Sunday, March 20, 2011
Tuesday, March 15, 2011
அணு உலைகள் தரும் பாடங்கள்
ஆழி அலைகள் கண்டு கண்டு கண்ணே பழுதானது.
மனமோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை உள் வாங்கிக் கொண்டது.
இத்தனைக்கும் நான் ஒரு பார்வையாளி மட்டுமே.
ஜப்பானின் பேரிடர் முப்பதடி அரக்கனாக பத்தாயிரம் கரங்கள் கொண்ட
கார்த்தவீர்யார்ஜுனனாக
ஆவேசத்துடன் நகரங்களையும் , உயிர்களையும், பெரிய பேருந்துகளையும்,
கப்பல்களையும் விழுங்கிய காட்சி,இனி மனதை விட்டு அகலுமா என்பது சந்தேகமே.
ஆனால் அதைவிட மோசமான செய்தி இந்த அணூலைகளின் வெடிப்பு. ஒன்றல்ல மூன்று.
இன்னும் அதிகார பூர்வமாக அவர்கள் அதை வெளியிடாவிட்டாலும்,
அணு உலைபற்றிய விஞ்ஞானம் அறிந்தவர்கள் வெளியிடும் அறிக்கைகள்
மனதைக் கலக்குகின்றன.
நம் ஊரில் சுனாமி வந்த போது ,கல்பாக்கம் அணு உலை பற்றிய கவலை
இருந்த போதும், அது சீக்கிரமாக அடங்கி விட்டது. அடக்கப் பட்டுவிட்டது.
நமக்குத் தான் நம் வாழ்க்கையை நடத்த வேண்டிய அவசரம் இருக்கிறதே...
சமூக அலுவலர்கள்,என் ஜி ஓஸ், கருணை உள்ளம் கொண்ட தனிப்பட்ட
மனிதர்கள். இவர்களின் சேவைக்கு நம்மால் முடிந்த அளவில் ,
பணமும் உடைகளும், பாத்திரங்களும் கொடுத்தோம்.
இப்பொழுது நடந்திருக்கும் அழிவு, ஆபத்தையும் பெரிய அளவில் கொண்டுவந்திருக்கிறது.
எல்லோராலும் போற்றப் பட்டு நாடு முழுவதும் மின்சாரம் அள்ளிக்
கொடுக்கப் போகும் அணு உலைகள்.
அவைகளே இப்பொழுது உயிருக்கும் உலை வைக்கும் அபாயங்களாக நொடிக்கு நொடிக்கு
மாறி வருகின்றன,.
எங்கள் பெற்றோர் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தார்கள். எங்களுக்கு மஞ்சள் பல்ப்
வெளிச்சம்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு பால் வண்ண மெர்க்குரி விளக்கு ஒரே ஒரு கூடத்துக்கு.
நாங்கள் சந்தோஷமாகவே வளர்ந்தோம்.
பிறகு வந்தவை அணு மின் உலையும் அதன் அற்புதங்களும். நாமும் வளர்கிறோமே
என்கிற பெருமை. மும்பையில் பாபா அணு உலை.
போக்ரானில் அணு குண்டு வெடிக்கப் பட்டு நாமும் அணுஇயக்க நாடுகளில்
பெருமைப் பட்டுக் கொள்ள இன்னோரு இறகு.
பிறகு வந்தது ரஷ்யாவின் செர்னோபில்.
அதில் இருந்து மீண்டவர்கள் கொஞ்சம். மீண்டவர்களில் புற்று நோயால்
பாதிக்கப் பட்டவர்கள் ஆயிரக்கணக்கில்.
இப்போது ஜப்பானின் அணு உலைகளின்(வெடித்தது என்று ஒரு சாரார்)
இல்லை தயார் நிலையில் இருக்கிறோம் என்று அரசு தரப்பு.) மக்களை
இருபது கிலோ மீட்டருக்குத் தள்ளிச் செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறது.
1 பூகம்பம்,
2,சுனாமி,
3, அணுமின் உலை வெடிக்கும் அபாயம்,
4,நானூறுக்கும் மேற்பட்ட ஆஃப்டர் ஷாக்ஸ்.
