Blog Archive

Friday, November 02, 2018

புதுப் பயணம்..3

Vallisimhan 
    நாட்கள் சென்றன. பெரிய குடும்பத்தில் எப்பொழுதும்  உறவுகாரர்களின் போக்குவரத்தும், சமையல் ,உணவு  எல்லாமே அதிகம்.
வனிதா வந்ததும் அவளுக்காகவே காத்திருந்தது போல, அந்தப் பெரிய வீட்டு வெளி வேலைகள் அவளுக்கு வந்தன.

வங்கி வேலை, மின்சாரக் கட்டணம் கட்டுவது,தொலைபேசி கவனிப்பது
தோட்டக்காரர்  வேலையை மேற்பார்வையிடல்
என்ற சின்னச் சின்ன ,ஆனால் ஓயாத  வேலைகள் வந்து சேர்ந்தன.

வீட்டில் மாடுகள் வேறு இருந்ததால்  அவைகளைக் கவனிக்கும் 
பால்காரரையும்  ,தீவனம் சரியாகப் போடுகிறாரா, கால்னடை மருத்துவரைப் 
பார்க்க வேண்டிய நேரம் என்று மேலாண்மைப் பொறுப்பு  எல்லாம்
அவள் கையில்.

எந்தப் பிரச்சினையானாலும் பெரியவர்கள் அவளை அழைப்பது
வழக்கமானது.

அலுவலகம் போகாமலேயே அவளுக்கு வீட்டுக் கவனிப்பே
நிறைய இருந்தது. 

பலன்....சந்த்ரு வரும் நேரம் அவளுடைய  ஓய்வு நேரமாக மாற,
அவன் விருப்பப்படும் நேரம் வெளியே போக முடிய வில்லை.

முதலில் அவனுக்கு இது வேடிக்கையாக இருந்தாலும், 
மாதங்கள் சென்றதும்  ஒரு பெரிய தொந்தரவாகத் 
தோன்றியது.

வனிதாவுக்கு அவனிடம் எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை.
சில வேலைகள்  அலுப்பாயிருந்தாலும்,
பெரியவர்களின் அன்பும் நல்வார்த்தைகளும் மிகப் பிடித்தன.
சந்துருவுடன் கூட எல்லோரையுமே பந்ததில் சேர்ந்ததாகக் கருதினாள்.

மெல்ல விளக்கவும் செய்தாள்.
 ஒரு அசிஸ்டெண்ட் போட்டுக்கோ.
ஒரு மேஜை சேர்,ஃபைல்ஸ்  எல்லாம் செய்து கொடுக்கிறேன்.
அலக்னந்தா அலுவலகம்னு போர்ட் போட்டுக்கோ.
என்றான் சந்துரு.
நல்ல ஐடியா. அப்பா, அறையில் நானும் அலமாரி வைத்திருக்கிறேன்.
எல்லாவற்றையும் பார்க்க சௌகரியமாக இருக்கும்.
அடக்கடவுளே, இவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறது என்று திகைத்தான்.

அடுத்த நாள் தன் பெற்றோருடன் பேச நேரம் குறித்துக் கொண்டான்
சந்துரு.

No comments: