ஒரு டயரி, ஒரு புத்தகம்,ஒரு சிவப்பு பேழை,ஒரு கையில வச்சிருக்கிற பர்ஸ்!
மகாத்மா காந்தியின் பொருட்களுக்கும் ஒரு விலை வைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
எனக்கும் கிடைத்த சில பொருட்கள் என் அன்பு அம்மாவிடமிருந்து கிடைத்தன.
அவள் இருக்கும் போது அனுபவித்த அன்பைப் போலவே இந்தப் பொருட்களும் கலப்படமில்லாத ஒரு நிறைவான மனுஷியின் உயர்ந்த நோக்குகளையே எடுத்துச் சொல்கின்றன.
அவள் தினம் சேவித்த பிரபந்தப் புத்தகம். யாரோ சொன்னார்கள் என்பதற்காக தனது உடன்பிறப்புகளுக்காகவும் எங்களுக்காகவும் அவள் சொல்லிய ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம்.
உறவினர்களின் தொலைபேசி எண்களும் ,விலாசங்களும்(ஏனெனில் என்னுடைய மறதி அவளுக்குத் தெரியும்),
ஒரு காரைக்குடி பழுக்கா திருகு பொட்டி.
கடைசியாக எனக்குக் கிடைத்தது ஒரு சிறிய சிவப்புப் பெட்டி. அதைத் திறந்து பார்த்தால் இரு பவளத்தோடுகள்.
அவள் உடல் நிலை சரியில்லாமல் போன போது காதுகள் வெறிச்சோடி இருப்பதைப் பார்த்து நொந்து போய் அவளிடம் நான் கொடுத்த இரு சின்னத் தோடுகள்.
அதைத் தன் கடைசி நாளில் திருப்பிக் கொடுத்திருக்கிறாள் என் தம்பி மனைவியிடம்.
உள்ளே ஒரு சிறிய குறிப்படங்கிய தாள் ''இவை ரேவதியோடது'',.
என்று.
இத்தனை அறிவுள்ள முன்னெச்சரிக்கையான அம்மாவாக நீ இருந்ததை நான் ஏன் இவ்வளவு நாட்கள் கழித்துப் புரிந்து கொள்ளுகிறேன் அம்மா!!!
கடவுளின் மேல் அவளுக்கிருந்த அபார நம்பிக்கை.
எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.
மற்றவர்களை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் சூக்க்ஷமமான புத்தி,
அநுசரித்துப் போகும் தன்மை.
இதெல்லாம் எனக்கு நினைவு படுத்திய மகாத்மாவுக்கு நன்றி. எங்க அம்மா கூட மகாத்மாதான்.

28 comments:
எங்க அம்மாவோட அம்மாவும் இப்படி பல விசயங்களை குறிப்பாக்கி வச்சிருந்தாங்க..
அம்மா மகாத்மா தான் சந்தேகமென்ன..
//எங்க அம்மா கூட மகாத்மாதான்.//
சந்தேகமில்லாமல். நம்மைச் சுற்றியிருக்கும் மகாத்மாக்களையும் நாம் உணரணும் என உணர்த்தும் பதிவு. நன்று வல்லிம்மா.
நட்புக்கள் தந்த பரிசுகள் இப்பவும் பத்திரமாய்.
(((சந்தேகமில்லாமல். நம்மைச் சுற்றியிருக்கும் மகாத்மாக்களையும் நாம் உணரணும் என உணர்த்தும் பதிவு.))))
ரிப்பீட்டேய்.
எளிய பதிவு..ஆனால் அழுத்தமான பதிவு! :-)
வாங்கப்பா முத்து கயல்,
உங்க பாட்டிக்கும் எங்க அம்மாவுக்கும் ஒரேவயசா இருக்கும்னு நினைக்கிறேன்.
ரொம்பத் தெளிவான சிந்தனை இருந்த தலைமுறை அது.
அழகாகக் கூறினீர்கள்
ஆமாம் ராமலக்ஷ்மி. அப்படி உணராவிட்டால் என்னை மாதிரி புலம்பிக்கொண்டே இருக்கணும். வேணும்னு செய்யறதில்லை.
