Thursday, February 11, 2010

பதினாறு வயது பறந்தது ...

அன்பு அமைதிச்சாரல் விடுத்த அழைப்பு தித்திக்கிறது.
நன்றிப்பா.

இணையத்தில் இருக்கும் நட்புகளை எப்பவும் வியந்து கொண்டே இருப்பேன். நான் அதிகமாகப் பின்னூட்டமிட நிறைய பதிவுகளுக்குப் போவதில்லை.
இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நான் இடும் பதிவுகளுக்கு விடாமல் வந்து
ஆதரவுப் பின்னூட்டங்களும் இடுவதுதான் என்னை இன்னும் உற்சாகப் படுத்துகிறது.
இப்போது இந்தப் பதின்ம வயது கொண்டாட்டங்களை எழுதச் சொல்ல அழைப்பு, அதுவும்
இவ்வளவு வயது தாண்டிய பிறகு!:)

ஆனாலும் அந்த யூனிஃபார்ம், ப்ரேயர் பாட்டு, மார்ச் பாஸ்ட், திறந்தவெளி அரங்கு , மேடை நாட்டியம்( :-) )
இதோட, போனசா ஒரு வருட கல்லூரி வாழ்க்கை.
இதில வாலுத்தனம் காட்ட அனுமதி கிடையாது. ஸோ அது அவுட்.

2,ஹீரோயின் வொர்ஷிப்னா அதுக்கு எங்களுக்கு வைஜயந்திமாலாவும் ,சரோஜா தேவியும் தான் ரோல் மாடல்.
நீண்ட பின்னலை மடித்துக் கட்டி இரண்டு பக்கமும் தெரிகிற மாதிரி அம்மாவைப் பின்னிவிடச் சொல்லி
பள்ளிக்குச் சென்ற நினைவு இருக்கிறது. தலை நிறைய மல்லிகைப்பூ அம்மா வைத்து விட்டாலும் எடுத்து விட்டு
ஒரே ஒரு ரோஜாப்பூ வைத்துக் கொண்ட நிழலும் கண்ணில் ஆடுகிறது.

3,அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல்,''கட்டான கட்டழகுக் கண்ணா ' பாட்டு ரேடியோ சிலோனில் கேட்கும் போது இருவரில் ஒருவர் வந்து விட்டால் , மதராஸ் ஏ வுக்கோ, திருச்சி வானொலிக்கொ டயலைத் திருப்பும் புத்தி இருந்தது.
4, ஒரு நாளாவது எங்கயாவது போக வேண்டும் என்ற நினைப்பில்
பள்ளிவிட்ட கையோடு கூடப் படித்த கமருன்னிசா வீட்டுக்குப் போய்த் தேனீர் அருந்தும் நேரம் ,
நான்கு மணிக்கு வீட்டில் இருக்க வேண்டிய மகள்,வராத காரணத்தால்,பள்ளி வாட்ச் மேனிடம் விசாரித்துக் கொண்டு
கமருன்னிசா வீட்டு வாசலுக்கே வந்து விட்ட அப்பாவைப் பார்த்ததும் ஏற்பட்டது பயமா, இல்லை நிம்மதியா என்று தெரியவில்லை. ஏனெனில் திரும்பி வரும் வழியை நான் பார்த்து வைத்துக் கொள்ளவில்லை.

அம்மாவாவது நாலு திட்டுப் போடுவார். அப்பா அதுவும் செய்ய மாட்டார்.:)

5,தோழிகளோடு புதிய பறவை படம் பார்த்துவிட்டு சிவாஜிக்காக வருத்தப் பட்ட நாளும் உண்டு.
பரீட்சை நாட்களில் திண்டுக்கல் வெள்ளைப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம்,
பள்ளிக்குள் இருக்கும் சின்ன சாப்பலில் மேரியம்மாவோடு வேண்டிக்கொண்டதும் உண்டு.
மற்றபடி ரொம்ப சாதுவான வருடங்கள் தான் அவை. ரிப்பன், ஜார்ஜெட் தாவணி,வளையல்கள்,
சென்னை வந்தால் வாங்கும் மணி மாலைகள் இவையே அலங்காரம்.
பரிசாகக் கிடைத்த ருபாய் 100க்கு வாட்ச் வாங்கினதும் அப்பாதான். அதைக் கட்டிக் கொண்டு பரீட்சை
எழுதினது மற்றதொரு மறக்க முடியாத அனுபவம்.

