Blog Archive

Tuesday, January 28, 2014

நெஸ்கஃபே மாலை 1966 மார்ச்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  • பழைய நெஸ்கஃபே   டப்பாவில்  வரும்  ........................ 
  •    திருமணமான புதிது. புதுக்கோட்டையில் ஒரு  அழகான  மாடி வீடு.     
  •  ஓடு வேய்ந்த  வீடானதால்அவ்வப்போது எலிக்குட்டிகள் திடீரென்று வராந்தாவில் விழும். உள்கட்டிடம்   நல்லபடியாக இருக்கும் ஒரே ஒரு  கூடம். 

  • அதில் மூன்று பக்கமும் புத்தக அலமாரி. இரண்டு பக்கங்களிலும் பால்கனிகள்.              அதற்கு  அப்புறம் நீண்ட  வெட்ட வெளி மொட்டை மாடி.  சிங்கம் வேலை முடிந்து வருகிறவரைக்கும் துணைக்கு  ஒரு வயதான  அம்மா. என்னிடம் கொள்ளைப் பிரியம். 

  • அவளது பேரனை அனுப்பி எனக்குக் கடலை மிட்டாய்,நிலக்கடலை ,மாங்காய்  என்று வாங்கிவரச் சொல்லுவாள்.  அப்போது  பெரியவன்  வயிற்றில் 40 நாட்கள்  கரு .


  •  ஒரு நாள் சாயந்திரம்    ஐந்தரை மணி வாக்கில்   கீழே ஜீப் க்ரீச்சிட்டு நிற்கும்  சத்தம் கேட்டது.  ஆவலோடு ஓடியவளைப் பின்னால் இருந்து கிழவி எச்சரித்தபடி இருந்தார். 

  • கீழ வந்தவர் மாடிக்கு வர மாட்டாரா,என்ன  அவசரம் சின்னப் பொண்ணே என்றபடி  முணுமுணுத்தார்.                                                           

  • காதில் வாங்காமல் சென்றவள் காதில்  இரு பூட்ஸ் களின் சத்தத் திற்குப் பதில் பல  காலடிகளின் சத்தம் கேட்கவே  நின்றுவிட்டேன். 
  • கதவைத் தட்டி அழைக்கும் சத்தம் கேட்டது. 
  • மெல்லக் கதவைத் திறந்தால் சிங்கம் தன் குழுவோடு வந்திருந்தது.
  •  வாங்கன்னு கூடச் சொல்லவில்லை. பின்னால் நகர்ந்து கூடம் ஓரம் நின்றபடி அவர்களைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு மட்டும்   உதிர்த்தேன்.  
  •   என் ஃப்ரண்ட்ஸ் மா. நீ போடும் காஃபி சாப்பிட வந்திருக்கிறார்கள்.                                காஃபியா}}}}~~~~}}}}} அது காலையில் தானே தீர்ந்தது. எனக்குக் குழம்பியது.   

  • இவரோ படு உற்சாகமாய்  ,இது போலக் காஃபி நீங்கள் சாப்பிட்டே இருக்க மாட்டீர்கள்  தண்ணியெல்லாம் சேர்த்துப்  போடும் வழக்கம் கிடையாது ஸ்ட்ராங்க்   பாலில் நெஸ்கஃபே  கலந்துதான் நாங்கள் சாப்பிடுவோம். 

  •  என்னம்மா அப்படியே      நின்னுட்டே.  பால்  திருமயம்  கொண்டு வந்து கொடுத்தான் இல்லையா. நீங்க உட்காருங்கப்பா என்றபடி    என்னைச் சமையலறைக்கு அழைத்துச் சென்றார். 

  •  இப்போது எங்கள் குடித்தனம் பற்றிச்  சொல்லணும்.  ஒரு        ஜனதா ஸ்டவ்வும்   மின் அடுப்பு ஒன்றும் தான் சமையல் செய்ய.....    
  • அன்று இரவுக்கான உ.கிழங்கு வறுத்தாச்சு. ரசம் என்கிற பெயரில்  ஒரு புளித்தண்ணீர். நம்ம சமையல் லட்சணம்  அப்படி.          இருக்கும்போது
  •  இவர் ஒரு பட்டாளத்தைக் கூட்டி வந்தால் என்ன செய்வது. மெள்ள   அவரிடம்   நெஸ்கஃபே  தீர்ந்து போன விஷயத்தைச் சொன்னேன்.. 
  •  டப்பா  இருக்கா  என்றார். ம்ம்ம் இருக்கு. அதைப் பார்க்கலாம் என்று   எட்டிப் பார்த்தார். டப்பாவின் அடியில்  ஒரு  ஸ்பூன்  பொடி  இருந்தது.  .... ஓ ஜீஸஸ்  என்றவர்  சரி  திருமயத்தைக் கூப்பிடு  என்றார்.  எதுக்கு   இது நான்.....
  •   காஃபி வாங்கிண்டு வரத்தான். கூஜாவை எடு.  எடுத்தாச்சு.

