Blog Archive

Sunday, October 23, 2011

அமீரக வலைப்பதிவர்களைப் பார்த்தேன்..மீள் பதிவு


அவர்கள் வலையில் இவர்கள் விழுந்தார்கள்.
வலைபோட்டுத் தேடினேன்.
இதெல்லாம் நாம் சகஜமாக உபயோகிக்கும் வார்த்தைகள்
இல்லையா.
உண்மையாகவே பாசவலையில் விழுவது ,
அன்பு வலையால் சூழப்படுவது எப்படி இருக்கும்
என்பது நேற்று, துபாய் அமீரகத் தமிழ்ப் பதிவு நண்பர்களைச் சந்தித்ததும்
தான் தெரிந்தது.
எல்லோரும் என்னை விட வயதில் மிகச் சிறியவர்கள்.
அவர்களுடைய அலைவரிசையில் என்னால் பேச முடியுமா
என்று மிகவும் சந்தேகம்.
புகுந்த வீடு போகும்போது எவ்வளவு பயம் இருந்ததோ அத்தனை
nervous ஆக இருந்தது.
இவர்கள் அனைவரும் வலை உலகில் தனித் தனி இடம் பிடித்தவர்கள்.
கணினி தொழில் நுட்ப அறிவு உடையவர்கள்.
நாமோ பகிர்தல் என்ற ஒரே ஒருநோக்கத்துக்காக
தமிழ்மணத்தில் எழுதும் நபர்.
இத்தனை சந்தேகம் மனதில் இருந்தாலும், நண்பர்களைப் பார்க்கப் போகும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.
அபி அப்பா வியாழக் கிழமை போன் செய்து,''அம்மா
எல்லோருக்கும் சொல்லிவிட்டேன்.
அனைவரையும் கராமா கிடெசன் பார்க்கில் சந்திக்கலாம்''
மாலை ஐந்து மணிக்கு என்றதும் எங்க சிங்கத்திடம் சொல்லி
என்னை அழைத்துப் போகும்படி கேட்டுக் கொண்டேன்.
மகனும் அலுவலக விஷயமாக தெற்குக் கொரியா போவதால்
இரண்டு மணி நேரமாவது சந்திக்கலாம் என்ற முடிவுடன்
4.30 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினோம்.
சரியாகப் பத்து நிமிடத்தில் கராமா கிடேசன் பார்க் வந்துவிட்டது.
எலோருக்கும் முன்னாலேயெ வந்துவிட்டொமே, என்று அபி அப்பாவுக்குப் போன் செய்ததும், அவர் ஆபத்பாந்தவராக்த் தம்பி இருப்பார் மா, இதோ நான் வந்து கொண்டே இருக்கிறேன் என்றார்.
சிங்கத்துக்கு மகனோடு போகும் வேலை இருந்தாலும், என்னோடு பார்க்கை வலம் வர ஒத்துக் கொண்டார்.
தெமேனு போய்க் கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி நீங்களா தம்பி என்று விசாரிக்கவும்.
நை நை என்று அவர் போய்விட்டார்.
இந்தத் தம்பி உசரமா இருப்பார்னு தெரியும். முகம் சரியா நினைவுக்கு வரவில்லை.
இது என்னடா வம்புனு இன்னும் ஓர்ரிரு குடும்பங்கள் பக்கம் போயி 'are you Thambi''?
என்று கேட்டு விட்டு, நாங்க தம்பிதான் , ஆனால் நீங்க தேடறவர் இல்லைனு
சொன்னதையும் கேட்டுக் கொண்டு திரும்பும்போது
வந்துவிட்டார்கள் அபி அப்பாவும் லியோ சுரேஷும்.
அப்ப ஆரம்பிச்சது கலகலப்பு.
பிறந்த வீட்டுக்குப் போனாலே வாயிலில் இறக்கி விட்டுக் கையசைத்துப் போகும் மனுஷர்(சிங்கம்தான்) கொஞ்ச நேரம் இருந்துவிட்டுக் கிளம்பினார்.
அடுததடுத்து,
குசும்பன்,
தம்பி,
ஜெசீலா,கணவர்,குழந்தை,
மின்னுது மின்னல்,
அய்யனார்,
ஆசீஃப் மீரான்(அண்ணாச்சி)
புதுசா வரும் வலைப்பதிவர்,
அனானி,(பெயர் போடலாமானு தெரிய வில்லை)
அன்வர்

