Blog Archive

Wednesday, November 30, 2022

பழனிப் பதி வாழ் பால குமாரா.....

வல்லிசிம்ஹன்


பழனிப் பதி வாழ் பாலகுமாரா.🙏🙏🙏🙏🙏

பழனி முருகன் கோவில் (பழநி முருகன் கோவில்) முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.



புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.🙏🙏🙏🙏🙏🙏


 
  பழனி முருகன் கோவிலை பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ? ஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் |  பழனி  மனிதர்களாக பிறந்த அனைவருமே அடைய முயற்சிக்க வேண்டிய ஒரு மேன்மையான நிலை ஞானம் ஆகும். தவ வாழ்க்கை மேற்கொள்பவர்களுக்கும், ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கும் சுலபத்தில் வந்துதவுவார் முருகன். அப்படி அந்த முருகபெருமான் ஞானத்தின் வடிவாக கோவில் கொண்டிருக்கும் புனித தலம் தான் “பழனி மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்”. இக்கோவிலைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான விடயங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். பழனி மலை முருகன் கோவில் தல வரலாறு மிகவும் பழமையான கோவில் இந்த பழனி மலை பாலதண்டாயுதபாணி கோவில். இக்கோவில் முருகனின் “ஆறு படை” வீடுகளில் “மூன்றாம் படை” வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் “திருஆவினன்குடி” என்றும் “தென்பொதிகை” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் “தண்டாயுதபாணி” மற்றும் “குழந்தை வேலாயுதர்” என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் “ரசவாத கலையை” பயன்படுத்தி, “நவபாஷாணத்தில்” செய்யபட்ட முருகனின் சிலையை போகர் சித்தர் ஸ்தாபித்தது தான். -

- புராணங்களின் படி “ஞானப்பழத்தை” சிவன், பார்வதியிடமிருந்து தனது மூத்த சகோதரன் விநாயகன் பெற்றுக்கொண்டதால் கோபித்து கொண்டு இந்த மலையில் வந்து தங்கி விட்டார் முருகப்பெருமான். தந்தை சிவபெருமானும் தாய் பார்வதியும் எவ்வளவோ கெஞ்சி சமாதானப்படுத்தியும், இந்த பழனி மலையிலேயே தங்க போவதாக உறுதியாக கூறிவிட்டார் முருகன். பிற்காலத்தில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு முருகன் காட்சி தந்த போது “நீயே ஞானவடிவானவன்” என்ற பொருள் கொண்ட “பழம் நீ” என்று அவ்வை போற்றினார். இதுவே காலப்போக்கில் இத்தலத்திற்கு “பழனி” என்ற பெயர் வர காரணமாயிற்று. தமிழ் சித்தர்களில் முதன்மையானவர்களில் “போகர்” சித்தரும் ஒருவர். அஷ்டமா சித்திகளையும் கைவரப்பெற்றவராவார். இந்த பழனி மலைக்கு போகர் தவமியற்ற வந்த போது, அன்னை பார்வதி, முருகன் மற்றும் சித்தர்களில் தலையாய சித்தரான “அகத்தியர்” ஆகிய மூவரின் உத்தரவு பெயரில் பழனி மலை முருகனுக்கு “நவபாஷாண சிலை” வடிக்கும் பணியை மேற்கொண்டார் போக சித்தர். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். “4000” திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலையை செய்ய பயன்படுத்தப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர்.

Tuesday, November 29, 2022

மணக்குள வினாயகர் பாண்டிச்சேரி.

வல்லிசிம்ஹன்

Thank you dear Muguntha.






ஸ்ரீ மணக்குள விநாயகர், பாண்டிச்சேரி

மணக்குள விநாயகர் கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். 

மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது.

தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம் வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த பாண்டிச்சேரி.

600 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சுக் காரர் களின் ஆட்சியில் கடற்கரைக்கருகில் உள்ள “மணல்” நிறைந்த “குளத்தின்” கரை யில் அமைந்து மக்கள் வழிபட்டு வந்த விநாயகரை, அன்றைய பிரெஞ்சு அரசு, அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக விநாயகர் சிலையை, அருகில் உள்ள கடலில் போட்டதாகவும் அது மீண்டும் மிதந்து கரைக்கு வந்ததாகவும் சொல்லப் படுகிறது. 

இத்துடன் இந்த கோவிலுக்கு மற்றொரு சிறப்புண்டு. புதுவை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழ்ந்த 41க்கும் மேற்பட்ட சித்தர்களில் தொல்லைக்காது சித்தர் சுவாமிகள் மணக்குள விநாயகரால் கவரப்பட்டு அவரை தினசரி தரிசனம் செய்தார். அவர் வேண்டுகோளை ஏற்று அவர் இறந்த பிறகு அந்த கோவிலுக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தனர். 

புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த “முண்டாசுக்கவிஞன்’ பாரதி , இந்த விநாயகரை போற்றி;  “நான்மணிமாலை” என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக்கோயில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது. 