இவ்வளவையும் மீறி குடும்பத்தைப் பிரிந்த பெற்றோர்.
பெற்றொரை இழந்த குழந்தைகள்.
அபூர்வமாகத் தப்பிய மனிதர்கள். அனைவருக்கும் வேண்டியது ஆறுதல், அடுத்த வேளைச் சாப்பாடு,
தண்ணீர்,
குளிருந்து காப்பாற்ற நான்கு சுவர்கள்.
அதற்கு மேல் அணு அபாயத்தைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் கூட அவர்கள் இல்லை.
நாம் சிந்திக்க வேண்டும். எல்லாத் தண்ணீர் வளங்களையும் அழித்து குளிர்பானங்களை உருவாக்குகிறோம்.
இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மின்சாரத்துக்கு
என்று கூடங்குளத்தில் அணுமின் உலை கட்டுகிறோம்.
கடவுள் வேறு அவதாரம் எடுத்துவருவாரோ.
இல்லை நாம்தான் விழித்துக் கொண்டு ஆவன செய்வோமோ.
மனிதம் பிறக்க, நாடு தழைக்கும்.
ஜப்பானின் மனித இனத்துக்காக நாம் பிரார்த்தனை செய்யும் நேரம் இது.
நமக்காகவும் செய்து கொள்வோம்.
பின் குறிப்பு.
எந்தவகையிலும் விஞ்ஞான வளர்ச்சியை
அலட்சியப் படுத்தவில்லை.
இயற்கையை எந்த வேளையிலும் பகைக்க வேண்டாம் என்பதே என் எண்ணம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Friday, March 11, 2011
அம்மாவின் டயரியில் குறிப்பிடாத வரிகள்
அம்மாவின் குறிப்பில் விட்டுப் போன, அவள் மறக்க விரும்பிய சில விஷயங்களில்
ஒன்று , மருத்துவ மனையில் அப்பா சரியாகக் கவனிக்கப் படாதது.
அவசரத்துக்குச் சேர்த்த அந்த இடத்திலிருந்து அப்பாவை மாற்றி இருக்கலாம்.
அப்பாவிடம் உனக்கு நெஞு வலிக்கிறதாப்பான்னு கேட்டு இருக்கலாம்.
அவர்களது புத்திரச் செல்வங்கள் அவர்து
நோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாதது ஒரு குற்றம்.
அவரவர் வேலைகளில் மூழ்கி
36 மணிநேரத்தில் ஒரு விலை மதிப்பில்லாத உயிரை இழந்தோம்.
ஒரே ஒரு பூரண செக்அப் அந்த மருத்துவர் செய்திருக்கலாம்.
அம்மாவும் சின்னத்தம்பியும் தான் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள்.
இரவு முழுவதும் அவருக்கு நோவு இருந்திருக்கிறது.
ஆனால் நான் காலையில் அவரைப் பார்க்கப் போனபோது எப்போதும்
போல நெற்றியில் திருமண்காப்பு,
''என்னம்மா சாயந்திரம் அகத்துக்குப் போய்விடலாமா ''
என்ற புன்சிரிப்புடனான கேள்வி.
அம்மா சொன்னது போல் கண்ணும் கருத்தும் இயங்கவில்லை.
அன்று கல்யாணப் புடவைகளையும் திருமாங்கல்யத்தையும் அப்பாவிடம் காண்பித்தேன்.
எப்பொழுதும் போல மெச்சிக்கொண்டார்.
மதியத்துக்கு மேல் தான் நான் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவரது பலவீனம்
உச்சக் கட்டத்தை அடைந்தது.
வந்து பார்த்த அருமை வைத்தியர் க்ரோசின் கொடுங்கள், காய்ச்சல் குறைந்து
வியர்த்துவிட்டால் சரியாகிவிடும். இன்னோரு ட்ரிப் ஏத்துமா ''என்று
சொல்லிவிட்டு டென்னிஸ் விளையாடப் போய்விட்டார்.