,
திரு.சுல்தான்,
முத்துக்குமரன்,
சென்ஷி,
கோபி.
இவ்வளவு நண்பர்களையும் பார்த்தாச்சு.
ஜெசீலா தன் வண்டியில் என்னையும், லியோ சுரேஷையும்
பக்கத்திலிருக்கும் ஒரு உணவு விடுத்க்கு அழைத்து வரவும் மற்றவர்களும் அங்கு வந்து
சேரவும் சரியாக இருந்தது.
அப்புறம் என்ன ஒருத்தரை ஒருத்தர் கலாய்ப்பதற்கே இவர்கள் வேலையாக இருந்தது.
ஆசீஃப் எல்லொருக்கும் ஜிலேபியும் டீயும் சொனனார்.
ரசித்து ருசித்து இவர்கள் கலாய்ப்பதைப்[ பார்த்தேன்.
முத்துக்குமரன்,சுல்தான்,ஜெசீலா ,தம்பி இவர்கள் எல்லோரும்
பெரும்பாலும்
அமைதி காத்தார்கள்.
அய்யனார்,சென்ஷி, கோபி,அபிஅப்பா எல்லொரும் மற்றவர்களைக் கலாய்க்க
அவ்வப்பொது மற்றவர்களும் கலந்து கொண்டார்கள்.
ஆசீஃப் மீரான் சென்னையில் நடந்த பதிவுலகைபட்டறையில் கலந்து கொண்டு
தான் பெற்ற அனுபவத்தை சொல்ல ஆரம்பித்ததும் சந்திப்புக்கு ஒரு நோக்கம் கிடைத்தது.
துபாயில் பதிவர்கள் பட்டறை நடத்துவதைப் பற்றி ஆலோசித்து முதல் கட்டமாக இடம் தேர்ந்தெடுத்தலும், அதற்குண்டான இணைய வசதிகள் செய்வது பற்றியும்
அதை. அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான வழிமுறைகளும்
விவரமாக அழகாக ஆசீஃப் எடுத்துச் சொன்னார்.
லியோ சுரேஷும் அய்யனாரும் சாத்தியக் கூறுகளைப் பற்றி விவாதித்தார்கள்.
இன்னும் விவரம் தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தது. அதைப் பற்றி மீரான் அவர்களும் மற்றவர்களும் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.
ஜெசீலா 'பண்புடன்'' வலைத்தளத்திற்காக எல்லோருடைய பிறந்த நாள்
விவரம்,கூகிள் ஐடி எடுத்த போதுதான் ,சின்னப் பசங்கனு நான்
அனுமானித்தவர்கள் உண்மையிலேயே சிறிய வயசில் சாதிப்பவர்கள் என்று தெரிந்து
மிகப் பெருமையாக இருந்தது.
பெருமையாக இருக்கிறது.
வெகு நாட்கள் மௌனத்திற்குப் பிறகு , ஒரு புதிய பேசும் உலகத்துக்கு வந்தது அருமை.
அதுவும் அன்பால் என்னை உயர்த்திய இந்த அமீரக இளைஞர்களுக்கு
வெறும் நன்றி என்ற வார்த்தை போதாது.
ஆனாலும் சொல்கிறேன்...
நான் பெற்ற பிள்ளைகள் போலவே என்னை மதித்து அன்பாக
அறிமுகம் செய்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மன நிறைவோடு நன்றி சொல்கிறேன்.
உங்களோடு செலவு செய்த இரு மணித்துகள்கள் (மேலாகக் கூட இருக்கலாம்) அருமையான பொக்கிஷமாக எனக்குக் கிடைத்தது.
நன்றி.
எல்லோருடை வலை விலாசமும் கிடைத்தால் அனைவருக்கும் தனி மடல் அனுப்பலாம்.
இருந்தாலும் நீங்கள் அனைவரும் இந்தப் பதிவைப் படிப்பீர்கள் என்றே நம்புகிறேன்

