Wikipedia

Search results

Monday, January 13, 2014

தைத் தாய் நீ தித்தித்தாய்

தைப்பொங்கல்

 பொங்கல் உண்டு களித்த அனைவருக்கும்   என்னைப் போலச் சர்க்கரை சேர்த்த எதையும் சாப்பிட முடியாதவர்களுக்கும் வாழ்த்துகள்:)

திருப்பாவை பாடல்களைப் பாடிய திருப்பாவை அரங்கனோடு ஐக்கியம் ஆனாள்.

நேற்றும்  ஒவ்வொரு   தொலைக்காட்சியாகத் தேடினேன்.
கிடைக்கவில்லை திருமணவைபவம்.
  அக்காவைப் பார்க்கவேண்டி(சிங்கத்தின் அக்கா)  முதல்நாளே போய் விட்டதால்    நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை.

அவளே சொல்கிறாள். சோம்பல்  உடலில் வியாபிக்க
தொலைக்காட்சியில் என்னைத் தேடுகிறாய்.
முயன்றுவந்து   எங்களைக் காண உனக்கு  ஆவல்
ஏற்படவில்லை.
கூட்டமென்று தள்ளுகிறாய்.
தள்ளவில்லை உடம்பு என்று சலிக்கிறாய்.
அனைத்தும்   ஒரு காட்சிதிரையில் வந்துவிழுந்துவிடும்போது
இறைவனும் தோன்றிவிடுவான் என்று  நினத்தாய்.

முயற்சியெடு மகளே  அடைய வேண்டும்
என்று அடியெடுத்துவை. அடுத்தவருடமாவது
வந்துசேருவாய்  என்று விட்டாள்.

நண்பர்கள் யாராவது பார்த்திருந்தால்   அவர்களை வணங்கிக் கொள்கிறேன்.
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

38 comments:

Matangi Mawley said...

:) ...

Happy pongal!

துளசி கோபால் said...

பாவை நோன்பு பற்றி விடாமல் அனு தினம் எழுதியதில் கவிதை வரம் கைவரப் பெற்றதோ!!!!!!

ஓக்கே. நானும் வரேன். ரெண்டு பேருமாக் கிளம்பிப் போய் ஆண்டாளைக் கண்டுக்கிட்டு வரலாம்:-)

வல்லிசிம்ஹன் said...

ஹை மாதங்கி. நலமா.பதிவு சிரிக்க வைத்துவிட்டதா:)சரி சரி. உங்கள் பொங்கல் எப்படிப் போச்சு. கனு ஆச்சா?

வல்லிசிம்ஹன் said...

துளசி மா. கவிதை னு இதை நீங்கதன் சொல்லணும். ஆனால் திருப்பாவையோட சைட் எஃபெக்டாக் கூட இருக்கலாம்:)
போவோமா ? போகலாம்.

சாந்தி மாரியப்பன் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் வல்லிம்மா..

சர்க்கரைப்பொங்கலாய் இனிக்கிறது உங்கள் கவிதை :-)

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
துளசி கோபால் said...

வல்லீ,

பூனைக்குட்டி:-)))))

கள் சாப்பிடாமலேயா!!!!!!!!!

RAMA RAVI (RAMVI) said...

//முயற்சியெடு மகளே அடைய வேண்டும்
என்று அடியெடுத்துவை. அடுத்தவருடமாவது
வந்துசேருவாய் //

நேரே சென்று சேவித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

கவிதை சிறப்பாக இருக்கு மேடம்.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

மாத்திட்டேன் துளசி.
பொங்கல் கள் ஆச்சே. கண்ணன் அமுதம்:)நன்றிமா.!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் நீங்களுமா.
கலாய்க்கிறீங்கனு தொணுது. இருந்தாலும் ஓக்கே தான்.:)காணும்
பொங்கல் வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

முயற்சியெடு மகளே அடைய வேண்டும்
என்று அடியெடுத்துவை. அடுத்தவருடமாவது
வந்துசேருவாய் என்று விட்டாள்.

ஆண்டாளே சொல்லிய பிறகு அப்பீல் எதற்கு !!

"தைத் தாய் நீ தித்தித்தாய்"

கோமதி அரசு said...

முயற்சியெடு மகளே அடைய வேண்டும்
என்று அடியெடுத்துவை. அடுத்தவருடமாவது
வந்துசேருவாய் என்று விட்டாள்.//
அடுத்தவருஷம் நன்கு சேவிக்கலாம்.
ஆண்டாள் ஆசியுடன்.

நான் உங்களுக்கு சங்கரா தொலைக்காட்சியில் ஒலிபரப்புகிறார்கள் என்று டைப் செய்தேன்.

பூந்தளிர் said...

வல்லி சிம்ஹன் மா கவிதை நன்றாக இருக்கிறதும்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அவள் சொல்லுக்கு மறுப்பு கிடையாது இராஜராஜேஸ்வரி.நடக்க ஆரம்பிக்கிறேன்.:0)

வல்லிசிம்ஹன் said...

