Monday, September 28, 2026

சுதந்திரம் அடைய என்ன தேவை?





வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

விடுதலை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.
குடும்பத் தளையிலிருந்து விடுபடுவது கூட
அவ்வளவு சிரமம் இல்லை.

நம் மனம் போடும் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடுவது இன்னும் சிரமம்.


கூண்டுக்குள் அடைபட்ட எலியாவது ஓடிவிடும்.
2004 லிலிருந்து 
வீட்டை விட்டு  வெளியே வந்த போது
பக்கத்தில் உள்ள கோவில்களுக்கு  வாடகை வண்டியில்
காலை கிளம்பி மாலைக்குள் வந்து விடுவது
போன்ற  தலங்களுக்கு வாரத்தில் இருமுறையாவது போவதைப்

பழக்கிக் கொண்டேன். வீட்டிலேயே இருக்க விரும்புவார் எங்கள் சிங்கம்.

பழைய  மொழிகளில் பெண் சிங்கம் வேட்டையாடப் 
போகும்  ஆண் சிங்கம்  காத்திருக்கும்.:)

இவருக்குத் தொழிலே தெய்வம்.  உதவி கேட்டு வரும் 
நண்பர்களின் வண்டிகளைச்  செப்பனிட்டுக் கொடுப்பார்.

மதிய உணவு முடிந்ததும்  தொலைக்காட்சி படங்களில்
மூழ்கிவிடுவார்.

வண்டியை எடுத்துக் கொண்டு வாருங்கள் இருவரும்
சிங்ககிரி நரசிம்மரைப் பார்த்து வரலாம்
என்றால்  '' வீட்டில இருக்கிற ராமர் போதும்

 வெளியே தேடணுமா?"" என்று சித்தர் போலப் பதில் சொல்வார்.

20 வருடங்களுக்கு முன் பழக்கமான ஶ்ரீராம்  டிராவல்சில்
சொன்னால்  12 மணி நேரத்துக்கு இத்தனை என்று பில்
போட்டு அனுப்பிவிடுவார்.
அருமையான அம்பாசடர் வண்டி  வந்துவிடும்.

காலை பத்து மணி அளவில் கிளம்பியது  தான் தாமதம்.
செங்கல்பட்டு ஏரிகாத்த ராமர், மற்றும் அச்சரபாக்கம்
கோவில்கள் என்று போய்விட்டு
நடுவில் கோவில்களில் கிடைத்த உணவை 
உண்டு விட்டுத் திரும்பும்போது அம்மா வீட்டுக்கும் போய்க்
காப்பி குடித்து   அம்மாவுக்கு ஆறுதலாகச்
சில வார்த்தைகளைப் பேசும்போது
மணி  5 ஆகி இருக்கும்.

சின்னத் தம்பி இறைவனடி அடைந்தது எங்களை வெகுவாகப் பாதித்திருந்தது.

அம்மா வந்திருந்தால் அழைத்துப் போயிருப்பேன்.
மறுத்ததனால் நான் மட்டும் சென்று வந்தேன்.
பெரிய தம்பி அப்போது  விராலிமலையில்
தன்  தொழிற்சாலையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

ஒரு  குடும்பம்  இப்படி அவதிப்பட்டது அந்த நாட்களில்.

இப்போது என்னை கட்டிப் போட வெளிவிலங்குகள் இல்லை. என் மனவிலங்கே என்னை க் கட்டிப் போடாமல் நான் மேற் கொண்ட பயணங்கள் அவை.


ஏரி காத்த ராமர்.

மதுராந்தகம் ஏரி.
மீண்டும் பார்க்கலாம்.










10 comments:

ஸ்ரீராம். said...

சிங்கம் வராமல் நீங்கள் மட்டும் கோவில் சுற்று முடித்து வருவீர்களா?  நான் கூட அப்படி போனதுண்டு.  இப்போதைய வீட்டின் நிலைமை அவசியமான விஷயங்களுக்காக கூட வெளியில் செல்ல முடியாத நிலை!

ஸ்ரீராம். said...

பாஸின் பிறந்த நாளுக்கும், திருமண நாளுக்கும் கோவில்கள் சென்று வருவோம்.உங்களுக்கும் தெரியும்.  அப்;போதுதான் உங்கள் வீட்டுக்கும் வந்து திரும்புவோம்!  என் பிறந்தநாளுக்கு வீட்டை விட்டு நகரமாட்டேன்!!!

ஸ்ரீராம். said...

