Blog Archive

Thursday, November 17, 2022

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே.... எங்கள் ப்ளாக் போட்டி2011 நவம்பர் 17


வல்லிசிம்ஹன்

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


 http://engalblog.blogspot.com/2011/11/blog-post_03.html

இதைத் தொடர்ந்து கதை எழுத ஆரம்பிக்கிறேன்.
கொடுத்த சுட்டி எங்கள் ப்ளாக்  வலைப்பூவைச் சேர்ந்தது.
அங்கே வந்த கதை யில் இரு ராஜகுமாரன்களும் ஒரு ராஜகுமாரியும் இருக்கிறார்கள்.
 ராஜகுமாரியோ தங்கத்தவளையா  வடிவெடுத்து  இருக்கிறாள்.

தன் கணவனை  ஒரு ராக்ஷசனிடமிருந்து விடுவிக்க
தான் வந்திருக்கும் நாட்டின் ராஜாவிடம்  கோரிக்கை விடுக்கிறாள்.

இந்த ராஜா என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறான்.
தங்கத் தவளைப் பெண்ணிடம் விடை பெற்றுக் கொண்டு
அரண்மனைக்குத் திரும்புகிறான்.

இந்த நாள் இனிய நாள்னு சொன்ன   ஜோசியர்  இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்.
ஏதோ சம்திங்   கிடைக்கும் என்று  ஆசை.:)

வகை வகையான பதார்த்தங்களோடு  போஜனசாலை  மணம்
மூக்கைத் துளைக்கவே அங்கெ  விரைந்தான்  மன்னன்.
வழியில் ஜோசியரைப் பார்த்ததும் சட்டென்று பொறி தட்டியது அவனுக்கு.
ஆஹா கையில்   லட்டுவை வைத்துக் கொண்டு ,பாதுஷாவைத் தேடுவார்களா  என்று நினைத்தவண்ணம்,
''வாரும் அஹோ ஜோஸியரே  இன்று
ராஜாவோடு போஜனம் செய்ய  உங்கள் ஜாதகத்தில்
எழுதி இருக்கிறது'  வாரும் என்று அவர் தோளில் கைகளைப் போட்டு அழைத்துச் சென்றான்.


உண்மையாகவே  நம் ஜாதகத்தைப் பார்க்கவேண்டிய  நேரம்
வந்துவிட்டது  என்று  தன்னையே  கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.,வல்லப நம்பூதிரிகள்.
சாப்பாட்டைச் சுவைத்துக் கொண்டே அரசன் தன் பிரச்சினையை
அவருடன் அலச  ஆரம்பித்தான்.
வல்லபருக்கோ ஒரே குழப்பம். தங்கத் தவளைக் காலமெல்லாம் பழசு இல்லையோ.
 இப்பவுமா உண்டு  என்ற வாறே
அரசனைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தார்.
நிதானமாகத்தான் இருந்தான்.தப்பில்லை.
சோமபானம் அருந்தும் நேரமும் இல்லை.

அரசன் கிட்டத்தட்ட தவளை ராஜகுமாரி யானதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த
போது விழித்துக் கொண்டார்.

அவரது சொற்களுக்காகக் காத்திருக்கும் அரசனைப் பார்த்து,
ராஜா இன்று நான் கூறிய ஆரூடம் பலித்துவிட்டது.
நீங்களே  அந்தப் பெண்ணை  மணமுடிக்கலாமே என்றார்.

தலையிலடித்துக் கொண்ட அரசன்' ஐயா ஜோசியரே அவள் ஏற்கனவே அந்த
 ராஜகுமாரனைக் காதலிக்கிறாள். அவனை
விடுவிக்க வழி சொல்லுங்கள் என்றான்.
 ஜோசியருக்கு உண்ட மயக்கம். ''மன்னா  சற்றே  கண்ணயர்ந்து சிந்திக்கிறேன்.
கனவிலே விடை கிடைக்கும்''என்று எழுந்திருக்க எத்தனித்தார்.