தலவரலாறு

ஒயிட் டவுன்’ எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; 'மணற் குளம்’ என்பர். இதன் அருகில் கோயில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்’ எனப் பெயர் பெற்ற கணபதியை, தற்போது 'ஸ்ரீமணக்குள விநாயகர்’ என்கிறோம்!

கஸ்தோனே தே ஃபோஸ்’ என்ற பிரெஞ்சு வரலாற்று ஆசிரியரின் குறிப்பின்படி, 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. 

அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக - ஆராதனைகளுடன் அவ்வப்போது உத்ஸவங்களையும் நடத்தி வந்தனர். 

பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உத்ஸவம் போன்ற வைபவங் களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார். 

இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற திட்டமிட்டனர் பிரெஞ்சுக்காரர்கள். கோயிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே’ என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோயிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்துசெல்வது பிடிக்கவில்லை.

இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே கடலில் போடப்பட்டது விநாயகர் சிலை. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோயிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது.  

மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டுபோய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார்.
மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. 

மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோயிலை அபிவிருத்தியும் செய்தார். 

வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் அழைக்கிறார்கள்.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கி அருளும் விநாயகரின் திருமேனியில் பின் இரு கரங்கள் பாசம் அங்குசம் ஏந்தியும், முன் இரு கரங்கள் அபயம் வரதமாகவும் அமைந்துள்ளன. 

மணற்குளம் இருந்ததன் அடையாளமாக விநாயகர் பீடத்தின் முன்புறம் உள்ள குழியில் இப்போதும் நீர் சுரந்துகொண்டிருக்கிறது. 

கோயில் மண்டபத்தைச் சுற்றிலும் விநாயகரின் பல்வேறு வடிவங்களும் அவரது திருவிளையாடல்களும் சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் ஸ்ரீபால விநாயகரும், வடமேற்கில் ஸ்ரீபால சுப்ரமணியரும் அருள்கின்றனர். வடக்குப் புறம் ஸ்ரீசண்டீசர் சந்நிதி உள்ளது. அங்குள்ள உத்ஸவர் மண்டபத்தில் ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீஹரித்ரா கணபதி, ஸ்ரீசித்தி புத்தி கணபதி, ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீபாலசுப்ர மணியர், வள்ளி-தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டீசர், அஸ்திரதேவர் முதலான உத்ஸவ மூர்த்திகளுடன் ஸ்படிக லிங்கமும் உள்ளது.

தங்கத்தேர் உலாவும் உண்டு. 

அனைத்து மதத்தினரும், வெளிநாட்டுப் பயணிகளும் இவரை வணங்கிச் செல்கிறார்கள். 

தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.

மகான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பண்டித வி.மு. சுப்ரமண்ய ஐயர், கோவை நாகலிங்க சுவாமிகள் போன்ற அருளாளர்கள் மணக்குள விநாயகரைப் போற்றிப் பாடியுள்ளனர்.

கிணற்றின் மீதுதான் மூலவர்

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. 

பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது. 

இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

தல சிறப்பு

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. 

இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார்.

தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. 

தலபெருமை

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. 

உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. 

விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர்.

சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். 

கோவில் யானை லட்சுமி

மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானை ஒன்று உள்ளது .

அதன் பெயர் லட்சுமி .இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் அல்லது மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வருகிறது .

லட்சுமி யானை புதுவை மக்களால் பெரிதும் பேரன்புடன் கண்டு செல்ல கூடிய ஒரு நிலை இன்று உள்ளது .

மணக்குள விநாயகர் கோவில் நுழைவாயில் முன் லட்சமி நின்று கொண்டு வரும் பக்தர்களை வரவேற்பதை நாம் இன்றும் காண முடியும் 

பிரார்த்தனை

எல்லா விதமான பிரார்த்தனைகளும் இங்கு நிறைவேறுகின்றன. கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினர் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள். 

பாண்டிச்சேரியை விட்டு வெளியூர் கிளம்புவர்கள் இத்தலம் வந்து மணக்குள விநாயகரை வணங்கிவிட்டுத்தான் தாங்கள் போக வேண்டிய ஊருக்கு போகிறார்கள் என்பது ஆச்சர்யமான உண்மை. அத்தனை விசேஷம் படைத்தவர் இந்த மணக்குளத்து விநாயகர்.

நேர்த்திக்கடன்

உண்டியல் காணிக்கை, வெளிநாட்டு பக்தர்களின் உபயம் ஆகியவற்றால் கோயில் மிகுந்த சிறப்புடன் திகழ்கிறது. 

அமெரிக்க வைரத்தாலேயே கவசம் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு உதாரணம். 

இத்தலத்தில் முக்கியமாக பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவம் நடத்தி வைக்கிறார்கள் வெள்ளித்தேர் இழுத்தும் நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். 

தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.

