வல்லிசிம்ஹன்
கவலையை விட்டொழிக்கத் தம்பி முரளி
தேர்ந்தெடுத்தது
தெய்வ தரிசனங்கள்.
1992 இல் முதல் இதய அதிர்ச்சி வந்த போது
காப்பாற்றிக் கொடுத்த விஜயா மருத்துவ மனைக்கும் நன்றி.
அத்தனை மருந்துகளையும் தேகப் பயிற்சிகளையும்
இம்மி பிசகாமல் ஏற்றுக் கொண்டான்.
அறுவை சிகித்சை முடிந்து ஆறு மாதங்களில்
வெளி நாட்டுப் பயணங்கள்.
அசரவே இல்லை. எந்த விதத்திலும் தன்னை
முன் நோக்கி செலுத்திக் கொண்டே இருந்தான்.
எந்த தேசம், எந்த சூழ்னிலை என்றே கவலைப் படவில்லை.
இரவானாலும் பகலானாலும் மூன்று மைல்களாவது நடப்பான்.
அத்தனை நம்பிக்கை மருத்துவத்தில்.
சின்னத்தம்பி மறைந்த போது எனக்கும் அம்மாவுக்கும் அவனே
துணை.
அம்மாவும் சென்றாள். சிங்கமும் மறைந்தார்.
அந்த மெலிந்த தேகத்துடன்,என்றும் துணை இருப்பேன் என்று சொன்னவன்,
சிரித்த முகத்துடன் என்றும் மாறா தெய்வ நம்பிக்கையுடன்
நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது
2016 ஐப்பசி மாதம்.
ஜகார்த்தாவில் ஒரு காலை அவனும் இறைவனடி
சேர்ந்த செய்தியை மகன் கொண்டுவந்தான்.
உடனே கிளம்ப முடியாத நிலையில்
ஒரு வாரத்தில் சென்னை வந்தோம்.
இயந்திரமாகச் செயல் பட்டது மனமும் உடலும்.
அவன் குடும்பம் மனைவி,
மகன்,மருமகள்,
பேத்தி பேரன் என்றும் நிறைவோடு இருக்க
அவனே காத்திருப்பான்.
15 comments:
வரிசை மாறி யாரும் மறைவது மனதுக்கு அதிக துக்கம் தரக்கூடியது.
24 வருடங்கள் உடற்பயிற்சியின் மூலம் தேகத்தைப் பாதுகாத்திருக்கிறாரே. நல்ல டிடெர்மினேஷன்.
ஊர் ஊராகப் பிரிந்துகிடக்கும்போது சந்திப்புகள் வெகு அபூர்வமாகிவிடுகின்றன
அன்பின் முரளிமா,
2017 மே 22 நல்ல ஏகாதசி நாளில்
சிரமம் இல்லாமல் மறைந்தான்.
முதல் நாள் கூட அவனிடம் பேசினேன். சுத்த கர்ம வீரன்.
சரியாக 25 வருடம் .சமாஸ்ரயணம் செய்து கொண்டான்.
மீசையெல்லாம் எடுத்து நன்றாகவே இருந்தான்.
ஆமாம் முறை தப்பித்தான் போனது.
அடுத்த தலைமுறை சிறக்கட்டும் .நன்றி மா.
தம்பியின் நினைவுகள் என்றும் மனதை விட்டு அகலாது.
உடனே தம்பியை பார்க்க முடியாத துக்கம் உங்களை எப்படி வாட்டி இருக்கும் என்று உணர முடிகிறது.
அவரின் அன்பு குடும்பத்தை என்றும் காத்து இருப்பார்.
சொந்தங்களின் பிரிவுகள் எந்நாளும் மறக்கவே முடியாது. போன மாதம் என் ஓர்ப்படியின் தம்பி 50 வயதே ஆனவன் கொரோனாவில் மறைந்தான். இன்னமும் நாங்கள் யாரும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்றென்றும் மனதில் ஆழப் பதிந்த வடுவாக இருக்கும். என்ன செய்யலாம்!
மிகவும் வருந்தச் செய்யும் நிகழ்வுகள்தான்.
ஒரே ஊரில் இருந்தாலே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாதபடியான நிலைமை. வெவ்வேறு நாடுகளில் இருந்தால்? பாதுகாப்பா? பதட்டமா... இந்தச் சூழல் எப்போது மாறும் என்று காத்திருக்கவே இந்திய நிலை...
