Blog Archive

Friday, November 27, 2020

அன்பு கோமதிக்காக.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

என்ன சொல்லி ஆறுதல் சொன்னாலும் மாறாத
துன்பம். 
இறைவன் தன் அருமைத் தொண்டரை அழைத்துக் கொண்டார்.
அதுவும் இவர்களைப் போல நன்மை
சொல்லும் தம்பதியர் கிடையாது என்று சொல்லும்படிக் 
கணவரைப் பார்த்துக் கொண்டு நேசித்த,
நேசித்துக் கொண்டிருக்கும் அன்பு
மனைவி.

எனக்கு இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை.
அன்பு கோமதிக்கு ஆறுதல் கொடுப்பதும் அந்த இறைவனின் 
கடமை.
குழந்தைகளும் குடும்பமும் அவரைப் 
பொன் போலப் பார்த்துக் கொள்ளட்டும்.

ஈசன் அடி போற்றி.
வாழ்க வளமுடன்.

https://youtu.be/CdOdYrmPWaQ




Thursday, November 26, 2020

அஞ்சலி. திரு. திரு நாவுக்கரசு அருணாச்சலம்.

வல்லிசிம்ஹன்


மஞ்சள், குங்குமம், கற்பூரம், திரிகள்
நிறைய வெற்றிலை, பாக்கு, மஞ்சள் பழங்கள் என்று
முதல் நாள் தான் வாங்கி வைத்திருக்கிறார் சார்.
திருக்கார்த்திகைக்காக.

அன்பின் கோமதி சொல்லி அழும்போது மனம் விண்டு போனது.
அதெல்லாம் அவருக்கே உபயோகப்
படப் போகிறது என்று தெரியாமல் 
போய் விட்டதே. என்று மனமுருகி கலங்கினார்.

வாய் நிறைய அனைவரையும் வாழ்க வளமுடன் என்று
வாழ்த்தியபடி இருக்கும் அன்பு கோமதி அரசுக்கு
 இறைவன் நல்ல வழி காட்டுவார்,.
இந்த அதிர்ச்சி கொஞ்ச நாட்களில் தீராது.

கண்முன்னே ஒரு உயிர் பிரிவது காண்பது கொடுமை.
தன்னால் முடிந்த முதல் உதவிகளைச் செய்திருக்கிறார்.
மூன்று டாக்டர்கள் வந்து உதவி செய்திருக்கிறார்கள்.

சட்டென்று தான் வணங்கும் கைலாயப் பெருமானிடம் 
கலந்துவிட்டார் திரு. திருநாவுக்கரசு சார்.

அவர் வரைந்த பொக்கிஷங்களைக் காத்து
வைப்பார்கள் அவரது செல்வங்கள். 
அனைவருக்கும் என் அன்பு.

Tuesday, November 24, 2020

மீனாட்சி அம்மாள் சமைத்துப் பார் புத்தகம்



வல்லிசிம்ஹன்

குமுட்டி அடுப்பு



50 வருடங்களுக்கு அப்புறம் இந்தப் புத்தகம் கிடைத்தது.
கோவையில் வாங்கின புத்தகங்கள் இன்னும் பெரிதாக இருக்கும்.
அச்சும் தெளிவாக இருக்கும்.
மகள் வைத்திருக்கும் இந்தப்
புத்தகம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

அதில் தான் கரி அடுப்பு ஏற்றும் முறையும் , விறகடுப்பு பற்ற வைக்கும் முறையையும் 
படித்தேன்.
அம்மாவிடம் ஏற்கனவே கற்ற முறைதான்.
ஆனால் இவர் ,அந்தக் காட்சிகளைக் கண்முன் 
கொண்டு வந்துவிட்டார்.
நான் இன்னும் அப்பொழுது படித்த முறையில் தான் சமைக்கிறேன்.

