எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
சென்னைக்கு மழை வருகிறது. நல்ல செய்தி. நம் வீட்டுக்குத் தண்ணீர் விடுவார்களா என்று தெரியவில்லை.
வழக்கமாக இந்த நாட்கள் சென்னையில்
இருப்பேன். வருடா வருடம் நிறைவேற்ற வேண்டிய
பித்ருக் கடமைகளைப் பிள்ளைகள்
அருமையாக நிறைவேற்றுகிற்றுவார்கள்.
உறவுகளை அழைத்து ஒன்று கூடி
சிங்கத்தை நினைவு கூறுவோம்.
அவரது அத்தை மகன், பெரியப்பா மகன் ,
சித்தப்பா மகன் என்று அனைவரும் வந்துவிடுவார்கள்.
இந்தக் குடும்பத்தின் அருமையை எனக்குக் காட்டிக் கொடுத்த சிங்கத்தை
எண்ணி எண்ணிப் பெருமைப் படுவேன்.
அருமை,அன்பு மட்டுமே சூழ்ந்த உறவுகள்.
இந்த முறை அங்கு போக முடியவில்லை
என்பது மனம் தாளாத வருத்தம்.
மனம் செல்லும் வேகம் உடல் செல்லவில்லை.
என் அன்பு ஓர்ப்படி ராதா மாதவன் இறுதியாகச் சிங்கம் கிளம்பும்போது என்னை இறுக்கி அணைத்து ஆதரவு காட்டியது மனதில் நிற்கிறது.
அனைவருக்கும் என் உள்ளம் கடன் பட்டிருக்கிறது.
இன்னோரு உள்ளம் என் தம்பி. அவன் இப்போது இல்லை
அவனுக்கும் என் நன்றி.
19 comments:
"மனம் செல்லும் வேகம் உடல் செல்லவில்லை" - அதனாலென்ன.. மனம் முழுவதும் நிறைந்திருக்கும்போது... நாலு வருடங்கள் சென்ற வேகம் தெரியவில்லை. உங்கள் நினைவுகளுடன் எங்கள் ஆதரவும் உண்டு.
நாங்கு ஆண்டுகள் நிறைவு!
நம்ப முடியவில்லை.
வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்ற நினைவு தான் இருக்கிறது.
உங்கள் பதிவுகளை படிக்கும் போதும் அவர் மலர்ந்த முகத்தின் படங்களை பார்க்கும் போது சார் இல்லை என்றே நினைக்க முடியவில்லை.
வல்லிமா.சார் உங்கள் எங்கள் அனைவரின் நினைவிலும் எப்பவும் இருப்பார் .உடம்பை கவனிச்சுக்கோங்க டேக் கேர்
உண்மைதான் அன்பு நெல்லைத்தமிழன்.
மனம் ஓய மறுக்கிறது . உடல் உட்கார்ந்தே இருக்க விரும்புகிறது.
grand irony. மிக நன்றி மா. இத்தனை ஆதரவு இருப்பதால் தான்
இயங்கிக் கொண்டிருக்கிறேன்.வாழ்க வளமுடன் மா.
நானும் அவ்வாறு நினைப்பதில்லை. அன்பு கோமதி.
சென்னை வராமல் இருப்பதால் என் கடமைகளில் தவறுவது போல்
ஒரு குற்ற உணர்வு சூழ்கிறது. காலத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கிறேன். மா.
நன்றி வாழ்க வளமுடன்.
மனதின் சுமையை உணரமுடிகிறது. காலம் மனச்சுமையை குறைக்கட்டும்.
உங்களுடனேயே அவர் இருக்கையில் நீங்கள் எந்தவிதமான வருத்தமும் அடைய வேண்டாம்! உங்களுள் அவர் நிறைந்திருக்கிறார். நான் நேற்றுத் தான் நினைத்தேன், இம்முறை நீங்கள் வர முடியுமா என!
அன்பு உள்ளங்கள் உங்களை சுற்றி இருக்க உங்கள் அன்பு உங்கள் இதயத்திற்கு அருகில் காத்து நிற்கும்... உங்கள் ஆசியை பங்கு கேட்க நானும் வந்துளேன்
அன்பு பூவிழி,
அன்புக்குப் பஞ்சமே இல்லை.