குடும்பத்து இழப்புகள் மனதில் என்றும் ஆறாதவை அதுவும் நம் மனதிற்கு நெருக்கமானவர்கள் என்றால்....நினைவிருக்கு அம்மா நீங்கள் அப்போது பகிர்ந்தது...தம்பியின் மறைவு பற்றி..வருடங்கள் ஓடுகின்றன இல்லையாம்மா...இறைவன் அருளால் அவர் குடும்பம் எல்லாருக்கும் நல்லதே ந்டக்க வேண்டும் அம்மா...
கடைசி வரை உடம்பில் நல்ல அக்கறை எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார் மாமா..
கீதா
எத்தனை வருடங்கள் கடந்தாலும் நம் சொந்தபந்தங்களின் இழப்புகள் மனதில் இருக்கத்தான் செய்யும் அதுவும் போவதற்கான வயது இல்லாத போது...
அடுத்த தலைமுறை நன்றாக இருக்க இறைவனும், உங்கள் தம்பியும் கண்டிப்பாகத் துணை புரிவார்கள்!
துளசிதரன்
இழப்புகள்... என்றைக்கும் மறக்க இயலா இழப்புகள்.
அன்பின் கோமதிமா,
என்றும் வாழ்க வளமுடன். முன்பு ஒரு பதிவு
போட்டிருந்தேன். மே மாதம் என்றால்
எவ்வளவு பிடிக்கும் என்று.
மாம்பழம், மல்லிகை, குழந்தைகளுக்கு விடுமுறை,
சென்னை செல்ல விடுமுறை
என்று உற்சாகமாக எழுதி இருந்தேன். தம்பிகளின் திருமண நாள்
பெற்றோர் திருமண நாள் என்று எல்லோரும் கூடுவோம்.
நாள் என்ன செய்யும். சுகம், சுகம் அல்லாதது
எல்லாம் கடவுள் நினைத்தபடி..
சின்னத் தம்பியையாவது. பார்க்க முடிந்தது.
பெரியவனைப் பார்க்க முடியவில்லை.
அதுவும் நல்லதுக்குத் தான். அந்த மாதிரி நினைவு யாருக்கு வேண்டும்.
எல்லோரும் நல்லபடியாக நன்றாக இருக்க வேண்டும்.
அன்பின் கீதாமா,
50 வயதா?
அச்சோ பாவம்.
இந்தக் காலக் கொடுமையை என்னவென்று சொல்வது. இடைவிடாமல் இறைவனைத்தான் துதிக்க வேண்டும்.
இப்போது மறைந்தவர்களுக்கு நினைவுப் பதிவு ஒன்றுதான்
பதிய முடிகிறது.
நன்றி மா. நம்மை விட இளையவர்களை எல்லாக்
கடவுளரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும்.
அன்பின் ஸ்ரீராம்.
அவனுக்கு நான் வெளியூர் சென்றாலே பிடிக்காது.
இவரும் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?
இப்பொழுது காலமே கொடுமையாக இருக்கிறது.
அனைவரும் இந்தப் பூட்டுக்குத் தப்ப வேண்டும்.
எப்பொழுதும் கடவுள் நாமமே கை கொடுக்கும்.
அன்பு சின்ன கீதாமா,
சின்ன வயதில் நான் தான் அவனுக்கு பலம்.
இந்த உடம்பு வந்ததும் அங்கேயே
பழி கிடந்தேன்.
நல்ல உழைப்பாளி. ஆகாரக் கட்டுப்பாடு. தண்ணீர்
கூட ஒரு வாய்க்கு மேல் குடிக்க மாட்டான்.
மஹா அறிவாளி.
நாலு வருடங்கள் முன் உடனே பதிந்தேன். என் உறவே இணையம்
தானே.
மிக நன்றி மா.
அன்பு துளசி மா,
நன்றி மா.
கட்டாயம் தம்பிகள் இருவருமே மிகப் பொறுப்பான தந்தைகள்.
நல்ல பிள்ளைகள். நல்ல சகோதரர்கள்.
என்றும் அவர்கள் குடும்பம் நன்றாக
இருக்கும். இறைவன் பாதுகாப்பான்.
அன்பின் வெங்கட்,
உண்மைதான்.
இனி அனைவரும் நலமாகவே இருக்க வேண்டும்.
இழப்பு பெரும் துயர் மிக்கது
Post a Comment