Blog Archive

Monday, November 05, 2018

புதுப்பயணம் 5

Vallisimhan
  ஞாயிறு, காலை விடியும் போதே இன்னும் இரண்டு நாட்களில்
வரப் போகும் தீபாவளிக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன.

வாசலில் டாக்சி வந்து நின்றது. இறங்கியது ,வனிதாவின்
பெற்றோர்களும் ,தம்பிகளும்.

ஆச்சர்யத்தோடு வாசலுக்கு ஓடிய வனிதாவை அவள் பெற்றோர் அணைத்துக் கொண்டனர்.
என்னம்மா இது திடீர்னு.

தலை தீபாவளிக்கு நீங்க எல்லோரும் அங்கே வரவேண்டாமா. கையோடு அழைத்துப் போகத்தான் வந்தோம். என்று சிரித்தார்கள் இருவரும்.

முதலில் உள்ளே வாருங்கள் என்று பெரியப்பா அழைக்க
அனைவரும் ஹாலில் கூடினார்கள்.
வனிதாம்மா, எல்லோருக்கும் காப்பி என்று மாமியார் சொல்ல,ராதா மாமியிடம் சொல்ல
விரைந்தாள்.
சம்பந்தி ,இந்தத் தடவை நாம் இந்த வழக்கத்தை மாற்றலாம்.
நீங்கள் இங்கே தீபாவளி கொண்டாடுகிறோம்..
என்றார் பெரியப்பா. வனிதாவின் அப்பா கணேசன்
அங்கே எல்லாம் ரெடி செய்து வைத்திருக்கிறோமே
என்று தயங்க,
சந்துருவின் அப்பா, திருமணம் ஆன பிறகு முதலில் 
வந்திருக்கிறீர்கள். முதலில் வண்டியை அனுப்புங்கள்.
மாடியில் உங்க பெண் அறைக்குப் பக்கத்தில் விருந்தினர்
அறை இருக்கிறது. குளித்துவாருங்கள் என்று சொன்னார்.

வாங்கப்பா என்று அழைத்துச் சென்றாள் வனிதா.
ஊர்க்கதைகளை அலசியவாறு அவர்களின் பெரிய அறையைத் திறந்துவிட்டு
எல்லாம் வசதியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு,
அப்பா சொல்வதைக் கேளுங்கள் அப்பா. மிகுந்த பாசமான மனிதர்கள்.
சீக்கிரம் வாருங்கள்.இன்னும் பட்டாசு எல்லாம் வாங்க வேண்டும்.

பக்ஷணம் செய்ய வேண்டும் என்று அடுக்கும்
 பெண்ணைப் பெருமையோடு பார்த்தாள்
அம்மா. அங்கே வந்த ஏகாம்பரத்திடம். படுக்கையை எல்லாம் தட்டிப் போட்டுச் சுத்தம் செய்ய சொல்லிவிட்டு, அம்மா கீழே பேசலாம் சுருக்க வாருங்கள் என்று
பறந்துவிட்டாள்.

இரண்டு மணி நேரத்தில் வீடு கொண்டாட்ட வேகம் பிடித்தது.
சம்பந்திகளுக்கு வனிதாவின் பெற்றோர் கொண்டுவந்திருந்த
பட்சண வகைகள் அமோகமாக இருந்தன. அதே போல அவர்களுக்கான புடவைகளும்
வேட்டிகளும், சந்துருவின் தங்கைகளுக்கான பட்டுப் பாவாடைகளும், தாவணிகளும் கண்ணைப் 
பறித்தன.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வாங்கியது அங்கே இருக்கிறது என்றார்
கணேசன்.
அப்போ இன்னிக்கு இன்னோரு ஷாப்பிங்க் இருக்கு என்றவாறே, சந்துரு அம்மா வந்தார்.
சம்பந்தி உங்க நிறத்துக்கு ஏற்ற மாதிரி  இங்கே வாங்கியாச்சு. பசங்க அளவு தெரிந்து அவர்களை அழைத்துப் போய் வாங்கிவிடலாம். என்னடா பசங்களா என்றதும் வனிதாவின் தம்பிகள்
கூச்சத்துடன் சிரித்தனர்.
அப்படியே நடந்தது.
கணேசன் மாப்பிள்ளைக்கு அழகான மோதிரம் வைரக்கல் பதித்து
வாங்கி வந்திருந்தார்.
தீபாவளி குதுகலமாக ஆரம்பித்தது.
காலைப் பலகாரம் முடிந்ததும் வருடந்தோறும்  செல்லும், முதியோர் இல்லத்திற்குச் சென்று அன்று முழுப் பொழுதும் அவர்களுடன் செலவிட்டார்கள்.
அத்தனை தாத்தா பாட்டிகளுக்கும் இந்தக் குடும்பத்தைத் தெரிந்திருந்தது.

மன நிறைவொடு வீடு திரும்பியவர்கள் தங்கள் வீட்டிலும் மத்தாப்பு, புஸ்வாணம் என்று அமைதியான முறையில் கொண்டாடினார்கள்.
சந்துரு மனம் அமைதியாக இருந்தது. வனிதாவுக்கு இந்தக் குடும்பமும் அதன் 
வழிமுறைகளும் பிடித்திருந்ததால் தானே அவள் தன்னிடம் ஒன்றும் குறை சொல்லவில்லை.

நம் வாழ்க்கை நம் கையில் என்று நம்பிக்கை கொண்டான்.
அனைவரும் வாழ்க வளமுடன்.
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

No comments: