருந்து விட்டேன்.
எழுதிவிடுகிறேன். நன்றிம்மா.
அன்னியர் ஆட்சியின் போது கூவம் இருந்த நிலையைப் பற்றி சமீபத்தில் படித்தேன். சுத்தமான அவ்வாறு சென்னை நகரெங்கும் ஓடி அடையாறு வழியாக கடலில் கலந்தது அந்நாளில்.
சாக்கடையாகக் கலக்கிறது இந்நாளில். அன்னியர் ஆட்சியே இருந்திருக்கலாமோ? மக்கள் எல்லோரும் இந்தியர் என்ற உணர்வோடு இருந்திருப்பார்கள். இன்றோ? நாம் ஒருவருக்கொருவரே அன்னியப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.
நீராதாரத்தை மனசாட்சியில்லாமல் அழிப்பவர்களை என்ன செய்யலாம்?
"குடிநீர் வசதி செய்து கொடுப்போம்"
இதே பொன்மொழியைத்தான் நாம் ஒவ்வொரு தேர்தலிலும் கேட்டு வருகிறோம்.
அதானே நானானி. நம்ம ஊர்ல இருக்கிற கூவத்தைச் சொல்லணும்.
இவர் சொல்கிற கதையெல்லாம் கேட்டால் ஆசையாக இருக்கிறது. எனக்கு ட்ராம் ஒன்றுதான் நினைவில் இருக்கிறது.
குழாய்த்தண்ணிய அப்படியே குக்கிற நாளெல்லாம் வருமா. போரூர் மாங்காடு போகிறவழியில் இருக்கும் ஏரியில் நடக்கும் அட்டூழியங்களைப் பார்த்து சலித்துப் போய்த்தான் இந்த டீம் தண்ணியை வாங்க ஆரம்பித்தேன்.
நானானி,
//"குடிநீர் வசதி செய்து கொடுப்போம்"
இதே பொன்மொழியைத்தான் நாம் ஒவ்வொரு தேர்தலிலும் கேட்டு வருகிறோம்.//
ஏன்ப்பா... அதுதான் 'குடி'தண்ணீர் வசதி செஞ்சுட்டாங்களேப்பா. டாஸ்மாக் ஓஹோ ஆஹான்னு ரொம்ப ஜோரா நடக்குதாமே.
அதுலேதான் 'கொள்ளை' வருமானமாம்.
ஆகக்கூடி 'தாகசாந்தி'ஆச்சு.
முதலை வருணன் உடைய வாகனம். கங்கா மாதவுக்குமா? தெரியலை கேக்கணும்.
சென்னை கூவத்திலே குளிச்சு கோவிலுக்கு போனதா டயரி ஒத்தர் எழுதியதை குமுதத்திலே ரொம்ப நாள் முன்னே படிச்ச நினைவு. நம்ப முடியுதா?
வரணும் வாசுதேவன்.
நானும் சன்ஸ்கார் சானலில் சாயந்திர வேளை ஆரத்தி போது முதலைமீது கங்கை உட்கார்ந்து இருப்பது காண்பிப்பார்கள். அதில் பார்த்துட்டுத்தான் சொல்றேன்.:)
துளசி டாப் கமெண்ட்:)
//சென்னை கூவத்திலே குளிச்சு கோவிலுக்கு போனதா டயரி ஒத்தர் எழுதியதை குமுதத்திலே ரொம்ப நாள் முன்னே படிச்ச நினைவு. நம்ப முடியுதா? //
இப்படிக் குளிச்சது பச்சையப்ப முதலியார். கேள்விப் பட்டிருக்கேன்.
//முறைப்படி காசிக்குச் சென்று அங்கிருந்து மண்ணெடுத்து ராமேஸ்வரத்தில் கரைப்பதும். ராமேஸ்வரத்தில் எடுத்த கடல் மண்ணைக் கங்கையில் கரைப்பதும் வழக்கமாகச் செய்தார்கள்.
பழங்கதையாகப் போய்விட்டது//
முதல்லே ராமேஸ்வரம் வல்லி, அப்புறம் அங்கே திரிவேணி சங்கமத்தில் ராமேஸ்வரத்து மண்ணையும், நீரையும் வைத்து, கரைச்சு சிவ வழிபாடுகள் முடிச்சு அங்கே இருந்து தீர்த்தம் எடுத்து வந்து திரும்ப ராமேஸ்வரம் கோயில் ராமநாதருக்கும், சமுத்திரத்திலும் விடுவதோடு வழிபாடுகள் நடத்தி முடியும் தீர்த்த யாத்திரை. இப்போவும் நடக்கிறது இம்மாதிரிப் பலரும் போகின்றனர். ஆனால் கங்கையைக் கழிவு நீராக்குகிறதுக்கு மட்டும் விடிவே இல்லையோனு தோணுது. :(((((((((((((((((((((
துள்சி வர்ர்ர்ர்ர்றீங்களா? நாம ரெண்டு பேரும் அங்கு போய் தாக சாந்தி செய்து கொள்ளலாம்?
