Saturday, April 25, 2026

திருக்குறுங்குடி பயணம் 4

வல்லிசிம்ஹன்




எல்லோரும் நலமாக வளமாக வாழ வேண்டும். வில்லிபுத்துரிலிருந்து
தென்காசி,குற்றாலம் என்று திருக்குறுங்குடி அருகில் வர மாலை ஆறு
ஆகிவிட்டது. பக்கத்து வீட்டில் தாத்தாவின் தம்பி வீடு என்பதாலும்
அவர்கள் இரண்டு நாட்கள் முன் தான் இங்கே இருந்துவிட்டு
சென்னைக்குச் சென்றதாகவும்

அவர்கள் கிளம்பு முன் இந்த வீட்டையும்  சுத்தம் செய்து
சமையலுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கி வைத்ததாகப்
பெரியவர்கள் பேசிக்கொண்ட நினைவு.. அப்போது தெரியுமா, அந்தக் குழுவில் இருந்த பேரனைத்தான் நான் மணம் முடிக்கப்
போகிறேன் என்று தெரியாமல் போய்விட்டது:))))





தோட்டப் பகுதி. (கொல்லைப் புறம்)



தாத்தா ஆராதனை செய்யும் நேரம்


திருக்குறுங்குடி மலை மேல் நம்பி பயணம் ஆரம்பம். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, நாங்கள் மூவர், இன்னோரு உறவினர். கற்பனை என்னுது. வடிவம் ஜெமினி ஏஐ:)

அழகிய நம்பி திருக்கோயில்


  அருள்மிகு மலைமேல் நம்பி.
 இப்பொழுதும் என் மாமா மகள் இந்த  மலை ஏறிச் சாதனை படைத்திருக்கிறாள்.  அவளுடைய மூட்டு வலியுடன் ஏறி இறங்கியது
நம்பியின் அருளை நம்பி மட்டும்.

மஹேந்திர கிரி மலையிலிருந்தே அனுமன் இலங்கையை நோக்கித்
தாவியதாக புராண வரலாறு.

பாட்டி அங்கே இருந்த மூன்று நாட்களும் எங்களுக்கு இரவு வேளை சாப்பாட்டைக் கையில் பிசைந்து போடுபோது, கதைகள் சொல்வார். நாம் பின் பக்கம் போய்ப்
பேசினால்  பெருமாளுக்குக் கேட்கும் என்று. நானும் என் தம்பிகளும்

வீட்டுக்குள் கூட மெதுவாகப் பேசிக்கொள்வோம்:) 
பிற்காலத்தில் தி ஜானகிராமன் கிராம  வீட்டு வர்ணனை
எனக்குப் புதிதாகவே தெரியவில்லை. 

எங்கள் திருக்குறுங்குடி வீட்டு அமைப்பாகவே தெரிந்தது.  தொடரலாம்



என்றும் நலமுடன் வாழ்க.

13 comments:

நெல்லைத் தமிழன் said...

வல்லிம்மா... ஏஐ லயும் கலக்கறீங்க.

நினைச்சுப் பார்த்திருக்கீங்களா..இந்தப் பெண் வாழ்க்கை இப்படி இருக்கும் என்று?

ஏஐ.. ஆராதனை புகைப்படத்தில் பஞ்சகச்சம் சரியில்லை. திருமண் சரியில்லை. ஹா ஹா

ஸ்ரீராம். said...

வலைப்பக்கத்தின் தோற்றம் மாறி இருக்கிறதே...   அட...

ஸ்ரீராம். said...

பதிவுக்கான படங்கள் ஜோர்.  அழாகாக கமாண்ட்ஸ் கொடுத்து உருவாக்கி இருக்கிறீர்கள்.

அந்தக் குழுவில் இருந்த பேரன்தான் சிங்கமா?  ஆஹா...   

ஸ்ரீராம். said...

பின்பக்கம் போய் பேசினால் பெருமாளுக்கு கேட்குமா?  பார்றா...  உள்ளே பேசினால் கேட்காதா என்ன!!

வெங்கட் நாகராஜ் said...

AI கொண்டு படங்கள் வடிவமைத்து சேர்த்திருப்பது சிறப்பு. பாராட்டுகள்.

பெருமாளுக்குக் கேட்கும் என்று மெதுவாகப் பேசிக் கொள்வோம் - எல்லாம் வல்லவன் அல்லவா பெருமாள்! கேட்கும். அந்த நம்பிக்கை இப்போது நம்மில் பலருக்கு இல்லை என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது.

இனிமையான தொடர். தொடரட்டும். நாங்களும் தொடர்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா, நான் பஞ்சகச்ச்ம் சொல்ல வில்லை..என் தப்புதான்:) நினைப்பது ஒண்ணு நடப்பது ஒண்ணு பாட்டு தான் எனக்கு:)ஏஐ என்னை மாதிரி பாட்டிகளுக்கு ஏதுவான குழந்தை:)

வல்லிசிம்ஹன் said...

ஒரே மாதிரி இருந்தால் போர் அடிக்குமேன்னு தான் மாத்தினேன் ஶ்ரீராம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பூணல் போடாத சிங்கம். ஆசைக்காக சேர்த்தது. நாங்கள் வருவதற்குன் அவர்கள் வந்து மும்பைக்குத் திரும்பி விட்டார்கள்.நன்றி மா:)))

வல்லிசிம்ஹன் said...

திருக்குறுங்குடிப் பெரியவர்கள் இன்னும் சொல்வார்கள். யம பட்டணமும் அருகில் தான். தப்பு தண்டா ஜாக்ரதை! தாத்தா குரல் கேட்கிறது. இருட்டின பிறகு வெளியே போக வேண்டாம் என்பதற்காக மிரட்டி இருப்பார்:)ஶ்ரீராம். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் வெங்கட், நன்றி மா. பொதுவாகவே தாத்தா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனாலயே அப்பா எங்களிடம் கண்டிப்பாக இருந்ததில்லை. பக்தி விஷயங்கள் தாத்தாவிடம் தாம். ராம ஜபமும் அவர்தான் உருவேற்றினார். மீண்டும் நன்றி மா.

கோமதி அரசு said...

பதிவும் ஏஐ படங்களும் மிக அருமை.
கடைசி படம் கருப்பு, வெள்ளையில் முன்பு பகிர்ந்து இருக்கிறீர்கள். அருமையான மலரும் நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி தங்கச்சி, தாமதத்துக்கு மன்னிக்கணும்.ஆமாம் பா. இந்தப் படம் திருச்செந்தூர் கடல் பக்கம் எடுக்கப் பட்டது. மறக்க முடியாத இனிய நினைவுகள். நன்றி தங்கச்சி.வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா. ஏஐக்கு எங்க தாத்தாவைத் தெரியாதே. நான் தமிழ் வைஷ்ணவைட் என்று தான் சொன்னேன்.:)

திருக்குறுங்குடி பயணம் 4

வல்லிசிம்ஹன் எல்லோரும் நலமாக வளமாக வாழ வேண்டும். வில்லிபுத்துரிலிருந்து தென்காசி,குற்றாலம் என்று திருக்குறுங்குடி அருகில் வர மாலை ஆறு ஆகிவிட...