Blog Archive

Tuesday, March 24, 2009

மீண்டும் மீனாட்சி!!







2006 நவம்பர் மாதம் சென்னையை விட்டுக் கிளம்பினோம். இன்னோரு குட்டிக் கிருஷ்ணனை வரவேற்க.
அப்போது வீட்டிலிருந்த இந்த மீனாளை வளர்ப்பு மீன்கள் விற்கும் ஒரு கடையில் பொட்டி படுக்கையோட எடுத்துக் கொண்டு விட்டுவிட்டு வந்தோம்.
சரி பத்து மாதம் கழித்துத் திரும்பும்போது அவளை அழைத்து வந்து விடலாம் என்றால் மீண்டும் ஒரு அழைப்பு. இந்தத் தடவை ஒரு குட்டி ராதையை வரவேற்க மீண்டும் கிளம்பினோம். அதனால் வாடகை வீட்டிலியே தங்கி விட்டாள் மீனாட்சி.
இந்தத் தடவை மீண்டும் வந்தவுடனே அவளை அழைத்துக் கொள்ளமுடியாமல் வீட்டில் கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்தன.
நேற்று அவள் மீண்டும் பிறந்த வீட்டுக்கு வரவேண்டிய ஆயத்தங்களைச் செய்தோம்.
வந்துவிட்டாள்.
அவளைப் பொறுத்தவரை நல்ல தண்ணீர், க்ளோரின் கலக்காத கிணற்றுத் தண்ணிரும் , ஐந்து ரூபாயில் அடங்கும் உணவும் போதும். வளைந்து வந்து கொண்டிருப்பாள். பூனைகள் நாய்கள் போல உணர முடியுமோ தெரியாது. இருந்தாலும் அவளும் ஒரு ஜீவராசி.
எங்க சிங்கத்துக்கு மிக நெருக்கமானவள்.
நாங்கள் தரும் பாதுகாப்பை அவள் உணருவாள் என்றே நம்புகிறேன்.
அவள் எப்போதும் நலமுடன் இருக்க நண்பர்களே வாழ்த்துங்கள்.



Posted by Picasa

15 comments:

வல்லிசிம்ஹன் said...

சோதனைப் பின்னூட்டம்.
மதுரைக்கு வந்த சோதனையா:)

Geetha Sambasivam said...

சோதனை உங்களுக்கு மட்டுமில்லை, எங்களுக்கும் தான், நானும் பனிரண்டு மணியிலே இருந்து முயன்று பார்த்து, இப்போத் தான் திறந்தது உங்க வலைப்பூ.

மீனாட்சிக்கு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அடப்பாவமே. நிஜமாவே சோதனைதான். டெம்ப்ளேட்ல
ஏதோ தகராறு,. சரி செய்ய முடியுமான்னு பார்க்கிறேன்:)

நன்றிம்மா கீதா.

ராமலக்ஷ்மி said...

மீனாட்சிக்கு என் நல்வாழ்த்துக்கள்.

Kavinaya said...

மீனாளுக்கு வாழ்த்துகள் அம்மா.

தி. ரா. ச.(T.R.C.) said...

வாஸ்து மீனா இது.ஜோடி கிடையதா

வல்லிசிம்ஹன் said...

சொல்லிட்டேன் ராமலக்ஷ்மி:)
நல்லா இருக்கட்டும் அவள் வந்து 7 வருடங்கள் ஓடி விட்டன.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கவிநயா ஆன்டி:)
இது மீநாள் சொன்னது.

வல்லிசிம்ஹன் said...

வாங்க,வரணும் தி.ரா..ச. நீங்க ஊரிலிருந்து வந்தாச்சு போலிருக்கு.
ஆமாம் இது வாஸ்து மீந்தான். எங்களுக்குக் கூட இருக்கிற இன்னோரு பெண்.

ஜோடி சேர்ப்பதாக இருந்தால் அதை முதன் முதல் வாங்கினோம் இல்லியா, நாலு இன்ச் அளவுக்கு. அப்பவே இன்னோண்ணையும் போட்டு இருக்கணுமாம். இப்போ போட்டால் கூடி வாழத் தெரியாதாம். சண்டை வருமாம்.

கோபிநாத் said...

;-)))

வாழ்த்துக்கள் மீனாட்சி ;)

துளசி கோபால் said...

நல்லபடியா 'மீனாட்சி' திரும்ப வந்தது ரொம்ப மகிழ்ச்சி.

இவள் எப்படி இருப்பாளுன்னு தெரியாம.... தெரிஞ்சுக்கணும் என்ற ஆவலில் ஒரு அக்வேரியத்தில் 'இந்த ஜாதி இருக்கா?'ன்னு கேட்டுக்கிட்டுப் போய்ப் பார்த்தோம்.

அச்சு அசல் இந்த மீனாட்சி போலத்தான் அவனும் இருந்தான்:-)))

pudugaithendral said...

மீனாட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி..ஆஹா அவனை மட்டும் இவளுடன் இணைக்க முடிந்தால்!! உண்மையாவே கவலையா இருக்குப்பா. தப்பு செய்கிறோமோ னு.

வல்லிசிம்ஹன் said...

தென்றல் வாங்கப்பா. அவள் இன்னும் உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கவில்லை. சூழல் பழகும் வரை இரை எடுக்காதாம். இரண்டு வருஷமாகி விட்டது வீட்டை விட்டுப் போய்:(. அதான்.

நானானி said...

வாஸ்து மீனாளுக்கு வாழ்த்துக்கள்!!
ரொம்ப நாட்கள் உங்களோடு கூடி குலாவிட.
அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே
டென்ஷன் எல்லாம் குறையுமாமே!!

என் மகன் பள்ளியில் படிக்கும் போது மீன் வளர்க்க ஆசைப் பட்டபோது தொட்டி வாங்கி பலவகை மீன்கள் வாங்கி நல்ல தண்ணீர் விட்டு அழகாகப் பாதுகாப்பான். என் வேலை உணவு போடுவது மட்டுமே. லீவு நாட்களில் மீன்களை நீர்நிரம்பிய வாளியில் பிடித்துவிட்டுவிட்டு தொட்டியை கழுவி சுத்தம் செய்து புது நீர் விட்டு மறுபடி மீன்களை தொட்டியில் விட்டு பொறுப்பாக செய்து முடிப்பான்.

மினி பதிவு மாதிரி ஆகிவிட்டதே!
இங்கேயே நிறுத்து.