Blog Archive

Friday, November 27, 2020

அன்பு கோமதிக்காக.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.

என்ன சொல்லி ஆறுதல் சொன்னாலும் மாறாத
துன்பம். 
இறைவன் தன் அருமைத் தொண்டரை அழைத்துக் கொண்டார்.
அதுவும் இவர்களைப் போல நன்மை
சொல்லும் தம்பதியர் கிடையாது என்று சொல்லும்படிக் 
கணவரைப் பார்த்துக் கொண்டு நேசித்த,
நேசித்துக் கொண்டிருக்கும் அன்பு
மனைவி.

எனக்கு இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை.
அன்பு கோமதிக்கு ஆறுதல் கொடுப்பதும் அந்த இறைவனின் 
கடமை.
குழந்தைகளும் குடும்பமும் அவரைப் 
பொன் போலப் பார்த்துக் கொள்ளட்டும்.

ஈசன் அடி போற்றி.
வாழ்க வளமுடன்.

https://youtu.be/CdOdYrmPWaQ




7 comments:

வல்லிசிம்ஹன் said...

யூ டியூப் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால்
இணையத்தில் கேட்கவும்.

வெங்கட் நாகராஜ் said...

தொண்டரை இறைவன் அழைத்துக் கொண்டார் - அது தான் அம்மா.

கோமதி அம்மாவிற்கும் அவரது மகன் மற்றும் மகளுக்கும் ஆறுதல்கள். இன்னமும் அவர் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நல்ல மனிதர். ஒன்றிரண்டு முறை சந்தித்திருக்கும் எனக்கே இப்படி என்றால்....

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நலமாப்பா.
இறைவன் தன் தொண்டரை அழைத்துக் கொண்டார்.
அவர் விட்டுச் சென்றவர்களுக்குத் தான்
இன்னும் சோகம். நாம் பிரார்த்திப்போம் மா.

மனோ சாமிநாதன் said...

இந்த செய்தியை அறிந்ததிலிருந்து மனம் மிகவும் வேதனையை அடைந்திருக்கிறது. துணையை இழந்து தவிக்கும் அவர்களுக்கு எந்த ஆறுதல் வார்த்தைகளும் பலன் தருமா? அவர்களின் மகனும் மகளும் அவர்களை நன்கு பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். குழந்தைகளின் அன்பில் தான் திருமதி கோமதியின் மனது கொஞ்சமாவது சாந்தம் அடைய முடியும்.
திருமதி கோமதிக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மனோ,
முதல் நாள் வரை கோமதி பதிவிட்டிருந்தார். நானும் பேசும்போது
நாங்கள் இருவரும் சுகம் என்றார்.
இப்படி ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

கோமதியை நினைத்தால் என்ன சொல்வது என்றே
தெரியவில்லை.
இறைவனும் நல்ல குழந்தைகளும் தான் துணை.

Geetha Sambasivam said...

இன்னமும் எனக்குள் சகஜமான மனோநிலை தோன்றவில்லை. என்ன சொல்லுவது? காலம் தான் அனைவரின் மனதையும் தேற்ற வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
உண்மைதான். பிரமிப்பாக இருக்கிறது அன்பு கோமதியை நினைத்தால்.