அமைதிச் சாரல்,

என் பதின்ம வயது 17 வயதோடு முடிந்தது.
18 +அரை வயதில் எனக்குப் பையன் பிறந்தாச்சு:)

அதற்குப் பிறகு நான் செய்த குறும்புகள் குழந்தைகளோடுதான்!!

எல்லோரும் வாழ வேண்டும்.

31 comments:

ராமலக்ஷ்மி said...

பதினாறு வயது பறந்தது
பதிவாக இங்கே மலர்ந்தது:)!

//ஹீரோயின் வொர்ஷிப்னா அதுக்கு எங்களுக்கு வைஜயந்திமாலாவும் ,சரோஜா தேவியும் தான் ரோல் மாடல்.//

எங்க பள்ளி காலத்தில் ஸ்ரீப்ரியா ஸ்ரீதேவி பீக்-ல். கல்லூரி வந்தப்போ நதியா ரேவதி இப்படி:)!

அழகான நினைவுகள்! அருமையான பகிர்வு வல்லிம்மா!

ஆயில்யன் said...

//ராமலக்ஷ்மி said...

பதினாறு வயது பறந்தது
பதிவாக இங்கே மலர்ந்தது:)!//


ரிப்பிட்டேய்ய்ய்ய்!

இளம் வயது நினைவுகள் எப்பொழுதும் மனதினில் இளமையாக உறங்குது ! :)

கண்மணி/kanmani said...

பதின்மம் உடலுக்கு இல்லனாலும் மனசுக்கு எப்பவும் உண்டு நமக்கு.

LK said...

//18 +அரை வயதில் எனக்குப் பையன் பிறந்தாச்சு:)//

so early :).. hmm my mom also got married right after her schoolings

Jayashree said...

ம்... என்னத்த.. சொல்ல! Generally - 16 வயசுனா.. .. பாவாடை தாவணி.. அந்த வயசுக்கான மெருகு!! ஒருவகை Innocence..இதுதான் ஞாபகத்துக்கு வரும்.


என் 16 வயதில் -- ரொம்ப focused , Goals.. how futile னு பின்னால் எனக்கு தோனியது!!:)) ஆனா இப்போது செய்வதென்றால் மலைப்பை உண்டு செய்வது!!

16 வயசில ஞானி ஆனவாளும் உண்டு - சங்கரர்..
நான் கட்டாயம் அந்த வகை இல்லை. அதுக்கு opposite தான்:))

LK said...

// ஜார்ஜெட் தாவணி,//

இன்றைய தலைமுறைக்கு இது தெரியுமா ??

http://lksthoughts.blogspot.com/2010/02/blog-post_12.html

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க, ராமலக்ஷ்மி.
உள்ளம் எப்பவும் இளமைதான். பிறந்ததிலிருந்து அதுதானே நம்மை இயக்குகிறது!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஆயில்யன்.ரொம்ப சௌகர்யம் மனம் நலத்தோடு இருப்பது. உங்களைப்ப் போல பிள்ளைகளோடு பழகுவது எங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கண்மணி. ஒரே கவிதை மழை பொழிகிறதே உங்கள் பதிவில்!அருமையாக இருக்கிறது உங்கள் வாசகங்கள்.

அமைதிச்சாரல் said...

//ஏனெனில் திரும்பி வரும் வழியை நான் பார்த்து வைத்துக் கொள்ளவில்லை.//

அந்த வயதுக்கே உரிய துணிச்சல். இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்களே அதைப்போல.

உடம்புக்குத்தான் வயசு... மனசுக்கில்லை. பகிர்ந்துகொண்டதற்கு நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஹலோ எல்.கே.
சில வீடுகளில் அதுவே பழக்கமாக இருந்தது. இப்ப அப்படி இல்லை.

LK said...

ippa kooda irukuma.. enaku kalyanam anapa en tangsku 20vayasu final year padichitu iruntha

புதுகைத் தென்றல் said...

கல்லூரி வந்தப்போ நதியா ரேவதி இப்படி// என் பள்ளிக்காலத்தில் நதியா ரேவதி. ரேவதி புடவைக்கட்டும் பாங்கு, நதியாவின் ஸ்டைல்னு நல்லாயிருக்கும்.

அழகான நினைவுகள்! அருமையான பகிர்வு வல்லிம்மா!//

ஆமாம். நானும் ரிப்பீட்டிக்கறேன்.

