Blog Archive

Tuesday, February 09, 2010

ஆத்தா உன் சேலை ..

வலது பக்கம் இருப்பது என் அம்மா.




ஆத்தா உன் சேலை'' பாட்டைக் கேட்டிருக்கிறீர்களா.
அண்மையில் கேட்க நேர்ந்தது. அதுவும் எங்கள் அம்மாவின் பிறந்த நாள் அன்று கேட்டதுதான் அதிசயம்.

கைநிறையக் காசிருக்கு
கடைக்குப் போகலாம் எல்லாமும் வாங்கலாம் அம்மாவை வாங்கமுடியுமா!
ஆத்தா உன் சேலை, பாடலில் அம்மாவின் புடவை எடுக்கும் அவதாரங்கள் அநேகமாகிறது.

பிள்ளைக்குத் தூளி,
பையனுக்குத் தலை துவட்ட,
பெண்ணுக்குத் தாவணீயாக,
கிணத்துத் தண்ணியை வடிகட்டித் தண்ணீரை இனிமையாக்குமாம்.
ஆற்றில மீன் பிடிக்கும் வலையாகுமாம்,
காயத்துக்குக் கட்டுப் போடுமாம்.
வெறுந்தரையில் படுக்காமல் ஆத்தா சேலையில் படுத்தால்
தூக்கமும் தாலாட்டோட வருமாம்.
கடைசியில் இந்தக் கவிஞர் தன் இறுதிப் பயணத்துக்கும் ஆத்தா சேலைதான்
வேணும் என்கிறார்.
எழுதியவரின் பெயரைக் கவனிக்காமல் விட்டது என் தவறில்லை.
அது பாடலின் அருமையால் விளைந்த கவனப் பிசகு.

அம்மாவின் கூறைப் புடைவையை இன்னும் என் புடவைகளுக்குப் புதைத்து வைத்திருக்கிறேன்.
அதுவும் குட்டிக்கரா பவுடரின் வாசமும் இன்னும் மெலிதாக மணம் வீசிக் கொண்டு
மனத்தை நிறைக்கிறது.
அம்மாவின் கையால் பிசைந்த குழம்புச் சாதமும்,
கடைசியா நீ எனக்குக் கொடுத்த அரை டம்ப்ளர் பாலும்
இன்னும் என் மனதை நிறைக்கிறது அம்மா.
நீ என்றும் என் மனதில் நிறைவாய்க் கலந்தாய்.
ஆசிகளை வேண்டுகிறேன்.



எல்லோரும் வாழ வேண்டும்.

43 comments:

வல்லிசிம்ஹன் said...

இடது பக்கத்தில் நிற்பது என் தோழியின் அம்மா.

pudugaithendral said...

மழை பெய்யும் பொழுதோ, மத்யான குளிரின்போதோ அம்மா புடவையின் பல்லுவால் போத்திக்கொண்டு தூங்கும் சுகம்....

இப்பல்லாம் எங்கே. என் பல்லுவுக்குள் நுழைய்ய இருவர் ரெடியாக இருக்காங்க. :))

Anonymous said...

பொக்கிஷமான படம் வல்லிம்மா

துளசி கோபால் said...

பொறந்ததுமுதல் கடைசிவரை புடவை கூடவே வந்துக்கிட்டு இருந்துச்சேப்பா!

இதேதானே 'ஜிங்குச்சாவிலும்' சொன்னாங்க.

என்னிடம் என் அம்மாவை நினைவுபடுத்தும் ஏதும் இல்லை(-:

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான பகிர்வு வல்லிம்மா.

கோமதி அரசு said...

//அம்மாவை வாங்க முடியுமா!//


முடியாது,முடியாது உண்மை.

நாம் இருவரும் நேற்று அம்மாவை நினைத்து இருக்கிறோம் என்ன ஒரு ஒற்றுமை! அம்மா சேகரித்து வைத்து இருந்த பாடல்களை பதிவு செய்து உள்ளேன்.”அம்மாவின் பொக்கிஷங்கள்” என்று.