எனக்கு வரவு என்ன என்று சொல்ல வேண்டாமா.
இந்தப் புது பிறந்தகத்தில் எனக்குக் கிடைத்த உறவுகளைத் தவிர,
பரிசுகளும் கைக்கு வந்தன.
இனிமையான ஜெசில்லா ஒரு அழகிய கண்ணாடிப் படிமம்(அதுதான் தமிழ்ப் பெயர் என்று நினைக்கிறேன்)....புர்ஜ் அல் அரப் என்ற கட்டிட மாடல் கொடுத்தார்.
உண்மையாக எனக்கு அது ஒரு பெரிய சந்தோஷம். ஏனெனில் இந்தக் கட்டிடத்திற்குள்
போகவே 150 திர்ஹம் கொடுக்கணுமாம்.
இத்தனை சுலபமாக அது என் கைக்கு வந்துவிட்டது.:))
நன்றி ஜெசீலா.
அடுத்தது திரு ஆசீஃப் மீரான் கொடுத்த புத்தகம.
பரமஹம்ச யோகானந்தரைப் பற்றிய சுய சரிதம்.
இன்னும் பிரித்துப் படிக்கவில்லை. இந்தப் புத்தகம் படிப்பது
பயனூள்ள பொழுதாக அமையும்.
அத்துடன் மீரானின் தந்தை திரு.அப்துல் ஜப்பாரைப் பற்றிய சிறிய புத்தகம் ஒன்றையும் கொடுத்து இருக்கிறார்.

இவ்வளவு கௌரவத்திற்கு எப்படி நான் ஆளானேன் என்று தெரியவில்லை.
இருந்தாலும் ஏற்றுக் கொள்வதில் பெருமைதான்.
நன்றி நண்பர்களே.
இந்தச் சந்திப்புக்குக் காரணமாக இருந்த அபி அப்பாவிற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.
தனியாகத் தான் இன்னோரு பதிவிடவேண்டும்.
சந்திப்பின் போதோ, இல்லை இந்தப் பதிவிலோ ஏதாவது பிழையிருப்பின் பொறுத்துக் கொள்ளவேண்டும்.
ஏற்கனவே உங்களிடம் சொன்னது போல என் தமிழ் பேசும் தமிழ்..............
உங்களிடமிருந்துதான் மீண்டும் செந்தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.
மீண்டும் பார்க்கலாம்.
பின் குறிப்ப்பு:
எல்லோருடனும் உட்கார்ந்து இன்னும் பேசி, உணவும் உட்கொள்ள ஆசை இருந்தும்,
ஏற்கனவே குடும்பத்தில் வேறு ஏற்பாடு செய்து விட்டதால் கிளம்ப வேண்டி
வந்து விட்டது:(
சந்திப்பு நடந்தது  2007   ஆம்    வருடம் .

38 comments:

வல்லிசிம்ஹன் said...

வெளிநாடு வந்தும்
தமிழ்ச் சேவையில் இத்தனை
உற்சாகத்தோடு இருக்கும் நம் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

முத்துகுமரன் said...

உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.. பாசாங்கில்லாத உண்மையான அன்பை கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்களை எங்களுக்கு தந்திருப்பது இந்த இணையம் என்பதால் அதற்கும் ஒரு நன்றி. உங்கள் எழுத்துக்களைப் போலவே பழகுவதற்கும் மிக மென்மையானவர் என்பதை நேற்று தெரிந்து கொண்டேன். எப்போது அமீரகம் வந்தாலும் உங்களைச் சந்திக்க இந்த உறவுகளுக்கு அளவில்லாத ஆனந்தமே.

கதிர் said...

உங்களை சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சிதாங்க வல்லிம்மா.

நீங்க எவ்வளோ அழகா பேசினிங்க அதுவே மிகப்பெரிய சந்தோஷம்.

மீண்டும் வருக.

ALIF AHAMED said...
This comment has been removed by a blog administrator.
ALIF AHAMED said...

தம்பி said...
உங்களை சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சிதாங்க வல்லிம்மா.

நீங்க எவ்வளோ அழகா பேசினிங்க அதுவே மிகப்பெரிய சந்தோஷம்.

மீண்டும் வருக.
//

ரீப்பீட்டேய்ய்ய் :)

அபி அப்பா said...

என்ன ஒரு அருமையான சந்திப்பு! வாவ் உங்களை பார்த்ததும் பேசியதும் பழகியதும் மறக்க முடியாத அனுபவம்!

மெளலி (மதுரையம்பதி) said...

அருமையான சந்திப்பு நடந்திருக்கிறதென்று தெரிகிறது......பதிந்தமைக்கு நன்றி வல்லியம்மா...

