எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Blog Archive
Thursday, February 27, 2014
Tuesday, February 25, 2014
அலைகள்நடுவே அமைந்த நகரம்" இன்டர் லாகன்'
Add caption |
ஏரிக்கரையில் காற்று வாங்கும் வீடுகள். அவைகளின் அடித்தளத்தில் படகுகள். நினைத்தால் படகில் ஏறிப் பயணம் செய்யலாம். |
படகின் முன் பகுதியில் தேசிய மலர் எடேல்வைஸ் சுவிஸ் நாட்டின் செழிப்புச் சின்னம் |
ரயில் நிலையத்தின் பயணக் கழிப்பிடம். இரண்டு ரூபாய்க்கு சுத்தம் சுகாதாரம். |
Add caption |
ஏரிக்கரையோரம் மலைகள் வானை முட்டும் சிகரங்களுக்கு மேல் பஞ்சுப்பொதியாய் மேகங்கள். |
ரயிலோடு ஒட்டி வரும் ஏரிக்கரையும் சாலையும் |
படகின் அழகுச் சித்திரங்கள் |
எல்லாத் தமிழ்ப் படங்கள் இந்திப் படங்களிலும் இந்தப் பாலத்தைப் பார்த்திருக்கிறேன்/ |
வாழ்க்கையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே |
அவர்களின் தேசியத்தை எங்கும் மறப்பதில்லை இந்நாட்டு மக்கள். |
பின்தொடரும் நினைவுகள் போல அலைகள் |
அலைகள்
நடுவே அமைந்த நகரம்" இன்டர் லாகன்' சுவிட்சர்லாந்த்.
ஊரைவிட்டுக் கிளம்பும் நாட்கள் நெருங்க நெருங்க பேத்தியின் கேள்விகள் அதிகரித்தன.
''
நீ ஏன் அமேரிக்கா போனும். அவனை இங்க வரச்ச் சொல்லு. நாம எல்லாம் சேர்ந்து இருக்கலாம்.
என் ரூம் அவனுக்குக் கொடுக்கிறேன்'' என்றெல்லாம் வார்த்தைகள்
வர ஆரம்பித்தன.
ஒரு மாறுதலுக்கு வெளியே அழைத்துப் போகலாம் என்று
இண்டர்லாக்கன்
நகரத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தோம்.
இந்த ஊர் இரண்டு ஏரிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது.
துன் என்று ஒரு ஏரி
. மற்றொன்று ப்ரையன்சீ.
வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற விதத்தில்
ஏகப்பட்ட கவர்ச்சிகள் நிறைந்த இடம்.
பாரா
க்ளைடிங், பலவித மலைச்சிகரங்களுக்குப் போக கேபிள் கார் வசதிகள்.
ஏரிகளுக்கு இடையே போக்குவரத்துக்கு வசதியான படகுகள்.
நகரம் முழுவதும் கண்ட இடமெல்லாம் பாக்கேஜ் டூர் வந்திருக்கும்
இந்தியர்கள்
கண்களை நிறைக்கும் வண்ண மலர்கள்.
நீலவானம்.
பச்சை மலைகள்.
பார்த்துவிட்டு
மனம்
நிறைய
நினைவுகளை அள்ளி நிறைத்துக் கொண்டு
வீடு திரும்பினோம்
சிகாகோ கிளம்பும் நாளும் வந்தது.
மகனும் பேத்தியும் சூரிக் விமான நிலையத்தில் எங்களை வழி அனுப்ப வந்தார்கள். அழுது கண்கள் சிவந்திருந்த பேத்திக்கு சமாதானம்...இரண்டு மூன்று வாரங்களில் வந்துவிடுவோம்.
சரியென்று ஒப்புக் கொண்டது குழந்தை.
அவளுக்கு வாரங்கள், மாதங்கள் தெரியாது.
இரண்டு ஞாயிறு சென்றால் வந்துவிடு
வார்கள் என்ற நம்பிக்கை. :(
!!!!!!!!!!!!!!^^^^^^^^ ¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦¦
மாற்றம் ஒன்றே நிஜம் வாழ்வில்!!
