Follow by Email

Sunday, February 14, 2010

கத்திரிக்காய் ஊறுகாய்

சிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இது இன்னொரு விதம் .நம்ம ஊறுகாய் இது இல்ல.
பி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது.

கத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்:0)
*********************************************************************

கத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம்.
ஊறுகாய்னு
போடறதுனால உப்பு ,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி, மெந்தியப் பொடி,மஞ்சள் பொடி

எல்லாம் அளவோடு இருக்கணும். எண்ணெயும் நிறைய வேண்டும்.
இல்லாவிட்டால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காது.
இப்ப எங்க வழிக் கத்திரிக்காய் ஊறுகாய் பார்க்கலாமா.

பரிசோதனையாச் செய்யறவங்களுக்குக் குறைந்த அளவு ஊறுகாய்ப் போடும் அளவுகளைச் சொல்கிறேன்.
கத்திரிக்காய். அதுவும் இந்த
பச்சைக் கலரில்
***************
இருக்குமே அந்த கத்திரிக்காய்.

தேவையான அளவுகள்
***************

1, 6 எண்ணம் பெரிய இளம் பச்சை வண்ண நீளக் கத்திரிக்காய், பிஞ்சா இருக்கிறதாப் பொறுக்கி எடுத்துக்கணும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளணும்.
2,இந்த அளவுக்குத் தேவையான
உப்பு...................அரைக் கப்,
புளிக்கரைசல்.........அரைக்கப் (கெட்டியாக இருக்கணும்)
மிளகாய்ப்பொடி......அரைக் கப்
மஞ்சள் பொடி.........இரண்டு டீ ஸ்பூன்
வெல்லமும் பொடித்துப் போட்டுக் கொள்ளலாம்...சிறிதளவு.
நல்லெண்ணெய்..........400 கிராம்
கட்டிப் பெருங்காயத்தை வறுத்துப் பொடித்த தூள் மூன்று தேக்கரண்டி,
வறுத்துப் பொடித்த வெந்தயம்.............ஒரு தேக்கரண்டி பொடி.
வெள்ளைப்பூண்டு நறுக்கினது ஒரு கப்.
சின்ன வெங்காயம் நறுக்கினது இரண்டு கப்.(நிறைய இருக்கேன்னு தோணினால் ,கொஞ்சம்
குறைத்துக் கொள்ளலாம்) .ஆனால் இந்த வெங்காயம் அவசியம்.
இப்ப செய்முறைக்குப் போகலாமா.
கொஞ்சம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்க.:)

நல்ல சுத்தம் செய்த
இரும்பு வாணலில செய்தால் சுவை கூடும். இல்லைன்னால் கனமான வேற வாணலிலயும் செய்யலாம்.
அடுப்பில் வாணலியை ஏற்றிக் காய்ந்ததும் கொஞ்சமாக நல்லெண்ணெயை விட்டுக் கொண்டு,
அது காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தையும், பூண்டுத் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கி முடியும் நேரம் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,பெருங்காயத்தூள்
மூன்றையும் சேர்த்து நன்றாகப்பிரட்டி எடுக்க வேண்டும்.
இந்தக் கலவை ஒரு அரைகுறையாக அரைத்த சட்டினி ஸ்வரூபத்தில் வந்துவிடும்.
அப்பொழுது நாம் நறுக்கி வைத்த கத்திரிக்காயை இந்தக் கலைவையில் சேர்க்கணும். அடுப்பை அணைத்து விட்டு,
இன்னோரு வாணலியில் மிச்சமிருக்கும் எண்ணெயை விட்டுக் காய்கிற வரை பொறுமை காத்துக் கொஞ்சம் கடுகு போட வேண்டும். வெடித்ததும்(கடுகு)
அடுத்த வேலை புளிக்கரைசலயும்,உப்பையும் சிறிதளவு வெல்லத்தையும்
சேர்த்து, (அடுப்பை சிம்மரில் வைத்துக் கொண்டு பிறகுதான் புளிக்கரைசலை விடணும்)
கொதிக்க வைக்கணும்.
இது புளி வாசனை போகக் கொதித்ததும் இந்த
அடுப்பை அணைத்து , கத்திரிக்காய் இருக்கும் அடுப்பை ஏற்றணும்.கத்திரிக்காயும் மற்ற எல்லா உட்பொருள்களும் கலந்து ஒரே கலவையாகத் தெரியும் வரைக் கிளற வேண்டும்.
முக்கால் பதம் வந்ததும் புளிக் கலவையை ஊற்ற வேண்டும்.
அடுப்பு சிறிய அளவில் எரியட்டும்.
எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது,நன்றாக ஊறுகாயின் மேல் மிதக்கும் அளவில் அடுப்பை அணைத்துவிடலாம்.
ஆறிய பிறகு நல்ல ஜாடியோ, இல்லை கண்ணாடி பாட்டிலிலோ முக்கால் அளவுக்கு நிரப்பி வைக்க வேண்டும்.
ஒரு சிறிய சுத்தமான வெள்ளைத்துணியினால் வேடு கட்டி ,நல்ல இறுக்கமான மூடி போட்டு மூடிவைக்கலாம்.