நானானி, கூடாதுப்பா. :))))
இப்பத்தான் அல்வா சாப்பிட்டேன்.
தாக சாந்திலாம் செய்தா பதிவெழுத முடியாது:))))
நானும் படித்திருக்கிறேன். சொல்லவும் கேட்டு இருக்கிறேன்.
நம்ம தண்ணீர்த்துறை அங்காடிக்கு படகிலேருந்து காய்கறியும், நெல்லூரிலிருந்து அரிசியும் வந்து இறங்குமாம்.
துர்நாற்றமில்லாத நாட்கள் அவை மனிதர்களும்,நதியும் சுத்தமாக இருந்த நாட்கள்.
ஆமாம் கீதா. உண்மை. நான் மாற்றி எழுதிவிட்டேன்.
அவ்வாறு அபூர்வமாகக் காசி போய்விட்டு உறவினர் வாங்கி வந்த பனாரஸ் பட்டுப் புடவை 15 ரூபாய்க்கு பாட்டி வாங்கி அம்மாவிடம் கொடுத்ததாகவும் 12 முழப்புடவை என்பதால் கட்ட முடியாமல் எனக்கும் என் ஒன்றுவிட்ட தங்கைகளுக்கும் பாவாடைகளாகத் தைத்தாகவும் சொன்னார்கள்.:)
கூவத்துலே அந்தக் காலத்துலே குளிச்சுட்டுக் கோயிலுக்குப்போனவர் பச்சையப்பர்.
இவருடைய நினைவுக்கோ அல்லது இவரே ஆரம்பிச்சதோ தெரியலை சென்னை பச்சையப்பர் கல்லூரி
ரொம்பச் சரியாச் சொன்னீங்க வல்லீம்மா. நீரின்றி அமையாது உலகுன்னு வள்ளுவரு சொல்லீருக்காரே.
நாகரீகங்கள் மூனு இடங்கள்ள வளந்தது. மலை....ஆற்றங்கரை...கடற்கரை... இந்த மூனு இடங்கள்ளயும் தண்ணி இருக்குற இடங்கள்ளதான்.
அதுனால தண்ணியை நல்லபடி பாத்துக்கனும். நீங்க சொன்ன மாதிரி ஐரோப்பாவுல தண்ணி ஓடுற அழகைப் பாக்குறப்போ... நம்மூர்ல இப்பிடியிருக்கனுமேங்குற எண்ணம் வர்ரதத் தடுக்க முடியலை.
துளசி அந்தப் பச்சையப்பராத்தான் இருக்கணும்.
ராகவன், எவ்வளவு நாளாச்சு பார்த்து!!
நல்லா இருக்கிங்களா.
உங்க ஊரில மழை எல்லாம் ஓய்ஞ்சுதா.
பையன் இருக்கிற ஊரில தண்ணீரில் கால்ஷியம் அள்வுக்கு மேல இருக்கு என்று வடிகட்டிச் சாப்பிடுவோம்.
என்ன இருந்தாலும் அந்த மலைக்கும் இயற்கை வளத்துக்கும் அவங்க மிகவும் பாதுகாத்துதான் வச்சு இருக்காங்க.
//முதல்லே ராமேஸ்வரம் வல்லி, அப்புறம் அங்கே திரிவேணி சங்கமத்தில் ராமேஸ்வரத்து மண்ணையும், நீரையும் வைத்து, கரைச்சு சிவ வழிபாடுகள் முடிச்சு அங்கே இருந்து தீர்த்தம் எடுத்து வந்து திரும்ப ராமேஸ்வரம் கோயில் ராமநாதருக்கும், சமுத்திரத்திலும் விடுவதோடு வழிபாடுகள் நடத்தி முடியும் தீர்த்த யாத்திரை.//
வடக்கே இருக்கிறவங்களுக்கு மாத்தியோ?
//இப்பத்தான் அல்வா சாப்பிட்டேன். //
சுகர் பிரச்சினை இருக்குன்னு நினைச்சேனே?
//அவை மனிதர்களும்,நதியும் சுத்தமாக இருந்த நாட்கள்.//
வல்லி அக்கா டச்!
// துளசி கோபால் said...