புது விதமாக  தளிகை என்று சொல்லி வழக்கத்திலிருந்து மாற
இன்னும் தயக்கம்.
கும்ட்டி அடுப்பு ஏற்ற, முதலில் பொடிக்கரியை அடுப்பின் மேல் பாகத்தில் தூவி
தேங்காய் நாரை வைத்து விட்டு
அடுப்பு வாயிலில் காகிதத்தைக் கிழித்துபோட்டு 
அதில் நெருப்பு காட்டி
அடுப்பு பயன்படுத்த ஆரம்பிக்கச் சொல்லும் அழகு
மனம் நிறைகிறது.
இப்போது பொடிக்கரி பற்றிக் கொள்ளும்.
அதன் மேல அன்றைக்குத் தேவையான
கரியைப் பரப்பி
லேசாக விசிற ஆரம்பித்து தண்ணீர் கொதிக்க வைத்து
காப்பி ஃபில்டரில் கொட்டி,
பிறகு பாலைக் காய்ச்சி, 
காப்பி கலக்க வேண்டியதுதான்.
அரைமணி நேர மாவது ஆகும்.

Joe Biden WINS GSA!!!!!!!!

Sunday, November 22, 2020

என்ன ஒரு ரிதம்!!!!!!

வல்லிசிம்ஹன்திண்டுக்கல்/மதுரை/  திண்டுக்கல்   1961
++++++++++++++++++++++++++++++++++++++++++++

எதோ நினைவுகள்    பாடல் பின்னணியில், எழுத  ஒரு ஊக்கம்.
 பாட்டியும் எங்களுடன் வந்து தங்க ஒரு யோசனை இருந்ததால் 
 வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது.
 பள்ளிக்கூடத்துக்கு அந்தப் பக்கம் ,அதாவது பின் வாசல்   வழியாகப் போனால்  ஒரு குறுக்கு ரோடு வரும். அது வழியாக  மெயின் ரோடு. அதைக் கடந்தால் பன்றிமலை சுவாமிகள் பங்களா  வரும்.
அதற்கு எதிராகப் பத்து வீடுகள்   வரிசையாகக் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.
5 ஆம் நம்பர் வீட்டுக்கு நாங்கள்  கிரஹப் பிரவேசம் செய்தோம் .
கார்த்திகை மாதம் என்று நினைக்கிறேன்.
 வீடுகளுக்கு சுற்றி நல்ல சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டிருந்தது. அடக்கமான வீடு. வாசலில் மூங்கில் தப்பைகளால் அழி போட்டு அடைத்த பெரிய வராந்தா.
அதற்கப்புறம் ஒரு வராந்தா, முடிவில் பெரிய கூடம். கூடத்துக்கு  இரு  வாசல் ஒன்று தனி அரைக்கும், இன்னொன்று சமையலறைக்கு. பிறகு இப்பொழுது  சொல்லப்படும்   யுடிலிட்டி வெராந்தா.  பாத்திரங்கள் தேய்க்க. 
 தண்ணீர் நிரப்ப இரண்டு பெரிய தவலை களும் அண்டாக்களும். கொண்ட நல்ல முற்றம்.
 அங்கே இருந்து இறங்கினால் குளிக்கும் அறையும் ,தோய்க்கும் கல்லும்.
 ஒரு துளி மண்ணோ ,செடியோ இல்லை. அம்மா எப்படியோ துளசி மாடம் வாங்கி துளசியும் நட்டு விட்டார்.
பத்துவீடுகள் முடிவில் ஒரு பெரிய  கிணறு. அப்பாடி  நல்ல தண்ணீர்க்  கிணறு. அதற்குப் பின்னால் வயல் வெளி. அதற்குப் 
பிறகு ரயில் பாதை. தூரத்தில்  சவுந்திரராஜா மில்ஸ் வீடு. தனி விமானம் வைத்திருந்தவர்கள்.

பத்து வீடுகளுக்கு வெளியே அழகான பிள்ளையார் கோவில். அரச மரத்தடிப் பிள்ளையார்.
தினம் காலையில் நானும் பக்கத்து வீட்டு  ஜில்லுவும்,
தம்பி ரங்கனும்   8 .15ற்கு கிளம்பிவிடுவோம்.
மாதா மாதம் அப்பா மதுரை சென்று பாட்டியைப் பார்த்துவிட்டு, இரண்டு நாள் காரியங்களை முடித்து வருவார்.
சித்தப்பா நல்லபடியாக வீடு ஒன்று கட்டி முடித்தார். தாத்தா வருஷாப்திகம்  முடிந்ததும்  கிரஹப் பிரவேசம் நடத்த தீர்மானம்.
எங்கள்  நாட்கள்  ஆனந்தமாக விளையாட்டும் தோழர்கள் தோழிகளோடு ஆட்ட ஓட்டத்தோடு 
ஓடியது.    நானும் ஒன்பதாம் வகுப்பு போயாச்சு. முரளி எட்டாம் வகுப்பு, ரங்கன் ஆறாம் வகுப்பு செயின்ட் மேரி பள்ளியில் சேர்ந்தாச்சு.
அடுத்த புரட்டாசியில்  மதுரைக்கு நாங்கள் சென்று திரும்பும் போது பாட்டி எங்களோடு வந்துவிட்டார்.
பிறகென்ன ஒரே சந்தோஷம் தான்.

