Blog Archive

Monday, March 07, 2011

கதவுகள் பழைய உரை நடை க(*வி)தை

 வீட்டுக்குள்   கடவுளின் அறைக் கதவுகள்
திறக்கும் கதவுகளுக்குப் பின்
நிற்கும் விழிகள்
சிலசமயம் அன்பு
சிலசமயம் கேள்வி
சில சமயம் மறுப்பு
சிலசமயம்  வரவேற்பு.

எல்லாவற்றுக்கும் மௌனன சாட்சி
கதவுகளுக்குள் இருக்கும்
கண்ணில் தெரியாத கதவுகள்.


பாட்டியின் காலத்தில்  கதவை மூடினநாட்கள் இல்லை.
பாட்டியின் சிம்மாசனத்தைத் தாண்டி வந்த
திருடர்களும் இல்லை.

அவள் மன உரமே அங்கே இரும்புக் கோட்டை ஆனது.
அவளும் நிலை வாசலைவிட்டு மறைந்தாள்.
கூடவே சென்றன வெள்ளியும்,வைரமும்,தங்க ஒட்டியாணமும்.

இப்போதோ நாம் இருவர்.
இருந்தும் வீட்டுக்கு இரு வாசலிலிலும் இரும்புக் கதவுகள்.
பக்கத்து வீட்டுப் பழனி  மேலும் காவல்
எதிர்ப் பக்க ஏடிஎம் காவல் கிழவர்
அம்மா
நான் பார்த்துக்கிறேன் வீட்டை.''


இருந்தும் ஒவ்வொரு முறையும் வீட்டைப் பூட்டும்போது
முகமில்லாத கண்கள் எங்களைக்
கண்காணிப்பது போல்
ஒரு அதிர்ச்சி:(
*********************************
இந்த உரைநடைக் கவிதை  '' வல்லமை '' மின்னிதழில் முதலில் வெளியானது


ஆசிரியருக்கு என் நன்றிகள்.




16 comments:

ராமலக்ஷ்மி said...

ஆரம்ப வரிகளே அற்புதம் வல்லிம்மா. நல்லதொரு கவிதை. வல்லமையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள்.

பாச மலர் / Paasa Malar said...

நல்லா இருக்கு...வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

நல்லாருக்குங்க!

சாந்தி மாரியப்பன் said...

கதவுக்கவிதை அருமையாயிருக்கு வல்லிம்மா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி நீங்கள் தரும் ஊக்கங்களே பெரும் ஆதரவு. மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா பாசமலர்.கவிதைன்னு சொல்றீங்களா:))
மனம் நிறைந்த நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் உங்கள் எழுத்தும் வல்லமையில் வரவேண்டும். எழுத்தில் வல்லமை காட்டுபவர்கள் நீங்கள் எல்லோரும். நன்றி மா.

ஸ்ரீராம். said...

அருமை.

Jayashree said...

புவியின் கதவுகள் திறக்க
மூடியது இங்கே
பல வாழ்க்கையின் கதவுகள்:(((
தருணம் நோக்கி மறைந்திருக்கும் இயற்கையின் சீற்றக் கண்களை துயில் அற்று நடுநிசி இருளிலும் இனி எங்கே? எப்போது என்று கணமும் தேடி நாங்கள் கலங்கி நிற்கின்றோம் :((
VIGIL!!!

சிவகுமாரன் said...

வீட்டைப் பூட்டிய பின் , கொஞ்ச தூரம் சென்று திரும்பி வந்து ஒருமுறை பூட்டை இழுத்துப் பாக்கும் காலமிது.

நல்ல கவிதை.
பகிர்வுக்கு நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எங்க புடிச்சீங்க? சூப்பர் கதவுகள்...:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு அருணா, நீங்களே வந்து சொல்வது மகிழ்ச்சியா இருக்கு.நானும் கச்சேரிக்கு வந்துவிட்டுப் போகிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.

@அன்பு சாரல், பாராட்டுகளுக்கு நன்றி.
தகுதி இருக்கான்னுதான் தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ, நானும் துளசி கொடுக்கும் லின்க் மூலமா உங்க ஊரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
உங்கள் வரிகள் மனதைப் பிழிகின்றன.

பூமியும் உங்கள் மனமும் குளிரப் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தங்கமணி புவனா. வேறேங்கே. கூகிள் ஆண்டவன் தான்:)

சிவகுமாரன் said...

வலைப்பக்கம் வாங்க மேடம்