வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள் போட்டோ எடுத்தாகி விட்டது.
முதல் இரண்டும் நான்காவதும் எங்கள் தங்க சிங்கம் செதுக்கிய
மரத்திலிருந்து வெளிவந்த கரடி,
ஆதிசேஷன் எனப்படும் அல்சேஷன்,
அரபு நாட்களில் வளர்ப்புப் பறவையாக இருக்கும்
கைட்(kite) என்கிற பருந்து.
அடுத்த படம் பிறந்த நாள் கேக்.
உங்க எல்லாரையும் கூப்பிட்டுக் கொடுத்து இருக்க வேண்டும்:))
பங்கெடுக்கப் படங்கள் கைவசம் இருந்தது பற்றி மகிழ்ச்சிதான்.
12 comments:
Happy Birthday To You
Happy Birthday To You
Happy Birthday Dear Vallimma
Happy Birthday To You!
ஹேப்பி பர்த்டே வல்லிம்மா!!
(பின்ன கேக் எல்லாம் குடுத்தா பாட்டு பாடி வாழ்த்து சொல்லாம சாப்பிட மாட்டோமுல்ல!)
நன்றி கொத்ஸ் மாமா.
என்னோட பர்த்டே கேக் அது.
பாட்டிக்கு ஏப்ரில் தான் அறுபது ஆகப்போறது.:))))
இப்படிக்கு நேஹா பாப்பா.
வரணும் கொத்ஸ் ,
எங்க கரடி, நாயைப் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே:(
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போநார்னு சொல்ற மாதிரி நானும் படங்களைப் போடறேன்:))
நேஹா பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிருங்க வல்லியம்மா...
உங்கூட்டு சிங்கம் கலக்கிருக்காங்க. அவங்களுக்கு என் பாராட்டு.
சொல்லவந்ததை சொல்ல மறந்துட்டேன். நாய் மரபொம்மை வேற கோணத்திலே எடுத்திருந்தா.. இன்னும் நேர்த்தியா வந்திருக்கும். நேரமிருந்தால், திரும்பவும் முயற்சி செய்து பாருங்களேன்.
யானை பொம்மை யார் செதுக்குனது?
வரணும் வரணும் காட்டாறு.
எல்லாமே சிங்கம் சார் செய்ததுதான்.
ஊருக்கு வரும்போது இங்க இருக்கிற பொம்மைகளைப் பாருங்க.
நான் போட்டிக்கு அனுப்பலைப்பா.
சும்மா போட்டேன்.
நேஹா பாப்பாகிட்ட சொல்லிட்டேன்.
ஹாப்பி பர்த்டே தினம் பாடினாலும் அதுக்கு சந்தோஷம் தான்.
ஒரு பெருமையா முகத்தை வச்சுக்கும்.:))
நன்றிம்மா.
பொம்மை எல்லாம் நல்லா செதுக்கி இருக்கிறார். ரொம்ப நல்லா இருக்கு,
happy birthday to Neha pappa and advance 60th b'day wishes to valli madam :p
முந்தைய பதிவு இப்ப தான் படிச்சேன். என்ன செய்றது? பொறுளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை!னு கீதா பாட்டி, சாரி, அவ்வையார் சொல்லிருக்காங்க இல்ல. :p
இந்த காலத்துல பொருளும் வேண்டி இருக்கு, அருளும் தேவைபடுது.
வல்லியம்மா நாமலும் டேக் பதிவு போட்டு அழைக்கிறோம்ல.
வந்து எங்க ஜோதியில கும்முங்க.
http://kouthami.blogspot.com/2008/01/blog-post_12.html
கொத்ஸ் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்!
படங்களில் மற்ற வேண்டாத பொருட்கள் நிறைய வருவதால் படங்களின் அழகை குறைக்கிறது, குளேசப்பில் எடுக்க டிரை செய்யவும்!!!
கண்மணி,
டா(டே)க் ஏற்றுக்கொண்டோம். நீவீர் எம்மை இவ்வாறு கௌரவித்ததற்கு
மிக்க நன்றி.
எழிதிடலாமே:)))
கும்மி,கோலாட்டம் எலாம் பொங்கல் நாளில் செய்ய வேண்டியதுதான்:))
வாங்கப்பா குசும்பன்.
இதற்கு மேல் எனக்கு ஒழுங்கு படுத்தத் தெரியவில்லை.
போட்டிக்கு அனுப்பப் போறது இல்லை.சும்மாக் கோசரம் போட்டேன்:))
Post a Comment