அம்மாவின் கடிதம்,அம்மாவின் கோலம்,அம்மாவின் மருத்துவ குறிப்புகள்,அம்மா செய்த பொம்மைகள்,அவர்கள் பின்னிய அலங்கர துணிகள். அம்மாபுடவை என்று நானும் பத்திரமாய் வைத்து இருக்கிறேன்.

அம்மாவை நினைப்பதே சுகம். அந்த நினைப்பை தந்த உங்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

நீங்கள் அனுப்பும் படங்கள் எப்போதும் அழகு.

அம்மாவின் படமும் அழகு .’
அழகு தெயவம் அம்மா.
அம்மாவின் ஆசிர்வாதங்கள் என்றும் உண்டு உங்களுக்கு.

எல் கே said...

adikadi kosuvatthi suttha vaikareenga... siru vayathil ammavin munthanai pidithukondu tirintha nyabangal. enaku chela peyare "Amma kondu"

Geetha Sambasivam said...

என் அம்மாவின் கூறைப்புடைவை, வெள்ளி விளக்காய் மாறி என் கிட்டே வந்திருக்கு. நான் போடும் மூக்குத்தியும் அம்மாவோடதுதான். நானே என் அம்மா சாயல்தான்! :)))))))))))))அம்மா புடைவையின் சுகம் தனிதான்!

சாந்தி மாரியப்பன் said...

வல்லிம்மா,

நெகிழ்ச்சியான பதிவு.

ஹுஸைனம்மா said...

நான் கூட தொடர்பதிவோன்னு நெனச்சேன், இப்பத்தான் கோமதிக்கா பதிவுலயும் கமெண்ட் போட்டுட்டு வந்தேன்.

அம்மா எடுக்கும் அவதாரங்களைவிட அம்மாவின் புடவை எடுக்கும் அவதாரங்கள்தான் அதிகம் போல!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா தென்றல்,
நீங்க ஒரு ரொம்ப நல்ல ஆத்தான்னு இப்ப தெரியுதா;0)

சந்தனமுல்லை said...

தங்கள் அம்மாவையும், அம்மாவின் நினைவலைகளையும் வாசத்தில் கொண்டுவந்தது விட்டீர்கள் வல்லியம்மா!

சந்தனமுல்லை said...

ஹையோ..சொல்ல மறந்துட்டேன்...ஹெட்டர் படம் கொள்ளை அழகு- அம்மாவைப்போலவே!

கண்ணகி said...

ஏதேதோ எண்ணங்கள்...

வல்லிசிம்ஹன் said...

நன்றி அம்மிணி. இந்த போட்டோ எடுக்கும் போது அம்மாவுக்கு 27 வயது.

அவளெ ஒரு பொக்கிஷம்தான்.

வல்லிசிம்ஹன் said...

அம்மாவோட நினைவுகள் இருக்கே துளசி. நீங்க எழுதின
பதிவுகளிலிருந்தே, ஒரு கண்ணாம்பா அம்மாவை நான் கற்பனையில் பதித்து இருக்கிறேன். இப்ப எல்லாம்
ஜீன்ஸ் தான் புடவைக்குப் பதிலான்னு நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. அம்மாவுக்கு 81 வயது இன்றோடு முடிகிறது.
உங்களைப் போல எனக்குக் கவிதை எழுதத் தெரியவில்லையே என்று

வருத்தமாக இருக்கிறது. அவளுக்காக ஒரு காவியமே எழுதலாம்.

சாந்தி மாரியப்பன் said...

//இப்ப எல்லாம்
ஜீன்ஸ் தான் புடவைக்குப் பதிலான்னு நினைக்கிறேன்.//

வல்லிம்மா.. என்னுடைய ஞாபகமா, பொண்ணுக்கு கொடுத்துட்டு போறதுக்காகவாவது காஸ்ட்லியா புடவை ஒன்னு வாங்கணும்னு நெனச்சா இப்பிடி டமார்ன்னு தூக்கிப்போட்டுட்டீங்களே :-(((.

சரி பட்டு ஜீன்ஸா வாங்கிடவேண்டியதுதான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகா சொல்லி இருக்கீங்க :)

வல்லிசிம்ஹன் said...

Dear L.K.,
naama ellaarume ammaa konduthaan.

andha uravu illaama naam valaruvathu eppadi.
many many thanks.