அபி அப்பா said...
This comment has been removed by a blog administrator.
அபி அப்பா said...

பாருங்க என்னால பின்னூட்டம் கூட முடியாத அளவு தொல்லை குடுத்த பிளாக்கர் சரி போடான்னு பர்மிஷன் குடுத்திருக்கு! அடுத்த முறையும் கண்டிப்பா வாங்க வல்லிம்மா!

Ayyanar Viswanath said...

கனிவும் நெகிழ்வுமான உங்களின் கைப்பற்றல்களை எப்போதும் மறக்கமுடியாது வல்லியம்மா உங்களை சந்தித்தது மறக்க முடியாத நிகழ்வு.

துளசி கோபால் said...

ஹைய்யா.......... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஜெஸிலா,

நானும் வந்துக்கிட்டே இருக்கேன்ப்பா:-))))

குசும்பன் said...

உங்களை சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சிதாங்க வல்லிம்மா.

கோபிநாத் said...

வல்லிம்மா எங்களுக்கும் உங்களை சந்தித்ததில் மிகிவும் மகிழ்ச்சி தான் :)


உங்களின் எளிமையான பேச்சு...அன்பையும் எப்போதும் எங்களால் மறக்கவே முடியாது.

உங்களுக்கு எங்கள் நன்றிகள் :)

Geetha Sambasivam said...

இப்போ தான் படங்கள் எல்லாம் பார்த்துவிட்டு அபி அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் வல்லி, ரொம்பவே அருமையான சந்திப்பு. உங்கள் அருமையான உணர்வுகளையும் நல்லாவே வெளிப்படுத்தி இருக்கீங்க. நல்லாவே எழுதி இருக்கீங்க, உங்க சந்திப்பைப் பற்றி. எல்லாப் படங்களுமே நல்லா இருக்கு. உங்க பேத்தியா கையில்?

Unknown said...

அன்பான தாயை சந்தித்த இனிய உணர்வுதான் எங்களுக்கும்.
உங்கள் சிங்கத்தை பார்க்க முடியாதது எனக்கு வருத்தம்தான்.

மஞ்சூர் ராசா said...

நல்லதொரு சந்திப்பு இனிதே நடந்திருக்கிறது.வாழ்த்துக்கள்

நாமும் விரைவில் சந்திப்போம்.

ramachandranusha(உஷா) said...

வல்லிம்மா, முதல் முதலில் சிங்கப்பூரில் இதே போல இணைய நட்புகள் இருந்த இடம் தேடி வந்து பேசியப் பொழுது, உங்களுக்கு ஏற்பட்ட அதே மகிழ்ச்சியும், பெருமிதமும்தான். ஹவுஸ் ஓய்ப் வாழ்க்கையில் நட்பு என்பது நமக்கு அக்கம் பக்கத்து பெண்களுடன் ரயில் சிநேகிதம் மாதிரிதான்.
ஆனால் வேறு ஊரில் நமக்கு என்று வயது வித்தியாசம் இல்லாமல் , ஆண் பெண் என்ற பேதம் பார்க்காமல் தமிழ் என்ற ஒற்றை சொல் ஏற்படுத்திய உறவு அற்புதம் இல்லையா?

ஹூம்! நாலு மாசத்துக்கு முன்னால் வந்திருக்கலாம். துளசி, அப்படியே சூரத்க்கு வாங்க :-)

Anonymous said...

உங்களைச் சந்தித்ததும் எல்லாரையும்' சொல்லுங்க் அராஜா' என்று வாஞ்சையுடன் அழைத்து அன்புடன் கரம் பற்றி அக்கறையோடும் அன்போடும் நீங்கள் பேசிய விதமும், அதிராத குரலில் நலம் விசாரித்ததையும் மறக்க முடியுமா? அமீரகப் பதிவர்களுக்கு மறக்க முடியாத தருணங்களைத் தந்ததற்காக நாங்களல்லவா நன்றி சொல்ல வேண்டும்?

துபாய் பதிவர் பட்ட்றை நடக்கும்போதும் மறக்காமல் வந்து சேருங்கள் அம்மா :-)

ஆசிப் மீரான்

வல்லிசிம்ஹன் said...

