எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்Saturday, October 31, 2015
Saturday, October 10, 2015
சென்னை வரும் நேரம்.......
நாளை பதிவர் மா நாட்டுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சென்னைக்கு 12 ஆம் தேதி மதியம் வருகிறோம். 16 ஆம் தேதி வீட்டுக்கு வருகிறோம். வைத்தியர் விசிட், யுஎஸ் விசா, ஸ்விஸ் விசா எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வீட்டு சாமிகளுக்கு சுண்டல் செய்து,
அதற்கப்புறம் வருகை தரும் என் சாமி எஜமானருக்கு
வருடத்துக்கான
உபசாரம் செய்து .
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் கண்டு மீண்ட பிறகு
நட்புகளையும் சந்திக்க ஆசை.
எதெல்லாம் நிறைவேறுகிறதோ எல்லாம் அவன் கையில்.
கடமை பூர்த்தியாக வேண்டும்.
வணக்கம் வாழவைக்கும் சென்னை.
உனக்கு ஈடு இல்லையே.
Friday, October 09, 2015
நவராத்திரி நாட்களுக்கான வாழ்த்துகள்..
| Add caption |
Thursday, October 01, 2015
கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே அங்கு வேரில் பழுத்த பலா.....
முதலில் எடுத்தது திரு ஜெயகாந்தனைத்தான். அதில் முதல் கதையே என்னை பதினைந்து வயதில் என்னைப் பாதித்த யுகசந்தி.
கௌரிப்பாட்டி கடலூருக்கு மகன் வீட்டுக்கு வரும் காட்சி. ஒவ்வொரு வரியிலும் உயிர். பாட்டியின் ,வியர்வை, அவள் முகப் பரு, ஸ்தூல சரீரம், 70 வயதான மூப்பு, வெறுங்காலோடு அவள் வெய்யிலில் நடப்பது எல்லாமே என்னைப் பழங்காலத்துக்கு அழைத்துச் சென்று விட்டன.
பேத்தியை நெய்வேலியில் விட்டு விட்டு மகன் வீட்டுக்கு வந்திருப்பது தலைமுடி க்குச் சீரமைப்பு வேலை செய்யத்தான்.
தன் 37 வயதில் கணவனை இழந்த என் பாட்டி நினைவுக்கு வந்தார்.
அப்போது இந்தத் தண்டனையிலிருந்து அவரைத் தப்பிக்க வைத்தது அவரது கடைசி மகன்.ஏழு வயது சிறுவன்.
அன்றிலிருந்து எந்த ஒரு திருமணத்துக்கும் சென்றதில்லை. என் திருமணத்துக்கு வந்தவர் மேடைக்கு வரவில்லை.
என்ன உலகமடா இது. அப்படிக்கூடவா பெண்களை அடக்கி வைக்கும்.
கதையில் குரிப்பாட்டியின் பேத்தியும் 18 வயதில் கணவனை இழந்துவிடுகிறாள். முயற்சி செய்து ஆசிரியர் தொழிலில் அமர்கிறாள். அவளுக்குத் துணையாகப் பாட்டியும் நெய்வேலிக்குச் சென்று விடுகிறாள். இப்போது அவளெடுத்திருக்கும் ஒரு முடிவு குடும்பத்தைத் திகைக்க வைக்கிறது. பாட்டிக்கு மட்டும் அவள் நிலைமை நன்கு புரிகிறது.
யாரும் தனக்காக எதையும் தியாகம் செய்யவில்லை என்ற கடித வரி, பேத்தியின் மனக் குமுறலைப் புரியவைக்கிறது.
விளைவு , அடுத்த நாள் காலை, தலைமுழுகச் சொல்லும் மகனை பாசத்துடன் பார்த்து,
உன் வழியில் எனக்கும் வேணுமானால் தலை முழுகிவிடு
நான் என் பேத்தியோடு செல்கிறேன் என்பவளை, அன்று படிக்கும்போதும் படித்துப் பூரித்தேன். இன்றும் அதே உணர்வு.
இந்த எழுத்து யாருக்கு வரும்.
நன்றி ஜெயகாந்தன் ஐயா.
Friday, September 25, 2015
கதிரவனின் அருள் மழை
| இருக்கும் இடம். |
| இருந்த இடம் |
Wednesday, September 23, 2015
துளசிதளம்
துளசி தளத்துக்கு வாழ்த்துகள்.. 11 வருடங்கள் அசராமல் பதிவுகள். சரித்திர
வரலாறுகள், ஸ்தல புராணங்கள்,,வாழ்க்கை சம்பவங்கள், நியூசிலாண்ட் நிகழ்ச்சிகள்,
அங்கு வருகை தரும் வி ஐபிகளுக்கு வரவேற்பு,
அங்குள்ள அரசியல்,, தன் செல்லங்கள் வந்த கதைகள்,
பதிவர் சந்திப்புகள் இத்தனையும் வேறெங்கும் தேட வேண்டாம்.
அவரது பதிவுகளைப் படித்தாலே போதும்.
இதற்கு நடுவே உலக வருத்தங்களைப் போக்கும் சபதம்
வேறு எடுத்துக் கொண்டு இருக்கும் துளசி உதவி செய்யும் சங்கங்கள் அனேகம்.
உங்களை என் தோழியாக அடைந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏதோ பூர்வ ஜன்ம பந்தம் நம்மை இணைத்திருக்கிறது .
இன்னும் பல ஆண்டுகளுக்கு உங்கள் தளமும்,கோபாலும் ,நீங்களும்
தமிழுடன் உறவு கொண்டு எங்களை மகிழ்விக்கணும்.
Tuesday, September 22, 2015
மனம் நிறை வாழ்த்துகள் துளசிக்கும் கோபாலுக்கும்
| Add caption |
Subscribe to:
Posts (Atom)
ஶ்ரீனிவாசா கோவிந்தா ஶ்ரீ வேங்கடேசா கோவிந்தா.
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக நலமாக வாழ வேண்டும். பெருமாளுக்கு நாராயணன், வெங்கடேஷ்வரா, பாலாஜி, ஸ்ரீஹரி என எத்தனையோ திருநாமங்கள் இருந்தாலும் ...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...


