Blog Archive

Sunday, July 04, 2021

திருமதி எம்.என். ராஜம் அவர்களின் பாடல்கள்.







ஒரு நல்ல குணச் சித்திர நடிகை.
பெரும்பாலும் கதா நாயகிக்கு எதிர் பாத்திரத்தில் நடித்தாலும்
எல்லோராலும் பாராட்டப் பட்டவர்.

அவரின் தமிழ் உச்சரிப்பும், முக பாவங்களும் போற்றப் 
படாத படங்களே இல்லை.

அழகிலும் குறைந்தவர் இல்லை.
சாரங்கபாணியுடன் ,தங்கவேலுவுடன் என்று நகைச்சுவை யாகட்டும் , எம் என் நம்பியாருடன் வில்லி பாத்திரம் ஆகட்டும்,

பாவை விளக்கின் உமா ,
மஹாதேவியில் தியாகத் தாய்,
தெய்வப் பிறவியில் காதலி,
பாசமலர் படத்தின் பரிதாபத்துக் குரிய அண்ணி,
மக்களைப் பெற்ற மகராசியில் அன்புத் தங்கை.....
என்று பலவித வேடங்கள்.
எல்லாமே சிறப்பாக  அறியப் பட்டவை.
அவரின் பாடல்களில் எனக்குப் பிடித்தவை.

வல்லிசிம்ஹன்

15 comments:

ஸ்ரீராம். said...

அடடே...   இப்படியொரு தொகுப்பை யாரும் வெளியிட்ட நினைவில்லை.  எல்லாமே அருமையான பாடல்கள்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ஸ்ரீராம். நல்ல நடிப்பில் வெளிவந்த நல்ல பாடல்கள். நீங்கள் ரசித்ததும்
மிக மகிழ்ச்சிமா.

கோமதி அரசு said...

மிக அருமையான பாடல் தொகுப்பு.
எல்லாமே பிடித்த பாடல்கள்.

எம் .என். ராஜம் மிக நல்ல நடிகை முன்பு அவர்தான் புன்னகை அரசி. வார புத்தகங்களில் விளம்பர படங்களில் எம்.என். ராஜம் இடம்பெற்று இருப்பார்.


அவர் நடித்த படங்கள் உள்ள பேசுபடம் புத்தகம் அம்மா வீட்டில் இருந்தது.

கோமதி அரசு said...

சிவகங்கை சீமை படம் போல் இருக்கிறது. மேகம் குவிந்ததது என்ற பாடல்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பாடல்கள்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பதிவு நன்றாக உள்ளது எம்.என்.ராஜம் பாடல்கள் அனைத்தும் அருமை. கேட்டு மகிழ்ந்தேன். நல்ல நடிகை.எனக்கும் அவர் நடிப்பு பிடிக்கும். எல்லா பாத்திர வேஷங்களையும், சுலபமாக அவரால் கையாள முடியும். நல்லபகிர்வு. நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

மனோ சாமிநாதன் said...

வில்லியாக நடித்து புகழ் பெற்றவர் எம்.என்.ராஜம். அவரைப்பற்றி இங்கே பதிவிட்டிருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது. சமீபத்தில்தான் ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவை அவர் உதைத்து நடித்தது பற்றி படித்தேன். மகாதேவி திரைப்படத்தில் 'சிங்காரப்புன்னகை' பாடலிலும் சிவாஜியுடன் 'பாவை விளக்கில்' கதாநாயகியாய் நடித்ததையும் மறக்க முடியாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.

எனக்கும் திருமதி.ராஜத்தை மிகவும் பிடிக்கும்.

எத்தனையோ நல்ல பாடல்கள் இருக்கின்றன.
சிலவற்றைத்தானே பதிய முடியும்:)
தெய்வப் பிறவியிலும் அவர் பாடல்கள்
நன்றாக இருக்கும். பத்மினிக்கு இணையாக
நடிக்கும் திறமை கொண்டவர்.

வல்லிசிம்ஹன் said...

பி எஸ் வீரப்பாவும் அவரும் நடித்த பாடல்/படம் சிவகங்கைச் சீமை தான்.
அந்தக் காலப் பேசும்படம் அம்மா வீட்டில் இருக்கிறதா?

ஒரே ஆவலாக இருக்கிறது மா. உங்களிடம் இருக்கும் பொக்கிஷங்கள்
கணக்கிலியே அடங்காது போலிருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மா.
மிக அருமையான பாடல்கள்.
மறக்க முடியாதவை. மிகவும் நன்றி அன்பின் தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,

சென்னையிலேயே இருந்து வந்தும் யாரையுமே
பார்த்ததில்லையே என்று இப்போது நினைக்கிறேன். அந்தக் கால வாழ்வு அப்படி.

இவரது நிஜ வாழ்வும் அழகு என்று படித்திருக்கிறேன்.
ஏ எல் ராகவனும் இவரும் அவ்வளவு நல்ல தம்பதியினராம்.

நல்ல நடிப்புக்குச் சொந்தக்காரர்.
நலமாக இருக்க வேண்டும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோமா,
நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.
சிங்காரப் புன்னகை பாடல் கேட்டாலே எனக்கு தொண்டை அடைத்துக் கொள்ளும்.
முதலில் சந்தோஷமாகப் பாடிவிட்டு,
பொன்னான தெய்வங்கள் வாழ்கின்ற பூமியில் வில்லேந்தும் வீரன் போலவே
என்று மீண்டும் பாடும்போது
மெய் சிலிர்க்கும்.
எத்தனை உன்னதமான படம் அது!!!

உண்மைதான் வில்லியாகவும் நாயகியாகவும் எல்லா வேடங்களிலும்
நடித்துவிட்டார்.
ரத்தக்கண்ணீர் படம் பற்றி முன்பு படித்திருக்கிறேன்ம.
மிக நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு தொகுப்பு. தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள். பிறகு தான் கேட்க வேண்டும்.