திருவிழா

விநாயகர் சதுர்த்தி - இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள். பிரம்மோற்ஸவம் - ஆவணி - 25 நாட்கள் திருவிழா பவித்திர உற்சவம் - 10 நாட்கள் திருவிழா இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும். அப்போது 
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்

காலை மணி 6 முதல் 1 மணி வரை மாலை 4மணி முதல் இரவ 10 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து 132 km. கும்பகோணத்தில் 
 இருந்து சென்னை சாலையில் வடலூர் சென்று வடலூரில் இருந்து கடலூர் சென்று பாண்டிசேரியை அடையலாம்.

புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது . புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது .

“தொள்ளைக் காது சித்தர்” பற்றி புதுச்சேரி சித்தர்களின் பூமி ஆகும். 41 சித்தர்கள் இங்கு இருந்தார்கள். அவர்களின் ஜீவ சமாதி இங்குள்ளது.

இள வயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு மிரண்டு போய் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். 

அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன் தான் தன் நிலை அடைந்தார். அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை அடைந்து அம்மனை வேண்டினார்.

இடைவிடாது தாயை வணங்கிக் கொண்டேயிருந்தார். அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்கண்டார். 

வாய் பேசா ஊமையானார்.

ஞான மோன நிலைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு –யாவற்றையும் உணர்ந்தார். 

அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது. 

அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார். 

தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார். 

இது அவரின் தினசரி வாடிக்கையானது.

முரட்டாண்டியில் பிரஞ்சு அதிகாரிகளின் தொல்லைகள் அதிகமானதால் சுவாமிகள் அவ்விடம் விட்டு நகர்ந்து புதுவை பாலாஜி திரையரங்கு அருகில் உள்ள ஆனந்தரங்கபிள்ளையின் தோட்டத்திற்கு வந்து ஒரு பகுதியில் சிறு குடிசை அமைத்துக் கொண்டு தங்கினார். 

மனித கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பிய சுவாமிகளுக்கு-அந்த இடம், அவர் மனதில் அமைதியை தோற்றுவித்தது. ஞான பூமியிலே, சித்தர்கள்,தவசீலர்கள், ஆத்ம சாதனையாளர்கள் தேடும் பேரின்பம் ஒளிரக்கண்டார். 

தன்னை இப்புதுவைக்கு அழைத்து வந்த அந்த ஓங்கார ஒலியை வணங்கினார். தான் புதுவைக்கு அழைத்து வரப்பட்ட நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.

அங்கிருந்து மணற் குளத்து பிள்ளையாரை தினமும் இரு வேளையும் வழிபட செல்ல சுவாமிகளுக்கு மிகவும் வசதியாய் அமைந்தது. 

பிள்ளைத்தோட்டத்து பகுதி மக்கள் சுவாமிகளின் மேல் மிகவும் அன்பாயிருந்து பணிவிடை செய்து வந்தனர். காலையில் விநாயகரை பூஜை செய்வது வழக்கம்.பின் முத்து மாரியம்மனிடம் நிஷ்டையில் அமர்வார்.பின் மொரட்டாண்டி செல்வார். 

இவ்வளவும் நடந்தே சென்று முடிப்பார்.காலங்கள் சென்றன.ஆத்ம சக்தி தீவிரமாக வெளிப்படத் தொடங்கியது.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்ததுடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளார். 

அவரின் சித்து வேலைகளைக் கண்ட மக்கள் சுவாமிகளின் குடிசையை “சித்தன் குடிசை” என்றுஅழைத்து வந்தனர். 

இன்றளவும் அப்பகுதி அப்பெயரிலேயே அழைக்கபடுகிறது. அவரின் அருளால் அப்பெயர் மக்கள் மனதில் நிலைத்து விட்டது. சுவாமிகள், காதில் பெரிய துளை இருந்ததால் பின்னர் அவர் “தொள்ளைக் காது சித்தர்”என அழைக்கப் பெற்றார்.

Sunday, November 27, 2022

மாசு மரு அற்ற முகம்....

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

அருமையுடனும் அன்புடனும் பின்னூட்டம் இடும்
அனைத்து நட்புகளுக்கும் நன்றி.
இப்படி எல்லாம் சொல்லி உங்களிடமிருந்து ஒதுங்க நினைக்கவில்லை.

ஆனால் வாழ்வில் சில சமயங்களில்
விலகி நின்று பார்ப்பதும் நல்லதே.

மனதின் தயக்கம் வாழ்வில் நெருடல் கொடுக்கும்.
உடலின் வலி நம்மை சில சமயம் முடக்கிப் போடும்.

அதற்காக நான் சிரமப் படுகிறேன் என்று 
சொல்வதற்காக ஒரு பதிவு வேண்டுமா
என்றே யோசித்தேன்.
அவசியம் இல்லை. அவரவர் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகள். 
எல்லோரும் அதைத் தாங்கியே வாழ்வைத் தொடருகிறார்கள்.

இறக்கும் வரை ஆரோக்கியம் , மன நிம்மதி வேண்டும் 
என்பதே இப்போதைய விருப்பம்.

