Tuesday, November 17, 2026

கார்த்திகை தீபத் திருநாள் நவம்பர் 24, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று வருகிறது.


வல்லிசிம்ஹன்,
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.


அக்கம்பக்கம் வீடுகளில் "நன்றி நவிலல் '' நாட்கள் நடக்கும்போதே
கிறிஸ்துமஸ் விளக்குகள், வீட்டைச் சுற்றி அமைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கார்த்திகை மாதம் பிறந்து விட்டது:)

ஓ,நம்ம கார்த்திகை இவர்களுக்கும் வந்து விட்டது என்று சந்தோஷமாக இருக்கிறது.
அத்தனை அழகாக அமைப்பு.
இருள் சேரும் நேரம், விளக்குகள் ஒளிவிட்டுவருவதைப் பார்க்கும்போது,
ஒவ்வொரு நாட்டுக்கும் கொள்கைகள் வேறு மாதிரி இருந்த
போதிலும், ஒளி!!! இருட்டுக்கு ஒளிதானே விடுதலை தரும்.!

அங்கே சென்னையில் கார்த்திகைக்கு இரண்டு அகல்விளக்குகள் தினமும்

அந்திநேரத்தில் வைப்பது வழக்கம்.,

மார்கழி மாதம் காலை பிரம்மமுஹூர்த்தத்திற்கும்,

வாசலில் கோலம் போடுவதற்கும், நிலைப்படி அருகே

அகல்களின் தீபஒளி,

பக்தி,பெருமாள் என்றெல்லாம் நினக்காவிட்டலும் கூட

''தீப மங்கள ஜோதி நமோ நம.'' என்று கைகூப்பத் தோன்றும்.

இந்த ஊரில் வீடுகளில் மத பேதம் இல்லாமல் எல்லோருமெ சீரியல் லைட்ஸும்,ரெயிண்டீர்,ஸாண்டாக்ளாஸ் என்று வகை வகையான
வண்ண வண்ணக்
காற்றைடத்த பலூன்கள்.

அதுவும் மாலையில் 4 மணிக்கு இருட்டு வரும்போது

இந்த விளக்குகள் , சத்தமில்லாமல் ஓடும் உலகுக்கு சாட்சியாக

ஒளிகொடுக்கின்றன.

அதுவும் ஒரு வீட்டில் கோவில் கோபுரம் போலவே அலங்காரம் செய்து இருந்தார்கள்.

இந்த உலகமும் நல்லதுதான்.

கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.



No comments:

கார்த்திகை தீபத் திருநாள் நவம்பர் 24, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று வருகிறது.

வல்லிசிம்ஹன், எல்லோரும் வளமாக வாழ வேண்டும். அக்கம்பக்கம் வீடுகளில் "நன்றி நவிலல் '' நாட்கள் நடக்கும்போதே கிறிஸ்துமஸ் விளக்குகள்...