யார் பையனை யார் மறக்க முடியும்:)
கைதி கண்ணாயிரம் படப் பாடல்கள் அனைத்தும் இனிமை.
இந்தப் பாடல் அப்போது பட்டி தொட்டியில்
,
பள்ளிக்கூடங்களில் பிரபலம்.
இந்த பேபி ஷகீலாவை நான் தேடாத இடமே இல்லை.
கற்பகம் படத்துல அது செய்த லூட்டி
இன்னும் மனதில். இந்தப் பாடல் இரு வல்லவர்கள்
படத்தில்.
ஆர். எஸ்,.மனோஹரின் மென்மையான நடிப்பு பிரமாதம்
இந்த நடிப்புக்கு விளக்கமே வேண்டாம்.
10 comments:
நல்ல குழந்தை மனம் உங்களுக்கு. அனைத்தையும் ரசித்தேன். இந்தப் படங்களைப் பார்த்ததே இல்லை என்றாலும் பாடல்கள், பேபி ஷகீலா பற்றி எல்லாம் நிறையக் கேள்விப் பட்டிருக்கேன்.
நல்ல காணொளிகள் அன்றைய படங்களில் குழந்தைகளைக்கூட சரியாக வாயசைக்க வைக்கிறார்கள்.
இன்று பெரியவர்கள்கூட சரியாக வாயசைப்பதில்லை.
முதல் பாட்டு கேட்டு இருக்கிறேன், யார் பையன் படம் என்பது நினைவில் இல்லை.
பழைய படம் என்று வைத்த படத்தையே வைக்கிறார்கள் இந்த படங்களை வைக்கலாம்.
நீங்கள் பகிர்ந்த குழந்தை பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல பாடல்கள்.
டெய்சி ராணி, பேபி ஷகீலா எல்லாம் நன்றாக நடிப்பார்கள்.
பேபி ஷகீலா காணொளிகள் நன்றாக இருக்கிறது.
கற்பகம் படம் பார்த்து இருக்கிறேன்.
அருமையான காணொளிகள்..
மனதை மகிழ்ச்சியின் பக்கம் திருப்புகின்றன...
அனைத்து பாடல்களும் இனிமை.
அன்பு கீதாமா,
நன்றி மா. அந்த உலகம் நல்ல உலகம்.
வயதாகிவிட்டால் குழந்தைப் பருவம் மீண்டு விடுமோ தெரியவில்லை.
பெரியவர்களாக நாம் ஏதாவது சொன்னால் தப்பாகி விடுகிறது.
அன்பு தேவ கோட்டைஜி,
அந்தக் காலத்தில் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து,திறமையை வெளிக்கொணர்ந்தார்கள்.
இப்போது வெறும் உடல் அழகு போதும் என்றாகிவிட்டது.
தமிழும் வேண்டாம் என்று தள்ளி விடுகிறார்கள்.
நானும் புதிதாகப் பார்ப்பதில்லை.
அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம்.
யார் பையன், முதலான படங்கள்
குழந்தைகளை மையமாக வைத்தே
எடுக்கப் பட்டன.
ரம்மியமாக இருந்தது.
அது போலக் குடும்பப் படங்கள் ,கதைகள் இப்போது யாரும் எழுதுவதில்லையோ
என்று தெரியவில்லை.
அபூர்வமாக நல்ல படங்கள் வருகின்றன.
நானும் அங்கு வந்தபோது கவனித்தேன்.
ஏழு வருடங்கள் முன் நான் பார்த்த படங்களை
மீண்டும் பார்த்தேன்!!!
அன்பு துரை ,
இனிய காலை வணக்கம் மா.
இப்படித்தான் மகிழ்ச்சிகளைத் திருட வேண்டி இருக்கிறது.
உலகம் நிறை சந்தோஷத்தை
அனுபவிக்கட்டும்.
இனிய காலை வணக்கம்
அன்பு வெங்கட்.
பாடல்களை ரசித்ததற்கு மிக நன்றி மா.
Post a Comment