உபாதைகள் நீடிக்கும் போது மனம் தளராமல் 
இருக்க இறைவன் வழிபாடே சிறந்தது.

நம்மை விட நோய் பாதிப்பில் இருப்பவர்கள்
சந்தோஷமாக  வாழ்வை எதிர்கொள்வதைப்
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மரு என்பது உடலில் எங்கு வேண்டுமானாலும் வரும்.
முகத்தில் இதுவரை எனக்கு வந்தது இல்லை.
வந்தவுடன் அதைப் பெரிதாக நினைக்கவும் 
இல்லை.
உதிர்ந்துவிடும் என்று நம்பினேன்.
அதற்கு நம்மிடம் பிரியம் போல!!

தூங்கும் போது (குளிர்கால உறைகள்) முக மருவில் உரசி
அதுக்கு Bacterial Infection) வந்துவிட்டது.
 இரண்டே நாட்களில் முகம் வீங்கி
அவசர வைத்தியத்துக்குப் போனேன். இப்போது
நன்றி நவிலும் நாட்களுக்கான விடுமுறை என்பதால்
எப்போதும் பார்க்கும் வைத்தியர் கிடைக்கவில்லை. 

நம் ஊரா, நினைத்ததும் தேவகிக்கு சென்று ,
பார்த்துவிட்டு,
கருப்பையா ஃபார்மசியில்  மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வர?

இங்கே மருத்துவர் மருந்து கொடுத்தாலும்
மகளும் மாப்பிள்ளையும் 
இரவுக்குளிரில் ஃபார்மசியில் காத்திருக்க வேண்டி வந்தது.

அங்கே இருக்கும் வாலிபர்கள் இப்போது ,இந்த வருடம் படித்து
லீவு நாட்களில் மாற்று ஆட்களாக வந்திருப்பவர்கள்.

லீவு முடிந்ததும் எப்போதும் இருக்கும் அனுபவசாலிகள்
வருவார்கள்.

அப்படி எல்லாம் நம் ஊரில் விடுமுறையில் போக முடியுமா
என்று தெரியவில்லை.
நம் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் எத்தனையோ
சிரமப்பட்டிருக்கிறார்.

நான் சென்ற மருத்துவ மனையிலேயே ஒரே ஒரு மருத்துவர் 
ஒரே நாளில் 78 ஃப்ளூ  வியாதியஸ்தரைப்
பார்த்தாராம். அதுவும் அவர் இந்தியர். நமக்கெல்லாம் 
தாங்க்ஸ் கிவிங்க் கிடையாது என்று சிரிக்கிறார்.
முகம் பூராவும் களைப்பு.


மீண்டு விடலாம். நீங்கள் எல்லோரும் படித்துவிட்டுக் கருத்து இடும்போது
என்னால் உடனே பதில் எழுத முடியவில்லை.
இறைவன் அருள்.





 மேலிருப்பது என் முகம் இல்லை.:)மேலும் படங்கள் போட்டு பயமுறுத்த மனம் இல்லை.

Friday, November 25, 2022

முந்தி வினாயகர், கோவை

வல்லிசிம்ஹன்

[5:24 AM, 11/24/2022] Muguntan Rajagopal: முந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும்


தலபெருமை

விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். 

வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன் கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் விநாயகக் கடவுள்.

அவரின் கிடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் கணபதி பெருமான். 

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு விநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி.

அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளதால் இவர் முன் நின்று தரிசிக்கும் போது ஓர் ஆண் யானையின் கம்பீரமான தோற்றம் பக்தர்களை பிரமிக்க வைக்கிறது.

கரஸ்த்த கதலிசூத பனஸேக்ஷக மோதகம்
பால சூர்ய பீரபாகாரம் வந்தே பால கணாதிபம்

என்கிறது சிவாகம சாஸ்திரம் அரசமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் அருள் கடாக்ஷம் அதிகம். 

இடது திருவடியில் சித்த லட்சுமியின் அம்சமான பத்ம சக்கரத்தைக் கொண்டுள்ளதால் நாடிவரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

முக்கிய திருவிழாக்கள்

சித்திரை முதல் நாள், தைமுதல் நாள், ஆடிவெள்ளி விநாயகர் சதுர்த்தி சுக்ல சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய தினங்களில் சிறப்பு அலங்காரத்துடன்அபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது. 

அத்தினங்களில் அரிசிமாவு, திருமஞ்சனம், மஞ்சள், பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் ஆகிய 11 திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

தல வரலாறு

கோவை, புலியகுளம் பகுதியில் அமைந்து உள்ளது முந்தி விநாயகர் கோயில். இங்கே, அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ஆசியாவிலேயே மிகப்பெரிய விக்கிரகத் திருமேனியர் எனப் போற்றுகின்றனர், பக்தர்கள். 