வரணும் முத்துக்குமரன்.
இந்தப் பாசாங்கு இல்லாத அன்பை என்னால் உணர முடிந்ததால்தான்
என்னால் சுதந்திரமாக இருக்க முடிந்தது.

நானும் அதிர்ஷ்டசாலிதான், ஒரெ நாளில் உங்கள் எல்லோரின் பரிவையும் அனுபவித்தேன்.
அதற்கு இணையத்துக்கும் இறைவனுக்கும் நன்றி.

மீண்டும் அடுத்துவரும்போது பார்க்கலாம் எம்.குமரன்:))

வல்லிசிம்ஹன் said...

வாங்க தம்பி,
அப்பாடி என்ன ஒரு அமைதியா நல்ல பிள்ளையா,

பார்வையாளரா உட்கார்ந்து இருந்தீங்க:))

கட்டாயம் அடுத்த தடவை பார்ப்போம். ஒரு வெயில் இல்லாத காலத்தில்.:))
நல்ல மனைவி அமைய வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மின்னலு.

போட்டோ எல்லாம் பார்த்துட்டு மடல் போட்டு இருக்காங்க.

அழகா இருக்கு. எல்லாமெ ஏதோ வீட்டுப் பண்டிகை, திரு விழாவில் எடுத்தமாதிரி ,சந்தோஷம் முகத்தில் தெரிகிறது. இவ்வளவு படம் எடுத்தீங்கன்னே தெரியாது.
இன்னுமொரு செல்வம்.
நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க அபி அப்பா. எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்து, அமைதியாகக் கலந்து கொண்டீர்கள்.

மிகுந்த பயனுள்ள நிகழ்வாகி விட்டது.
வெறும் வார்த்தைகள் போதாது என் நன்றியைச் சொல்ல.

வல்லிசிம்ஹன் said...

வாங்க அய்யனார்.

கைப்பற்றல் என் குடும்பத்தில் சந்திக்கும்போது அனிச்சை செயலாக நடை பெறும் ஒன்று.

மக்கள் கண்ட சமுத்திரம் என்று எங்க அம்மா என்னை நிதானப் படுத்துவார்.

நீங்கள் சரியாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி.
உண்மை நட்பு எப்போதும் நிம்மதியைக் கொடுக்கும். நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மௌலி.
நல்லதொரு பதிவர் சந்திப்புதான்.

முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள் இத்தனை வெளிப்படையாக மரியாதை குறையாமல் ,அவ்வளவாக
வலை விவரம் தெரியாத எனக்கும் அங்கீகாரம் அளித்தது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

வல்லிசிம்ஹன் said...

டெல்ஃபின் நன்றிம்மா.

நாம் மதிக்கப் படும்போது பெரியவர்கள் ஆகிறொம் இல்லையா.

இங்கே நான் பார்த்த வலைக்குடும்பம் நிஜமாகவே பாசக் குடும்பம்.
everybody is out to support and lend a helping hand and word.
I am really proud to have been amongst them.

நீங்களும் இவர்கள் எல்லோரையும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

துளசி எப்போ வரிங்க.

தூள் கிளப்பிடுவாங்க. கவலையே வேண்டாம்.
நீங்களும் கோபாலும் சேர்ந்தா
கலகலப்புக்குக் கேப்பானேன்.

வல்லிசிம்ஹன் said...

குசும்பன்!!!
சரியான ஆழ்கடல்.
வார்த்தைகள் இல்லாமலேயெ எல்லோரையும் பேச வைத்தீர்கள்.:)))

நன்றிப்பா. அருமையான சந்திப்பு.இன்னும் நிறைய விவரங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நேரம் இலை:(

வல்லிசிம்ஹன் said...

கோபிநாத்,
வரணும்பா.

இன்னும் கொஞ்ச நேரம் உங்கள் எல்லோருடனும் செலவழிக்க முடியாமல் போனதுதான் வருத்தம்.
பரவாயில்லை. அடுத்த பதிவர் பட்டறையில் பார்த்துக் கொள்ளலாம்.
நல்ல வார்த்தைகளுக்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
என் பேத்தி ஸ்விட்சர்லாண்டில் அல்லவா இருக்கா.
இது இந்த ஊருப் பேத்தி.