புதுகைத் தென்றல் said...

என்னையும் 22 வயசுல தொரத்தி விட்டுட்டாங்க. :)) பாவம் ஸ்ரீராம்!!!
:))

ஹுஸைனம்மா said...

//ஜார்ஜெட் தாவணி//

அத வாங்க பட்ட பாடு. டிரான்ஸ்பெரண்டா இருக்குங்கிறதால அம்மாக்கெளுக்கெல்லாம் பிடிக்காது. ;-)

இப்போ எங்க தாவணியப் பாக்கமுடியுது?

ஷங்கர்.. said...

அழகா எழுதி இருக்கீங்க..:) கண்ணுக்குள்ள ஒரு ப்ளாக் & வொய்ட் படமே விரிஞ்சிது..:))

LK said...

//இப்போ எங்க தாவணியப் பாக்கமுடியுது//
இப்ப இருக்க பொண்ணுங்க தாவணி அணிவதை கேவலமாக எண்ணுகின்றனர்.. (மிக சிறிய நகரத்தில் கூட )

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ,
அந்த இன்னொசன்ஸ் இப்ப கிடையாது. எனக்கு கோல் என்று ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை. அப்பாவின் யோசனை தெரியும். so I sort of settled down to that mode.:)ஏகப்பட்ட ஆசைகள் உண்டு.நெடு நேரம் ட்ரெக்கிங் போகவும் .,பலவிதமான மனிதர்களைப் பார்க்கவும்,நட்போடு இருக்கவும் அப்போதிருந்த ஆசை இப்போது நிறைவேறுகிறது!நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

எல்.கே. ஜார்ஜெட் தாவணி தெரியாம என்னம்மா. அது துப்பட்டா ஆகிவிட்டது. அவ்வளவு தான்:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சாரல். நேற்று பூராவும் வெளிவேலைகள் இருந்தன. தாமதமாகப் பதில் எழுதுகிறேன்.
உண்மைதான்.
க்ஷணசித்தம் க்ஷணப்பித்தம், அப்படியே காகளுக்குச் சுதந்திரம் கிடைத்தது போலப் போய் விட்டேன். கொஞ்சம் ஊரை விட்டுத் தள்ளிதான் அவங்க வீடு.
அப்பா சைக்கிளில் வந்ததை இப்ப நினைத்தால் இப்போது கண்கலங்குகிறது.
நான் மிகக் கொடுத்து வைத்தவள்.
நீங்கள் இந்தத் தொடருக்கு அழைத்திராவிட்டால் இதெல்லாம் எழுத வாய்ப்பு இருந்திருக்காது,.நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ooho.

nalla irukke. oru chinnak kuzhanthaiyai viittukku azhaiththu vanthu vittiirkaLA:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தென்றல். அச்சோ பாவமே 22 வயசில அனுப்பிச்சாட்டாங்களா. நீங்க என்ன சேட்டை பண்ணீங்களோ தெரியலையே:)
இப்பப் போய்ப் பார்க்கிறேன் உங்க பதிவை.
நன்றிம்மா.
என் பெண் காலத்தில் அமலா,ரேவதி இவங்க ரெண்டு பேரும்தான்.
அதுவும் அக்னி நக்ஷத்திரம் பார்த்ததிலிருந்து அமலா மோகம் ஜாஸ்தியாகி விட்டுது:)

வல்லிசிம்ஹன் said...

ஹுசைனம்மா, வாயில் தாவணி சுருண்டு கொண்டு விடும்.
ஜார்ஜெட், நல்லா அழகாப் பின் பண்ணி கொள்ளி விட்டால் மிக அழகா இருக்குமே.
நாங்கள் தாவணி போடும்போது கட்டாயம் மூணு கஜங்கள் வாங்கித்தான் போடணும்.
அடக்க ஒடுக்கமா வரலைன்னா ஃபைன் உண்டு.:0)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஷங்கர்.
ரொம்பவே அழகான காலத்தைக் கடக்கிறோம்னு தெரியாமலியெ
வேகமாக் கடந்துட்டோம். இப்ப நினைக்க இனிப்பாக இருக்கு. இன்னோரு பத்து வருடங்கள் கழிந்தால் என் ஐம்பதாவது வயது கூட இனிமையாகத் தெரியுமோ என்னவோ:)

Jayashree said...