Saturday, November 21, 2020

The defense is wrong Movie My cousin Winny



காணாமல் போனவர்கள் | மாலன் | பாரதி பாஸ்கர் | Bharathy Baskar | Trilogy

மிக மிக உண்மை. நட்புகள் அதுவும் இளமைக்கால
நட்புகள் மறைவதும் உண்மை,. உயிர் பெறுவதும் உண்மை.

Thursday, November 19, 2020

வீடு நோக்கி ஓடிச் செல்லும் நெஞ்சம்....


Side view of the house.



வல்லிசிம்ஹன்
எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும்.வீட்டுக்கு வெளியே வைக்கப் பட்டிருக்கும்
காமிராப் 
படங்களைக் காண்பதே என் மகிழ்ச்சி.

இன்னும் அரைமணி நேரத்தில் பால் வண்டிகள்,
வேக நடை பழகுபவர்கள் , செல்லங்களை
நடைக்கு அழைத்துச் செல்பவர்கள்
என்று காலை வேளை ஆரம்பிக்கும்.. இன்று மழை இல்லை.
நல்லதுதான்.

40 ஆண்டுகளுக்கு முன் ஒரு  இஞ்சினீயரிங்க் (Popular Mechanics)
சம்பந்தமான புத்தகத்தை  சிங்கம் தருவித்துக் கொண்டிருந்தார்.

அதில்பிற்காலத்தில்  தொலைபேசியில் பேசுபவர்களை
நேரில் பார்த்துப் பேசலாம். என்று வந்தது,.
இப்போது நாம் வீடியோ அரட்டையில் பார்த்துத்தான்
பேசுகிறோம்.

அதே போல், மானசீகமாக நாம் நினைக்கும் இடத்துக்குப் 
போகும் வழியும் கிடைக்கலாம்.
நான் நம்புகிறேன்.




Monday, November 16, 2020

Padithal Mattum Podhuma Full Movie Part 5

வல்லிசிம்ஹன்.
எனக்கு மிகவும் பிடித்த கட்சி.

Saturday, November 14, 2020

Friday, November 13, 2020

பூனை கண்ணை மூடிக் கொண்டால்.......

Vallisimhan
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இந்தத் தொற்று சீக்கிரமே விலக  இறைவன் 
அருள் செய்ய வேண்டும்.
கேள்விப்படும் செய்திகளால் மன நிலையே 
பிறழ்ன்று போய் விடுகிறது.

இயற்கை ஒருவிதமாக நம்மைப் பாதித்தால் மனிதர்கள்
ஒருவிதமாகத் தறி கெட்ட நிலையில் 
சிந்திக்கிறார்கள்.

எல்லாம் மாறும். நம்புவோம் நம்பிக்கைதானே வாழ்க்கை!!!!

நட்புகள் நம்மைக் காக்கின்றன.
அந்தத் தொடர்பை விடாமல் பிடித்துக் கொள்வோம்.

ஏகப்பட்ட பொறுமை வேண்டும் எல்லா நிலைபாடுகளையும் 
தாண்டி வர.
நம் விருப்பப் பிரகாரம் ஏதோ நடக்கவில்லை...
பிரதியாக வேறேதோ நடக்கிறது என்றால் 
அதற்கும் ஒரு பொருள் இருக்கிறது 
என்பதை எங்களுக்கெல்லாம் குருவாக இருப்பவர் அடிக்கடி
சொல்வது காதில் ஒலிக்கிறது.
அந்த ஞானக் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்.
எல்லோருக்கும் நன்மைகள் செழிக்க வாழ்த்துகள்.




நன்மைகள் தொடரட்டும்.