மகா சமத்து.படங்கள் எடுத்தது தெரியாமல் ரொம்ப இயற்கையாக எடுத்திருக்கிறார்., மின்னல்:))
நன்றிம்மா. இந்த வலை நண்பர்களின் உண்மை அன்பு என் வார்த்தைகளாக வந்தது அவ்வளவுதான்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சுல்தான்.
சிங்கத்துக்குத் தான் தமிழ் சரியாப் பேச மாட்டொமோனு ஒரு சந்தேகம். :)))
அவரா ஒரு முடிவுக்கு வந்து இது தமிழ்ச் சந்திப்பு.என்று பிறகு வரேன்னுட்டார்.
அவரது பழைய சினேகிதர் வந்ததும் இந்தத் தங்கமணியைக் கண்டுக்கலை.
மறுமுறை உங்களை எல்லாம் பார்க்க அழைத்து வருகிறேன்.
மிகுந்த சந்தோஷப்பட்டார் படங்களைப் பார்த்து.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் பார்க்கலாம் மஞ்சூர் ராஜா.
சந்தித்தவர்களிடம் நீங்கள் எனக்கு இமெயில் மூலம் இகலப்பை அறிமுகப் படுத்தியதையும் சொன்னேன்...

உண்மையாகவே நெகிழ்வான சந்திப்பு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் உஷா நீங்களும் இருந்திருந்தால் வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கும். எனக்கு கைனாட்டு நிலைமையிலிருந்து நிறையக் கேட்டுத் தெளிய வேண்டிய குறைகள் இருந்தன. நேரம் குறைவு. அதனால் முடிந்த அளவு உரையாடிவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
நல்லதொரு தோழமை கிடைத்திருக்கிறது.வலை உலகம் நீங்கள் சொல்வது போல் வேஎறு ஒரு கோணத்தில் ,நட்பு வடிவில் நல்லதாகவே இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆசீப்.
என்ன ஒரு அருமையான சந்திப்பு இது. நான் எதிர்பார்க்கவில்லை.

உங்கள் எல்லோரையும் பார்க்கும் போது புது மனிதர்களைப் பார்க்கும் உணர்வே இல்லை. நம் எழுத்துக்கள் நமக்கு முன்னாலேயெ எல்லோரையும் அடைந்து விட்டன,.
அதனால் பழகிய நல்ல நண்பர்களைப் பார்க்கும் நினைவு தான் வந்தது. வலைத் தமிழ் அமீரகம் இன்னும் எட்டாத சிகரங்களை அடைய வேண்டும்.
நீங்கள் அதைச் சாதிப்பீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்.
எல்லாவிதத்திலும் உங்களுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
நன்றிப்பா.

ambi said...

//புகுந்த வீடு போகும்போது எவ்வளவு பயம் இருந்ததோ அத்தனை
nervous ஆக இருந்தது//

ha haaaa :))))

ம்ம்ம், நல்ல ஒரு சந்திப்பு. மறக்காமல் எழுதியதறக்கு நன்றி. :)))

சென்ஷி said...

//ஆசிப் மீரான் said...
உங்களைச் சந்தித்ததும் எல்லாரையும்' சொல்லுங்க் அராஜா' என்று வாஞ்சையுடன் அழைத்து அன்புடன் கரம் பற்றி அக்கறையோடும் அன்போடும் நீங்கள் பேசிய விதமும், அதிராத குரலில் நலம் விசாரித்ததையும் மறக்க முடியுமா? அமீரகப் பதிவர்களுக்கு மறக்க முடியாத தருணங்களைத் தந்ததற்காக நாங்களல்லவா நன்றி சொல்ல வேண்டும்?

துபாய் பதிவர் பட்ட்றை நடக்கும்போதும் மறக்காமல் வந்து சேருங்கள் அம்மா :-)//

ரிப்பீட்டே :)

நாகை சிவா said...

ஆமாங்க.. உண்மையிலே பாசக்கார பசங்க இந்த அமீரகத்தில் இருக்கும் நம் வலை மக்கள்.

இருமுறை சந்தித்து உள்ளேன்...

இன்னும் பலமுறை சந்திப்பேன்...

Jaleela Kamal said...

வந்துட்டு எங்கள பார்க்காம போயிட்டீங்கல்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜலீலா அப்போது உங்களையெல்லாம் தெரியாதேமா. இனிமேல் இந்தத் தப்பு பண்ண மாட்டேன். மாப்பு. சரியா:)