Monday, July 14, 2014

காலையும் நீயே மாலையும் நீயே

நான் இல்லாவிடில் இத்தனை அழகு  உனக்குக் கிடைக்குமா.
தோட்டத்தின் கோடியில்  இருக்கும் மரகதம்
Add caption
புல்வெளிப் புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி
Add caption
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
இயற்கை அன்னைக்கு எத்தனை வண்ணங்கள்.
Addcaption
சாளரத்தைதொட்டுச் செல்லும் கிரணங்கள்
இந்த இலைகளும் எத்தனை வண்ணம்தான் காட்டுமோ
 
புனித மலர் கண்ணுக்குக் குளிர்ச்சி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாலை வண்ணம்

Wednesday, July 09, 2014

நதியோரம் ஒரு நடை

நேப்பர்வில்லின் போர் வீரர்களுக்கான   சின்னம்.
நன்றி மைக்கெல். நதிக்கு மேல்  பாலம் .அது ஒரு அழகு. நின்று கொண்டு நதியையும் ஒலியையும்           கேட்கும் பொழுது நிம்மதி.
அந்திமாலையின் பொன்னிறங்கள் அழகு.
ஐந்து  படுக்கை அறைகள்   கொண்ட   பெரும் வீடு. நதிக்கரை வாசம்.
இனிமையான இசை   பின்னணியில்  இந்த     ஊற்று மகிழ்ச்சிதரும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே                                                    





நேப்பர்வில்லுக்கான    ஒரு நதி. அதைச் சுற்றி கேளிக்கைகள் கொண்டாட்டங்கள்.    உணவு விடுதிகள்,நதியில் ஆழமில்லாத இடத்தில் விளையாடும் குழந்தைகள் பெரியவர்கள். ஆழநீரில் நீந்தும் விடலைகள். எல்லாரையும் கண்காணிக்க  லைஃப் கார்டுகள்       நதியோரம்ம்நடக்க   பாதைகள். நதிக்கு மேலே பாலங்கள். ஒளிவுமறைவான இடங்களில் புல் தரைகளில் காதலர்கள்.   என்போன்றவர்களுக்காக இசை. உட்கார்ந்து கேட்க  சாய்மானங்கள். இதமான   வெய்யில்.




புல்தரையில் ஃப்ரிஸ்பி விளையாட நச்சு பண்ணும் பேரன். கண்டும் காணாமல் அம்மாவுக்காக வந்த பெரிய பேரன்..கையில் க்ளிக்கும்  அலைபேசி.                    அவ்வப் பொழுது பாட்டியின் கைகளை இறுகப் பிடித்து,படிகளில் நிற்கும்   போது  தடுக்காமல் தடுக்கும் ஆபத் பாந்தவன்.  ஒரு சுற்று  சுற்றிவர இரண்டு மணிநேரம் பிடித்தது.  மணிக்கூண்டில் ஏடெல்வைஸ்     பாடல்.   எல்லாம்  பிடித்திருந்தது.    மிதந்து வந்த  சிகரெட்டின் மணம்    சிங்கமும் எங்கயோ இருப்பது போலப் பிரமை.        


https://docs.google.com/file/d/0B0EMbkYS23jkUzZ0YzFyMjRCeXM/edit



Tuesday, July 08, 2014

வெள்ளையும் மஞ்சளும் பிட் போட்டி ஜூலை



மஞ்சள் வெள்ளை ரோஜா
Add caption

Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Monday, July 07, 2014

சுவாமி நாராயணன் கோவில் சிகாகோ

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption

Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption
Add caption

Saturday, July 05, 2014

ஜூலை நான்கு இரவு வாணவேடிக்கை

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption

Tuesday, July 01, 2014

புயல் சூறாவளி,இடி,மின்னல் சைரன்கள்

Add caption
Add caption
நிலவறை.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்த ஊரில் எல்லாம் மெகா சைஸ்  என்று எப்பவும் சொல்வார்கள்.  நேற்று இரவு வந்த சூறாவளி டொர்னாடோவாக மாறாமல் போனது இங்கிருப்பவர்கள் செய்த புண்ணியம்.  சாயந்திரம் வெய்யில். ஐந்த மணிக்குக் கருமேகம். ஆறுமணிக்கு தொலைக்காட்சியில்    வார்னிங்.   ஒரு பயங்கர சூழலுக்குத் தயாரக இருங்கள் என்று செய்தி மிரட்டல்கள். மாப்பிள்ளை  இன்னும் வந்து சேரவில்லை., தூறல் போட ஆரம்பித்தது. சற்றே கண்ணாடி வழியாகப் பார்த்த என்னை மிரட்டியது கறுப்பு மேகம். எங்கிருந்து வந்தது. அடுத்த நிமிடல் பளீர் என்று மின்னால். இடிக்குக் காத்திருக்கவில்லை நான். ஓடியே விட்டேன்   குளியறைக்குள். வெளியில் இருந்து பெண் 20 மைல் தள்ளிப் புயல் ம. இங்கு ஏழரைக்குத் தான் வரும் என்றாள்.