பயணம் மீண்டும். இந்த வார்த்தைகள் எவ்வள்வு உண்மை என்பதை 2011இல் உணரவில்லை. இப்போதும் கிளம்புகிறேன். துணைக்கு மகன். மீண்டும் பயணம்.
Saturday, February 22, 2014
கன்றுக்குட்டியை மீட்ட சிங்கம் பார்ட் 3
தோட்டக் கிணறு |
Friday, February 21, 2014
குரங்குகுட்டி வந்த கதை
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Tuesday, February 18, 2014
கணவர் நான் <<<<<<<>>>>>>>> ஒரு குட்டிக்குரங்கு.
எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Saturday, February 15, 2014
Friday, February 14, 2014
அப்படியே உரிச்சு வச்சிருக்கு:)
இதெல்லாம் இப்பொதைய விளையாட்டுப் பொருட்கள் இங்க. சின்னவனுக்கு விளையாட இவைகளைவிட ரொம்பப் பிடித்தது சமையல் பாத்திரங்களும் தண்ணீரும்தான்.
அரிசி டப்ப இருக்கிற அலமாரி திறந்து வைத்தால் ஆபத்து:0
குட்டிக் கையால அஞ்சாறு கைப்பிடி இறையும் கீழ.
''அச்சச்சோ ,கீய வீனுடுத்தே'' என்று அது மேலயே நடப்பான். நடந்துவிட்டு,''கால் நாஸ்தின்னு'' வேற சொல்லுவான்.
இதெல்லாம் எனக்கு ஞாபகப் படுத்தியது எங்க குழந்தைகளின் மழலைப் பருவம்.
அத்றகு முனால் என் தம்பிகளின் சிறிய வயது மழலைகள்.
இதென்ன ஒரே மாதிரி வருதே என்று யோசிக்கும்போதுதான்.,
அப்படியே அச்சில வார்த்த மாதிரி இருக்கே என்கிற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
எங்க பெரிய பையன் பிறந்த போது, எல்லாரும் அவன் என்னை மாதிரியே இருப்பதாகவும், அப்பா வீட்டைக் கொள்ளவில்லை என்றும் சொல்லிகொண்டிருந்தார்கள்.
இப்ப ஒண்ணும் சொல்ல இல்ல. அப்பாவுக்குப் பக்கத்தில பையனும் அதே போல இன்னொரு சிங்கமாத்தான் இருக்கான்:)
இதில என்ன கவலைப் பட இருக்கு. யாரையாவது கொள்ள வேண்டியதுதானே.
அந்தந்த ஜீன்ஸுக்கு ஏத்த மாதிரி அமைப்பும், எண்ணங்களும் அமையும்.
சில நிறைகுறை இருக்கும். கோபத்துக்கு பெரிய தாத்தா, குணத்துக்கு பெரிய பாட்டி, ஓடறத்துக்கு சித்தப்பா, மொழிக்கு மாமா என்று எங்கயாவது குறித்து வைத்து இருக்கிறதா என்றும் ஆராய்ச்சி செய்யணும்:)
குழந்தை சிரிக்கும் போது எல்லோரும் மனக்கண் முன் வந்து போகிறார்கள். அது கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டால் என் தந்தை ஞாபகம் வருகிறார்.
ஸ்விஸ் பேத்தி முறைக்கும் போது என் பாட்டி நினைவு வருகிறது.
காலை வேற நீட்டி,''பாட்டி !!! காலைப் பிடிச்சு விடு'' என்றால் என் பாட்டி சொல்லுவது போலவே இருக்கிறது:)
''எனக்கு புளூ கலர்ல வாலு வச்சுக் கொடு'' என்றால் என் தம்பி நினைவு வருகிறது!!
ஆகக் கூடி , குழந்தைகள் பிறக்கும் போது அவர்களைக் கொள்ளவில்லை, இவர்கள் ஜாடை இல்லை என்று கவலையே வேண்டாம் ஏதாவது ரூபத்தில் நம் அணுக்கள் இந்தத் தளிர்களிடம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.
