Blog Archive

Saturday, June 20, 2020

இசையும் என் பதிவுகளும்

வல்லிசிம்ஹன்
எனக்கு  மிகவும் பிடித்த  திரைப் பாடல்களை இங்கே 
கொஞ்ச காலம்  இங்கே பதிகிறேன்.
இசையும் பழைய நினைவுகளும்  என்னை 
ஈர்ப்பதை  மட்டுமே  இவைகளுக்கு காரணம்.

கருப்பு வெள்ளையாக இருப்பதாலும் இவை என்னைக் கவர்கின்றன.


11 comments:

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல்கள் மா.... தொடர்ந்து வெளியிடுங்கள். ரசிக்க நாங்களும் காத்திருக்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், இனிய ஞாயிறு காலை வணக்கம்.
நன்றி மா. மன அழுத்தத்திற்கு ஒரு
வடிகாலாக இசையைப் பயன் படுத்துகிறேன்.
உங்களுக்கும் பிடித்ததே மகிழ்ச்சி.

ஸ்ரீராம். said...

வேதாவின் இசையில் ஒரு முத்து. மிக இனிமையான பாடல். விந்தன் எழுதிய பாடல் இல்லை? நானும் பகிர்ந்திருந்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல் - காட்சிகளும்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். நேரம் கழித்துப் பதில் எழுதுகிறேன்மா.
ஆமாம் விந்தன் சார் எழுதிய பாடல்கள் தனித்துவம் பெற்றவை.

மனதில் பதிந்த இது போன்ற பாடல்களைச் சேமிக்கிறேன்.
நீங்களும் ரசித்ததில் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், இந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நம் ரங்கராவ் நரசிம்ம பல்லவனாகவே மாறி
இருப்பார்.
வைஜயந்தியின் அழகுக்கும் நடிப்புக்கும் கேட்கவே வேண்டாம்.
ரசனைக்கு நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா இனிமையான பாட்டு!! மிகவும் பிடித்த பாடல்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எபியிலும் ஸ்ரீராம் பகிர்ந்திருந்த நினைவு...

கீதா

Geetha Sambasivam said...

மனதை அமைதிப்படுத்துவது நல்ல இசையும், குழந்தையின் சிரிப்பும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன்,
ஸ்ரீராம் பகிர்ந்திருந்தாரா. எனக்கு நினைவில்லை.
நமக்கெல்லாம் ஒரே டேஸ்ட்:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கீதாமா.
மன ஆறுதல் இப்பொழுது மிகத் தேவை.
நன்றி மா.