21 சிற்ப கலைஞர்களின் உழைப்பு-6 ஆண்டு பலன்- ஓர் அழகிய முந்தி விநாயகர். இச்சிலையை செய்ய பெரிய கல்லை தேர்வு செய்வது என்பது எளிதான காரியம் அன்று.

பல இடங்களில் தேடி அலைந்து முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எனும் ஊரில் 20 அடி ஆழத்தில் இருந்து எந்த பின்னமும் இல்லாத பாறையைத் தேர்வு செய்து வெட்டி எடுத்தனர். 

பின் அங்கேயே வைத்து தோராயமாக விநாயகப் பெருமான் உருவில் செதுக்கி எடுத்தனர். முந்தி விநாயகர் சுமார் 19 அடி 10 அங்குல உயரமும் 11 அடி 10 அங்குல அகலமும் 8 அடி கனமும் கொண்டவராக, சுமார் 190டன் எடை (1,90,000 கிலோ) – எடை கொண்டவராகத் திகழ்கிறார்.

கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது! கண் திருஷ்டி பரிகாரங்கள்
இதற்கென தயார் செய்யப்பட்ட தனி ஊர்தியில் ஏற்றி கோவிலின் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

பிரத்தியேகமாக ஒரு சாய்வு தளம் அமைத்து நிலைக்கு கொண்டுவர மட்டும் 18 நாட்கள் பிடித்தன. படுக்கை வசமாக வைத்து துல்லியமாக வடிவமைக்கப்பட்டு நுணுக்கமாக உருவாக்கினர்.

எந்த ஒரு இயந்திரத்தின் துணையும் இல்லாமல் இரும்பு சங்கிலி மற்றும் உருளைகளின் உதவியால் முழுதும் மனித சக்தியாலேயே இச்சிலையை நிலைக்குக் கொண்டு வந்து ஸ்தாபித்தனர். 

இந்த கோயில், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

சிறப்பம்சம்

- ஆசியாவின் மிகப்பெரிய இந்த விநாயகர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. 

- விநாயகர் துதிக்கையில் அமிர்த கலசம்

- இடது காலில் மகாபத்மம்.

பிரார்த்தனை

சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு நாக்கில் பிரணவ வடிவாகிய விநாயகரின் மூல மந்திரத்தை எழுதி கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கின்றன. 

ராகு, கேது தோஷங்கள், நவகிரஹ தோஷங்கள் நிவர்த்திக்காக நவகோள்கள் கோவில் கொண்ட ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதை விட, கணங்களுக்கு எல்லாம் நாயகனாகத் திகழும் இம் முந்தி விநாயகனைத் தொழுது போற்றினால் எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகின்றன என முழுமையாக நம்புகின்றனர்.

சக்தி வாய்ந்த விநாயகரின் திருஅருளால் தன்னை நாடிவந்த பக்தர்களின் வேண்டுதல், தடைபெற்ற திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார். 

முந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம்.
[5:28 AM, 11/24/2022] Revathi Narasimhan: 🙏🙏🙏

Wednesday, November 23, 2022

Sunday, November 20, 2022

எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி பாகம் 2 November 19 ,2011

வல்லிசிம்ஹன்
கதை  முடிகிறது.

இரண்டாம், இறுதி பாகம்

ராஜகுமாரன்
 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 ஜோசியர் அலறிய அலறலில், தூங்கிக் கொண்டிருந்த அரசனும் விழித்துக் கொண்டு ஓடிவந்தான்,.
என்ன  ஆச்சு. கண்டுபிடிச்சீட்டீங்களா  வழியை என்றவனைப்
பார்த்துக் கண்ட கொடூர கனவைச் சொன்னார்.

நிற்கிற பாம்பா...ஓ  சோனா? என்ன ரொம்பக் குழப்பமா இருக்கே.
நம் விஞ்ஞானக் கூட  தலைவரைக் கேட்கணும் என்றபடி
அவரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

நரைத்த தலைமுடி, அதைவிட நரைத்த தாடி கணக்கிட முடியாத வயது இந்த வித லட்சணங்களுடன்
விஞ்ஞானியும் வந்தார்.

விவரம் கேட்டதும் அடடா பாகவதத்தில் சொன்ன விஷயமெல்லாம் நடக்கிறதே.
ராஜன், மழையில்லாத நேரத்தி மழை, வெணும் நேரம் பெய்யாமல் இருப்பது,
கடும் வெய்யில்,கடும் குளிர் எல்லாத்துக்கும் இந்த ஓசோனே
தான்  காரணம்.
அது தற்போது சில இடங்களில் கிழிந்த சர்க்கஸ் கூடாரத் துணி
போல இருக்கிறது.
அதையும் தாண்டி இந்த ராக்ஷசன் அந்த ராஜகுமாரனைக் கொண்டு
போயிருக்கிறான் என்றால் வேற்றுக்கிரக மனிதனாகத் தான்  இருக்கணும்.

ஏன் ஜோசியரே அந்தப் பாம்புக்குக் கால் இருந்ததா பார்த்தீரா என்றார்.