பெண்களுக்குப் பிறந்துவீட்டுக்கும் உதவி செய்ய உணர்வு வரவேண்டும்.
எப்பவும் வரவையே எதிர்பார்த்திருந்தால் நாம் ,செய்யவேண்டிய கடமைகள் கை நழுவக் காரணங்கள் சேர்ந்துவிடுகின்றன. இதை ஆண்களுக்கு ' உன் பெற்றோரைக் கவனித்துக்கொள் 'என்று சொல்லும் சமுதாயம், பெண்களையும் அதே போலச் சொல்லி வளர்க்க வேண்டும்.
வாங்க சிந்துசுபாஷ்.
உண்மைதான்.
பரிசுகளும் உறவுகளும் பாதுகாக்கப்பட வேண்டியவைதான்.
முல்லை, உங்க பெண்ணைப் பற்றி ,
பையனைப் பற்றி
நீங்கள் எல்லோரும் பதிய,
நான் அம்மாவைப் பதியறேன்;)
நன்றி அமுதா. புரிதலுக்கு நன்றி.
//இதை ஆண்களுக்கு ' உன் பெற்றோரைக் கவனித்துக்கொள் 'என்று சொல்லும் சமுதாயம், பெண்களையும் அதே போலச் சொல்லி வளர்க்க வேண்டும்.//
அழகாச் சொல்லியிருக்கீங்க. என் அம்மா இதை சரிவரச் செய்தார்கள். தன் அம்மாவை நன்கு கவனித்தார்கள். அடிக்கடி எங்களுக்குச் சொல்வது ‘நான் உங்களுக்கு அம்மாவாய் மட்டும் இருக்க விரும்பவில்லை. முதலில் என் அம்மாவுக்குப் பெண். அப்புறம்தான் உங்களுக்கு அம்மா’என. என் பாட்டி 2 வருடங்களுக்கு முன் காலமாகையில் 85 வயது.
அம்மா னாலே மகாத்மா தானே...
நல்ல உள்ளங்கள் எல்லாருமே மகா ஆத்மாக்கள் தான் :)
அருமையான, நெகிழ வைக்கும் பதிவு.
என்னிடமும் அம்மாவின் பட்டுப் புடவைகளும் அப்பாவின் மூக்குக் கண்ணாடி, அதோட கவர், எத்தனையோ பத்திரங்களிலும் காசோலைகளிலும் கையெழுத்துப் போட்ட பேனா. என்னையும் கொ.வ.சுத்தவச்சிட்டீங்க.
என்னயிருந்தாலும் அம்மா...அம்மாதான்!!!
வாங்கம்மா சிவா.
உண்மைதான் அம்மான்னாலே நல்ல ஆத்மா தான்.அதைப் பிள்ளைகள் பெண்கள் புரிஞ்சுக்கறதும் சீக்கிரம் நடக்கணும்.
நம் குழந்தைகள் அப்படி வளர்ந்துவிட்டால் வம்பே இல்லை.
உண்மைதான் நானானி. அம்மா பட்டுப்புடவைகள் இருக்கு. அதெல்லாம் விட அவள் எழுத்துகள் தான் பொக்கிஷமா என்னிடம் இரூக்கு.
ஹ்ம்ம்ம். பெருமூச்சுதான் வருது:(
ராமலக்ஷ்மி, உங்கள் அம்மா ம்மாதிரி நானும் உறுதிய்யாக இருக்க எனக்குச்ச் சந்தர்ப்பம் இல்லை.
இன்னோரு பிறவி எடுத்தால் அம்மாவுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை கடவுள் கொடுக்கப் பிரார்த்திக்கிறேன்.
\\கடவுளின் மேல் அவளுக்கிருந்த அபார நம்பிக்கை.
எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.
மற்றவர்களை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் சூக்க்ஷமமான புத்தி,
அநுசரித்துப் போகும் தன்மை.
இதெல்லாம் எனக்கு நினைவு படுத்திய மகாத்மாவுக்கு நன்றி. எங்க அம்மா கூட மகாத்மாதான்.
