Blog Archive

Friday, November 20, 2020

simple and easy break fast UTTAPAM by grandma || Myna Street Food

6 comments:

ஸ்ரீராம். said...

அழகான தோசைக்கல்.  வசதியான அடுப்பு.   எதை வைத்து எரிய விடுகிறார்களோ...  அவ்வளவு நேரம் வைத்திருந்தும் கருகாத அடுப்பு!  வெங்காயம் சொருகிய கம்பியும் வசதி!

பாட்டி கடைசியில் என்ன பொடி தூவுகிறார்?  பச்சையாகப் போடுவது பச்சை மிளகாயா?  அவ்வளவு போடுகிறார்கள்?  

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நேர்த்தியாக உள்ளது.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

பாட்டி,
கடைசியில் போடுவது இஞ்சி.
முதலில் போட்டது வெங்காயம், பச்சை மிளகாய்,காரட்
மா.
வெங்காயம் கொஞ்சம் கறுப்பாகீ விட்டதே.

ஆமாம். நல்ல பெரிய தோசைக்கல்.
எனக்கென்னவோ காரட் எல்லாம் போட்டால்
பிடிக்காது:)
தோசை தோசையா இருக்கணும்.
மிளகாய்ப் பொடி எண்ணெய் போதும்:)

கோமதி அரசு said...

அப்போதே அரைத்து அப்போதே செய்கிறார் போலும் . அதுதான் தோசை கனமாக வெள்ளையாக இருக்கிறது.
உழைத்து ஓடாய் போனவர்கள் இந்த வயதிலும் வேலைப்பார்ப்பது மனபலம் தான்.

பல் இல்லாமல் எப்படி சாப்பிடுகிறார்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

ஹை அம்மா இனிய காலை வணக்கம்!!

பாட்டி சுட்ட தோசை!! சூப்பர். அழகான தோசைக்கல். நல்ல கனமானது. இப்படி இருந்தால் தோசை நன்றாக வரும். என்னிடமும் வாரிப்பிரும்பு கனமான தோசைக்கல்.

நானும் இப்படித்தான் ஒரு கத்தியில் வெங்காயத்தின் கொண்டையை கட் செய்து அதை செருகி வைத்துக் கொள்வேன். கல் தேய்க்க வசதியாக இருக்கும். தோசை சட்டுவம் தான் சின்னதாக இருக்கு திருப்பிப் போடும் பகுதி. எனக்கு அது அகலமாக இருந்தால்தான் எளிதாக இருக்கும் என்று தோன்றும். பாட்டிக்கு நல்ல லாகவம் அனுபவம் இல்லையா!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மாவு புளிக்க வைக்காமல் செய்வதால் அது கொஞ்சம் ஹார்டாக இருப்பது போல இருக்குத் திருப்பிப் போடும் போது தெரிகிறது. ஊத்தப்பம் புளித்தால்தானே நன்றாக இருக்கும் இல்லையோ? அம்மா

கீதா