பாத காணிக்கை படத்தில் சாவித்திரியும் விஜயகுமாரியும் .
எங்க வீட்டுப் பிள்ளையில் சரோஜாதேவி மற்றும் ரத்னா.
இரண்டு பாடல்களுக்கும் உயிர் கொடுத்தவர்கள் சுசீலாம்மாவும், எல்.ஆர். ஈஸ்வரி அம்மாவும்.
படித்தால் மட்டும் போதுமா
படத்தில் சிவாஜியும் பாலாஜியும்.
வெகு நாட்களாக மக்கள் மனதில் உலவி வரும் பாடல்.
பந்தபாசம் படத்தில் சிவாஜியும் ஜெமினியும்.
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
நாவுக்கு மனதுக்கும் உள்ளவழி
நான்கு விரல் கடை தூரவழி
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி
சுற்றமும் சுகமும் வேறு வழி.
வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு
நீதியின் கண்களில் உண்டு .
13 comments:
வணக்கம் சகோதரி
தேர்ந்தெடுத்த இருகுரலிசை அருமையான பாடல்கள். அந்த காலத்தில் வெற்றிபெற்ற பாடல்கள். பாடல்கள் அனைத்தும் முன்பே பல முறை கேட்டு ரசித்திருக்கிறேன் இப்போதும் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பாடல்கள் அனைத்தும் இனிமை ஒருபுறம்... பாடல் வரிகளோ அற்புதம்...
நீங்கள் குறிப்பிட்டிருக்கிற பாடல்கள் எல்லாமே மிக அருமையான பாடல்கள். ' பொன் ஒன்று கண்டேன்' காலத்தை வென்ற பாடல். ஆனால் எனக்கு கடைசி பாடல் மிகவும் பிடிக்கும்.
//நாவுக்கு மனதுக்கும் உள்ளவழி
நான்கு கடை தூரவழி
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி
சுற்றமும் சுகமும் வேறு வழி.//
எத்தனை ஆழமான வரிகள்!!
எல்லாமே அடிக்கடி கேட்டு ரசித்த அருமையான பாடல்கள். நன்றி பகிர்வுக்கு. இப்போதும் கேட்டேன்.
வானொலியில், தொலைக்காட்சியில் இரு குரலிசை பாடல் என்று வைப்பார்கள்.
கேட்பேன்.
நீங்கள் பகிர்ந்த பாடல்கள் எல்லாம் மிக அருமையான பாடல்கள் கேட்டேன்.
பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
அன்பு சகோதரி கமலாமா,
பதின்ம வயது காலத்தில் பார்த்து கேட்ட பாடல்கள் .
எல்லாமே நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முறை
உணர்வோம்.
கண்ணதாசன் எழுத்துக்கு நிகர் வேறு யார்.?
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு நிகழ்வைக் குறித்து
பின்னப்பட்ட சித்திரம்.
நம் எல்லோருக்கும் பழக்கப் பட்ட வாழ்க்கை முறை. ஆறுதல் அளிக்கும் பாடல்கள்.
அன்பு மனோ,
ஆமாம் இவை எல்லாமே கேட்டுக் கேட்டு
உணர்ந்த பாடல்கள்.
அம்மா எல்லாம் சொல்லுவார்கள் இல்லையா
நாக்கும் மனசும் ஒண்ணாப்
பேச வேண்டும் என்று.
கவிஞர் எழுதி நம் மனதில் பதிய வைத்து விட்டார்.
மிக நன்றி மா.
இந்தியாவில் இல்லாததால், எனக்கு இந்தப்
பாடல்கள் காதில் விழ சந்தர்ப்பம் இல்லை.
நானே விரும்பி கேட்கிறேன்.
அலுக்கவில்லை. மிக நன்றி மா.
மிக மிக அருமையான பாடல்களைப் பதிவு செய்திருக்கின்றீர்கள்...
காலத்தை வென்றவை...
அன்பு கீதாமா,
படிப்பும் பாட்டு கேட்பதுமே
எனக்கு மன நிம்மதி கொடுக்கிறது.
மனம் பிரார்த்தனை செய்தாலும்,
கவலை அது பாட்டுக்கு ஒரு பக்கம் தொல்லை தருகிறது.
ஒவ்வொரு நாளும் குழந்தைகள்
பேசிய பிறகு மனம் சமாதானமாகிறது.
இந்தப் பாடல்கள் ஒருவிதத்தில்
அமைதி கொடுக்கின்றன. நன்றி மா.
அன்பு தனபாலன், நீங்கள் சொல்வதே உண்மை.
என்றுமே பாடமாக அமையும் கடைசிப் பாடல்.
மற்றவைகளின் இசையும், கவிதை வரிகளும்
அற்புதமாக மனதை தொடுகின்றன.
உங்கள் ரசனை மிக உயர்ந்ததுமா.
நன்றி.
அன்பு கோமதி மா,
சட்டென நினைவுக்கு வந்தது இந்தச் சொல் தொடர்.
சிலோன் வானொலியில் கேட்டதுதான்.
இன்னும் எத்தனையோ சேர்ந்திசை இருந்தாலும்
சிலவற்றை மறக்க முடியாது.
அவற்றையிங்கே பதிந்தேன் மா.
அன்பு ரமணி சார்,
வந்து ரசித்து கருத்திட்டதற்கு
மிக நன்றி மா.
Post a Comment