இது எங்க வீட்டில் மிகப் பிடித்த ஊறுகாய்.
இதைப் பிடிச்சு சாப்பிடறவங்களுக்கு இன்னிக்கு மண நாள். எங்கயோ அமெரிக்காவில் இருந்தால் எப்படி அனுப்பறது. காக்காய் காலில் தான் கட்டி அனுப்பணும்:)


எல்லோரும் வாழ வேண்டும்.

25 comments:

வல்லிசிம்ஹன் said...

தமிழ்மணத்தில அளிக்க முடியவில்லை. இருந்தாலும் முழ்ஹ்ப் பதிவும் தெரிகிறது என்று நம்புகிறேன்.

துளசி கோபால் said...

ஆஹா.... முதலில் எங்க வாழ்த்து(க்)களைப் பிடியுங்க.

அஞ்சு நூறா? அம்மாடியோவ்!!!!!!

திருமணநாள் கொண்டாடும் கத்தரிக்காய்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

ராமலக்ஷ்மி said...

ஐநூறாவது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள்!

மணநாள் காணும் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்!

செய்முறைக்கு நன்றி. படங்கள் அருமை.

காக்காய் நமக்கு பதிவும் மின்மடலும் வெப்கேமும்தான்:)! நீங்க நினைத்துக் கொண்டதே அதை சாப்பிட்ட உணர்வைக் கொடுத்திடும் அவர்களுக்கு!

ராமலக்ஷ்மி said...

முழுப்பதிவு தெரிவதோடு மட்டுமின்றி வாக்கும் அளிக்க முடிகிறதே. அப்போ தமிழ்மணத்தில் இணைந்திருக்கத்தானே வேண்டும்?

Geetha Sambasivam said...

வல்லி, மகளுக்குத் திருமணநாள் வாழ்த்துகள். கத்திரிக்காயை இம்மாதிரிப் பூண்டு சேர்க்காமல் செய்யறதை கொத்சு என்று சொல்லுவோம், வெங்காயம் விருப்பம்போல் சேர்ப்பதுண்டு, ரொம்ப நன்றிம்மா, அரிசி உப்புமாவுக்குத் துணை போகும், சம்பா சாதத்துக்கும் துணை!

Geetha Sambasivam said...

கத்திரிக்காய் போட்டுப் பண்ணி இருக்கிறதாலே அம்பிக்கு அனுப்பக்கூடாதோ???? அம்பிக்கு ரொம்பப் பிடிக்குமே?? :P:P:P

தக்குடு said...

