எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்![]() | ||||||||||||||||||
| இந்த நான்கு வருடங்களில் நான்கைந்து தடவை வந்து சென்றேன். |
இந்த நான்கு வருடங்களில் நான்கைந்து தடவை வந்து சென்றேன்.
அப்போதெல்லாம் அனுபவிக்காத தண்ணீர் கஷ்டம் இந்தத் தடவை முறுக்கி
விட்டுவிட்டது இயல்பான வாழ்க்கையை.
கிணறு தூர் வாரியும் மஞ்சள் வண்ணத்தில் தான்
தண்ணீர். சென்னை மெட்ரோ உதவியில் சில நாட்கள் ஓடின.
இந்தத்த் தொந்தரவு பொறுக்க முடியாமல் குடும்பத்தில் சில பேற் பிறந்தகலம் சென்றனர். குழந்தைகள் மட்டும் என்னுடன் தங்கினர்.
அவர்களுக்கு எல்லாமே உத்சாகம்தான்.
குழந்தைகள் கபடில்லாத அன்பை மனம் கொண்ட அளவு அனுபவித்தேன்.
பழைய படங்களைச் சேமித்தேன்.
நல்ல நிகழ்வுகள் அல்லாத நிகழ்வுகள் எல்லாம் மனதைப் பக்குவப் படுத்தும் என்றே
நினைக்கிறேன்.
ஒரு சில நண்பர்களைத் தவிர மற்றவர்களிடம் அளவளாவ முடியவில்லை.
கொடுப்பினை இருந்தால் மீண்டும் சந்திக்கலாம்.
இறைவன் அனைவரையும் காக்கட்டும்.