  அனைவருக்கும் இனிய தீபாவளித் திரு நாள்  வாழ்த்துகள்.
என்றும் ஒளி நிறைந்த நாட்கள் தொடரட்டும்.
 வல்லிசிம்ஹன்

Wednesday, November 11, 2020

வெற்றியும் தோல்வியும்

வல்லிசிம்ஹன்

நம் ஊரை நினைத்து நினைத்து மகிழ்கி'றேன்.

வாழ்வில் அரசியலில் எத்தனை போட்டி இருந்தாலும்
தேர்தல் என்று வந்த பின்னே
மக்கள் தீர்ப்பு தெய்வத் தீர்ப்பு என்று வணங்கி விடை
பெறும் 
நல்லவர்களையே பார்த்து உரம் பெற்றிருக்கிறேன்.
தேர்வுக்கு முன்னும் பின்னும் 
முட்டி மோதி அரசியல் செய்வார்கள்.ஆனால் 

தேர்தலையே அசிங்கப் படுத்த மாட்டார்கள்.

இங்கே ஒரு வயதானவருக்கு உடல் நலமே பாதிக்கப் பட்டு விட்டது.
அவர் எதிர்பார்த்த தலைவருக்கு இன்னும் அங்கீகாரம்
கிடைக்கவில்லை என்று வருத்தப் பட்டு 
பேசிக்கொண்டிருந்தவருக்கு 
ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டதாம்.

நல்ல வேலை உடனே கவனித்ததில் நலமடைந்து 
வருகிறார்.
ஒரே ஒரு  மனிதனின் அக்கிரம செயல்
எத்தனை நபர்களைப் 
பாதிக்கிறது. இது அராஜகம் இல்லையா.
காலம் மாறும்.
என்னை முதலில் நான் கவனிக்கிறேன்.
கொஞ்ச நாட்கள் செய்தி படிக்காமல் 
இருக்கவேண்டும்.அவ்வளவுதான்.
இறை அருள் நிறையட்டும்.

சிரிப்பு சில சமயம் உதவும்:)

Seven-Year-Old Mykal-Michelle Harris on Mixed-ish, Mariah Carey & the 80's

Monday, November 09, 2020

நலம். நலமே அறிய ஆவல்.

வல்லிசிம்ஹன்

அனைவரும் நலமாக வாழ இறைவனிடம் பிரார்த்தனைகள்.

இங்கு அதிகரித்து வரும் தொற்றிலிருந்து
விடுபட பெரும் முயற்சிகள் நடந்து வரும்போது,
எங்கள் சப்டிவிஷன் ஹாஸ்பிடலில் இனி

இடம் இல்லை என்ற செய்தி படிக்கும் போது இன்னும் திகைப்பாக
இருக்கிறது.

வெகு நாட்களுக்குப் பிறகு ஒன்று சேர்ந்து உணவுண்ட
செவிலியர் குழு பாதிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நிலைமையில் வைத்தியரை அணுகி
சந்திக்கவே பயம் வருகிறது.

இப்போது இன்னாட்டு அதிபர் தேர்தலில்
வெற்றி பெற்றவர்கள் விதிமுறைகளை அனுசரிக்கிறார்கள்.

அவர்கள் வெற்றியைக் கொண்டாடிய மக்களைக்
காணும்போதும் நம் மனம் கலவரப்படுகிறது.
ஆனால் அவர்கள் இத்தனை நாள் அனுபவித்த 
வேதனைகள் தீர்ந்தன என்ற நம்பிக்கையோடு தெருவில்
கூடிய விதம் ஆச்சரியப்பட வைத்தது.

இங்கே ஒரு எலியின் கதை நினைவுக்கு வந்தது.
விவசாயிகளுக்கு மிகவும் எதிரியாகச் செயல்படும் என்று தாத்தா
 சொல்வார்.
தன்வளையில் கொண்டு போய்த் தானியக் கதிர்களை வைத்து
விடுமாம். தானும் உண்ணாதாம்.
அதை அதன் வளையிலிருந்து 
வெளியேற்றுவது மிக மிக சிரமம்.
ஒரு இடத்தில் அடைத்தால் இன்னோரு இடத்தில்
வெளிவரும் என்பார்,
இந்த ஊரிலும் ஒரு பெரிய பெருச்சாளி அது போல இருக்கிறது.

அதை அதனுடைய வீட்டிலிருந்து அகற்ற
அனைவரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன்னால் முடிந்த அளவு
சேதம் ஏற்படுத்திவிட்டே அது போகும் என்று
நிபுணர்கள் சொல்கிறார்கள்.