வல்லியம்மா, ஒரு பாட்டில் கத்திரிக்காய் ஊறுகாய் மறக்காம அம்பிக்கு கொடுத்து அனுப்புங்கோ! அப்புறம் பாருங்கோ! உங்க ப்ளாக் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டான்.....:)

கண்மணி/kanmani said...

//அத்தோட இது என் வலைப்பூவின் ஐந்நூறாவது பதிவு என்பதும் எனக்கு சந்தோஷமே.
பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றி.//

யாரங்கே எங்க வல்லிம்மாவுக்கு சுத்தி போடுங்க 500 ஆ...ஆ..ஆஅ...

கண்மணி/kanmani said...

சும்மாவே கத்தரிக்காய்னா உயிரை விடுவேன்.ஊறுகாயா...நாக்கு ஊறுது....

கத்தரிக்கா சாப்பிட்டா அலர்ஜி அரிக்குமாம்.சொரி ராணி ஆனாலும் கத்தரி பிடிக்குமே

கண்மணி/kanmani said...

//Blogger துளசி கோபால் said...

ஆஹா.... முதலில் எங்க வாழ்த்து(க்)களைப் பிடியுங்க.

அஞ்சு நூறா? அம்மாடியோவ்!!!!!//

இதானே வேண்டாங்கறது!நாம மட்டும் சீக்கிரம் தொட மாட்டமா 500ஐ

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, ஆயிரம் பிறை(பதிவுகள்) காணப் போகும் அம்மா பேசறாங்கப்பா.
'தோடா'ன்னு சொல்லணும்னு ஆசையா இருக்கு துளசிமா.
நன்றி எல்லாவற்றுக்கும்.

pudugaithendral said...

ஆஹா 500க்கு வாழ்த்துக்கள் வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

ஆமாப்பா ராமலக்ஷ்மி,முதலில் ஏதொ நெட் கனெஷன் இல்லைன்னு எரர் செய்தி
வந்தது. தமிழ்மணத்துக்குக் கொஞ்ச நேரம் கழித்துப் போய்ப் பார்த்தால் பதிவு வந்து இருக்கு.

இப்ப ஊறுகாய்க் கொரியர் வந்தாச்சு. என்ன... ஆயிரக்கணக்கில் கேட்கிறார்கள்.
அவர்களே போட்டு அனுப்பியும் வைக்கிறாற்களாம்.:)
வாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

கீதாக் குழந்தை வந்து பார்த்ததில் சந்தோஷம். எனக்குக் கத்திரிக்காய் ரொம்பப் பிடிக்கும்பா.
மகனாருக்குப் பிடிக்காது. பொண்ணுக்குப் பிடிக்கும்.
உங்க வாழ்த்துகளை அப்படியே அனுப்பி வைக்கிறேன்.
இந்த ஊறுகாய் திருச்சியில் இருக்கும்போது கற்றுக் கொண்டது.
இவருக்குப் பூண்டு ரொம்பப் பிடிக்கும்.
உங்க சார் செய்த கொத்சும் படிச்சேனே. சூப்பரா இருந்தது. அதுதான் எனக்குப் பிடிக்கும்.

எல் கே said...

வாழ்த்துகள் . எனக்கும் கத்திரிக்காய் பிடிக்கும் .. தங்கமணிய போட சொல்றேன் சரியாய் வராட்டி உங்க கிட்ட கேக்கறேன்

வல்லிசிம்ஹன் said...

வரணும் தக்குடு பாண்டிப் பிள்ளையாரே.
அம்பிக்குக் கத்திரிக்காய் பிடிக்காதா. அடப் பாவமே உலக மகா சுவையை இழந்து விட்டாரே:)
எதுக்கும் படத்தில இருக்கிறா பாட்டில் ஒண்ணை அனுப்பிப் பார்க்கிறேன்.
பிடிச்சுப் போயிடும்.
அம்பிக்கு நேரமே இல்லையாம். அதனால் இங்க வரதே இல்லை.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கண்மணி. சில பேருக்குத் தாம்பா அலர்ஜி. தோல் ப்ரச்சினை எல்லாம் வரும்.
இந்த ஊறுகாய் பச்சைக் கத்திரிக்காய் இல்லையா. இதற்கு அலர்ஜி கிடையாது.