அப்பாவின் கைகள் மறுத்து,வாய்மொழியாக ஏதோ சொல்ல வந்தன. வாய்ப்பேச்சு வரவில்லை.
அருகில் அமர்ந்திருந்த அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
என்னால் பார்க்க சகிக்க முடியாமல் அறைக்கு வெளியே வந்தேன்.
வைத்தியரை அழைக்க மறுபடி ஓடினேன்.
அவர் வரும்போது அப்பாவின் முகத்தில் இணையில்லாத அமைதி.
கண்கள் திறந்திருக்க,பார்வை இல்லை.
அம்மா அப்பாவின் நெஞ்சில் காதுகளை வைத்துப் பார்த்தார். அப்படியே
கைகளைக் கூப்பி அவர்கைகளில் முகத்தை வைத்துக் கொண்டார்.
வந்த வைத்தியர் மாஸ்ஸிவ் அட்டாக்'' என்று உரைத்து விட்டு வெளியேறினார்.
பிறகு சின்னத் தம்பி வந்தான்.
வேலைகள் நடந்தன. நான் அந்த நர்ஸம்மாவிடம் என்ன ஆச்சு என்று கேட்டதற்கு
''வயசாச்சு இல்லம்மா'', என்று தன் தொலைபேசியில் சிநேகிதியிடம் பேச ஆரம்பித்தார்.
அன்று எங்களுக்கு மிகவும் உறுதியாக இருந்து எங்களைக் கவனித்துக் கொண்டது, வாய் அதிகம் பேசாத எங்கள் சிங்கம் தான்.
இன்றும் அந்த மருத்துவ மனைப் பக்கம் போவதை நான் விரும்புவதில்லை.
கடின இதயம் படைத்த மனித மருத்துவர்களிடமிருந்து கடவுள் தான் முதியவர்களைக் காக்க வேண்டும்.இந்தப் பதிவு
ஏற்கனவே வல்லமை மின்னிதழில் பிரசுரம் ஆகி இருக்கிறது. ஆசிரியர் திரு அண்ணாகண்ணனுக்கு மிகவும் நன்றி.
பலவருடங்களாக மனதில் உறுத்தியது இந்தச் சம்பவம் இப்பொழுது எழுதவும் காரணம் உண்டு.
எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் தம்பி சர்க்கரை நோயில் அவதிப் படுபவர்.
தானுண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவர்.
அவரும் வெளியில் கிளம்பியவர் திரும்பி வருகையில் தலை சுற்றி
நடைபாதையில் உட்கார்ந்துவிட்டார். அதுவும் சென்னையின் சுறுசுறு அண்ணாசாலையில்.
கிட்டத்தட்ட நினைவிழந்த நிலையில், அவரைப் பார்த்த நல்ல மனிதர் அவர்கையிலிருந்த டயபெடிஸ் ஐடி அட்டையைப் பார்த்து அவரை
மருத்துவமனையில் சேர்த்து, வீட்டுக்கும் சொல்லிவிட்டார்,.
50 வயதே ஆகும் அவரைக் காப்பாற்றிய நல்ல மருத்துவரும் இருக்கிறார்.
இதையும் இங்கே பதிய வேண்டும் இல்லையா.
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்'
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பெற வேண்டும்.

Monday, March 07, 2011
கதவுகள் பழைய உரை நடை க(*வி)தை
![]() |
| வீட்டுக்குள் கடவுளின் அறைக் கதவுகள் |
நிற்கும் விழிகள்
சிலசமயம் அன்பு
சிலசமயம் கேள்வி
சில சமயம் மறுப்பு
சிலசமயம் வரவேற்பு.
எல்லாவற்றுக்கும் மௌனன சாட்சி
கதவுகளுக்குள் இருக்கும்
கண்ணில் தெரியாத கதவுகள்.
பாட்டியின் காலத்தில் கதவை மூடினநாட்கள் இல்லை.
பாட்டியின் சிம்மாசனத்தைத் தாண்டி வந்த
திருடர்களும் இல்லை.
அவள் மன உரமே அங்கே இரும்புக் கோட்டை ஆனது.
அவளும் நிலை வாசலைவிட்டு மறைந்தாள்.