நேர்மை உடன்பாடு,ஒற்றுமை
எல்லாம் அதனிடம் செல்லாது.
வெளியே வந்தால் தூக்கிச் செல்ல 
அதைவிடப் பெரிய கழுகுகள் காத்திருக்கின்றன.

அவைகளிடமும் இதற்கு நேர்த்திக்கடன் இருக்கிறதாம்.
பார்க்கலாம். என்ன நடக்கின்றது என்று,.
நலமே நடக்கவேண்டும்.



14 ஆண்டுகளுக்குப் பின் நிஜமாகும் பைடனின் கனவு! இந்தியாவுக்கு உச்சபட்ச மு...

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் 
திரு ஜோ பைடன், திருமதி கமலா ஹாரிஸ்
இருவருக்கும்  நல்ல் ஆட்சி செய்ய இறைவன்
உதவ வேண்டும்.

நம் நாட்டிலிருந்து 19 வயதில் அமெரிக்கா வந்த திருமதி ஷ்யாமளா
கோபாலனின் மகள் திருமதி கமலா.

இங்கு சந்தித்த  
 ஜமைக்கா நாட்டை சேர்ந்த திரு ஹாரிஸ் அவர்களைக்
காதலித்து மணமுடித்தார்.

ஒரு விஞ்ஞானியான அம்மாவும், பொருளாதார நிபுணரான
அப்பாவுக்கும் மணமுறிவு ஏற்பட்ட போது 
கமலாவும் தங்கை மாயாவும் குழந்தைகள்.

தன் குழந்தைகளை தன்னம்பிக்கை மிக்கவர்களாக
வளர்த்த திருமதி ஸ்யாமளா,
புற்றுக்கு நோயில் மறைந்தார்.
கறுப்பினத்தவர் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து முடித்து
வெற்றியுடன்   கலிஃபோர்னியா மாகாணம்
வந்தவர் பலவித போராட்டங்களுக்கு
இடையில் பப்ளிக் ப்ராசிக்யுட்டராக தேர்ந்தெடுக்கப்
பட்டு, 
அட்டர்னி ஜெனரலாகவும் ஆனார்.
இதோ தன் 57 ஆம் வயதில் கறுப்பினத்தவர் அடைய முடியாத
உயரத்துக்கு சிகரம் தொட்டு விட்டார்.

நம் ஊர் அடையாளம் இருந்தாலும் 
பொதுவாகக் கறுப்பினத்தவரே இவரைத் தங்கள் ஆதரிசத் தலைவியாகத்
தாங்கள் இதுவரை சந்தித்த இனவெறுப்பிலிருந்து
மீண்டவராக,
பெண் இனத்தின் பிரதி நிதியாகப் பார்க்கின்றனர்.
நேற்று நடந்த மாபெரும் கூட்டத்தில் 
அனைவரின் தோழமையையும் சந்தித்த நல்ல மங்கையாகவே
பார்க்கிறேன்.
எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற 
வேண்டிய பெரிய பொறுப்பு 
அவர் தோளில் ஏற்றப் பட்டிருக்கிறது.
ஒரு இந்தியப் பிரஜையாக 
திருமதி கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.
வெகு முன்னெச்சரிக்கையுடன் தன கடமைகளை 
நிறைவேற்ற இறைவன் துணை நிற்க வேண்டும்.
அவரது கணவருக்கும் நம் வாழ்த்துகள்.
கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.





Wednesday, November 04, 2020

வெற்றி மீது வெற்றி

வல்லிசிம்ஹன்
 ராமன் அரசாண்டால் பெண்கள் நிம்மதி.
ராவணன் ஆண்டால் சொல்லமலேயே புரியும். 

நம்மூர் ராவணனாவது வீணை வாசித்து 
சிவனை வணங்கி , ஒரு நிமிடம் மயங்கித் தவறு இழைத்தான்.
சில இடங்களில் சில மனைவிகள் என்று
ஆடியவர்களையும் நமக்குத் தெரியும்.

பேச்சு மொழிகளால் வசியம் செய்தவர்கள் சிலர்.
உண்மை வார்த்தைகளால் கவர்ந்த காமராஜ் ,கக்கன் சிலர்.

ஆனால் நேர்மைக்கும் ஒரு பத்தினி,ஒரு சொல் என்ற 
வார்த்தைக்கும்  ஆளைத் தேடினால் இப்போது
கிடைப்பது சிரமம்.