மதுராந்தகம் கோவிலும் பார்த்ததில்லை, அச்சரப்பாக்கம் கோவிலும் பார்த்ததில்லை!  அதைத்தவிர பெரம்பலூர் அருகே இரண்டு கோவில்கள் பார்க்கும் திட்டம் இரண்டு வருடங்களாய் இருக்கிறது!!!!  கூடவே விருத்தாச்சலம் விருத்தகிரிஸ்வரர் கோவில்...  இன்னமும்தான் செல்கிறேன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம். எப்பொழுதும் நலமாக இருக்க வேண்டும். சிங்கத்துக்குக் காத்திருந்தால் சாயந்திரம் தான் போக முடியும். காலை வேளைகளில் வரமாட்டார். நான் வெளியே தேடினேன். அவர் உள்ளேயே கண்டு கொண்டார்:)) நிலைமை மாறும் அப்பா. இருவருமாக சந்தோஷமாக இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஓ! நன்றாக நினைவிருக்கிறது. ஒரு மழை நாளில் கூட நீங்கள் வந்த நினைவு. மனசாரப் பிறந்த நாளன்று பகவானை நினைத்தால் போதும். மகிழ்ச்சியாக இருக்க வைப்பான்.கவலை வேண்டாம்.

வல்லிசிம்ஹன் said...

கோவில்களுக்குச் சென்றால் மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். கொஞ்ச நேரம் கவலைகளை மறந்து இருக்கலாம். பக்கத்தில் இருக்கும் வினாயகர் கூட நம்மைப் பார்த்துக் கொள்வார். நான் கோவில் பக்கம் சென்று 18 மாதங்கள் ஆகிறது:)

கோமதி அரசு said...

பழைய நினைவுகளை அருமையாக சொன்னீர்கள். என் கணவருடன் உறவுகளுடன் கோயில்களை தரிசனம் செய்தாகி விட்டது. இப்போது போதும் வீட்டிலிருந்தே இறைவனை வழிபட்டு கொள்ளலாம் என்ற மன நிலையில் இருக்கிறேன்.

சார், விழாக்கள் சமயம் கூட்டத்தில் கோயிலுக்கு வர விரும்ப மாட்டார்கள். அப்போது நான் மட்டும் போய் வருவேன். அதுவும் பழகிய ஊர் மயிலாடுதுறையில் மட்டும் தான்.

இங்கு மகன் இரண்டு , மூன்று கோயில்களுக்கு கூட்டி போனான்.

அப்போது இல்லாத வசதி இப்போது வீட்டிலிருந்தே தினம் ஆலயம் தரிசிக்க வசதி உள்ளது.

ஸ்ரீராம். said...

கோவில்களுக்கு சென்றால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்தான்.  சட்டென செல்வது போல அருகில் அப்படி ஒரு கோவில் இல்லை.  எல்லாம் நவீன சிறு கோவில்கள்!  எங்காவது கோவில் பார்க்க என்று ஊர் சுற்றக் கிளம்பினால் காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டது போல கோவில்களை சுற்றி விட்டு வெளியே வந்து விடுகிறோம்.  அடுத்த இடத்துக்கு ஓடும் அவசரம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஶ்ரீராம், நீங்கள் சொல்வது புரிகிறது. பழங்காலக் கோவில்களின் இனிமை இப்போதிருக்கும் கோவில்களில் காண முடிவதில்லை. நாங்களும் திருமலா திருப்பதி செல்லும்போது வழி நெடுகக் கோவில்களைப் பார்த்துத் தரிசிப்போம். உடனே உடனே கிளம்பியிருக்கிறோம். இப்போது நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. என்ன அவசரம், வீட்டிற்கு வந்து என்ன செய்யப் போகிறோம் என்று யோசிக்கவில்லை. சென்ற காலத்தை மீட்கவா முடியும். உங்களுக்கும் நல்ல தரிசங்கள் கிடைக்க ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தங்கச்சி, வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது உண்மை. ஆலய தரிசனம் தொலைக்காட்சி வழியே
நன்றாகவே செய்ய முடிகிறது. அன்னை மீனாட்சியின் கோவிலை அப்படித்தானே பார்த்தோம். இங்கே இருவரும்
வேலைக்கு செல்வதால் நாட்கள் ஆரம்பிப்பதும் முடிப்பதும் தெரிவதில்லை.
எனக்கும் வண்டியில் ஏறிப் போய் கூட்டங்களில் நின்று பார்க்க களைப்பாக இருக்கிறது. சாரும், சிங்கமும் பலவிதங்களில் ஒன்று படுகிறார்கள். இனிதே இறைவனுடன் ஒன்றி இருக்கப் பல உபன்யாசங்களையும் சொற்பொழிவுகளையும் கேட்கிறோம். நலமுடன் இருப்போம் தங்கச்சி. தங்கள் மகனுக்கும் குடும்பத்துக்கும் என் அன்பு.

ஃபிசியோ தெரபி 15 வருடங்களுக்கு முன்னால்.......

வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் கால் புராணம் +++++++++++++++++++++++ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி:( பிசியோ வலியோ தெரபி 199...