கூடவே சென்றன வெள்ளியும்,வைரமும்,தங்க ஒட்டியாணமும்.
இப்போதோ நாம் இருவர்.
இருந்தும் வீட்டுக்கு இரு வாசலிலிலும் இரும்புக் கதவுகள்.
பக்கத்து வீட்டுப் பழனி மேலும் காவல்
எதிர்ப் பக்க ஏடிஎம் காவல் கிழவர்
அம்மா
நான் பார்த்துக்கிறேன் வீட்டை.''
இருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது
முகமில்லாத கண்கள் எங்களைக்
கண்காணிப்பது போல்
ஒரு அதிர்ச்சி:(
*********************************
இந்த உரைநடைக் கவிதை '' வல்லமை '' மின்னிதழில் முதலில் வெளியானது
ஆசிரியருக்கு என் நன்றிகள்.
மூடிக் கிடக்கும் கதவு, திறக்கும் மார்ச் புகைப்படங்கள்
| வெளிஉலகத்தை மூடாத கதவு |
| கதவு திறக்கிறது, மின்விசிறியின் காற்றும் வரும்:0) |
| அறைகளைப் பிரிக்கும் கதவு |
| மின்சாரத்தின் மீட்டரைக் காக்க்கும் கதவு |
| வெளியே இருக்கும் கதவுகளைக் காட்டும். உள்ளே யாரும் வரும் முன்னே ஓசையிடும் இரும்புக் கதவு. |
| மழலையைரின் மாடிப்படிபயணத்தை தடுக்கும் குழந்தைக் கதவு |
| அருமையான உபகரணங்களைத் தன்னுள்ளே அடுக்கி வைத்திருக்கும் இன்னுமொரு அலமாரியின் கதவு. |
| உள்ளே விழும் அழுக்கைச் சுத்தமாக்கித் தானும் பளிச்சென்றிருக்கும் துணிதுவைக்கும் எந்திரத்தின் கதவு. இன்னும் வரும்:) |
Wednesday, March 02, 2011
வல்லமை மின்னிதழில் அம்மாவின் பதிவு
அன்பு சகபதிவர் , தோழி ''முத்துச்சரம்'' ராமலக்ஷ்மியிடம் எங்க அம்மாவின் எழுத்தாளராக ஆகும் கனவு பற்றியும் சொல்லி இருந்தேன்.
என்னிடம் அவர் இந்தப் பதிவை'' வல்லமை '' மின்னிதழுக்கு அனுப்பப் போவதாகச் சொல்லி இருந்தார்.
இன்று அது நிஜமாகிவிட்டது. அம்மாவின் எழுத்து பத்திரிகையில் வந்துவிட்டது.
என்னால் முடிந்தால் டமாரம் அடிக்காத குறையாக எல்லோரிடமும் போய்ச் சொல்லி இருப்பேன்.
முடிந்தது என் வலைப்பதிவிலேயெ பதிப்பதுதான்.
இன்னும் என்னால் இது நடந்தேறியிருக்கும் விதத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை.
வெகு பூரிப்பாக இருக்கிறது.
வயதில் இளையவர் ராமலக்ஷ்மி.
அம்மாவின் சார்பில் அவருக்கு என் நமஸ்காரங்களை அளிக்கிறேன்.
காலத்தில் செய்த உதவி.அதற்கே என் வணக்கங்கள்.
வெளியிட்ட ''வல்லமை'' இதழுக்கு நன்றி.
http://www.vallamai.com/?p=2119
அளவற்ற மகிழ்ச்சிக் கடலில் என் அம்மாவையும் அப்பாவையும் வணங்கிக் கொள்ளுகிறேன். மீண்டும் நன்றி ராமலக்ஷ்மி
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Subscribe to:
Posts (Atom)
கண்ணில் தெரிகின்ற வானம்
வல்லிசிம்ஹன் எல்லோ ரும் வளமாக வாழ வேண்டும். ஆமாம்... இன்று தான் வானம் கண்ணில் தெரிகின்றது. போன வாரம் முழுவதும் கருமேகங்கள் நிறைந்து சத்த...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...