தோற்றத்தையும் ஆளுமையையும் கொண்டு
மக்களை வென்றவரையும் தெரியும்.
நல்ல மனம் கொண்டிருந்தாலும் தோற்றவரையும் தெரியும்.

தீமை இழைத்தவரை விதி எப்படித் தோற்கடித்தது என்றும்
பார்த்திருக்கிறோம்.
வினாச காலம் வந்தால் மக்களுக்கும் விபரீத புத்தி
வரும் என்றும் பார்த்திருக்கிறோம்.
வலது கையை உயர்த்திப் பிரமாணம் செய்து
இடது கையால் கையெழுத்துப் போட்டு
தன் வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டவர்களும் உண்டு.
உலகம் முழுவதும் பொய்மை 
பெருகினாலும் மனம் பிறழாமல் நம் கடமையைச் செய்வோம்.


Monday, November 02, 2020

மஹாலயத்தில் தாத்தாவும் பாட்டியும் 2004

Vallisimhan

 சேஷிப் பாட்டியும், பத்து தாத்தாவும்  காய்கறி,சேப்பக் கிழங்கு 
வகைகளை பிரித்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

மஹா பரணிக்கு பக்ஷ சிராத்தம் செய்வது அவர்களுக்கு வழக்கமாகி இருந்தது.
தாத்தாவுக்கு 80 வயதாகிறது. 40 வருடங்களாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தார்.

பாட்டிக்கும் அலுப்பு என்பதே கிடையாது.
காலையில் எழுந்திருக்கும் போதே 
பெரியவர்களெல்லாம் வீட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே எழுந்திருப்பார்.
கணகளைக் கசக்கைக்
 கைகளைவிரித்துக் கராக்ரதே வசதே லக்ஷ்மி என்று மற்ற ஸ்லோகங்களையும்
சொல்லியே எழுந்திருந்து, கைகால்களைச் சுத்தம் செய்து குளித்து விட்டு அகண்ட விளைக்கை ஏற்றிவிடுவார்.

கணவருக்குக் காலையில் கஞ்சி குடிக்கும் வழக்கம் என்பதால்
அவரும் முறைப்படி சந்தியா வந்தனம் செய்தபிறகு 
கஞ்சி கொடுப்பார்.

கிராமத்து வாழ்க்கை மெதுவே ஆரம்பிக்கும். 
அன்றைக்கு வேண்டிய பண்டங்கள் தயார்.
திதிக்கு ஏற்பாடு செய்த வைதிகர்கள் வந்து குளித்து
புது வேட்டிகள் உடுத்தி தயார் ஆவதற்குள்
பாட்டி க்ளிப்தமாக சிராத்த சமையலை முடித்து விடுவார்.

பரிமாறுவதற்கு மட்டும் பக்கத்து வீட்டு
சாலாட்சியை அழைத்துக் கொள்வாள்.
மஹாலய தர்ப்பணம் முடிந்து வந்தவர்கள் கிளம்பிய பிறகே
தன் உணவை எடுத்துக் கொள்வாள்.
தங்களுக்கு வேண்டும் பட்சண பலகாரம் போக மீதியை
 சாலாட்சியின் கையில் கொடுத்துவிடுவாள்.

இருவருக்கும் இரவு பட்சணமே பலகாரம் என்பதால், நிம்மதியாகக்
காலை நீட்டி உட்கார்ந்து மாமியார் குண நலன் களையும், மாமனார்
கோபத்தையும்  அலசிக் கொண்டிருந்தார்கள்.

என்னவோ அண்ணா, அவர்கள் கொடுத்த புண்ணியம் நம் குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள்.
நமக்குப் பிறகு அவர்கள் விடாமல் இந்தப் புண்ணிய காரியத்தை தொடர வேண்டும்.

ஆமாம்மா. செய்வார்கள். அவர்கள் ஸந்ததியின் நன்மைக்காக மட்டுமில்லாமல்
பொது நலனாக தான தர்மங்களையும்  செய்ய வேண்டும் என்பதையும்
நாம் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
இன்று பூர்த்தியான  மஹாபரணி ஸ்ராத்தம் நல்ல விதமாக நடந்ததும் அவர்கள் கருணை.

