Monday, October 26, 2026

சுபம் வரும் வேளை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும். மதுரையை விட்டு
சென்னை செல்லும் வேளை.
தம்பிகளைச் சித்தப்பா வீட்டில் விட்டு வந்தார் அப்பா.

45 வயது அப்பா, 37 வயது அம்மா.
இருவருக்கும் என்ன பேசுவது எப்படிப் பேசுவது 
ஒன்றும் தெரியாது.
சென்று இறங்க பாட்டி வீடு இருந்ததோ பிழைத்தோமோ.

அதற்குள் அப்பாவின் மாமா மனைவி வீட்டுக்கு வந்தார்.
'' பெண் பார்க்கணும்னா அவர்கள் தானே வரவேண்டும்?
நாராயணா நீ ஏன் விட்டுக் கொடுக்கிறாய்?'' என்று வெளுத்து வாங்கினார்.

அங்கே கமலாவின் மாமியார் மாமனார்  எல்லோரும் பார்க்க வேண்டுமாம் அம்மாமி ''

என்று அப்பா சமாதானப்
படுத்தினார். எல்லாவற்றுக்கும்  வளைந்து கொடுக்காதே
உன்  தளத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றவர்,
சென்னைக்குச் சென்று  என் வருங்கால மாமியாரிடமும்
வம்பு ஏத்திவிட்டு வந்தார்.

இங்கே ஒரு விஷயம் சொல்லணும். என் அப்பா அம்மாவைப் போல
அமைதிப் புறாக்களைப் பார்க்கவே முடியாது.

உலகம் முழுவதும் நல்லவர்களால் ஆனது 
என்று நினைப்பவர்கள்.  என் மாமியார் ,மாமனார், பாட்டி ,தாத்தா 
அந்த வகைதான்.
மாமனார் 18 வயசிலேயே, 14 வயது மாமியாரைப்   பார்த்துத் தன் திருமணத்தை நிச்சயித்துக் கொண்டவர். இருவருக்கும் ஜாதகம் கிடையாது. மாமனாரின் தங்கையும் என் மாமியாரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.:)
 எங்களை வந்து பார்த்த அம்மாமி என் மாமியாரிடமும்  கலகம்
செய்து பார்த்தார்.
அந்தக் கால ஆபட்ஸ்பரியில் திருமணம் நிகழ்த்துபவர்கள்.கொஞ்சம் தூண்டிவிட்டுப் பார்த்தார்கள்.

இப்போது மதராஸ்க்கு வண்டி ஏறலாமா:)
எப்போதும் போல ஒவ்வொரு ஸ்டேஷனிலும்  வண்டி நிற்கும் போதெல்லாம் பயணத்தை ரசித்தபடி  செங்கல்பட்டு வந்ததும் 
தூங்கி விட்டேன்:)

தாவணி பாவாடையில் வந்து இறங்கிய என்னைப் பார்த்து இரண்டு மாமாவுக்கும் சிரிப்பு. 

இப்படியே கல்யாணம் பண்ணிக்கப் போறியா. ? நாளைக்கு
புடவை கட்டிக் கொள்ள வேண்டும் தெரியுமா?
என்றனர்.
அந்த வருடம்

அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளி  வந்ததால் ஹாஜீ  மூசாவில் ஒரு ஆரணிப் பட்டுப் புடவையும் ஊதா வண்ண ரவிக்கையும் 
எனக்கான டிரெஸ். 
அம்மா அதையே அந்த  பெண் பார்க்கும் படலத்துக்கு எடுத்து
வைத்திருந்தார்.
எழும்பூரில் இருந்து புரசவாக்கம் வருவதற்குள் 
அம்மா சமாசாரம் சொல்லி முடித்தார்.


ஆஜிப் பாட்டி, தாத்தா.
மீண்டும் பார்க்கலாம்.

.



10 comments:

வெங்கட் நாகராஜ் said...

சொல்லிப் போகும் நினைவுகள் - உங்கள் வார்த்தைகள் வழி நாங்களும் நிகழ்வுகளில் பங்கு கொண்ட உணர்வு. தொடர்கிறேன் மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் என்றும் நலமாக இருக்கணும். வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சிகரமான சம்பவங்களை நினைத்துப் பார்க்கும் போது கடவுள் எவ்வளவு கருணையுள்ளவராக இருந்திருக்கிறார் என்று புரியும். மிக நன்றி மா.

ஸ்ரீராம். said...

இந்த நாரதர் மாமாக்கள் எங்கும் இருப்பார்கள் போல..  பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுபவர்கள்!

ஸ்ரீராம். said...

​ஆஹா.. மாமனார் மாமியாரிடத்தில் அந்தக்கால அழகான காதல் கதை ஒன்று இருந்திருக்கும் போலவே... இவர்கள் போட்டோ இல்லையா

ஸ்ரீராம். said...

அப்போது உங்களுக்கு 17 வயதுதான் என்கிறீர்கள்.  பாவாடை தாவணிதான் பொருத்தம்  புடவை கட்டினால் பொம்மை போல இருந்திருக்காது!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம், நாரதர் மாமாக்கள் மாமிகள் எல்லோருக்கும் ஏதாவது வகையில் ஒரு காண்டு இருக்கும். அவர்கள் வீட்டுப் பெண்களும் வரிசையில் நின்றார்கள். இவர் என்னோடு நிறுத்திக் கொண்டார்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன். படமும் பதிகிறேன். மாமா இவரை விட உய்ரமும் பருமனுமாக இருப்பார். அந்தக் கால ஜானி வெய்ஸ்முல்லர்.:)

வல்லிசிம்ஹன் said...

ஹாஹ்ஹா. ஆமாம் அவர்கள் வீட்டுப் பெண்கள் பக்கம் நான் நின்றால் பொம்மை மாதிரிதான் இருப்பேன்.. படம் இருக்கிறது. பதிகிறேன்.:))))))))

கோமதி அரசு said...

நேர நல்ல நேரமாக இருந்ததும் இறைவன் போட்ட முடிச்சு என்பதாலும் எல்லாம் சுபமாக முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி கோமதி. வருகைக்கு நன்றி மா. உண்மைதான். அது அது நடக்கும் வேளை என்று முன்பே தீர்மானிக்கப் பட்டது. வாழ்வின் எல்லா நேரத்திலும் பார்த்து விட்டோம். இன்பம் துன்பம் எது வந்த போதும் இறைவன் துணை.

நவம்பர் 20, கைசிக ஏகாதசி

வல்லிசிம்ஹன், கார்த்திகை பிறந்தது. கைசிக ஏகாதசியும் வருகிறது.  நம்பாடுவான், கைசிகப் பண், திருக்குறுங்குடி  நம்பி என்று பல நினைவுகள். பாட்டி ...