மத நம்பிக்கைகள் மீது அதீத பற்று வச்சு, அதனால் நடக்கும் சீரழிவுதான் 'புனித கங்கை' அருவருப்பான நிலையை அடைஞ்சதின் காரணம்.
சுத்தம் இருக்கும் இடத்தில்தான் கடவுள் இருப்பார்ன்னு எதாவது சாமியார் சொன்னாலாவது கேப்பாங்களா இவுங்க. //
டீச்சர்... அதுக்கும் ஒரு புராணம் இருக்கு. ஆனா அதை எல்லாரும் வசதியா மறந்துட்டாங்க போல. இங்க சொல்றேன். தெரிஞ்சிக்கோங்க.
அழுகின்ற ஒரு குழந்தைக்காக பாற்கடலை உருவாக்கிய பரமேசுவரன்... குழந்தையின் பசி தீர்ந்தவுடன்... அதைப் பரந்தாமனுக்குப் பள்ளி கொள்ளக் கொடுத்தான். நீருக்கு உயர்வு தர வேண்டி.. கங்கையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் கடவுளே கங்காதரன்.
காசியின் ஒரு முறை புரோச்சன சர்மா என்ற கோயில் பூசாரி சிவலிங்கத்திற்குப் பூசனை செய்து... காசு வாங்கிக் கொண்டு.... திரவியங்கள் அனைத்தையையும் அனைத்து வேளைகளிலும் அபிடேகம் செய்தார். அதனால் சிவலிங்கத்தின் மீது பிசுக்கேறி அழுக்கடைந்தது. இதன் விளைவாக கயிலாயம் முழுவதும் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசியது. அங்கிருக்க முடியாமல் பார்வதி மிகவும் துன்புற்று... சிவனை நீங்கிப் பனிமலைகளில் தவம் செய்யப் புகுந்தார்.
இதற்கெல்லாம் காரணமான புரோச்சன சர்மாவைத் தண்டிக்க விரும்பி... புரோச்சனன் தொடும் பணம் அனைத்தும் அழுக்காக மாறச் சபித்தார். அப்படியே பாற்கடலுக்குச் சென்று மூழ்கி தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டார் பரமேசுவரன். தான் படைத்த கடலிலேயே தன்னைக் கழுவிக் கொண்ட காரணத்தினால்... பாற்கடல் நாறியது. ஆதிசேடனின் ஆலகாலத்தை விட அழுக்கின் நாற்றம் மிகவே ஆதிசேடன் பாற்கடலை நீங்கினான். இதற்குக் காரனமானவர் புரோச்சனன் என்பதால் நாராயணனும் லட்சுமியும் புரோச்சனனைச் சபித்தார்கள். அத்தோடு.. பணத்திற்காக திருக்கோயில்களையும் நீர்நிலைகளையும் இயற்கைச் சூழ்நிலைகளையும் கேடு செய்கின்றவர்கள்....ஆண்டவன் பெயரிலே செய்தாலும் கூட... அவர்கள் மண்ணைத் தின்னும் மண்புழுவின் நிலையிலும் கீழான பிறப்பெடுத்து அந்த மண்ணும் உண்ணக்கிடைக்காது உழல்வார்கள் என்று சபித்தார்கள்.
பிறகு கங்கை பெருகி பாற்கடலைத் தூய்மையாக்கியது. அதன்பிறகே ஆதிசேடன் வைகுண்டம் மீண்டது. மலைமகளும் கைலாயம் மீண்டாள்.
இந்தப் புராணம் நம் அனைவருக்கும் பாடம்.
அக்காவின் மேல் அக்கறை கொண்ட வாசுதேவனுக்கு ரொம்ப தான்க்ஸ்:)
நான் சொன்னது ஏட்டு அல்வா.!!
அதாவது பதிவு அல்வா.
ஆசை நரைக்கலைன்னு சொன்னாலும் சாப்பிடமுடியாதுன்னா முடியாதுதான்.. நீங்க சொன்னதால தயிரையும் விட்டாச்சு. மோர் உண்டு:)) நன்றி நன்றி. எல்லாப் புகழும் வாசுதேவனுக்கே!!
இந்தப் புரோச்சனன், அரக்கு மாளிகை கட்டினவனா இருக்குமோ ராகவன்?
அப்பா!! எவ்வளவு புராணம் இருக்கு!!!!