இதே போல அம்மாவின் நினைவு நாள் அடுத்த மாதம் வருகிறது.
சுமங்கலிப் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். 
உன் நாத்தனார்க்கு அழகாப் புடவை வாங்கிடலாம். ஜாம் ஜாம்னு நடக்கும் பாரு என்று
ஆனந்தமாக ஊஞ்சலில் படுத்துக்கொண்டார் பத்து தாத்தா.
தரையிலியே  படுத்துப் பாட்டியும் உறங்க ஆரம்பித்தார்.

++++++++++++++++
P.S.மீள் பதிவு. மீட்கும் பதிவு. பின்னூட்டங்கள்
காணாமல், இமெயில் முகவரியும் தொலைந்த காலத்தில்
பதிவு மட்டும் பிழைத்த வருடம்:)
தாத்தா பாட்டி வாழ்க. படம் இணையம்.

| Aloo Matar Sabzi |

நெய்யில் குளித்திருக்கிறது:)  இந்தியில் தான் சொல்கிறார்.  சமையல்  செய்யும் விதம் அழகு.
புரிகிறது.  இதயம்  என்ன சொல்லுமோ!!!!

தமிழர்களின் பண்பாடும் அதன் பலன்களும்! | Actor Rajesh reveals the lifest...

.நல்ல. சுவாரஸ் யமாகச் சொல்கிறார்.

Sunday, November 01, 2020

பத்து வருடங்களுக்கு முன்:)

வல்லிசிம்ஹன்   Halloween 2010




மீண்டும் அக்டோபர் மாசம். சிகாகோ  திமிலோகப்படுகிறது.
பெண்வீட்டில் சின்னவன் பல பல காஸ்டியூம்களைப் பார்த்துவிட்டு. ஸ்பைடர் மேன்
வாங்கி வந்திருக்கிறான்.
அண்ணாவின் பழைய உடைகள் அவனுக்குப் பொருந்தவில்லை. உடலமைப்பில்
அண்ணா பெரிய அளவு. இவன் இன்னும் சதை போட்டால் நன்றாகப்  பொருந்தும்.
எங்க !!சாப்பிடற சாப்பாடெல்லாம் ஓட்டம் விளையாட்டுல  கரைந்துவிடுகிறது:)

கடைக்கு அழைத்து போய் ,அவனை  தேர்ந்தெடுக்கச் சொன்னதும் ,பலவற்றையும் அணிந்து பார்த்து விட்டு,
ஒ ஐ கிவ் அப் மா. நத்திங் பிட்ஸ் மி''  ன்னு    கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)
கடைசியாக ஸ்பைடர் மேன் கிடைத்திருக்கிறார்.
இப்ப எல்லாம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது. தானே எல்லாம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை.
வாங்கின  உடையை  அதற்கான அறையில் உள்ளே போய்க் சார்த்திக் கொண்டுவிட்டானாம் . எப்படியோ வளைந்து நெளிந்து  போட்டுக் கொண்டு விட்டான். ஜிப்  மட்டும் எட்டவில்லை. அம்மாவை அழைத்து அதையும் சரி
செய்துகொண்டுவிட்டான். இப்போது ஸ்பைடர் மேன் மாஸ்க் போடணுமே.

அதைப் பிரித்தபோது  தான்  ஒரு பிரச்சினை .அதில் கண்களாக  இரு நீளக் கோடுகளே இருந்தன.
சின்னவனுக்கு மூக்கை மூடினாலே பிடிக்காது. என்னதான் வலைமாதிரி  போட்டு இருந்தாலும் ,இந்த உடுப்பையும் வேண்டாம் என்று சொல்லப் போகிறான் என்று பெண் நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.
''அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய  ஹெட்லஸ்   ஸ்பைடர்மேன் '' என்று வருத்தப் பட்டு இருக்க்கிறான்.:(
பெரியவன் அந்த மாஸ்கைப் பார்த்துவிட்டு, இவ்வளவு தானா.நான் சரிசெய்து விடுகிறேன் என்று  அந்த  முகமூடியின் முன் பாகத்தை வட்டமாகக் கிழித்து எடுத்துவிட்டான்.
ஒரு புது விதமான,   ஸ்பைடர் மாஸ்க் போடாத ஸ்பைடர் குட்டியை  சின்னவன் பள்ளியில் நாளைக்குப் பார்க்கப் போகிறார்கள்.:)