எல் கே said...

//andha uravu illaama naam valaruvathu eppadi.//

ithu vera artham....

வல்லிசிம்ஹன் said...

என் அம்மாவின் கூறைப்புடைவை, வெள்ளி விளக்காய் மாறி என் கிட்டே வந்திருக்கு. நான் போடும் மூக்குத்தியும் அம்மாவோடதுதான். நானே என் அம்மா//
ஆஹா கீதா, அம்மாவோட மறு உருவம் தான் பெண்கள்னு இதற்குத்தான் சொல்கிறதா. அம்மா வெள்ளி விளக்காய்,மூக்குத்தியாய் உங்களிடம் வந்து விட்டாரா. மிக மிக நெகிழ்ச்சி கொடுப்பது அம்மாவின் நினைவு ஒன்றுதான். நீங்களும் உங்கள் அம்மாவைப் பற்றி இன்னும் சிறப்பாக எழுதலாமே. நாம் இப்போது இருக்கும் நிலைக்கு அம்மாதான் சாட்சி என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.அதனால் தான் சொல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா அமைதிச் சாரல்.
இப்ப சல்வார் சூட்டும், ஜீன்ஸும்தான் நிறையப் பார்க்கிறேன்.

வேடிக்கையாகத் தான் சொன்னேன். என் பெண்ணும் இதில் அடக்கம்:)
கண்டிப்பாய் உசத்தியான புடவை வாங்கி நீங்கள் உடுத்திப் பழகிய புடவையை
அவளுக்குக் கொடுக்கவும். மகிழ்ச்சியோட வாழ என் ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா, ஹுசைனைம்மா.
கோமதியும் நானும் ஒரே நாளில் அம்மாவை நினைத்து எழுதி இருக்கிறோம். அம்மா இல்லாத குறையை எழுதித்தான் போக்கிக் கொள்ளவேண்டும்.
இத்தனை வயதில் அம்மாவைப் பற்றி நினைத்துப் புலம்புவதாக யாராவது நினைப்பார்களோ
என்றும் யோசிப்பேன். பிறகு பரவாயில்லை எனக்கு ஆதாரமாகத்
தன்னைத் தியாகம் செய்தவளை நினைப்பதிலோ எழுதுவதிலோ என்ன தவறு இருக்க முடியும்
என்று மீண்டும் எழுத ஆரம்பிப்பேன்.;)

வல்லிசிம்ஹன் said...

வரணும் முல்லை. பப்பும்மான்னு உங்களை இனிமேல் கூப்பிடப் போகிறேன்:)
ஹெட்டரை இன்று மாற்றவேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் பார்த்துவிட்டதால், புதிதாக
இன்னொன்று போடவேண்டும்.
அம்மாவின் வாசம் முல்லை,மல்லிகை,சந்தனம்,ஷண்பகம் போல நிலைத்து நிற்பதுப்பா.
நல்ல வார்த்தைகளுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கண்ணகி.
உண்மைதான். பெற்றோர் நினைவு எல்லாவற்றையும்
மீறி நம்மை மகிழ்விப்பதும்,சோகப்படுத்துவதும் நிஜம்.
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் முத்து கயல்,
நல்ல அம்மாவைப் பெற்றவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்:)

வல்லிசிம்ஹன் said...

enna arththam L.K?

பாரதி மணி said...

வல்லீம்மா! உங்க அம்மாவைக்கொண்டிருக்கிறீர்கள். என்ன ஒரு லக்ஷ்மிகரமான முகம்! மனதைத்தொடும் பதிவு.

துளசி: //என்னிடம் என் அம்மாவை நினைவுபடுத்தும் ஏதும் இல்லை(-:// ஏன் இல்லை? வாழ்வுமுறையை நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்களே!

என் அம்மாவின் சமையல்கலை எனக்கு ஓரளவுக்கு கைவந்திருக்கிறது!