  •  ஜன்னல் வழியாச் சத்தமில்லாமல் கூப்பிடு......*(  என்னவோ  கேட்டால் ஓடிவர
  • அவன் காத்திருக்கிற மாதிரி**(                 நானும் கூப்பிட்டேன். அவனும் வந்தான் .. இவர் பால்கனிக்கு ஒட்டீனாற்போல இருக்கும்      கயிற்றைக்கட்டி இறக்கி

  •  6  காஃபி  ஐய்யர்  கஃபே யில் வாங்கிவா. டபிள்   ஸ்ட்ராங்னு சொல்லு.   

  • என்றதும் அவன் ஓடினான். இவர் சத்தமாக  என்ன பால் கொதிச்சுடுத்தா     என்ற வண்ணம் நண்பர்களை நோக்கிப் போனார். ஏய்  என்னப்பா சமையலறையிலயே நின்னுட்ட.  எங்களைக் கவனிப்பா. நாங்களும் வீட்டுக்குப்  போகணும் இல்ல என்று கிண்டலடிக்க,  ஏய்  சும்மா இருங்கப்பா. மிஸஸுக்குக் கொஞ்சம்  ஜுரமடிக்கற மாதிரி இருந்தது. 

  • அதனால் பையனை  மாத்திரை வரச் சொல்லி விட்டு வந்தேன்   என்ற படி அவர்களுடன் அரட்டையைத் துவங்கினார்.       நான்  திருமயத்தை  எதிர்பார்த்து  ஜன்னலோரமே நின்று கொண்டிருந்தேன். அவனும் வந்தான்    இருந்த பாலையும் நெஸ்கஃபேயையும் கலந்து        இந்தக் காப்பியையும் அதில் கொட்டி   புது  ட்ரேயில்  டம்ப்ளர்களில் ஊற்றிக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு    படுக்கும் அறைக்குள் சென்றுவிட்டேன்.

  •  நிஜமாகவே ஜுரம்  வந்துவிட்டது  பயத்தில்}}}                                                                               இவரோட தோழர்களும் அதைக் குடித்துவிட்டுக்  கொஞ்சம் ஐய்யர் கடைக் காப்பி போல இருக்கு. ஆனா நன்றாக இருக்குப் ப்பா  என்ற படி மீண்டும் பேச ஆரம்பித்தனர். 

  • கட்டிலில் படுத்தவள் அப்படியே போர்வையைப் போர்த்திக் கொண்டு  தூங்கப் போய் விட்டேன்.மிஸசைக் கூப்பிடுப்பா. நாங்க  கிளம்பறோம்னு அவர்கள் சொல்லும் போது மணி எட்டரை....................................... இவர் வந்து எட்டிப் பார்த்து அருகில் வந்ததும் உண்மையாகவே உடம்பு சுடுவதைப் பார்த்துப் பயந்து விட்டார். என்னம்மா  செய்யறது. கம்பெனி டாக்டரைக் கூப்பிடலாமா  என்று கேட்க,  நான் மறுக்க  ஒரு வழியாக அவர்கள் கிளம்ப  நெடு நாளைக்கு  இதைச்   சொல்லிச் சிரித்திருக்கிறோம்.

32 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான காஃபி மிக்ஸ்"சிங்" அனுபவம் அம்மா...

Geetha Sambasivam said...

haahaahaa nalla sirippu than ponga! arumaiyana malarum ninaivukal.

ராமலக்ஷ்மி said...

நல்ல அனுபவம்:)!

ஸ்ரீராம். said...

சமாளிக்கும் கலை!

ADHI VENKAT said...

சிங்கம் சார் என்னமா சமாளித்திருக்கிறார்...

உங்களுக்கு ஜுரம் வந்ததில் தவறேயில்லை...:)

தில்லியிலும் இது மாதிரி கும்பல்கள் வந்த வண்ணமேயிருப்பார்கள்... சாப்பாடும், சாயும் தயார் பண்ணிக் கொண்டே இருப்பேன்..:)) ”சாய் பனா தோ”...என்று குரலும் அவ்வப்போது ஒலிக்கும்....

அப்பாதுரை said...

எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது! காபி குடித்தவரும் ஐய்யர் கடை காபி போல இருக்கிறது என்பது... காமெடி.

எலிக்குட்டி திடீர் திடீர்னு விழுமா.. என்னங்க இது! பல்லி விழும் பார்த்திருக்கேன்.. எலி? நினைச்சாலே தமாஷா இருக்குதே!

Dhiyana said...

எவ்வளவு அழகா சமாளித்து இருக்கிறீர்கள்.. :))

Geetha Sambasivam said...