ஓ! இருந்ததே கால்கள் மேல்தான் அது நின்று கொண்டிருந்தது."

அரசனுக்கு விபரீதமாகப் பயம் தொற்றிக் கொண்டது.
பாம்புக் கிரகமா.
அங்கே எப்படிப் போவது.நம் குதிரைகள் பறக்காதே
என்று  காதைச்  சொறிந்து லொண்டான்.
காதில்தான் அத்தனை அறிவுசம்பந்தப்பட்ட நரம்புகளும்
இருப்பதாக விஞ்ஞானி ஏற்கனவே சொல்லி இருந்தார்.

உடனே  கிடைத்த யோசனையும் அதை நிரூபித்தது.
ராஜாதி  ராஜ புங்கவர்மன்
அந்தஇத்தாலிய வியாபாரி கொடுத்த பெகாசஸ்  குதிரை இருக்கே. அவன் சொன்ன விலைக்கு
மறுபேச்சில்லாமல்  பதினாறாயிரம் பொற்காசுகளைக் கொடுத்தோமே.
அது பறக்குமா பறக்காதா என்று  பரிசோதனை கூடச்  செய்யவில்லையே!!


ஆஹா  அது மட்டும் நடந்துவிட்டால் என்று துள்ளிக் குதித்தான்.
கொண்டு வாருங்கள் அந்தக் குதிரையை. உடனே பறக்கவேண்டும் என்று

கட்டளையிட ,பெகாஸஸ் குதிரையும் வந்தது.
சந்திரலேகா பட  ரஞ்சன் போலத் தாவிக் குதித்து ஏறினான்
நம் மன்னன்.
மன்னன் ஏறிய அடுத்த நிமிடம் வான் நோக்கிப் பறந்தது பெகாஸஸ்.
வாயுமனோவேகத்தில் ஒசோன் லேயரைக் கடந்து

பாம்புக் கிரகத்தை அடைந்தது.
அது கீழே இறங்கிய வேகத்தில் அங்கு சுருண்டிருந்த ஊர்வன எல்லாம் விலகின.

ராஜகுமாரனும் தெரிந்தான். அடுத்த நொடியில் நம் வீர தீர ராஜராஜ சிவாஜி மன்னன்
அவனை அலேக்காகத் தூக்கிக்
குதிரையில் வைத்துக் கொண்டு  பூமியை நோக்கிப் பறந்தான்.

அவர்கள் இறங்குவதற்கும்  பாம்பு மனிதன்  தங்கத் தவளையைப் பிடிக்க வருவதற்கும்
சரியாக இருந்தது.

ராஜராஜ சிவாஜியின் வீரவாள் பாம்புமனிதன் கழுத்தில் விழ
அவன் உயிர் பிரிந்தது.

ராஜகுமாரனும் ராஜகுமாரியும் இணைந்து
வணங்கினார்கள் அவரை.!!

Thursday, November 17, 2022

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே.... எங்கள் ப்ளாக் போட்டி2011 நவம்பர் 17


வல்லிசிம்ஹன்

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 http://engalblog.blogspot.com/2011/11/blog-post_03.html

இதைத் தொடர்ந்து கதை எழுத ஆரம்பிக்கிறேன்.
கொடுத்த சுட்டி எங்கள் ப்ளாக்  வலைப்பூவைச் சேர்ந்தது.
அங்கே வந்த கதை யில் இரு ராஜகுமாரன்களும் ஒரு ராஜகுமாரியும் இருக்கிறார்கள்.
 ராஜகுமாரியோ தங்கத்தவளையா  வடிவெடுத்து  இருக்கிறாள்.

தன் கணவனை  ஒரு ராக்ஷசனிடமிருந்து விடுவிக்க
தான் வந்திருக்கும் நாட்டின் ராஜாவிடம்  கோரிக்கை விடுக்கிறாள்.

இந்த ராஜா என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறான்.
தங்கத் தவளைப் பெண்ணிடம் விடை பெற்றுக் கொண்டு
அரண்மனைக்குத் திரும்புகிறான்.

இந்த நாள் இனிய நாள்னு சொன்ன   ஜோசியர்  இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்.
ஏதோ சம்திங்   கிடைக்கும் என்று  ஆசை.:)

வகை வகையான பதார்த்தங்களோடு  போஜனசாலை  மணம்
மூக்கைத் துளைக்கவே அங்கெ  விரைந்தான்  மன்னன்.
வழியில் ஜோசியரைப் பார்த்ததும் சட்டென்று பொறி தட்டியது அவனுக்கு.
ஆஹா கையில்   லட்டுவை வைத்துக் கொண்டு ,பாதுஷாவைத் தேடுவார்களா  என்று நினைத்தவண்ணம்,
''வாரும் அஹோ ஜோஸியரே  இன்று
ராஜாவோடு போஜனம் செய்ய  உங்கள் ஜாதகத்தில்
எழுதி இருக்கிறது'  வாரும் என்று அவர் தோளில் கைகளைப் போட்டு அழைத்துச் சென்றான்.