I  refused to believe . நம்   உள்ளம் தான்  சொல்லுமே.  தி.ஜானகிராமனும் நானும்  அறையில் கதவைச் சாத்திக் கொண்ட அடுத்த நிமிடம் சரைன்கள் ஊளையிட ஆரம்பித்தன. நிற்காமல் இடைவிடாமல் சத்தம். குழந்தைகள் கலங்க,நல்ல வேளை மாப்பிள்ளை வந்து  கராஜுக்குள் வண்டியையும் நிறுத்திவிட்டார். .  வந்தவர் கைகால் கழுவிக் கடவுளைக் கும்பிட்டுவிட்டு மாடியேறி, அங்கிருக்கும் முக்கிய பொருட்களை எடுத்துக் கொண்டு ,பையனிடம்   தலையணை, போர்வை, ஸ்லீப்பிங் பாக்ஸ், பாட்டிக்கு  கம்ஃபர்ட்டர் என்று ஆணையிட  எல்லாம் பத்து நொடிக்குள் கீழே வந்தன. பெண் முகம் இறுகி  இருந்தது.ஆறுதல் சொல்லிவிட்டு  என்னைப் பார்த்தாள். அதற்குள் நான் என் இரவு உடைகள் மருந்து,புஸ்தகம் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளஅவசரமாகப் படியிறங்கி. பேஸ்மெண்டின்   சின்ன அறையில் புகுந்து  கொண்டோம்.  அடுத்த  நொடி, வீடே குலுங்குவது போல ஒரு சத்தம்.சிலீரென்று.எங்கோ மின்னல் தாக்கி இருக்கிறது. நாளை தெரியும் என்றார் மாப்பிள்ளை.



w  நான் அந்த அறைக்குள் இன்னும் உள்ளே  போய்விட்டேன்.அமைதியாக இருந்த சில நொடிகளில்  மின்சாரம் உயிர் கொண்டது.   நிலவறை சில்லென்று இருந்தது.  எப்போ புயல் நிற்கும் என்று  கணினியை வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தார் மருமகன். இன்னுமிருபது நிமிடங்கள் .நாம் மேலே போய் சாப்பிட்டு வந்துவிடலாம் என்றார். ஏன் என்றால் அடுத்து இன்னோரு  புயல் 9 மணிக்கு வரப் போகிறது என்று ரேடாரைக் காண்பித்தார்.. நான் பேரனையும் மடியில் வைத்துக் கொண்டு ராமஜபம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  பாட்டி  நதிங் வில் ஹாப்பன். பயப்படாதே என்கிறான் சின்னவன். எனக்குச் சத்தம் பிடிக்காதுடா. பயமில்லை என்றேன்.

ஓர்  அமானுஷ்யமான அமைதி. சரி நான் போய் சாப்பாடு சுடவைக்கிறேன். அம்மா சீக்கிரம் மேலவந்து சாப்பிடு என்றபடி பெண் மேலே செல்ல எனக்குத் தயக்கம். இடிக்கு என்னை மிகவும் பிடிக்கும் .என்னைக் கண்டால் ஒருதடவையாவது உறுமும். அதே போல தலிக்கு மேல் ஒரு கடகடா. நான் அவசரம்மாகமணத்தக்காளி தயிர் சாதத்தை முடித்துக் கொண்டு மீண்டும் கீழே அடைக்கலம். அதற்குள் பேரன் அருமையாக மெத்தைகளை விரித்து  தலையணையெல்லாம் போட்டு வைத்திருந்தான்.  பாட்டி நாங்கள் பன்னிரண்டு மணிக்குத் தான் மாடிக்குப் போவோம் . அதுவரை நீ இங்கயே தூங்கு என்றான்.   அதுவரை ஸ்டார்ம் வாட்ச்  என்று புரிந்து கொண்டேன்.




ஏன் பாட்டி  இவ்வளவு மின்னுகிறது. என்கிறது சின்னது. மேகமெல்லாம்   ஒண்ணுக்கொண்ணு பேசிக்கும்பா.  அப்போ இடியும் அங்கேயே இருக்க வேண்டியதுதானே ஏன் கீழ வருது.வெரி பேட்  என்றது பாவம்.   அவன் அம்மா.இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது ராஜா. வீ  ஹேவ்    டு பி ரெடி  அண்ட் அவேர்  வாட்ஸ் ஹேப்பனிங். பிறகு அவன் அண்ணாவோடு   விளையாட ஆரம்பித்துவிட்டான். நான் படுக்கையில் படுத்தவள் தான். தூங்கிவிட்டேன்.                                                12 மணி இரவு. பெண் மெல்ல எழுப்பினாள். மழைதாம்மா பெய்கிறது. நாம் மாடிக்குப் போய்த் தூங்கலாம்  என்றாள்.   திருப்பி வராதுன்னு என்ன நிச்சயம் என்றேன். அது கிழக்கே போய் விட்டதுமா. இனிவராது  என்று சமாதானம் சொல்ல என் போர்வை,மருந்துகள் சகிதம் மாடியேறினேன்.     உடம்பெங்கும் தாள முடியாத வலி.    எனக்கு மட்டும் இல்லை அனைவருக்கும் தான்.


முதுமையில் வேண்டும் இனிமை

வல்லிசிம்ஹன் முதுமை சிறப்பு .3 Vallisimhan எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்.   வந்து இரண்டு நாட்களுக்குப் பேச நிறைய விஷயங்கள் இருந்தன அம்மாவுக...