புது சிங்கம் |
Wednesday, February 12, 2014
மாப்பிள்ளை வந்தாரா.புக்ககம்,புதுக்கோட்டை பயணம்
இப்படியாகத்தானே ஐப்பசி மாதமும் வந்தது.தீபாவளி ஷாப்பிங் முடிக்க ஹாஜீமூசா கடை.
முதல் தடவையாகப் புடவை அதிலும் பட்டுப்புடவை போணி.
யானைக் கலர்னு அப்போது புதிதாக ஒரு ஏதோ ஒரு படத்தின் பேரோடு
வந்திருந்தது.
110ரூபாய்தான் விலை.அம்மா தீர்மானம் போட்டாச்சு.
அதுதான் பெண்பார்க்கிற அன்று உடுத்திக்கொள்ளவேண்டும்.சரி.
தீபாவளியும் வந்து போனது.
இந்தத் தடவை தம்பிகளோடு பட்டாசுக்குப் போட்டிபோடவில்லை.
சின்னவன் அடுத்த வருஷம் நீ இங்க வருவியான்னு கேட்க அப்போதுதான்
ஓஹோ இங்க இந்த இடத்தில் நம்ம நாட்கள் குறைவுதான்
என்றும் வெளிச்சமாகியது.
சென்னையில் ஒரு திருமணம் .அதில் எல்லோரும் சந்திப்பதாக ஏற்பாடு.
பலிஆடு முகம் எப்படி இருக்கும் என்று என்னைப் பார்த்தால் தெரிந்து இருக்கும்.
கூட்டத்தில் அனைவரும் என்னைப்பார்ப்பதாக உணர்வு.
ஒரு வட்டமாக நாற்காலிகளைப் போட்டு அத்தை வீட்டுக்காரர்களும்
எங்க வீட்டூக்காரர்களும் உட்கார்ந்தோம்.
பார்த்துக்கோடா அப்புறம் சரியாவே பார்க்கலைனு எல்லாம்
சொல்லக்கூடாது ,
புளித்துப்போன வசனம் தான்.அன்னிக்கு அப்படித்தான் தோணவில்லை.
அடக்கம் ஒடுக்கம் எல்லாம் முன்னாடியே மண்டையில் தைத்துத்தான் பாட்டி அனுப்பி இருந்ததால் நான் தலையை நிமிர்த்தவில்லை.
ஒரு கனமான குரல் நிமிர்ந்து உட்கார்ந்து அவனைப் பார்க்கலாம்
என்றது.
பிறகு தெரிந்ததது அது என் மாமனாரின்எகுரல் என்று.
சரி என்று நிமிர்ந்தால் நாலைந்து பேர்கள் ஒரே ஜாடையில்.
அதில் ஒருவருக்குக் காதோரம் நரைத்திருந்தது.
அட ராமா,அதுக்குள்ள நரைத்துவிட்டதா.
ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ என்று மீண்டும் குனிந்த தலை.
மாமா அப்ப்போது பார்த்து ஒரு ஸ்கைப்ளூ சட்டை பின்னால் போய் நின்று இதுதான் என்பதுபோல் சைகை காட்டினார்.
திருப்பியும் நிமிர்ந்துவிட்டு சிரித்துக்கொண்டிருந்தவரைப் பார்த்துவிட்டு
சரி ஓக்கேதான் என்று நினைத்தபடி
அம்மாவைப் பார்த்தேன்.அப்பா அம்மா இருவரும் கைகூப்பாத குறையாக நிற்பதைப் பார்த்து ஒரு கணம் நான் கலங்கியது இன்னும் நினைவு இருக்கிறது.
அவர்களோடு கிளம்பி இரண்டு வண்டிகளில் மைலாப்பூரில் இருந்த பெரிய வீட்டுக்கும் வந்து பாட்டியையும் தாத்தாவையும் வணங்கி
அம்மாவின் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டோம்
ஐந்து நிமிடங்களில் அங்கிருந்து போன் வந்துவிட்டது.