உண்மையாகவே  நம் ஜாதகத்தைப் பார்க்கவேண்டிய  நேரம்
வந்துவிட்டது  என்று  தன்னையே  கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.,வல்லப நம்பூதிரிகள்.
சாப்பாட்டைச் சுவைத்துக் கொண்டே அரசன் தன் பிரச்சினையை
அவருடன் அலச  ஆரம்பித்தான்.
வல்லபருக்கோ ஒரே குழப்பம். தங்கத் தவளைக் காலமெல்லாம் பழசு இல்லையோ.
 இப்பவுமா உண்டு  என்ற வாறே
அரசனைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தார்.
நிதானமாகத்தான் இருந்தான்.தப்பில்லை.
சோமபானம் அருந்தும் நேரமும் இல்லை.

அரசன் கிட்டத்தட்ட தவளை ராஜகுமாரி யானதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த
போது விழித்துக் கொண்டார்.

அவரது சொற்களுக்காகக் காத்திருக்கும் அரசனைப் பார்த்து,
ராஜா இன்று நான் கூறிய ஆரூடம் பலித்துவிட்டது.
நீங்களே  அந்தப் பெண்ணை  மணமுடிக்கலாமே என்றார்.

தலையிலடித்துக் கொண்ட அரசன்' ஐயா ஜோசியரே அவள் ஏற்கனவே அந்த
 ராஜகுமாரனைக் காதலிக்கிறாள். அவனை
விடுவிக்க வழி சொல்லுங்கள் என்றான்.
 ஜோசியருக்கு உண்ட மயக்கம். ''மன்னா  சற்றே  கண்ணயர்ந்து சிந்திக்கிறேன்.
கனவிலே விடை கிடைக்கும்''என்று எழுந்திருக்க எத்தனித்தார்.

நீர் எங்கும் போகவேண்டாம். இங்கயே சிந்தித்து விடை சொல்லுங்கள்.
 இல்லாவிட்டால்,...... என்று கழுத்தை அறுப்பது
போல ஒரு சைகை
காண்பித்துவிட்டு அந்தப்புரத்துக்குப்  போய்விட்டான்.!!
பிடித்ததே எனக்கு சனி என்று நினைத்து   தலையில்  தட்டிக் கொண்டார்.
வழுக்கையில் இன்னும் அடித்தால் வரும் யோசனையும் போய்விடுமே
என்கிற பயம் தான்;)

''ஏய்  நம்பூதிரி என்ற பேய்க்குரல் அவரை எழுப்பியது.
அலங்க மலங்க முழித்த அவர் முன் ஒரு பெரிய நாகம் படமெடுத்தவாறு நின்றது. ஆமாம் நின்றது!!
ஆ!!என்றலறக் கூட அவருக்கு வாய் வரவில்லை.
ஓய், என் கிட்ட இருக்கிற இளவரசனை மை போட்டுப் பார்த்தாலும் கிடைக்க மாட்டான்.
ஏனெனில் அவனை  ஓ  சோன் படலத்துக்கு மேலே எடுத்துச் சென்று விட்டேன். உனக்கு
நெஞ்சில மஞ்சா சோறு இருந்தா நீ மீட்டுக்கோ'' என்றபடி ஒரு சீறல் போட்டது அந்த நாகம்.

ஜோசியருக்கோ உடலெல்லாம் வியர்த்தது.எங்கே அந்தப் பாம்பு தன்னைக் கடித்துவிடுமோ
 இல்லை கொத்திவிடுமோ என்று நகர்ந்தவர் கீழே விழுந்தார்.!
விழுந்தபிறகுதான் தான் கண்டது கனவு என்று தெளிவு வந்தது.:0)
இன்னும் கொஞ்சம் மசாலா சேர்த்து அடுத்த பகுதியை எழுதி விடுகிறேன்.
at November 17, 2011 11 comments:  




   

வானம் எனக்கொரு போதி மரம்.

வல்லிசிம்ஹன்









Thursday, November 10, 2022

தமிழ் பாடும் பா(ட்)டு!



வல்லிசிம்ஹன்

 குரு வாழ்க
தமிழ் வாழ்க
நாம் வாழ்க.... இது பழைய நாட்களின்  பள்ளி
கடைசி வகுப்பில் சொல்வது.
தில்லு முல்லு தேங்காய் ஸ்ரீனிவாசன் அளவுக்கு 
சொல்ல வரவில்லை.

சில பாடல்களைக் கேட்கும் போது 
சொல்ல வைத்து விடுவார்கள்.

நான் மிக ரசிக்கும்  இந்த நாளையப் பாடகி ஷ்ரேயா கோசல்.
குரல் மட்டும் இனிமை என்று சொல்லி 
நிறுத்த முடியாது.
அவருடைய தமிழ் உச்சரிப்பு பிரமிக்க வைக்கிறது.