அந்தப் பச்சையப்பர் பெயரிலே தான் கல்லூரி வல்லி,
@திவா, வடக்கே இருக்கிறவங்க ராமேஸ்வரம் வரும்போது கங்கை நீரைக் குடம் குடமாக் கொண்டு வருவாங்களே, பார்த்ததில்லை?? ஆனால் அவங்க குளிச்சாங்களானு எனக்கு சந்தேகமா இருக்கும்! :))))))))
கீதா,நான் பார்த்திருக்கேன் ராமேஸ்வரத்தில.
எனக்கும் அந்த சந்தேகம் வரும்:)
பாகவத அபசாரம் கூடாது...தப்பு தப்பு.
//யாராவது சாமியார் சொன்னாங்கன்னா கேப்பாங்களா?//
அதான் இப்போ ஜிரா சொல்லிட்டாருல்ல! கேட்டுக்கறோம்! :))
//இப்போ முதலைகளை எல்லாம் அழிச்சாச்சு. முதலையின் உணவைப் பின்னே என்ன செய்வது?//
கீதாம்மா...
முதலைகளை ஒழிச்சாச்சா?
பண "முதலைகள்" இன்னும் இருக்கே!
அவை தானே இன்னும் கழிவு நீரைக் கங்கையில் கலக்கின்றன? :(
கண்ணக்குத் தெரிவது: மக்கள் செய்யும் சிறு சிறு அசுத்தங்கள்!
ஆனால் பின்புலத்தில்: அதை விடக் கொடுமையான அசுத்தங்கள்!
இதுக்கெல்லாம் வெறும் வேப்பிலை அடிச்சாப் போதாது!
அத்தனை நீதிபதிகளையும், அதிகாரிகளையும் ஒரே மோசமான இடத்தில் கங்கா ஸ்நான பிராப்தி செஞ்சி வைச்சா, அப்போ வீரியம் உணரப்படும்! நீதித் துறை மாதிரி, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட துறை ஒன்றை கங்கை-க்குன்னே தனியா ஒதுக்கினா, அப்போ கொஞ்சம் நடக்க ஆரம்பிக்கும்!
//வல்லிசிம்ஹன் said...
இந்தப் புரோச்சனன், அரக்கு மாளிகை கட்டினவனா இருக்குமோ ராகவன்?
அப்பா!! எவ்வளவு புராணம் இருக்கு!!!!
//
ஹிஹி!
வல்லீம்மா, ராகவன் சொன்னது புராணம் இல்லை! புருடா-ணம்! :)
டீச்சர், சாமியார் சொல்லியாச்சும் திருந்துவாங்களா-ன்னு கேட்டாங்க-ல்ல?
அதான் ஆம்ஸ்டர்டாம் ஆசிரமச் செம்மல் இப்பிடிச் சொன்னாரு-ன்னு நினைக்கிறேன்! :))))
அன்பு ரவி,
நியூயார்க் ஆழ்வார் வந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
வரணும் வரணும். இந்த வருஷம் ஊருக்கு வரலியா.
ராகவனை வம்புக்கு இழுக்காமல் பொழுது போகாதே உங்களுக்கு.:)உண்மையான வார்த்தை அம்மா. அதிகாரத்தில் இருப்பவர்களை அந்நியன் மாதிரி யாராவது வந்து கேட்டாத்தான் நடக்குமோ என்னவோ.
வார்த்தை விளையாட்டுச் சித்தரே உம் வரவு நல்வரவாவுக. ரொம்ப நன்றிம்மா.
//ராகவனை வம்புக்கு இழுக்காமல் பொழுது போகாதே உங்களுக்கு.:)//
அடக் கடவுளே!
அது நெஜமாலுமே எந்த புராணமும் இல்ல வல்லீம்மா! சும்மா கட்டி விட்டது! ஜிரா கிட்டயும் பேசினேன்! ஐயா சிரிச்சாரு! வேணும்னா வந்து சொல்லச் சொல்லறேன்! :)
ரவி, நிஜமாவா!!!
அட ராமா ராகவா.
சரி போ. எல்லாப் புராணமும் கதைகட்டுரைன்னு நேத்திக்குப் படிச்சேன். இன்னிக்கு நீங்க ஜிராவே கதைவிட்டதாச் சொல்றீங்க. யாரைத்தான் நம்புவதோஓஓஓஓஓஓஓஓஓஓஒ:))
//யாரைத்தான் நம்புவதோஓஓஓஓஓஓஓஓஓஓஒ:))//
அதானே? அச்சோ!! நானும் ஜிரா சொன்னதை நம்பிட்டேன்!
நீங்களுமா.
கவிநயா:)
ராகவன் சந்தேகம் தீர்க்க வரவில்லைன்னா, ரவி சொன்னதை எடுத்துக்க வேண்டியதுதான்:))))
Post a Comment