எங்களுக்கு சம்மதம்.
அப்பா வந்து என்னைக் கேட்டார்."அம்மா,உனக்குப் பிடித்திருந்தால் சரினு சொல்லு."
இல்லாட்டாப் பரவாயில்லை.
நான் நிறையப் படித்த அறிவாளி ஆச்சே.
பரவாயில்லைப்பா சரினு சொல்லிடலாம்.
அவ்வளவுதான் பலவிதமானப் பொருளாதாரத் தடைகள் வந்தபோதும்
முனைப்போடு அனைவரும் உழைத்துத் தை மாதத்தில்
எங்கள் திருமணமும் முடிந்தது.
படிக்கவில்லை.
அவரவர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள். இல்லாவிட்டால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்க வைக்கப் படுகிறார்கள்.
கதையும் முடிந்தது கத்திரிக்காயும் காய்த்தது. ####################################################### 9ஆம் தேதி ஃபெப்ரவரி... எக்மோர் ரயில் நிலையம். மாமா சீனுவும் கோபுவும் ஏற்பாடு செய்த கூபே ஃபஸ்ட் க்ளாஸ். அவர்கள் புரசவாக்கத்திலிருந்து வர நாங்கள் மைலாப்பூரிலிருந்து கிளம்ப, புதிதாக வாங்கின நீல சந்தேரி பட்டுப் புடவை தசாபுசா என்று சுற்றிக் கொண்டு பரிச்சயம் இல்லாத கைப்பையுடன் மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு இவருடன் என் வாழ்க்கைப் பயணம் ஆரம்பித்தது. அம்மா அப்பா ,பெரிய மாமா சின்ன மாமா அவர்கள் குழந்தைகள் எல்லோர் கண்களிலும் நீர். என்கண்களில் துளிச்சலனமும் இல்லை. நம்பிக்கை,பாசம் நேசம் எல்லாம் இருக்கும் போது வாழ்க்கையைப் பற்றி என்ன பயம்._______} அவர்கள் உணர்வுகளைப் புரிந்து என் அப்பாவின் கைகளைப் பற்றிச் சிங்கம் சொன்ன வார்த்தைகள் இவை. மாமா கவலைப்படவேண்டாம் நான் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும் புதுக்கோட்டைக்கு வாருங்கள்.மதுரையிலிருந்து இரண்டு மணி நேரம் தானே. என்றபடி வண்டியேறி என்னையும் ஏற்றிவிட்டார். நான் சரியாகப் பேசினேனா டால் என்றபடி வந்து உட்கார்ந்தார். அதென்ன டால் என்று பார்க்கிறீர்கள். அப்போது ஆங்கில பாப் இசைப் பாடல் லிவிங் டால்னு ஒன்று க்ளிஃப் ரிச்சர்ட் பாடினது. அதிலிருந்து நானும் அவருக்கு இசைந்து நடக்கும் இனிய பொம்மையாகிவிட்டேன். நினைக்கக் கூட நேரமில்லாமல் மாதங்கள் ஓடின. பத்து மாதங்களில் நவம்பர் 13 ஆம் தேதி எங்கள் முதல் பையன் மதுரை டிவிஎஸ் மருத்துவமனையில் பிறந்தான். தொடருவேன்.
Saturday, February 08, 2014
தை மாதம் 21 1966 மாப்பிள்ளை அழைப்பு ஃபெப்ரவரி 3ஆம்தேதி
ஆஜிப்பாட்டி ஆரத்தி எடுக்கிறார் இடது பக்கம் நீண்ட பின்னல் மல்லிகைப் பூவோடு அம்மா. |
Tuesday, February 04, 2014
ஒரு நல்ல மனிதர் மண வாழ்வு கொடுத்த நாள் தை 22 1966
கடல் வாழ் உயிரினங்கள் பேத்தி வரைந்தது |
Add caption |
லில்லிப்பூக்கள் |
Subscribe to:
Posts (Atom)