மற்றும் ஒருவர் இல்ல இல்ல உதித் நாராயணன் இல்லை, 

நம்ம தமிழ்க்
காரர். ண கரம் ன  கரம் ஆகிறது.
 உள்ளே  .... உல்லே ஆகிறது.
உனக்கு ஸ வும் வராது ஷவும் வராது. பலக்கமும் இல்லையா?
 என்று கேட்கத் தோன்றுகிறது
ஞ ண ந ம ன

நுனி நாக்கு ஆங்கிலம் போல நுனி நாக்கு 
தமிழ்:(


  மது ஷ்ரீ  வங்காளக்காரர்
அவர குரலில் எனக்கு ஒரு ஈடுபாடு.
தமிழ்க்காரர்னு நினைத்தேன். அவர் பாடிய தமிழ் 

அப்படி!!


தமிழ் வளரட்டும்.




  இவரும் வேற்று மொழிக்காரர் தான்.
அனந்தரா.





Monday, November 07, 2022

4k | நடுகாட்டில் ஒரு கிராமம் |

  நம்ம ஊரு சொர்க்கமும் 
விருந்தினர் உபசரிப்பும் மலை  க்க
வைக்கிறது. அந்தக் குழந்தை  
ஆனந்தியும் அவளது 
தோழி தோழர்களின் 
புத்தம் புதிய நட்பு. எத்தனை மகிழ்ச்சி!!!!
ஆரோக்கியம் நமதாக இருந்தால் அனைத்தையும் 
ஜெயிக்கலாம். நன்றி திரு பாபு அவர்களே.

Tuesday, November 01, 2022

ஹாலோவீன் !!!!!!!

வல்லிசிம்ஹன்





மீண்டும் அக்டோபர் மாசம். சிகாகோ  திமிலோகப்படுகிறது.
 இப்போது 2022 இல்  வாசல் நிறைய
குட்டிப் பிசாசுகளும், எலும்புக் கூடுகளும்,
மந்திரவாதிகளும் அம்மா அப்பாவோடு வந்து சாக்கலேட்

வாங்கி செல்கிறார்கள்.
ஸ்பைடர் குட்டி  எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 
எல்லாமே  வேஸ்ட் என்று சொல்லும் பருவம்:)

2008  October 31  Trick or Treat.
பெண்வீட்டில் சின்னவன் பல பல காஸ்டியூம்களைப் பார்த்துவிட்டு. ஸ்பைடர் மேன்
வாங்கி வந்திருக்கிறான்.
அண்ணாவின் பழைய உடைகள் அவனுக்குப் பொருந்தவில்லை. உடலமைப்பில்
அண்ணா பெரிய அளவு. இவன் இன்னும் சதை போட்டால் நன்றாகப்  பொருந்தும்.
எங்க !!சாப்பிடற சாப்பாடெல்லாம் ஓட்டம் விளையாட்டுல  கரைந்துவிடுகிறது:)

கடைக்கு அழைத்து போய் ,அவனை  தேர்ந்தெடுக்கச் சொன்னதும் ,பலவற்றையும் அணிந்து பார்த்து விட்டு,
ஒ ஐ கிவ் அப் மா. நத்திங் பிட்ஸ் மி''  ன்னு    கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)
கடைசியாக ஸ்பைடர் மேன் கிடைத்திருக்கிறார்.
இப்ப எல்லாம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது. தானே எல்லாம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை.
வாங்கின  உடையை  அதற்கான அறையில் உள்ளே போய்க் சார்த்திக் கொண்டுவிட்டானாம் . எப்படியோ வளைந்து நெளிந்து  போட்டுக் கொண்டு விட்டான். ஜிப்  மட்டும் எட்டவில்லை. அம்மாவை அழைத்து அதையும் சரி
செய்துகொண்டுவிட்டான். இப்போது ஸ்பைடர் மேன் மாஸ்க் போடணுமே.

அதைப் பிரித்தபோது  தான்  ஒரு பிரச்சினை .அதில் கண்களாக  இரு நீளக் கோடுகளே இருந்தன.
சின்னவனுக்கு மூக்கை மூடினாலே பிடிக்காது. என்னதான் வலைமாதிரி  போட்டு இருந்தாலும் ,இந்த உடுப்பையும் வேண்டாம் என்று சொல்லப் போகிறான் என்று பெண் நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.
''அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய  ஹெட்லஸ்   ஸ்பைடர்மேன் '' என்று வருத்தப் பட்டு இருக்க்கிறான்.:(
பெரியவன் அந்த மாஸ்கைப் பார்த்துவிட்டு, இவ்வளவு தானா.நான் சரிசெய்து விடுகிறேன் என்று  அந்த  முகமூடியின் முன் பாகத்தை வட்டமாகக் கிழித்து எடுத்துவிட்டான்.
ஒரு புது விதமான,   ஸ்பைடர் மாஸ்க் போடாத ஸ்பைடர் குட்டியை  சின்னவன் பள்ளியில் நாளைக்குப் பார்க்கப் போகிறார்கள்.:)