Blog Archive

Sunday, July 04, 2021

பிடித்த பி.பி ஸ்ரீனிவாஸ் பாடல்கள்.




வல்லிசிம்ஹன்
ஏ.எம் ராஜாவுக்கு அடுத்தபடி ஒரு கஜல் குரல் ஸ்ரீனிவாஸ் அவர்களுடையதுதான்.

ஜெமினி,எம் ஜி ஆர், ஏவி எம் ராஜன், கல்யாண்குமார்,
அசோகன், எஸெஸ் ஆர்
என்று அந்தக்கால ஹீரோக்களுக்கு 
நிறையவே பாடி இருக்கிறார்.
ஏ.எல் ராகவனும் இவரும் பாடி அசத்தாத படங்களே
இல்லை.

சோகங்களைத் தவிர்த்து சுகப் பாடல்களையே 
இங்கே பதிகிறேன்.:)
பதினாறு வயதில் மயக்கிய இந்தப் 
பாடலைத் தொடர்ந்து வெள்ளைத் தாவணியில் 
வலம் வந்த தோழிகளும் உண்டு.
எனக்கு அனுமதி இல்லாததால்
பார்த்து மட்டும் ரசித்தேன்:))))

16 comments:

கோமதி அரசு said...

எல்லா பாடல்களும் நல்ல தேர்வு.
என்றும் இனிமைதான்.
எல்லாம் கேட்டு மகிழ்ந்தேன்.
மலரும் நினைவுகள் மிக அருமை.

ஸ்ரீராம். said...

மிக அருமையான குரல். மதுரமான குரல். கடினமான பாடல்கள் கூட அவர் குரலில் வந்தால் மென்மையாகிவிடும். அப்படி ஒரு குரல். எல்லாப் பாடல்களுமே அருமையான பாடல்கள் அம்மா.

ஸ்ரீராம். said...

நாளாம் நாளாம் திருநாளாம்/ பாடல் சென்ற வருடம் கொரோனாவில் மறைந்த என் மாமாவிற்கு மிகவும் உயிரான பாடல். அந்த ஆரம்ப இசையிலிருந்தே ரசிக்க ஆரம்பித்து விடுவார்.

ஸ்ரீராம். said...

இவர் குரலில் ஜாலியான ஒரு பாடல் "ஜாவ்ரே ஜாவ்.. இந்த கேட்டுக்கு நீ ராஜா" கேட்டிருப்பீர்கள். அப்போதெல்லாம் ரேடியோவில் அந்தப் பாடல் அதிகமாக போடமாட்டேன் என்கிறார்களே நான் காத்திருந்ததுண்டு.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன் மா.
ஆமாம் ஒவ்வொரு பாடலுக்கும் நினைவுகள் உண்டு.
ரசித்துக் கேட்டதற்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஸ்ரீராம்,
உணமைதான் மா. காலங்களில் அவள் வசந்தம் முதல்
மயக்கமா கலக்கமா என்று தொடரும் பட்டியல் நீளம்.

நீங்கள் சொல்வது போலாப்படியொரு மயிலிறகு
வருடல் போன்ற மென்மை அவர் குரலுக்கு.
இன்னும் டிரைவின் வுட்லாண்ட்ஸில் அவர்
உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருப்பது
நினைவில்.

வல்லிசிம்ஹன் said...

அச்சோ ஆமாம் பா. நானும் தொடக்க இசையிலிருந்து ரசித்து
ருசிப்பேன். அவ்வளவு இனிமையான பாடல்.
உங்கள் மாமாவுக்கும் பிடிக்குமா.
பாவம் மா. கொரோனா தான் என்ன கொடுமை.
உங்கள் அக்காவை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.ஸாரி மா.

வல்லிசிம்ஹன் said...

ஜாவ்ரே ஜாவ் ஆ. பெரியவனுக்கு ஒரு வயது இருக்கும் போது ரேடியோவில் வந்தால்
கேட்டு சிரிப்பான்.
ரவிச்சந்திரன் ஜெயலலிதா படம் தானே!!
நல்ல ஜாலியான பாடல் தான்.
நன்றி ஸ்ரீராம்.

மனோ சாமிநாதன் said...

அனைத்துப்பாடல்களும் மிக அருமையானவை!
ஆனால் அவருக்கு வானளாவிய புகழ் கொடுத்த முக்கியமான இரண்டு பாடல்களை மறந்து விட்டீர்களே!
'ராமு' திரைப்படத்தில் ' நிலவே என்னிடம் நெருங்காதே' பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம் மிகவும் ஆசைப்பட்டு தன் குரலில் பாடி வெளியிட்ட பாடல்!
மிகவும் புகழ்பெற்ற ' மயக்கமா, கலக்கமா' பாடல்.[ சுமைதாங்கி திரைப்படம்]
இன்றளவும் அனைவரது சோகத்திலும் பங்கு பெறும்பாடல்! என்றுமே மறக்க முடியாத பாடல்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... அருமையான பாடல்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

பாடல்கள் அனைத்துமே எனக்குப் பிடித்தமானவை

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மனோ,
எனக்குப் பிடித்த பாடல்களைக் கொடுத்திருக்கிறேன் அம்மா.
சில பாடல்கள் அந்தந்த வயதில் நம்மைத் தொடும்.
மயக்கமா கலக்கமா' வை யாரும் மறுக்க முடியாது.

சுமை தாங்கி தியாகம்.சோகம்.
அதனால் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை.
ஆனால் எல்லோரையும் மிக சிந்திக்க வைத்திருக்கும் பாட்டு.
ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில்
நம் துயரத்தை இன்னும் துடைத்து ஆறுதல்
கொடுத்துக் கொண்டிருக்கிறது.
எழுதியவருக்கு மிகப் பெரிய நன்றி.
இசை அமைத்தவருக்கு இன்னும் பெரிய நன்றி.

உங்களுக்கும் தான் மா.


Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நீங்கள் தேர்ந்தெடுத்த பாடகர் பி.பி ஸ்ரீநினிவாசன் அவர்களின் அத்தனைப் பாடல்களும் அருமையானவை. பலமுறை கேட்டு ரசித்தப்பாடல்கள். மறக்கமுடியாதவையும் கூட...அவரின் இந்த பாடல்களை எவ்வளவு முறை திரும்ப திரும்ப கேட்டாலும் புதிதாகவே தோன்றும். அவரின் குரலின் இனிமையில் மயங்காதவர் இல்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தனபாலன், ரசித்ததற்கு மிக நன்றிப்பா.
நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார் நலமுடன் இருங்கள். மிக நன்றி அப்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா,

அப்போது வந்த படங்கள் 60 லிருந்து 70 வரை எல்லாமுமே பிடிக்கும்.
நீங்களும் ரசிப்பீர்கள் என்றே நினைத்தேன்.
இசையும் குரலும் எல்லோருக்குமே பிடித்ததாக
அமைந்தது மகிழ்ச்சி. மிக நன்றி மா.