Blog Archive

Saturday, October 28, 2017

பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்1965

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  அக்டோபர் 27  க்கான 1965 வருடக்
 குறிப்பு.  பழைய சினிமாக் காட்சிகளில்,
இல்லை கதைப் புத்தகங்களில்  அம்மா பஜ்ஜி செய்வாள். பெண்
 தங்கை தம்பி கிட்ட ஐடியா கேட்டுப்பா.
தோழி வந்து உதவி செய்வாள். நமக்கு அப்படி எல்லாம் கிடையாதே.
வெள்ளி  கிளம்புகிறோம்.
சனிக்கிழமைக்கு தாவணி பாவாடை போதும்.
ஞாயிற்றுக்கிழமைக்குப் புடவை, காசுமாலி, கைக்க ரெண்டு வளையல் சரி வெல்வெட் பெட்டியில் வைத்து உள்ள வைத்தாச்சு.
 திங்கள்  கிழமைக்கு  ஒயிட் பூ போட்ட தாவணி, பிங்க் பாவாடை, பிங்க் சட்டை.
 ஹ்ம்ம் ரெட்டைப் பின்னல் எல்லாம் மறந்துட வேண்டியதுதான்.
ரயில் அழுக்குப் படியுமோ. பரவாயில்லை. ...

அம்மா வந்தார், எந்த லோகத்தில இருக்கே. லாத்திண்டே இருந்தால் என்ன நடக்கும்..
சின்னவனுக்குக் கணக்குப் போட்டுக் கொடு என்று கலைத்துவிட்டுப் போனார்.
சிடுசிடுவென்று இருந்தவனைச் சமாதானப் படுத்தி
நாம் இன்னோரு தடவை போகலாம்டா. இந்தத் தடவை சாரிடான்னு
சரிக்கட்டினேன். என் அன்பு ரங்கனும் அப்பாவிடம் சொல்லி காரம்போர்ட்.
ஸ்ட்ரைக்கர் இரண்டு வாங்கி வரச் சொன்னான்.
 புஸ்தகமும் வாங்கிண்டு வரேண்டா என்று ப்ராமிஸ் செய்தேன்.
28...அக்டோபர்....... மீனாக்ஷி அம்மன் கோவில். புதுமண்டபத்தில் கண்ணாடி வளையல். நிறைய மல்லிப்பூ
எல்லாம் வாங்கி வந்தாச்சு. இனி சலோ மெட்ராஸ் தான்.

8 comments:

ஸ்ரீராம். said...

நல்ல இடத்தில் தொடரும் போட்டு விட்டீர்களே அம்மா...!

நெல்லைத் தமிழன் said...

ஓ.... 52 வருடங்களுக்கு முன்பு.... இதே தேதியில்......

நெல்லைத் தமிழன் said...

மேலே போட்டிருக்கும் ஓணம் சம்பந்தமான படம், கிளிகளோடு அருமையா இருக்கு.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

லாத்திண்டே இருக்கே....இந்த சொல்லை கும்பகோணத்தில் எங்கள் அண்டை வீட்டார் பயன்படுத்தக் கேட்டுள்ளேன். இதுபோன்ற சொற்கள் அப்போது குழந்தைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அவர்கள் அதற்கேற்றாற்போல மரியாதையாக நடந்துகொண்டார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் நான் எழுதி உங்களுக்கெல்லாம் கரதலைப் பாடமாகி இருக்கும் கதை.
நன்றி மா. சென்னையில் மழை பெய்ததான்னு பார்க்கணும்.

வல்லிசிம்ஹன் said...

அது ஓணப்படமா. ஆண்டாள் கிளிகளுக்கும் ஓணத்துக்கும் என்ன சம்பந்தமோ. இணையத்தில் எடுத்தது நெல்லைத்தமிழன்.
ஆமாம் 52 வருடத்துக்கு முந்தின கதை .வாழ்க்கையின் ஆரம்பம்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு வணக்கம்.
உலாத்துவது லாத்துவதாகிவிட்டதோ.
அம்மா அடிக்கடி என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேதான் இருந்தார்.
பாதுகாப்பான நாட்கள். வருகைக்கு மிக நன்றி ஐயா.

கோமதி அரசு said...

லாத்திண்டே இருக்கே ! என் அம்மாவும் இப்படி சொல்வார்.
நினைவுகள் அருமை படிக்க.