Tuesday, April 28, 2026

திருக்குறுங்குடி 5 வீட்டுக்கு வந்தோம்.............


வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

நம்பியாற்றுப் பாலத்தைத்  தாண்டி அக்ரஹாரத்துக்குள்  
நுழைந்தோம்.

பழைய பாலம்.         
திருனெல்வேலி சுலோச்சனா முதலியார் பாலம்.


 பக்கத்து எதிர் வீட்டு ஜன்னல்கள் எட்டிப் பார்த்தாலும் தாத்தா முனைப்பாக
உள்ளெ வந்து விட்டார்.

கொண்டு வந்திருந்த மீதமிருந்த கட்டு சாதங்கள் வடைகள் வடாம் 
தயிர்சாதம் என்று பாட்டியின் கையிலிருந்து வாங்கிக்
கொண்டு  உறங்கத் தயாரானோம்.
அப்பாவும் சித்தப்பாவும் படுக்கை விரிக்கத் தாத்தா பெஞ்சு
மேலயும்  பாட்டி தரையிலும் ராம நாமத்துடன்
படுத்துக் கொண்டார்கள்.




இந்தப் படம் புதிதாக இருக்கிறது:) அப்பாவை சைவமாக மற்றி, வீட்டை
மாடர்ன் ஆகச் செய்துவிட்டது ஏஐ. சொற்களும் கட்டளைகளும் சரியாக
இல்லாவிடில்  வரைபடம் கூடச் சரியாக அமைவதில்லை.:)பிறகு
வாழ்க்கை நேரே இல்லையென்றால் வார்த்தைகள் தானே



தம்பியும் அவன் மகனும். அவர்கள் திருக்குறுங்குடி சென்ற போது.


திருக்குறுங்குடி வீடு.(கூகிள்)




தாத்தா ஶ்ரீனிவாசன்.
சகோதரர்கள்

பாட்டி சாதங்களைக் கலக்க அம்மா தயாராகக் பாத்திரங்களில் எடுத்து வைக்கிறார்.பின்னால் மஹேந்த்ர கிரி தெரிகிறது.



6 comments:

ஸ்ரீராம். said...

ஆஹா நலம் வளமாகி விட்டது போலவே...!!

படங்கள் சுவாரேஸியம்.  

வெங்கட் நாகராஜ் said...

வீட்டில் மூத்த பெண்மணியின் - அது பாட்டியாக இருக்கலாம், அம்மாவின் அத்தையாக இருக்கலாம் அல்லது அம்மாவாகவே கூட இருக்கலாம் - அவர்களின் கைகளால் நம் கைகளில் சாதம் வாங்கிச் சாப்பிடுவது எவ்வளவு சுகம். இழந்து போன பல சுகங்களில் ஒன்று. தில்லி வாழ்க்கையில் எங்கள் நண்பர்கள் குழுவில் இதைப் பற்றிப் பேசி, ஒரு நண்பரின் வீட்டில் சித்ரா பௌர்ணமி அன்று நிலவொளியில் வெளியே அமர்ந்து மூத்த பெண்மணி கையால் வாங்கிச் சாப்பிட்டோம். அது ஒரு கனா காலம்.

உங்கள் அனுபவக் கதைகள் நன்று. தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

ஏஐ ல கலக்கறீங்க வல்லிம்மா.

அந்தக் கால அனுபவம் போல வருமா? என்ன ஒண்ணு, நம்மைவிடப் பெரியவர்கள் அனேகமாக இப்போது இருப்பதில்லை. இருந்தால் மகிழ்ச்சியோடு நாம் நல்லா இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுவாங்க

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம். வளமும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது:) நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், மிக நன்றி மா. உங்கள் சித்திரா பௌர்ணமி அனுபவம் மிக ஜோர்.அதுவும் தில்லியில்!!!! அன்புள்ளங்கள் இருக்கும் வரை மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. அப்பாவுடைய அம்மாப் பாட்டி சாத்ஹம் பிசைந்து போடும்போத்ஹு அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து கொள்வார்கள்:)))

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, மிக நன்றி. ஏஐ ரொம்ப அழகா செயல் படுகிறது:) நானே பாட்டி. இப்போ அவர்கள் இருந்தால் .. நல்லதுதான். 150க்கு மேல் இருக்கும். ஶ்ரீ உடையவர் போலத் திடகாத்திரமாக இருக்க வேண்டும்.மேலே இருந்து பார்த்து சந்தோஷப்படுவார்கள்:)

அஞ்சலி நம் ஜானகி அம்மாவுக்கு.

வல்லிசிம்ஹன் வாழ்வின் பொன்னான தருணங்களுக்குச் சொந்தமானவர்கள் இசைக்கலைஞர்கள். சுசீலா அம்மா, லீலா அம்மா, ஜானகி அம்மா,ஜிக்கி , ஜமுனா ராணி, குழந...