ஆசிகளும் அரவணைப்பும் எப்பவும் உண்டுமா.
நீங்கள் எல்லோரும் என்னிடம் காட்டும் அருமை என் நிலையைக் கொஞ்சம் சமனப்படுத்துகிறது.
திரு. ஜம்புலிங்கம் ஐயா. மிக மிக நன்றி.
ஜூன் மாதம் நிறைய நாட்கள் இருந்து விட்டேன்.
பெரியவனுடன் இருந்தால் கட்டாயம் வந்திருப்பேன்.
இந்தத் தடவை ஸ்கைப் வழியாப் பங்கெடுக்கணுமோ என்னவோ.
அங்கே இணைப்பு எல்லாம் சரியாக இருக்கணும்.
சிரமம் இல்லாமல் இந்தப் பசங்க நல்லபடி நிறைவேத்தணும்.
பகவான் பார்த்துப்பார். நன்றி மா.கீதா.
அன்பு ஏஞ்சலின், அந்த நாள் நீங்கள் அனைவரும் என்னிடம் காட்டிய ஆதரவுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். எத்தனை மெயில்கள், எண்ணப் பரி மாற்றங்கள்.
எங்கேயோ நான் இருக்கிறேன் உனக்கு என்று ஆதரவு காட்டியவர் கடவுளும்
நீங்கள் எல்லோரும் தான்.
இந்தப் பாசத்தை நான் மறக்க மாட்டேன்.
நன்றி ராஜா.
உங்கள் சோகத்தையும் மனக்கவலையையும் ஓரளவு புரிந்துகொள்கிறேன். Time heals everything. இருந்தாலும் மனம் பின்னோக்கி இழுத்துச்செல்வதைத் தவிர்க்கமுடியாது. அது தன் இயல்புக்கேற்றபடித்தான் நடந்துகொள்ளும்.
நீங்கள் வரமுடியவில்லையெனினும் நடக்கவேண்டிய காரியங்கள் சரியாக நடந்தேறும். உங்கள் மனமும் அமைதிபெறும் அவனருளால்.
அன்பு ஏகாந்தன், அருமையான வார்த்தைகள் மனதுக்கு இதம்.
இதெல்லாம் எழுத ஒரு இடம் ஏற்படுத்திக் கொண்ட நேரத்தை
நினைக்கிறேன். அம்மா இறைவனடி சேர்ந்ததும் துடித்த மனதுக்கு
பக்கம் பக்கமாக எழுத நினைத்தது மனம்.
திரு சுஜாதா தேசிகன் வழிகாட்டினார். பின்னே எல்லாம் சேர்ந்தன.
இப்போது என் மக்களைப் போல நீங்கள் அனைவரும்
அருமையாக இருக்கிறீர்கள். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.
நன்றி ராஜா.
நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. நம்பத்தான் முடியவில்லை. உங்கள் நினைவில் அவர் என்றென்றும் இருப்பார். உங்கள் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுங்கள் அம்மா.
இந்தப் பதிவு சற்றுப் பெரிய எழுத்துகளில் நன்றாக இருக்கிறது. இனி இப்படியே வெளியிடுங்கள்.
அம்மா ...
அஞ்சு சொன்ன மாதரி சார் என்றும் அனைவரின் நினைவிலும் இருக்கிறார்...
எனக்கு இன்று தான் தெரியும்...
உங்கள் பதிவில் சார் பற்றி வரும் போது இருவரும் சேர்ந்தே இதெயெல்லாம் எழுதுகிறீர்கள் என்றே நினைப்பேன்...
உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்...
அன்பு ஸ்ரீராம். அது எப்படி பெரிசாகிறது சின்னதாகிறதுன்னு தெரிய வில்லை.
முயற்சிக்கிறேன்.Thanks Raja.
அன்பு அனு ,
வருடா வருடம் சென்னையில் இருப்பேன். இந்தத் தடவை முடியவில்லை.
உண்ணாமல் இல்லை, உறங்காமல் இல்லை, எல்லா வேலைகளும் நடக்கின்றன.
இருந்தும் இந்தக் காலியிடத்தை நிரப்ப முடியாமல் மனம் தவிக்கிறது. நன்றி ராஜா.
Post a Comment