அனைவரின் நலனுக்கும் பிரார்த்தனைகள்.
இரண்டு வாரங்களாக எங்கள் ஊரில் மிரட்டும் மழை.
உங்க வீட்டு எங்க வீட்டு மழை இல்லை. பத்து மைல்கள் தள்ளி டொர்னெடொ தட்டி விட்டுப் போனது.
மழை வருவதைச் சொல்லும் சானல் அலறிக் கொண்டே இருந்தது. நான் தான்
தூறல் போட்டாலே அடித்தளத்துக்குச் சென்று விடுவேனே:) பேரன் வீட்டிலிருப்பதால் உணவு நம்மத் தேடி வந்திவிடும்.
கொஞ்ச நேரம் காரம்போர்டும் என்னுடன் விளையாடிச் செல்வான். விசடுமுறையில் கூடப் படிக்கும். வகை அவன்.
நான் என் டிவியில் பாட்டுகள் க்ரேசியின் டிராமாக்கள்
சோ அவர்களின் பேச்சு என்று பொழுதைக் கழிப்பேன்.
உயர் ரத்த அழுத்தம் உடல் தள்ளாட்டத்தையும். கொண்டு வந்திருக்கிறது:)

No comments:
Post a Comment