இனிய பொங்கல்வாழ்த்துகள் ரமா. நேரே போக எப்போ நேரம் கிடைக்குமோ தெரியவில்லை.அதுவும் அவள் தான் மனசு வைக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி உங்கள் செய்தியை வந்தபிறகு பார்த்தேன்.நேரம் ஆகிவிட்டது. என்னைக் கவனத்தில் கொண்டதற்கு மிகவும் நன்றி.
ஸ்ரீரங்கமோ,ஸ்ரீவில்லிபுத்தூரோ அழைத்தால் போக நான் தயார்.நீங்கள் சொல்வது போல அவள் ஆசி வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா.... சர்க்கரை பொங்கல்.... பார்க்கவே தித்திக்கிறது. இங்கேயும் பொங்கல் ஓஹோவென்று ஆச்சு! :)

Ranjani Narayanan said...

வல்லி!

முப்பதும் தப்பாமே உரைத்திருக்கிறீர்கள்.
அதனால் செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலின் திருவருள் கட்டாயம் கிடைக்கும்.

என்னை மறந்திடாதேங்கோ! நானும் வரேன் ஆண்டாளை சேவிக்க!

கனுப் பண்டிகை வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

ஆஹா... நல்ல கவிதை. அடுத்த வருடம் ஜாம் ஜாமென்று சென்று தரிசிக்கலாம்.

ராமலக்ஷ்மி said...

தலைப்பும் வரிகளும் சிறப்பு. பொங்கல் தங்கள் கவிதையைப் போலவே தித்திப்பு!

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப சந்தோஷம்வெங்கட். சர்க்கரைப் பொங்கல் பெருமாள் பிரசாதம்.
பொங்களன்று உண்டால் அமிர்தம்தான்.நன்றீ மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்ஜனி, 28 பாசுரங்களே எழுதி இருக்கிறேன்(பொருள்)
முதலிரண்டு பாடல்களையும் பதிவிட்டால்காலரைத் தூக்கிவிட்டுக்கலாம்:)
அருமையான வார்த்தைகளால்
ஆதரித்து வந்திருக்கிறீர்கள்.பாபங்கள் குறையும்போது அவள் கட்டாயம் அழைப்பாள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் கட்டாயம் நாம் எல்லோரும் போகலாம். அருமையாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.சரிப்பா இது கவிதைதான்:)

Geetha Sambasivam said...

நேற்றும் ஒவ்வொரு தொலைக்காட்சியாகத் தேடினேன்.
கிடைக்கவில்லை திருமணவைபவம்.
அக்காவைப் பார்க்கவேண்டி(சிங்கத்தின் அக்கா) முதல்நாளே போய் விட்டதால் நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை.//

சங்கராவில் வந்ததாமா? தெரியலை! ஹிஹிஹி, நேத்திக்கு முகல் ஏ ஆஜம் சினிமா பார்த்துண்டு உட்கார்ந்துட்டேன். :)))) நேத்தா முந்தாநாளா? என்னிக்கு வந்தது?

Geetha Sambasivam said...

சர்க்கரை வெள்ளைச் சர்க்கரை தான்சேர்க்கக் கூடாது. கொஞ்சம் போல் பொங்கல் சாப்பிட்டுக்கலாமே! உடம்பிலும் கொஞ்சம் எனர்ஜி இருக்கணுமே! அதோடு அதில் போடும் ஏலக்காய், பச்சைக்கற்பூரம் போன்றவற்றினால் ஜீரணத்துக்கும் நல்லதுனு நினைக்கிறேன்.

மாதேவி said...

தித்திக்கின்றது பொங்கல்.

விழித்துக்கொள் said...

பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.

விழித்துக்கொள் said...

பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.

வல்லிசிம்ஹன் said...

இது போ ன வருடத்துப் பதிவு.

அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துகள்.

--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

ஸ்ரீராம். said...

நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நம் வாசக நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

Anonymous said...

வணக்கம்
அம்மா.

கவிதையும் சர்க்கரைப்பொங்கல் போல தித்திக்குது..அம்மா.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் said...

இ கலப்பை கிடைத்துவிட்டது.தைத்தாயின் அருளோ.நன்றி ஸ்ரீ ராம்,நன்றி ரூபன்,நன்றி தனபாலன். எல்லோரும் வளம் கொழிக்க வாழ வேண்டும்.

Geetha Sambasivam said...

வாழ்த்துகள் வல்லி. இ. கலப்பை கிடைத்ததுக்கு மகிழ்ச்சி. :)))

அப்பாதுரை said...

taitil pinnitteenga.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா. இத்தனை டவுன்லோட் செய்ய முடியவில்லை.நேற்று சட்டென்று இறங்கி விட்டது}

வல்லிசிம்ஹன் said...

நன்றி துரை. இது போன வருஷத்து உற்சாகம்}