Vallisimhan
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
திருமணம் முடிந்ததும் புகுந்த வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு
ஆறுதலாக இருப்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். அதில் சிறந்தவர்கள் என் புகுந்த வீட்டுக்காரர்கள். எல்லோரும் என்னைவிட அதிகம் கற்றவர்கள். வயதிலும் பெரியவர்கள்.
அவர்கள் தன் சகோதரரின் மனைவியைப் புரிந்து கொள்ள
அதிக நேரம் செலவழிக்கவில்லை.
தங்கள் அன்பு வளையத்துக்குள் சேர்த்துக் கொண்டார்கள்.
அதில் மிக முக்கியம் என் இரண்டாவது நாத்தனார் பத்மா.
பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டதில் மிகவும்
பாக்குவப்பட்டவர்.
புகுந்த வீட்டுப் பாட்டியின் செல்லம்.
ஒரு நாள் வரவில்லை என்றால் கூட ஆள் அனுப்பி விடுவார்.
நாத்தனாரும் பொறுமையாகப் பாட்டியிடம் சொல்லித் தன் வேலைகள் பொறுப்புகள்
எல்லாவற்றையும் விளக்கி இரண்டு நாட்கள் கழித்து வருவதாகச் சொல்லுவார்.
அவர்கள் வீட்டில் எப்பொழு தும் விருந்தாளிகள் வந்து கொண்டே இருப்பார்கள் .
அவர்கள் வீடிருக்கும் தெரு முனையில் ஒரு மகப்பேறு மருத்துவமனை.
உறவுகள் பிள்ளை பெறவும், பெற்ற பிறகு இவர்கள் வீட்டில் ஓய்வெடுக்கவும் இருந்துவிட்டுப் போவார்கள்.
மாமியார் வழி உறவுகள் அனைத்தும்
வருடம் முழுவதும் வந்து கொண்டிருப்பார்கள்.
என் நாத்தனார் சமையலறையை விட்டு வெளியே வருவது என்பதே அதிசயம் தான்.
பாட்டி வண்டி அனுப்பித்தால் மட்டும் மாமியார் அனுமதி கொடுப்பார்.
தன அம்மாவிடம் கூட உரையாட நேரம் இல்லாமல், வாரம் முழுவத்துக்குமான
நிகழ்ச்சிகளை சொல்லிச் செல்வார்.
அவர் அலுத்துக் கொண்டு பார்த்ததே இல்லை.
அவருடன் கூட மற்ற சகோதரிகளும் சேர்ந்தால் நம் வீடு முழுவதும் குதூகலம் தான்.
அந்தப் பழைய பெரிய வீடு நிறைய குழந்தைகளும், பட்சணம் பலகாரம் செய்யும் வாசனையும்,
என்னை மகிழ்வித்தன.
வருடா வருடம் வருவோம். பத்து வருடங்களில் நிரந்தரமாக வந்துவிட்டோம்.
எனக்கு நல்லதொரு முன் மாதிரி அவர்.
அவர் பென்னுக்குத் திருமணத்துக்காக, ஜோதிடர்களை அணுகும் போது நான் தான் துணை.
பிற்காலத்தில எனக்கு உதவியாக இருந்த்தது.
அவர்கள் மரங்களில் காய்க்கும் மாங்காய், புளிச்சகாய் எல்லாம் ஊறுகாய் போடுவது நான் தான்.
அழகான அபூர்வமான சமையல் முறைகளை சொல்லிக் கொடுப்பார்.
இவர் எங்களை பிரிந்து நான் வெளியூ ர் வந்துவிட்டாலும் ,மாதம் ஒரு தடவையாவது பேசுவேன்.
எங்க என் பெஸ்ட் ஃ ப்ரண்ட் போன் பேசலியேன்னு நினைத்தேன். நீ செய்துட்டே என்று மகிழ்வார்,.
என் அன்புத் தோழி பிரிந்தது வருத்தமே.
ஆனால் சிரமப் படாமல் இறைவனடி அடைந்தார்.
பத்தா ❤🙌 ....... என்றும் மறக்க மாட்டேன் உங்களை.
உங்கள் குடும்பம் சிறப்புடன் வாழ வேண்டும்.
உங்கள் அன்பு ரேவதி.