நீர் எங்கும் போகவேண்டாம். இங்கயே சிந்தித்து விடை சொல்லுங்கள்.
 இல்லாவிட்டால்,...... என்று கழுத்தை அறுப்பது
போல ஒரு சைகை
காண்பித்துவிட்டு அந்தப்புரத்துக்குப்  போய்விட்டான்.!!
பிடித்ததே எனக்கு சனி என்று நினைத்து   தலையில்  தட்டிக் கொண்டார்.
வழுக்கையில் இன்னும் அடித்தால் வரும் யோசனையும் போய்விடுமே
என்கிற பயம் தான்;)

''ஏய்  நம்பூதிரி என்ற பேய்க்குரல் அவரை எழுப்பியது.
அலங்க மலங்க முழித்த அவர் முன் ஒரு பெரிய நாகம் படமெடுத்தவாறு நின்றது. ஆமாம் நின்றது!!
ஆ!!என்றலறக் கூட அவருக்கு வாய் வரவில்லை.
ஓய், என் கிட்ட இருக்கிற இளவரசனை மை போட்டுப் பார்த்தாலும் கிடைக்க மாட்டான்.
ஏனெனில் அவனை  ஓ  சோன் படலத்துக்கு மேலே எடுத்துச் சென்று விட்டேன். உனக்கு
நெஞ்சில மஞ்சா சோறு இருந்தா நீ மீட்டுக்கோ'' என்றபடி ஒரு சீறல் போட்டது அந்த நாகம்.

ஜோசியருக்கோ உடலெல்லாம் வியர்த்தது.எங்கே அந்தப் பாம்பு தன்னைக் கடித்துவிடுமோ
 இல்லை கொத்திவிடுமோ என்று நகர்ந்தவர் கீழே விழுந்தார்.!
விழுந்தபிறகுதான் தான் கண்டது கனவு என்று தெளிவு வந்தது.:0)
இன்னும் கொஞ்சம் மசாலா சேர்த்து அடுத்த பகுதியை எழுதி விடுகிறேன்.
at November 17, 2011 11 comments:  




   

11 comments:

வல்லிசிம்ஹன் said...

இரு நாட்களில் தொடரலாம்.:)

ஸ்ரீராம். said...

என்னது...   அப்போது நீங்கள் எழுதிய கதையின் மீள்பதிவா, இல்லை இப்போதுதான் புதிதாக எழுதுகிறீர்களா?  சூப்பரா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

கதையின் மீள்பதிவா !!!! Aamaam maa.

அன்பின் ஸ்ரீராம். 11 வருடங்களுக்கு முன் எழுதினது மா.
அப்போது ஒரே ஜரூரா எழுதிக் கொண்டிருந்தேன்.
இப்பொழுது மனம் லயிக்க மறுக்கிறது.

இதே நவம்பர் மாதம் வெளியான பதிவு. அதுவும் 17 ஆம் தேதி.

எனக்கே இந்த எழுத்து மகிழ்வு கொடுத்தது.
பாராட்டியதற்கு நன்றி மா.
என்றும் நலமுடன் இருங்கள்.

Geetha Sambasivam said...

இந்தப் போட்டியிலே நானும் கலந்து கொண்டேனோ? தேடிப்பார்க்கணும். ஏதோ அவரை/துவரைனு முடியும் கதை ஒன்றிலே இஷ்டத்துக்கு எழுதிப் பரிசும் கிடைச்சது நினைவில் இருக்கு. நல்லாக் கற்பனை வளம் வல்லி உங்களுக்கு. அடுத்ததும் சீக்கிரமாப் போடுங்க.

கோமதி அரசு said...

ஸ்ரீராமுக்கு நினைவு இல்லையா!

எனக்கு நினைவு இருக்கிறது.
உங்கள் தவளை ராஜகுமாரி கதை.
தொடர்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

கதை அருமையாக உள்ளது. மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். அடுத்தப் பதிவையும் விரைவில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகிறேன். மீள் பதிவாயினும், இதுவரை படிக்காத எங்களுக்காகவாவது விரைவில் வெளியிடுங்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

//ஸ்ரீராமுக்கு நினைவு இல்லையா!//


அதென்னவோ சின்ன வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது அக்கா!

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கீதாமா,

என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.
நீங்களும் எழுதப் போவதாகப் பின்னூட்டத்தில் எழுதி இருந்தீர்கள்.

அப்போதெல்லாம் சின்சியராக எழுதிக் கொண்டிருந்தேன்:)

நல்ல வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கோமதிமா,

நியையக் கடந்து வந்ததில் நம் ஸ்ரீராமுக்கு
மறந்திருக்கிறதுன்னு நினைக்கிறேன்:)

தொடர்வதற்கு மிக நன்றி மா.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சகோதரி கமலாமா,
இது மீள் பதிவு தான். நீங்கள் முன்பு படிக்காததும் நன்மையே.
நாளையோ மறு நாளோ
பதிவிடுகிறேன். ரசித்ததற்கு மிக நன்றி மா.
என்றும் நலமுடன் வாழ வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

''அதென்னவோ சின்ன வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது அக்கா!''

hahahahaha.ஸ்ரீராம் சிரிப்புதான் வருகுதையா:)