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் பாரதி மணி சார்.
உங்க அம்மாவோட கலந்த சாதம் இன்னபிற வகையறாவோட நீங்க குடியரசு தினக் கொண்டாட்டத்தை டெல்லியில்(அனுபவித்த)கண்ட கதையை மறக்க முடியுமா.
துளசி நான் எல்லோரும் உங்க வீட்டுக்கு வரப் போறோம் பக்கோடா சாப்பிட;)
அம்மாவை நாங்கள் வினோலியா லக்ஷ்மி (என் ஐந்து வயதில்)என்றே நினைப்போம். உன்னை வச்சுதான் அவர் எழுதினாராம்மா என்று கேட்ட நினைவு இருக்கிறது:) அப்பா சிரித்ததாக ஞாபகம்.

சாந்தி மாரியப்பன் said...

புடவையின் பல அவதாரங்களை, வைரமுத்து அவர்கள் 'கருவாச்சி காவியத்திலும் சொல்லியிருப்பார்.

சாந்தி மாரியப்பன் said...

சொல்ல விட்டுப்போனது..
வல்லிம்மா.. உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
http://amaithicchaaral.blogspot.com/2010/02/blog-post_10.html

உங்களின் அந்தக்கால நினைவுகளை அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம்.விருப்பமிருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அமைதிச்சாரல், உங்க பதிவைப் படிச்சுட்டுச் சிரித்து முடியலை. கில்லாடிப்பா.
செடி நட்டு, பாம்பைத் தூக்கி என்னவெல்லாம் செய்திருக்கீங்க.
ஆங்கிலத்தில சொல்வாங்க. 'இட் இஸ் அ டஃப் ஆக்ட் டு ஃபால்லோ''
அப்படின்னு. கருவாச்சிக் காவியம் அம்மாவுக்கும் எனக்கும் பிடித்தது.அந்த மனுஷன் துவையல் அரைக்கிறதைச் சொன்னாலே வாய் ஊறும்.
ம்ம்ம்.
அழைப்புக்கு நன்றி மகளே.!

தக்குடு said...

பெங்களூருக்கு வேலை தேட நான் கிளம்பியபோது பையில் முதலில் எடுத்து வைத்த சாமான் அம்மாவோட ஒரு பழைய காட்டன் புடவை...:)(இரவு எனக்கு அதை கொஞ்சம் முகர்ந்து பார்க்கவேண்டும்) நல்ல பதிவு வல்லியம்மா!

மாதேவி said...

நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்தான்.

ஆடுமாடு said...

அம்மான்னா, சும்மா இல்லேம்மா!

வல்லிசிம்ஹன் said...

கடைசிப் பையன் இன்னும் செல்லம் இல்லையா. தக்குடு பாண்டி!!
நானும் அம்மாவின் பழைய புடைவகளைப் போர்வைகளாகத் தைத்து வைத்திருக்கிறேன். எல்லாம் ஒன்பது கஜம். அடக்கமாகப் படுத்துத் தூங்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மாதேவி.
சிலசமயம் இனிக்கும். இனிப்பதை மட்டுமே நினைக்கவேண்டும். அவர்கள் துன்பப்பட்டதை மறக்கணும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஆடுமாடு.
பல விஷயங்களில் என்னால் என் அம்மாவைப் போல இருக்க முடிவதில்லை.
அதனாலயே அவர்களை இன்னும் கூடுதலாக மதிக்கிறேன்.

Jawahar said...

ஐம்பதுகளில் எடுத்த போட்டோவா? அம்மாவின் புடவை என்பது ஒரு வித்யாசமான சுவாரஸ்யமான சிந்தனை. ரொம்ப ரசித்தேன்.

http://kgjawarlal.wordpress.com

வல்லிசிம்ஹன் said...

எப்படிச் சரியாகச் சொன்னீர்கள் ஜவஹர்! 1956ல் எடுத்த படம்தான் இது.

அதுவும் பக்கத்தில் நிற்கும் என் தோழியின் அம்மா சொன்னதால் அவர் மகன் எடுத்தார். ஒரு தலைவாரல் இல்லை,ஒரு புடவை மாற்றல் இல்லை. அப்படியே வந்தார்கள் . அந்த அண்ணாவும் போட்டோ எடுத்தான். பொற்காலம்தான்.

Kavi Ra said...

Then I had come to India with university recently shared an experience that will help you feel it..................

http://sarithram.blogspot.com/2011/11/blog-post_08.html