Friday, April 17, 2026

1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம்



வல்லிசிம்ஹன்
1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:)
தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல்
திடீரென்று அதிகரித்தது.

குறுங்குடி நம்பி கோயிலில் இருந்து  வந்திருந்த அர்ச்சகர் ஸ்வாமிகள்
கொடுத்த செய்திதான் காரணம். 

ஊரில் இருந்தவர்கள் எல்லாம் குடும்ப நிமித்தம் வேறு வேறு
இடங்களுக்குச் சென்று விட்ட நிலையில் பெருமாளுக்கு
ஒரு வேளை தான்  ஆராதனை நடப்பதாகவும்
 வஸ்த்திரம் தட்டுப்பாடுகள் இருப்பதாகவும் சொன்னபோது
மனம் வருத்தத்தில்  ஆழ்ந்து விட்டது.(இது  70 வருடத்துக்கு முந்திய கதை. இப்போது எல்லாம் திருத்தப் பட்டு விட்டது.)

ஒரு கிராம சூழல். 

திருக்குறுங்குடி ஆறு. 1957 மே மாத வெய்யிலில் எங்கள் வண்டி தாத்தா பாட்டி அப்பா அம்மா நாங்கள் மூவர். சித்தப்பா
சித்தி அவரின்  பெண். என்று பத்து நபர்களை ஏற்றிக்கொண்டு பழங்கானத்தத்தை விட்டுக் கிளம்பியது. தொடரும்.....






No comments:

1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம்

வல்லிசிம்ஹன் 1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:) தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் திடீரென்று அதிகரித்தது. குறுங்குடி ...