Goal னு ஏதோ வச்சுக்கறோம் வல்லியம்மா!! ஆனா அதை reach பண்ணும்போது தான் தெரியறது that goal keeps on moving நு:))SO அதுவுமே ஒரு மிராஜ் தான் என்கிறது எனக்கு வாழ்க்கை தந்த INSIGHT!! . நம்ப ஒண்ணும் பெரிசா எதையும் MISS பண்ணி விடுவதில்லை. நியாயமான ஆசைகளை தெய்வம் நிறைவேற்றாமல் விட்டதுமில்லை எது தேவையோ அதைகொடுக்காமலும் இருப்பதுமில்லை>.வாழ்க்கை தருவது போன்ற படிப்பினையை ஏடு கொடுப்பதில்லை!!அந்த படிப்பினையை நாம கத்துக்கற வரை வாழ்க்கையும் விடுவதில்லை!!
இப்ப நிக்கற படிலேந்து திரும்பி பாத்தா உங்க வாழ்க்கை உங்களுக்கு கொடுத்திருக்கும் RICHNESS வேற ஏதாவது கொடுத்திருக்குமா ?அப்படியே என்றும் இருக்க VALENTINE DAY இல் என் வாழ்த்துக்கள்!!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஜயஷ்ரீ.
பகவான் என்னிக்கும் நம்ம பக்கத்தில இருக்கறதுனால தான் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. இது நான் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை. அதை முடிந்த வரை ஒழுங்காக அமைத்துக் கொள்ளவேண்டும் என்று பாடுபட்டது உண்டு. அதற்குத்துணையும் எங்கள் பெருமாள்தன். மிகவும் நன்றிம்மா. அருமையான வார்த்தைகள்;.

LK said...

//நியாயமான ஆசைகளை தெய்வம் நிறைவேற்றாமல் விட்டதுமில்லை எது தேவையோ அதைகொடுக்காமலும் இருப்பதுமில்லை>./

perfect madam.

Anonymous said...

//ஒரு நாளாவது எங்கயாவது போக வேண்டும்//
இதே ஆசையில, நானும் சுபாவும் ரொம்பாஆஆஆ தூரம் ஐஸ் தயாரிக்கிற கம்பனி வரைக்கும் நடந்து போய் அங்க உள்ள பெட்டிக்குள்ள கை விட்டு ஒரு குச்சி ஐஸ் எடுத்து சாப்பிட்டது (வீட்டுல சொல்லாம!) இன்னைக்கு நினைச்சும் பெருமை பட்டுக்குவேன்! :)

//சின்ன சாப்பலில் மேரியம்மாவோடு வேண்டிக்கொண்டதும்//
எங்க இதுல கெபின்னு சொல்லுவாங்க - ஒரு மலைக் குகைக்குள்ள மரியாள் ... அப்படி ஒரு நம்பிக்கையா பாத்திருக்கேன் - ரொம்ப கேட்டதெல்லாம் இல்ல, ஆனா நான் நல்ல புள்ளையா இல்லையான்னு அவங்களுக்கு தெஇரியும் அப்படின்னு அபார நம்பிக்கை!!! :) முழுசா நம்பி சந்தோஷமா இருந்த காலம்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு மதுரா,ஆகக்கூடி எல்லாருக்கும் வரை மீறுதல்
ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது:)
எங்க பள்ளிக்கூட சாப்பல் ரொம்ப அழகா இருக்கும். அப்பா சொல்லிக் கொடுத்த வரிகள். ''இன்னிக்கு நாள் நல்லதா இருக்கணும் நல்லதே சொல்லணும் நல்லதே கேக்கணும்,நினைக்கணும்'' யாருக்கும் தீங்கிழைக்கக்கூடாது இப்படி போகும் அந்த பிரார்த்தனை. இதெல்லாம் சொல்லிட்டு , ''அம்மா இன்னிக்குப் பரீட்சை சரியா எழுதணும்னு லேசா ஒரு கூடுதல் பிரார்த்தனை:)
தமிழ்ல என்னிக்கு மதுராவோட வலைப்பூ ஆரம்பிக்கப் போகிறது? உங்களையும் அழைத்திருப்பேனே.

துளசி கோபால் said...

இந்த 16 ஐ எப்படித் தவற விட்டேன்??????

வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா, எங்கயாவது பயணம்
போயிருப்பீங்க:)

பங்கெடுக்கணும்கிற ஆசைதான்.
வெற்றி வந்தாஆஆஆஆஆஆஆஆஆல் பார்க்கலாம்.:)