வல்லிசிம்ஹன்1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:)
தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்
திடீரென்று அதிகரித்தது.
குறுங்குடி நம்பி கோயிலில் இருந்து வந்திருந்த அர்ச்சகர் ஸ்வாமிகள்
கொடுத்த செய்திதான் காரணம்.
ஊரில் இருந்தவர்கள் எல்லாம் குடும்ப நிமித்தம் வேறு வேறு
இடங்களுக்குச் சென்று விட்ட நிலையில் பெருமாளுக்கு
ஒரு வேளை தான் ஆராதனை நடப்பதாகவும்
வஸ்த்திரம் தட்டுப்பாடுகள் இருப்பதாகவும் சொன்னபோது
மனம் வருத்தத்தில் ஆழ்ந்து விட்டது.(இது 70 வருடத்துக்கு முந்திய கதை. இப்போது எல்லாம் திருத்தப் பட்டு விட்டது.)
திருக்குறுங்குடி ஆறு. 1957 மே மாத வெய்யிலில் எங்கள் வண்டி தாத்தா பாட்டி அப்பா அம்மா நாங்கள் மூவர். சித்தப்பா
சித்தி அவரின் பெண். என்று பத்து நபர்களை ஏற்றிக்கொண்டு பழங்கானத்தத்தை விட்டுக் கிளம்பியது. தொடரும்.....
.jpg)
7 comments:
இனிமையாக ஒரு பயணம் தொடர்ந்திருக்கிறது. படிக்க ஆவலுடன் நாங்களும் காத்திருக்கிறோம்.
அன்பின் வெங்கட், ரொம்ப நன்றி மா. மறக்காமல் இருக்க எழுதுகிறேன். நீங்கள் வாசிப்பதில் மகிழ்ச்சிமா
எப்போ இதை எழுத ஆரம்பித்தீர்கள் என்பதே தெரியவில்லை. 57ல் நடந்த பயணம்... ஆச்சர்யமான தகவல்கள் (வஸ்திரம் இல்லை என்றெல்லாம்.) இப்போது கோயில் மிக பிரம்மாண்டம். படங்களுடன் நான் எங்கள் பிளாக்கில் எழுதும்போது நீங்கள் காண வேண்டும்
அன்பின் முரளி ஒரு டிஸ்க்ளெய்மரோடு தான் எழுதி இருக்கிறேன். கீழனத்தம் கோவிலுக்குப் போகும் போது, அந்த பட்டர் இதையெ சொன்னார்.இது 2019இல்,. நாங்களும் 2019இல் குறுங்குடி சென்ற போது அந்தப் பிரம்மாண்டத்தை ரசித்தோம். முழுவதும் சுற்றி வருவதற்குள் என் கால்கள் துவண்டு விட்டது. தாத்தாவிடம் அந்த பட்டர் பேசியது சரியோ தப்போ எனக்குத் தெரியாது. ஒருவேளை தனக்கு வருமானம் இல்லை என்று சூசகமாகச் சொன்னாரோ. இவர்கள் முழு குடும்பமும் அங்கிருந்து வந்தவர்கள் தான்.40களில் திருனெல்வேலிக்கு இடம் பெயர்த்ந்து பின் மதுரை வந்தார்கள். அப்பாவைத்தவிர அனைவரும் டி வி எஸ்.
திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம் அருமையாக இருக்கிறது தொடர்கிறேன்.
அன்பின் வெங்கட், மிக நன்றி மா. யோசித்து எழுத நேரம் ஆகிறது. சரியாகவும் எழுதணும் இல்லையா.
அன்பின் கோமதி வெகுகாலம் கழித்து நினைவு கொள்வதால் தேதிகள் குறித்து சஞ்சலம் வ்ருகிறது. மிக நன்றி மா. தாமதமாகும்:)
Post a Comment