Blog Archive

Friday, July 02, 2021

எழுத்தாளர் திருமதி சரோஜா ராமமூர்த்தி சிறுகதை | வரன் குதிர்ந்தது | Tamil ...




9 comments:

கோமதி அரசு said...

நானும் இரண்டு மூன்று நாடகளுக்கு முன் தான் கேட்டேன். நன்றாக இருந்தது.
சேஷப்ரியா நன்றாக கதை சொன்னார்.

சரோஜா ராமமூர்த்தி கதைகள் இரண்டு மூன்று கேட்டேன்.
எல்லாமே நன்றாக இருந்தது. ஓவியமும் நன்றாக இருந்தது.

ஸ்ரீராம். said...

முன்னர் புத்தகக்கண்காட்சி சென்றபோது சில ஆடியோ புத்தகங்கள் வந்திருப்பப்பதாகக் கேள்விப்பட்டு தேடிப்பார்த்தேன்.  அப்போது கிடைக்கவில்லை.  ஆனால் அப்புறம் ஒரு கதை இபப்டி வாசிக்கக் கேட்டபோது எனக்கென்னவோ ஒத்துவரவில்லை.

Geetha Sambasivam said...

ஆடியோவிலா? நான் இதுவரை கேட்டதில்லை. யார் கதைகளையுமே. படிக்கும் போது இருப்பது போல் கேட்பதில் வருமா தெரியலை. எழுத்தாளர் சரோஜா ராமமூர்த்தி என் பெரிய நாத்தனாரின் சிநேகிதி என அவர் சொல்லிக் கேட்டிருக்கேன். கதைகளும் படிச்சிருக்கேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

வரன் குதிர்ந்தது கதை நன்றாக உள்ளது. கதை சொன்னவர் ஏற்ற இறக்கங்களுடன் சொன்ன விதமும் நன்றாக இருந்தது. கதைகள் படிப்பதற்கு பதிலாக இப்படி கேட்டு விட்டால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.இந்த மாதிரி ஆடியோக்கள் கதை சிலவற்றை கேட்டுள்ளேன். இதை கேட்டதில்லை. இதைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி. படங்களும் அழகாக உள்ளன. நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதி மா,
வாழ்க வளமுடன்.
நான் இந்த ஆடியோ பார்த்ததில்லை.

வெகு நாட்களுக்குப் பிறகு திருமதி சரோஜா ராமமூர்த்தி கதை கேட்கிறேன்.
சேஷப்ரியா இனிமையாகப்
படித்திருக்கிறார்.
இனிமேல் தேடிக் கேட்கிறேன் மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். உண்மைதான் .கையில் புத்தகம் இருப்பது
போல இன்பம் வேறில்லை.

அப்படிப் புத்தகங்களைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
சட்டென்று இது வரை படிக்காத கதை

யூடியூபில் கிடைத்தால் கேட்க நன்றாகத் தான் இருக்கிறது.
இங்கே கிடைக்கவில்லையே.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

இங்கேயும் லைப்ரரியில் கேட்காத ஆடியோவைத் திணித்தார்கள். நான்
திருப்பி அனுப்பி விட்டேன்.
350 பக்க நாவலை எப்படிக் கேட்பது?
சரோஜா ராமமூர்த்தி படித்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அதனால் மிக ஆசையாகக் கேட்டேன்.
பரவாயில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,
நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.
நன்றாகப் படித்திருக்கிறார்.
அந்த இளஞ்சோடிகள் பேசுவது இனிமையாக இருந்தது.
இது போலக் கதைகள் படித்தே வருடங்கள் ஆகின்றன.
கேட்டு ரசித்ததற்கு மிக நன்றிமா.

வெங்கட் நாகராஜ் said...

ஆடியோ கதைகள் இதுவரை கேட்டதில்லை. முயற்சிக்க வேண்டும்.