நெல்லைல ஆற்றங்கறைக் கத்திரிக்காய் கிடைக்குமே. அதுகூட நல்லா இருக்கும்.வாசனை தூக்கும் குழம்பு வைத்தாலே.கேக்கணுமா.
வாழ்த்துகளுக்கும் சுத்திப் போட்டதுக்கும் நன்றி.
சத்தமில்லாமல் ஐந்நூறைத் தாண்டுபவர்கள் எத்தனையோ இருக்கிறார்கள்.:)

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் செய்து பார்க்கச் சொல்லுங்க எல்.கே.
ஏதாவது சந்தேகம் இருந்தால் எழுதவும். நன்றி

வல்லிசிம்ஹன் said...

தென்றல் வாங்கப்பா,.எண்கணக்கு அதிகமாகி பதிவுகள் நிறைய வருவதை விட அர்த்தமுள்ள பதிவுகளைப் போட முடிந்தால் இன்னும் சந்தோஷமாக இருப்பேன்.
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.

Ezhilarasi Pazhanivel said...

வாழ்த்துக்கள் மேம்! என்னோட பேவரைட் கத்திரிக்காயில் ஊறுகாயா?
ட்ரை பண்ணி பார்க்கிறேன்! ஸ்விஸ் வரும்போது கட்டாயம் தெரியப்
படுத்துங்கள்.
அன்புடன், எழிலரசி பழனிவேல்

Jayashree said...

Ada!! kuttaiyaa, nettaiyaa, gunda , olliyaa bottle la poattu marketting ku thayaar aakarathaa " thaayaar thaligai.com" la?:))saaththula kalantha karamudhu aakidum easy!!.Good Good.9 manikku vanthannikku samaikka vaendam:))))

Enga oorula aubergine relish nu onnu pannuva :( paeru ennamoa alli pidungi thingara maathiri!! vinigar orupakkam, oruvithamaana vengaayam orupakkama uppillaama, sappillama...ah! ooh! nu ellam pukazhum! namma ulla soakama, velila artificiala smile kuduththundu nikkanum !! vaera enna seyya? sari.. athu intha manushalukku pidikkum:)

Amma ,penn iruvarukkum manamaarntha vaazhththukkal!!

மெளலி (மதுரையம்பதி) said...

கலக்கல்ஸ், 500க்கு வாழ்த்துக்கள் வல்லியம்மா.....இப்போத்தான் 150 தாண்டியிருக்கேன்.....:)

ஊறுகாய் நன்றாக இருக்கு படத்தில் பார்க்க.. :)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா எழிலரசி.அதுக்கும் ஒரு சான்ஸ் வரும்னு தான் நினைக்கிறேன். ஸ்விஸ் வந்தால் கட்டாயம் உங்க ஊருக்கும் வரேன்.ரொம்ப நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

ஜயஷ்ரீ வெளியூர்னு போயிட்டா எல்லாத்தையும் ரசிக்கத் தான் வேண்டி இருக்கு.கிடைத்ததை அனுபவிக்க நீங்களெல்லாரும் நன்றாகவே பழகிக் கொண்டு விட்டீர்கள் இல்லையா.
வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றிப்பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அன்பு மௌலி.

இன்னும் எவ்வளவோ எழுதி இருக்கலாம்.அவ்வப்போது தோன்றும் யோசனையில்
எழுதும் எழுத்துகள். சில சமயம் நல்ல படியாக அமைகின்றன.
உங்களுக்கெல்லாம் அலுவலக வேலை வேறு. அதையும் செய்து கொண்டு நல்ல சத்தான பதிவுகளும் போடுகிறீர்கள்.
அதைத்தான் பாராட்ட வேண்டும். நன்றிம்மா.