@அப்பாதுரை, எலிகளோட குடித்தனம் பண்ணி இருக்கோமாக்கும், எலிகள் என்னோட கொலு வைச்ச அனுபவம் எல்லாமும் பகிர்ந்திருக்கேனே! பார்க்கலையா? மேலே இருந்து மட்டும் விழாது. குழந்தைங்களுக்கு நிஜமான மிக்க மவுஸ் அதுங்க தான். நாங்கல்லாம் விளையாட்டு பொம்மைகளை வாங்கியே கொடுத்ததில்லையாக்கும்! :P :P :P அதிலேயும் நசிராபாத்திலே ஒரு முறை எலி மருந்து வைச்சு ராத்திரி எலி செத்துக் கிடந்ததைப் பார்த்திருக்கோம். காலம்பர எழுந்து பாடியை அங்கிருந்து விலக்கப் பார்த்தால் பாடியைக் காணோம். செத்த எலியோட பாடி எங்கெ? இன்னி வரை நாங்க கண்டுபிடிக்க முடியாத மிஸ்டரி அது. வீட்டுக்குள்ளே வெளியாட்கள் வரவும் முடியாது. ப்ளாக் காட் செக்யூரிடி! :)))))

துளசி கோபால் said...

நைஸ் நைஸ்......:-))))))

ஸ்ரீராம். said...

@அப்பாதுரை... எங்கள் எலிப் பதிவுகளை(யும்)மறந்து விட்டீர்களா? ஹுசைனம்மா கூட உங்கள் வீட்டில் எலியா, எலி வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா என்று கேட்டிருந்தார்! :))))))

sultangulam@blogspot.com said...

இதையே கொஞ்சம் உயரம் கூட்டி பெரிய சைஸில் இங்கே அரை கிலோ டப்பி வருதம்மா?

வல்லிசிம்ஹன் said...

தனபாலன், ஆமாம் சரியான மில்கா சிங். நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

நான் மட்டும் மாட்டியிருந்தால் பெப்பேன்னு விழித்திருப்பேன். அவ்வளவு சம்யோசிதமெல்லாம் கிடையாது கீதா.

வல்லிசிம்ஹன் said...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அலுப்பில்லாமல் பார்த்துக் கொள்வார். நன்றி ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

கும்பகோணத்துக்காரர்களுக்கு உரித்தான குணம் ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி. விருந்தோம்பல் நல்லதுதான். வீட்டு எஜமானர் நிலைமை புரிந்து செயல் படணும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை. அவர் (வந்தவர் புத்திசாலி உண்மையைப் பட்டென்று உடைக்காமல் சமாளித்தார். வரந்தா ஓடுகளில் எலிகள் குடித்தனம். சாமி.அந்தக் குட்டிகள் தீனமாகக் கத்தும்போது மனசை என்னவோ செய்யும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தியானா. நானெங்கே சமாளித்தேன். எல்லாம் சிங்கத்தின் யோசனை.}}

வல்லிசிம்ஹன் said...

கீதா. உங்கள் அனுபவங்கள் தனி. இது சிறு கதை. உங்களது பெரு நாவல்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துளசிமா. காப்பி நன்றாக இருந்ததா}}}}

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம் எனக்கு நினைவு இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அப்பவும் அரைக்கிலோ டப்பி தான் சுல்தான். ஒரு மாதத்திற்குக் காணும்.

அப்பாதுரை said...

..இருந்தாலும் கொடுக்குற தெய்வம் இப்படி கூரையைப் பிச்சுகிட்டு எலியா கொடுக்கற கதை இப்பத்தான் கேள்விப்படுறேன்..

காணாமல் போன எலிப்பிணம் நிஜமாவே கலங்கடிக்குது..

வெங்கட் நாகராஜ் said...

நன்றாகவே சமாளித்து இருக்கிறார் சிங்கம்.....

எங்க வீட்டில் நடப்பதை தான் சொல்லியாச்சே ஆதி! :)

மதுமிதா said...

பேஷ் பேஷ்.... இதுவும் ரொம்ப நன்னா இருக்கே... நாங்களும் சிரிச்சோம் வல்லிம்மா :) மறுநாள் ஜுரம் சரியாகிடுச்சா. தொடர்ந்து எழுதுங்க.

மாதேவி said...

ரசனையான அனுபவம்.

கோமதி அரசு said...

கயிற்றைக்கட்டி இறக்கி 6 காஃபி ஐய்யர் கஃபே யில் வாங்கிவா. டபிள் ஸ்ட்ராங்னு சொல்லு.//

அருமையாக சார் சமாளித்து உங்களை அழகாய் காப்பாற்றி இருக்கிறார்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா.மதுமிதா. டான்கீஸ்.எழுதலாம். உற்சாகம் வரும்போது எழுதுகிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட் . சமாளிப்பதில் வல்லவர். நானும் ஏமாறுவதில் வல்லவள்:*****¢

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி. இனிமையான நாட்கள் அவை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மாதேவி. கருத்துக்கு மிக நன்றி.

kowsy said...

நல்ல அனுபவம். சுவாரஷ்யம்