\\
ரீப்பிட்டே ;))))
எங்க வல்லிம்மாவும் கூட ;))
Great! Everyone remember their mothers and have good memories!
I remember my mother as a teacher...kind,disciplined,helping minded,glad,beautiful,sincere,loving,hardworking and truthful woman!
She love Mahathma policies and followed it...born in 1929 ...died in 1967 in INUVIL,JAFFNA!!!
ஆஹா. கோபிநாத்!!
மஹாத்மாவா இருக்கணும்னால் நிறையத் தியாகம் செய்யணும். தவறு,தப்பு யார் செய்தாலும் மறக்க வேணும்.
இன்னோருத்தரைப் பற்றித் தப்பாப் பேசக் கூடாது.
டஃப்!! அந்த வழியில் இப்பதான் போக ஆரம்பித்து இருக்கேன்.:)
Welcome Shan Nalliah.
Mahathma also followed what his mother advised him to do.
my mother also was born in 1929. Passed away in 2005.
May God be with them always.
அம்மா னாலே பெருமூச்சு விடச் செய்யும் ஒரு பதிவு! :(((((((((
நெகிழ்ச்சியான பதிவு வல்லிம்மா.
//அந்த வழியில் இப்பதான் போக ஆரம்பித்து இருக்கேன்.:)//
முயற்சிக்கணும்கிற நினைப்பே பெரிசு; முயற்சிக்கிறது அதை விட பெரிசுதானேம்மா :)
ஆமாம் கீதா.
அம்மா !ஏதோ கன்னுக்குட்டி கூப்பிடற மாதிரி சொல்லிப் பார்த்துக்க்க வேண்டியதுதான்.
அப்படியா:)
கவிநயா,ஆமா இப்பக்கூட முயற்சி செய்யலேன்னா ரொம்பவே கஷ்டம்டா சாமி.....:)
அம்மாவைப்பற்றிய பதிவு மிக அருமை.
அம்மா வேலைக்கு போக அம்மம்மாவிடம் வளர்ந்ததால் உங்க பதிவை படிச்சதும் அம்மம்மா ஞாப்கம் வந்தது.
எங்கம்மம்மா படிக்காத மேதை.
மஹது அம்மா( பெரிய அன்பை உடைய) அம்மா என்பதுதான் மகாத்மா என்று ஆயிற்று. இன்னமும்நான் 1964லில் எங்க அம்மா வாங்கிக் கொடுத்த தட்டில்தான் சாப்பிடுகிறேன்.அம்மாவின் அருமைகளை சொல்லியதற்கு நன்றி.
வல்லி அம்மாவுக்கு ,
நீங்கள் சொன்னது போல்
என் அம்மா எழுதிவைத்த என் போன் நம்பர் அட்டை, பின் ஏதோ பால் கணக்கு, அப்புறம் ஏதோ லிஸ்ட்with .. ர ற spelling mistake (இது என் அம்மாவின் குழந்தைமையாக நான் கருதி ரசிப்பது ) மெட்டி ,ஒற்றைமூக்குத்தி , இ தெல்லாம் என் பொக்கிஷங்கள்..பட்டுபுடவையைவிட இதுவே நான் எனக்கு மட்டுமே பாதுகாப்பது.
//கடவுளின் மேல் அவளுக்கிருந்த அபார நம்பிக்கை.
எது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்.
மற்றவர்களை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் சூக்க்ஷமமான புத்தி,
அநுசரித்துப் போகும் தன்மை.//
என் அம்மாவும் .
கடைசி வரை குழந்தையாகவே கல்மிஷம் இல்லாத சூதுவாது தெரியாத அம்மாவா இருந்தாங்க .
அன்பு சசிகலா நல்வரவு. அம்மா கைபட்ட எந்தப் பொருளும் உசத்திதான். அவளைப் போன்ற உயர்ந்த ஆத்மா வேற யாரும் இருக்க முடியாது. உங்கள் அம்மாவுக்கு என் வணக்கங்கள் நன்றி மா.
Post a Comment